ரமண மஹரிஷி அவருடைய சீடர்களை விசார சாகரத்தைப் படிக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்வாராம். அதனுடைய தமிழாக்கத்தை அனுசரித்து ஒரு சிறிய புத்தகத்தையும் அவரே எழுதியுள்ளார்.
பரமாச்சார்யாள் என்று அன்போடு அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி இப்புத்தகத்தின்மேல் பெருமதிப்பு வைத்திருந்தார் 1964ல் இதனுடைய சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பிற்கு முழு ஆதரவளித்தார்.
Category: இதழ்-227
…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி
அவர் குறிப்பாக எதையும் சொல்லவந்தாரில்லை. தன் வார்த்தைகளின் மூலம் யாரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவோ, எவரையும் மாற்றவோ, நம்பவைக்கவோ முயன்றதில்லை. ”நாயின் மீது கல்லெறிவதுபோல என்மீது கேள்விகளை எறிகிறார்கள். நாய் குரைக்கிறது. நானும் குரைக்கிறேன்! அவர்களோ என் குரைப்பிலிருந்தும் ஏதேதோ அர்த்தம் காண்கிறார்கள்’ என்கிறார்.
வயாகரா
வயான் எனில் வயவன் எனும் பறவை, அது காரிப்புள் என்றும் அழைக்கப்படும் என்று இயம்புகிறது பிங்கல நிகண்டு. காரிப்புள் என்றால் king crow என்கிறது பேரகராதி. வயானம் எனும் சொல்லுக்கு, வெறுமனே பறவை என்று மாத்திரம் பொருள் சொல்கிறது சூடாமணி நிகண்டு.
பைய மலரும் பூ…
அது ஒரு வெள்ளி இரவு… அலைபேசியில் தொலையாமல், சமூக ஊடகங்களின் சந்தடியில் சிதறாமல், வானில் நகரும் வெள்ளியை ரசித்திட நேரம் கிட்டிய எண்பதுகளில் எழுந்த ஒரு வெள்ளிக்கிழமை இரவு… அருகிருந்த வீடுகளில் ஓடும் ஒலியும் ஒளியும் கூட நம் வீட்டிற்குள் கேட்கும்படி ஊர் அமைதி கொண்டிருந்த காலத்தில் எழுந்த “பைய மலரும் பூ…”
கல்யாணி ராஜன் கவிதைகள்
நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுடன் கலந்து
புது சூத்திரங்களைப் படைக்கிறது
அது ஓடியபடி இடையிடையே நிறுத்தங்களை உண்டாக்குகிறது.
அகவயமாக புறவயப் பார்வையைச் சிந்தவைக்கிறது
குறைந்த அளவு மின்தேக்கி மூலம் அதிக அளவு சக்தியை
அது உந்த முயலும்போது
அதன் குறிக்கோள்கள் தடுக்கிவிழத்தான் செய்கின்றன.
தபால் பெட்டி
பாட்டி மாற்றமில்லாமல் வெண்ணிற ஆடைகளையே அணிந்தார். வயதான பெண்களிடம் சிவப்புச் சேலைகள் இருக்காதா என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொள்வேன். ஒருநாள் பாட்டியின் பெட்டியைத் திறந்து அதன் உள்ளடக்கத்தை ஆராய்ந்தேன். அதில் வெண்ணிற ஆடைகளைத் தவிர வேறெதுவும் இல்லை. வெண்ணிற ஆடைகள் மிகத் தூய்மையானவையாகத் தோற்றமளிக்கின்றன. அந்நாளில் மக்கள் எவ்வாறு தூய்மையைப் பேணிக் காத்தனர் என்பது அற்புதமான விஷயம்.
சாபம்
நான் குழப்பத்தில் நின்றேன். முந்தைய வருட சண்டையோடு அம்மாவிற்குக் காசு அனுப்புவதும் தம்பி வீட்டிற்குச் செல்வதும் நின்று போனது. அவள் முகத்திலேயே முழிக்க வேண்டாம் என்றுதான். தம்பி அவ்வப்போது வந்து போய் இருந்தான்.
“எப்பா, பைசா போனா போட்டும்…ஒங்கம்மக்கி என்ன வேணுமோ அனுப்பிருங்கோ..அவ சாபம் நமக்கு வேண்டாம்ப்பா…பிள்ளக்கி ரெண்டாவது தடவ அதே மாதி வந்துட்ட..நா என்ன செய்வேன்?” என்று அழுதாள்.
