கனவிலருந்து நனவுக்கும் நனவிலருந்து கனவுக்கும் ஓயாமெ ஆடுற ஊசல்தானப்பா மனுச மனசு. இந்த அல்லாட்டம் நிக்கிறதெத்தான், உசுரு போயிருச்சுன்னு மனுசக் கூட்டம் அர்த்தம் செஞ்சுக்குது. வாஸ்தவத்துலெ, டக்குனு ஒரு ஆளெப் பிடிச்சு, ‘அட, எங்கப்பா இருக்கெ நீயி, கனவுலயா நெசத்துலயா’ன்னு கேட்டம்னா, தெகச்சுப் போவான். ஆமா, இங்குட்டு ஒரு காலு, அங்குட்டு ஒரு காலுன்னு ஊணித்தானே மனுசகொலம் நிக்கிது…!
Category: இதழ்-228
சந்தா
நெற்றியையும் புருவங்களையும் சுருக்கி அவனைப் பார்த்து,”ஆனால் பார் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.”
“என்ன மாதிரியான பகடி இது? அதுதான் அனைவருக்கும் வாழ்வுரிமை சந்தா இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதே. உயிர் வாழ்வதிலோ உணவு உண்பதிலோ என்ன பெரிய இம்சை வந்துவிடப் போகிறது?”
சின்னையாப்பிள்ளை வீட்டு பொன்னுருக்கு
எங்கோடியா பிள்ளை சத்தமாக, “என்ன ஆசாரி வந்தாச்சா?” என்றார்.
“நா வந்து மணிக்கூறு ஆச்சி அண்ணாச்சி, நீரு தலையத் தூக்கி பாக்கலையே” என்றார் மெலிந்த உடல்காரர்.
“லேய், தவசி. உமி கொண்டு வந்தியா, பொன்ன மறக்கமாட்ட, உருக்கப்பட்டத சமயத்தில மறந்துருவியே?” சிரித்தபடி கூறினார் எங்கோடி.
ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை
நுட்பமான கலை வேலைப்பாடுகள் கொண்ட அந்த கைத்தடியின் மேல்பகுதி வெள்ளித்தகட்டில் பொருத்தப்பட்டிருந்தது, அந்த தகடின் மேல் முனையில் இருந்த இலச்சினை ஒரு கோப்பையைப் போலும், மேலிருந்து பார்க்கையில் கோப்பையின் குழியில் கங்குகளைப் போன்ற புடைப்புகளும் இருந்தன. மொத்த எடையில் 30 சதவீத பளு அதில் இருந்தது
ஆசையின் சுவை
தயிர்ப்பச்சடி, உருளைக்கிழங்கு சிப்ஸ், காளான் பிரியாணி ஆகியன அந்த இலையில் குவிந்திருந்தன. மற்றொரு வாழை இலையினால், இந்த உணவு இலையை மூடினான். வெற்றுப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, கீழே வந்தான். அவற்றையும் கழுவினான். உரிய இடத்தில் வைத்தான்.
திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!
காரைக்கால் அம்மையாரின் காலம் கி.பி. 4-ம் நூற்றாண்டு அல்லது 5-ம் நூற்றாண்டு என்கிறார்கள். திருஞான சம்பந்தருக்கும் மூத்தவர். அம்மையாரின் பதிக அமைப்பும், சொல்லாட்சிச் சிறப்பும் அவரது காலம் தொன்மையானது என்று உரைக்கும். திருவாலங்காட்டுப் பதிகத்தின் பதினோராவது பாடலில் – “காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவாரே!” என்பார். மூத்த திருப்பதிகத்தின் பதினோராவது பாடலில் – “காரைக்கால் பேய் தன் பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே!” என்பார்.
