ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இநோயு என்ரியோ என்ற ஒரு விஞ்ஞானி இந்த தத்துபித்து விஷயங்களில் இருந்து வெளிவந்தால்தான் ஜப்பான் ஐரோப்பிய நாடுகளைப் போல விஞ்ஞான வளர்ச்சியடைய முடியும் என்று முடிவு செய்து, ஒவ்வொரு பழங்கதையாய் உடைத்து நொறுக்கி, நிறைய சொற்பொழிவுகள் நிகழ்த்தி, கட்டுரைகள் எழுதி ஜப்பானிய சமூகத்தை யோக்காய்களின் பிடியில் இருந்து விடுவித்தார்….ஆங்காங்கே சில நிகழ்வுகளை விளக்கவும், தெரிந்த பிடித்த யோகாய்களை மறந்துவிட மனமில்லாத சமூகத்தாலும், இன்றும் பற்பல யோக்காய்கள் அங்கே சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.
Category: இதழ்-226
சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்
ராபர்ட் கெஹோ, சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆய்வுகளை நடத்தி வந்தார். இவருடைய ஆய்வகம், ஜி.எம்., டூபாண்ட் மற்றும் ஈதைல் நிறுவன அன்பளிப்பில் தொடங்கி, உதவித் தொகையில் இயங்கியது. அத்துடன், ராபர்ட், ஈதைல் நிறுவனத்தின் ஆலோசகர். ஈதைல் நிறுவனத்திற்குச் சாதகமான சோதனை முடிவுகள் தொடர்ந்து வெளிவந்ததன் பின்னணி இதுதான்…. விஞ்ஞானப் பித்தலாட்டத்தின் ஒரு வசீகர ஏற்பாடு இது. ராபர்ட், ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக வெளியுலகிற்குக் காட்சியளித்தார். இதனால், அவரது முடிவுகளுக்கு ஒரு நடுநிலை இருப்பதாக அனைவரும் நம்பினார்கள். இன்றும் இதுபோன்ற ஏற்பாடுகள் உலகப் பலகலைக்கழகங்களில், அதுவும் வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஏராளம்.
விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்!
வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் காவல் துறையின் அடாவடித்தனத்தையும் நிற பேதத்தையும் மக்கள் உணர்ந்து கருப்பு அமெரிக்கர்களுக்கு அதிக அளவில் வெள்ளை அமெரிக்கர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு பெருகியதும் இப்போராட்டத்தை வழிநடத்திய “Black Lives Matter” இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும்.
பிஞ்ஞகன்
இச்சொற்களை எழுதிவரும்போது எமக்கொன்று தெளிவாகிறது. மக்கள் நாவில் சில சந்தர்ப்பங்களில் ந, ஞ மயக்கம் உண்டு என்று. எவ்வாறாயினும் மக்கள் புழங்கும் ஒலிக்குறிப்புகள்தாமே சொல்லாக உருவெடுக்கிறது! எமக்கு அறிமுகமில்லாத சொற்கள் யாவும் வட்டார வழக்கென்றோ, மக்கள் கொச்சை என்றோ வரையறுக்கவோ, ஒதுக்கி நிறுத்தவோ இயலுமா?
கல்லும் மண்ணும்
பாரத தேசத்தின் ஆன்மிகக் கலாச்சார ஊற்றுகளில் முக்கியமான ஒன்றான தமிழ் மண்ணின் மிகச் சாதாரண, பொருளாதாரம், அந்தஸ்து, அதிகாரம் முதலியவற்றில் கடைக் கோடிப் படியில்கூட இராத சாமானிய மக்களிடம் இந்த மண்ணின் ஆன்மிக தரிசனம் தத்துவ வார்த்தைகளாக மட்டுமன்றி, உண்மையான வாழ்வை வழிநடத்திச் செல்லும் உணர்வாகவும் இருந்த காலம் இக்கதை நிகழும் நேரம்.
மற்றவர்களின் வாழ்வுகள்
எழுதுவதற்குத் தேவை விவரச் சேமிப்பும், அதில் கிட்டும் அறிவும்தான் என்றால் கலைஞர்களின் எல்லாச் சங்கடங்களும் மேன்மேலும் ஆராய்வு செய்தால் தீர்ந்துவிடும்; கற்பனை என்பது கணக்கிலேயே வராது. எழுதுவதற்கு ஒரு எழுத்தாளரை உந்துவது எது என்றால், அது தன் விவர ஞானம் குறித்த அவரது தன்னம்பிக்கை இல்லை. மாறாக, அவர் தனக்கும் பாத்திரங்களாகப் போகிற நபருக்கும் (அல்லது நபர்களுக்கும்) இடையே சக்தி வாய்ந்த ஒரு பிணைப்பை உணர்கிறார், அந்தப் பிணைப்பு இடர்கள் நிறைந்த அந்தப் பயணம் மேற்கொள்வதைப் பயனுள்ளதாக்குகிறது.
பாவண்ணனின் ‘கிருஷ்ண ஜெயந்தி’ – அழியாத வெண்பாத சுவடுகள்
கர்ணன் பற்றி அறிய வேண்டுமெனில், ‘கர்ணன்’ திரைப்படம் சிறந்த தேர்வன்று என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய தவறான தேர்வுகளே தர்மம் உள்பட சரியான கற்பிதங்களைத் திசை திருப்பி விட்டுவிடுகின்றன. தர்மம் என்னும் பெயரில் அதர்மம் போலி வேஷம் கொண்டு திரிவதை உலகம் பாராட்டுவதால் தர்மம் என்ற பொருள் திரிந்து விடுவதில்லை.