கனவு மலர்ந்தது
“சோமு, நாடகம்ங்கறது ரெண்டுமூனு பேரு நின்னு விளையாடி ஜெயிக்கற எடம். சினிமாங்கறது பெரிய குருச்சேத்திரம். வெறும் அஞ்சி பேரு ஜெயிக்க பதினோரு அக்ரோணி சேனைங்க சாவணும். இதெல்லாம் தேவையா சோமு.”
அன்புள்ள அன்னைக்கு
நீ வாழ்ந்ததைவிட என் வாழ்வு சிறப்பாக அமையும் என்பது மூன்று நான்கு தலைமுறைகளாக நடந்தது மேலும் தொடரும் என்பதால் வந்த நம்பிக்கை. நீ வளர்ந்த வீட்டைவிட இப்போதைய உன் இல்லம் இரண்டு மடங்கு. எனக்கெனத் தனி அறைகள். தரைத்தளம் முழுக்க விளையாட்டுச் சாமான்கள். வீட்டுக்குப் பின்னால் நீச்சல் குளம். அவற்றை அனுபவிக்கத்தான் எனக்கு மனம் இல்லை. வன்முறையைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து புதுவாழ்வு தேடும் அகதிகள், ஐந்து காலன் தண்ணீரைச் சுமந்து ஐந்து மைல்கள் நடக்கும் சிறுமிகள், பசியில் வாடும் பிஞ்சு முகங்கள் – இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது புறநகர இல்லமும் அதன் சக்தி விரயமும் அர்த்தம் இழக்கின்றன.
புதியதோர் உலகு
இதற்கிடையில் பிக்கெட்டி தன் அசாதாரணமான வேலையைத் தொடங்கினார். மிகமிக உயர்ந்த வருமானம் ஈட்டும் 1% மனிதர்களைப் பற்றி ஒரு சிறிய வரைபடப் புத்தகத்தை வெளியிட்டார். ஃப்ரெஞ்ச் மூவரில் இரண்டாமவரான எமானுவேல் சைஸுடன் (Emmanuel Saez) இணைந்து, தற்சமயம் அமெரிக்காவில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளின் பெரிய இடைவெளி, கர்ஜித்த 20களைப் போலவே இருந்தது என்றார். இந்தக் கல்விப்புல செயல்பாடுதான், “நாங்கள் 99%; ஆக்கிரமிப்போம் வால் ஸ்டீரீட்டை” என்ற கோஷத்தின் உந்து சக்தி.
மற்றவர்கள் வாழ்வுகள்- 2
ஜான் ஹாவர்ட் க்ரிஃபின் என்பாரைச் சற்று கவனியுங்கள், 1950களில் இவர் தன் தோலைக் கருப்பாக்கிக் கொண்டார், அவருடைய வார்த்தைகளில், “நீக்ரோவாக” தீர்மானித்தாராம். ஜிம் க்ரோ நிலவிய அமெரிக்கத் தென் பகுதிகளில் தான் பயணித்தபோது கிட்டிய அனுபவங்களை அவர் ஒரு புத்தகமாக எழுதினார், “ப்ளாக் லைக் மீ” என்ற அந்த நூல் ஏராளமாக விற்பனை ஆனது. ….
அந்த எழுத்தாளருக்கு, தெற்குப் பகுதிகளில் பயணம் செய்யும் ஒரு கருப்பின ஆணுக்கு எப்படி இருக்கும் என்பதை, தன் அனுபவமாகத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்திருக்கிறது போலத் தெரிகிறது. எவ்வளவு நல்ல எண்ணத்தோடு செய்திருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட அனுபவத்தைப் பற்றி எழுதுவதற்கு அவர் தவறான நபர் என்று வாதிட இடமுண்டு.
சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை
1960 –களில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மண்ணியல் விஞ்ஞானி (soil scientist) ஸ்வென் ஓடன் (Sven Oden) தனது நாட்டில் மழையில் அமிலம், அதுவும் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலம் கூடுவதைப் பல்வேறு மண் சோதனைகள் வழியே ஆராய்ந்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். ..இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய ஐரோப்பிய அனல் மின்நிலையங்கள் கரியை எரிப்பதால், காற்று வழியாக, ஸ்வீடனின் காற்று மற்றும் மழை மாசுபடுவதை தகுந்த ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் கருத்தரங்கில் முன் வைத்தார்.