ஃபுகுதா சியோ-நி: நீல மலர்கள் பூத்த கொடி – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்
ஜப்பானிய எடோ காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹைக்கூ பெண் கவிஞர். அப்போது ஹைக்கூ, ஹொக்கு என்று அழைக்கப்பட்டது… அதன் வடிவமும் சற்று வேறாக இருந்தது. தன் ஏழு வயதிலேயே ஹைக்கூ எழுதத் தொடங்கியவர். பதினேழாவது வயதில் தன் ஹக்கூக்களால் ஜப்பான் முழுக்கப் பிரபலமடைந்தார்.
இலக்கியத்தில், தொலைபேசிக்கு ஓர் இரங்கற்பா
ஒரு தொலைபேசி செய்யும் வித்தைகள்- நாடகத்தனமான திருப்பங்கள், அர்த்தங்களின் உள்ளீடு, அழைப்பை ஏற்று பதிலளிக்கும் முன்னரே சாவின் நிழலோ என தகிக்கும் மனம் போன்றவையோ? நிலத்தடித் தகவல் வடம் (நம்ம தொலைபேசி தானுங்க) மர்மத்தின் கூறாகவும், சின்னதும் பெரியதுமான நிகழ்வுகளின் ஊற்றாகவும் இருக்கிறது. அது, வெளியுலகின் சத்தங்களை அமானுஷ்யமாக அறைக்குள் கடத்தும் கருவி. புனைவுலகில், அது கொண்டாடப்பட்டும், மெதுவாக மறைந்தும்கொண்டிருக்கும் கருவி.
லக்ஷ்மி எழுதிய “ஸ்ரீமதி மைதிலி” நாவல்
லக்ஷ்மியின் படைப்புக்களில் குடும்ப அமைப்பும் அதில் குடும்பப் பெண்களுக்குத் தரப்படும் முக்கியத்துவமும் மையப்பொருளாக அமைந்துள்ளன. இவரது கதை முடிவு நல்லதொரு குடும்பம் உருவாவதையே கூறுகிறது; நலமாக முடிகிறது. தவறு செய்தவர் மனம் திருந்தி மீண்டும் நல்வாழ்வை மேற்கொள்வதாக அமைகிறது…
கடிகாரச் சுவர் – அந்தரத்தில் கணங்கள்
கடிகாரச் சுவர்
படர்ந்த நிழல் முற்றம்
வரும் பறவை.
குறைந்த தண்டனை, அதிக நீதி
தற்போது நடந்து கொண்டிருப்பது கருப்பர்களுக்கும் வெள்ளை அமெரிக்கர்களுக்குமான போராட்டம் மட்டுமல்ல. அனைத்து சிறுபான்மையினரும் இணைந்து ஆதிக்க மனோபாவ வெள்ளையினத்தவரை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டம். “Black Lives Matter” இயக்கம் பற்றிப் பேசவே அஞ்சும் இந்தியர்கள் ஏராளம். அது கருப்பர்களுக்கானபிரச்னை என்று எளிதில் கடந்து விடுவதும் முறையானதல்ல.
சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)
இது ஒன்றும் மனிதச் சோதனைச் சாலை அன்று. இந்த அமிலத்தன்மை மனிதனால், ஒரே நாளில் உருவாக்கப்பட்டதும் அன்று. உயிரினங்கள், மீண்டும் பழையபடி ஏரிகளில் வாழ, அந்த உணவுச் சங்கிலி உருவாக்கப்பட வேண்டும். அது நம்மால் இயலாத காரியம். அது இயற்கையின் டிபார்ட்மெண்ட்! நாம் அவசரமாகத் தலையிட்டதற்காக, இயற்கை ஒன்றும் உடனே சரி செய்யப் போவதுமில்லை.