பித்தலாட்டக்காரன்
எப்படிப்பட்ட மனிதன் இத்தகைய ஒரு போலித்தனம் நிறைந்த இறுதிச் சடங்கென்ற பேரில் ஒரு கேலிக்கூத்தை உருவகித்து, நடிக்க முடியும் – ஒரு வெறியனா? துக்கத்தால் வாடுபவனா? பைத்தியக்காரனா? ஒரு இழிவான வஞ்சகனா? என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.
பிரிவு
வெயில் நம்மள சுட்டெரிக்குது. நாம மெல்ல நடக்கிறோம். நம்ம வாழ்க்கையோட சாரம் இந்த ஷணத்துல நாம உணர்ர வெக்கையும் தாகமும் தானாங்கற கேள்வி நம்மள துக்கப்படுத்துது. அப்ப ஒரு பெரிய அரச மரத்தோட நிழலைப் பாக்கறோம். அதுக்கடியில ஒரு தண்ணீர்ப் பந்தல் இருக்கு. ஒரு பானை நிறைய தண்ணீரும் அதோட மூடிமேல ஒரு பிளாஸ்டிக் டம்ளரும் இருக்கு. நாம அந்த நிழல்ல நிக்கறோம். ரெண்டு டம்ளர் மூணு டம்ளர் தண்ணீர் குடிக்கறோம். அப்ப தீர்ரது நம்ம தாகம் மட்டும் இல்ல. நம்மோட துக்கமும்தான். அந்த மரத்தை நட்டவருக்கு இந்த நாள்ல இந்த நிமிஷத்துல நாம வரப் போறோம்னு தெரியாது.
விபத்து
தூக்கி எறியப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு நொடிகள், வழியில் கண்ட அந்த அழகிய பெண்ணின் முகம், நான்கு பேர் கொண்ட குடும்பம், லிப்ட் கேட்ட அண்ணன், என் பைக், அம்மா, சித்தி என்று ஒவ்வொருவராக நினைவில் வந்து சென்றார்கள். எதற்கும் அஞ்சாமல் முறுக்கிக் கொண்டு திரியும் எனக்கு உயிர் பயத்தைக் காட்டியதாக இருந்தது அந்த இரண்டு நொடி.
நாய்ப் பொழப்பு
இவனுக்குத்தான் எஞ்சிய எட்டு கி.மீ.யை அந்த வண்டியைத் பின்தொடர்ந்தபடி கடக்க, மேலும் ஒரு முக்கால் மணி நேரம் ஆனது. ஒரு வழியாய் நிலக்கல் அடைந்து அவர்கள் சொன்ன கோவிலுக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு பார்க்கும்போது மணி ஐந்தை நெருங்கி இருந்தது.
அப்படியே உறங்கி இருக்கலாம் அவன், இருந்தும் அயர்ச்சியை மீறிய பசி இருந்தது அவனுக்கு. கொஞ்சம் பசியாற்றினால் நல்ல தூக்கம் வரும் என்று அருகில் இருந்த தேனீர் கடைக்குச் சென்று இரண்டு பழம்பஜ்ஜி எடுத்துத் தின்றுகொண்டே “சேட்டா ஒரு ச்சாயி” என்றான். அயர்ச்சிதான் என்றாலும் ஓட்டுனர்களுக்கு என்று ஒரு வரம் உண்டு.
இரண்டு வடையும் இளையராஜாவும்
ஒரு முறை மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த தந்தையிடம், அவருக்கு வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்குமோ என்று பலவிதமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர் ஏதும் பிடி கொடுப்பதாக இல்லை.
“அப்பா, உனக்கு மகிழ்வாக என்னால் இப்பொழுது ஏதாவது செய்ய முடியுமா?” என்றேன்.
“சுடச்சுட ரெண்டு வடை கிடைக்குமா?” என்றார்!
புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள்
தொடர்ச்சியாக வரும் இவர்கள் யார்
என்றால் அவர்கள் இல்லாமல் வேறு யார்
மனிதர்களுக்குள்ளே மனிதர்கள்
ஓடுவது உறவுகள் என்றால்
படியில் விழும் பந்தை எடுக்கத்
தலைமுறைகள் தேவைப்படுகிறது
இன்பா – கவிதைகள்
ஆற்று நீரில் குளித்துவிட்டு
கரையேறிய நீர்நாய்
அருகிலிருந்த மஞ்சள் ஆரஞ்சு செடியில்
மோதிவிட்டுச் செல்கிறது
தூங்கிவிட்ட குழந்தையின்
கைநழுவி விழும் பொம்மையைப் போல்
குட்டி ஆரஞ்சு காம்பிலிருந்து நழுவி விழுகிறது