பிரபஞ்சம் – பாகம் 2
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஓர் ஐந்து வகையான அடிப்படை அணுத்துகள்களால் மட்டுமே ஆனது என்றால் நம்பமுடிகிறதா? நம் அறிவியல் இதைத்தான் முன்வைக்கிறது. எப்படி, ‘X’ மற்றும் ‘Y” என்ற இரண்டே இரண்டு குரோமோசோம்கள் இந்த மொத்த மனித சமூகத்துக்கும் பொதுவானதோ, அதே மாதிரிதான் ஐந்தே ஐந்து அடிப்படை அணுத்துகள்கள் இந்தப் பிரபஞ்சத்துக்குப் பொதுவானவை.
வெறுமையில் பூக்கும் கலை
இது முற்றிலுமாக ஒரு கொரோனா காலப்படம். திரையில் தோன்றும் பிம்பங்கள், பின்னணிக்குரல்கள், இசை, உரையாடல்,படத்தொகுப்பு, இடையிடை மௌனம் எல்லாமே கொரோனாவின் தாக்கம் கொண்டிருக்கின்றன. புதைத்து விட்ட காதல் என்னும் கொரோனாவைத் தோண்டி விளையாடிக் கொண்டிருக்கும் இருவரும் திடீரென்று தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் கவசங்களை அணிந்து கொள்கிறார்கள். இல்லை. அந்தப் பெண் அணிந்து கொள்கிறாள்.
இராமானுஜனும் பாஸ்கராவும் – எண்களின் நிழல்கள்
‘The Man Who Knew Infinity’ போன்ற படங்களைப் பார்க்கும்போதுதான் கணித வரலாற்றில் இந்தியர்களின் தடங்களையும் தவறவிட்ட குறிப்புகளும் ஆவணங்களும் அவர்களின் பெருமைகளின் மீது இருள் கீற்றுகள் சூழ்ந்துவிட்டதையும் உணர முடிகின்றது. நம் கண்களின் முன்னே விழுந்திருக்கும் மாயத்திரையை விலக்கும் மற்றொரு கதை சொல்வனத்தில் இடம்பெற்ற ‘லீலாவதி’.
கூம்பிய கனவுகள்
சொல்வனம் இதழில் பாவண்ணனின் சிறுகதை “கனவு மலர்ந்தது” படித்தேன். வாசித்து முடித்தவுடன் ஒரு சாதாரண சிறுகதையாகத்தான் தெரிகிறது. நாடகம் என்ற கலையின் வீழ்ச்சியைச் சொல்வதாக இருக்கிறது. நாடகம் என்ற வடிவம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது; நகரங்களில் சபாக்களில் இன்னும் கூட நடத்தப்படுகின்றனவே என்று சொல்லலாம். ஆனால்…
கைச்சிட்டா – 5
“பிரபு காளிதாசின் வாழ்வில் நடந்த வெவ்வேறு சம்பவங்களைத் தொகுத்து இருக்கிறார். இதற்குள் குறைந்தது நூறு கதாபாத்திரங்கள் ஆவது உலாவுகின்றன. அவர்களின் மன வெளிப்பாடுகளும் நூறு தருணங்களும் அதற்கு ஃபேஸ்புக் பதிவரின் எண்ண பதில்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாவலில் வரக்கூடிய சம்பவங்களைப் பார்த்தீர்கள் என்றால், அனைத்துமே முகத்தில் அறைவதுபோல் இருக்கிறது…
வாசகர் மறுவினைகள்
கதையின் முதல் மற்றும் நிறைவு வரிகளை, “சாமியே…ய், சரணம் ஐயப்பா!” என்று அமைத்தது மிகச் சிறப்பு!
இந்த வரிகளுக்கிடையில், எதார்த்தமான நடையில், எவ்வளவு நாசூக்காக வண்டி ஓட்டுநர்களின் சிரமத்தை விவரித்திருக்கிறீர்கள்!
நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் ஊர் மானாமதுரையிலிருந்து குருசாமிகள், மார்கழி மாதத்தில் விரதம் இருந்து மகரதீபம் காண இருமுடி கட்டி் குழுவாகக் கூண்டு உந்துகளில் சபரிமலைக்குக் கிளம்புவார்கள்….