கூட்டு அக்கறைகள் கொண்ட பிரதி
கடற்காற்றாலும் கடல் மொழியாலும் (’வாழ்வு என்பதே கதைக்கும் பாடலுக்கும் இடைப்பட்ட ரீங்காரம்’) சூழப்பட்ட அத்தீவினரை காப்பவர் ‘கபாங்’(கடவுள்). கடலையே தெய்வம் என்றும் அங்கு முன்னோர்களின் ஆவிகள் அலைகிறார்கள் என்றும் நம்பும் அக்குடிகளின் சட்டதிட்டங்களை விருப்பங்களை வரையறுப்பவர்களாக நிலமுனியும் கடல்முனியும் இருக்கிறார்கள்.
மஞ்சள் கனவு
கண்களைத் திறந்தபோது வானம் தெரிந்தது. வாகனங்களின் எண்ணிக்கையும் ஒலியும் அதிகரித்திருந்தன. தன்னிலையை உணர்ந்து இடது பக்கம் திரும்பினேன். ஒரு கால் மடக்கியும் ஒரு கால் தொங்கப்போட்டும் திண்ணையில் அமர்ந்திருந்தவளின் கண்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தன. கூர்மையான நிலைகொண்ட பார்வை. நான் திடுக்கிட்டேன். நான் பார்ப்பது அவளுக்குத் தெரியவில்லையா? கண்களைத் திறந்தே கனவு காண்கிறாளா?
சுதந்திர பூமியில்… (In the Land of the Free)
“பொழுது விடிந்துவிட்டது. போய்க் குழந்தையை அழைச்சுட்டு வா” என்றாள். கூறுவதற்குள் அவளுக்குத் தொண்டையை அடைத்தது….
“இன்னும் நேரம் ஆகவில்லை” என்றவன் மீண்டும் படுக்கையில் தலையைச் சாய்த்தான்.
“இன்னும் நேரம் ஆகலையா? ஐயோ…! நேற்றுவரை நான் வாழ்ந்த நேரம் எல்லாம் சேர்த்தால்கூட நான் பெற்ற பிள்ளையை என்னிடமிருந்து பிரித்து எடுத்துச்சென்ற நேரம் இருக்காது.” லேசூ முகத்தை மூடிக்கொண்டு கட்டில் அருகில் கீழே அமர்ந்தாள்.
சுடோகுயி – பாகம் 2
“சுடோகு விளையாட்டில் வருபவை அனைத்துமே வெறும் வரிகள் அல்ல, கதைகள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை குறுங்கதை எனும் ஏழு வரிகளில் எழுதப்படும் கதை ரோம் மக்களிடையே புழக்கத்தில் இருந்தது. ரோமின் இரண்டாவது இருண்டகாலத்தின்போதும் சிறு குழுக்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டது. அக்கதைகளுள் சில புலனாய்வுத்துறையின் கணினிகளின் பொருள்கூட்டுகளையும் தாண்டி சங்கேத குறியீடுகள் கொண்டிருந்ததால், புலனாய்வு அதிகாரிகள் தங்களால் புரிந்துகொள்ள முடியாத செய்திகளின் ரகசிய பட்டியலில் நெடுங்காலம் வைத்திருந்தார்கள்.
கேட்கத் தவறிய கிணற்றுத் தவளையின் குரல்
எனக்கு ஒரே ஆச்சர்யம். தவளைகள் பேசுமா? என் கிணற்றில் மட்டுமா இல்லை என் ஊர் முழுக்க இப்படித்தானா? இல்லை இதேதும் அசரீரியா? புரியவில்லை எனக்கு. ஒருவேளை காலங்காலமாக தவளைகள் பேசுமோ? நாம்தான் அவைகளிடம் இதுவரையில் வாயெடுத்துப் பேசியதில்லையோ? இருக்கவே இருக்காது, நமக்குத்தான் அது பேசியது போன்றொரு பிரமை தோன்றியிருக்கும். மீண்டும் ஒருமுறை பேசிப் பார்த்தால் தெரியும்.
பங்காளி
சிறிது தூரம் செல்ல, ஒரு பனை மரமடியில் அமர்ந்தனர். “பங்காளி கூட்டத்தைப் பாத்தியா ? எப்படி கலர் கலரா இருக்கா?” என்று வேலு கண்ணடித்துக் கேட்க, “அய்யயோ யாராவது கோவில்ல வந்து இப்டிப் பாப்பாங்களா” என்று கார்த்திக் சொல்ல, “அப்போ வேற எங்க பாத்துருக்க? இல்ல தொட்டுருக்க பங்காளி” என்று வேலு கேட்க, ஒருவிதமாகச் சிரித்து மழுப்பினான் கார்த்திக்.
லீலாவதி
அவள் அதில் ஒரு கவிதையைப் போல் இப்படி எழுதி இருந்தாள். ‘ஹே, அழகிய கண்களையுடைய லீலாவதியே! நீ ஒரு சராசரிப் பெண்ணாய்த் திருமணம் கொண்டு, குழந்தை பெற்று, குடும்பம் சுமந்து மடியப் பிறந்தவள் இல்லை. நீ ஒரு சாதகப் பறவையைப் போன்றவள். சொர்க்கத்திலிருந்து நேரடியாய்க் கீழே இறங்கும் அமிர்தத் துளிகளை மட்டுமே அருந்தித் தாகம் தணிப்பவள்….”
மொழி
சாப்பாடுக்கு ஃபுட் எனத்தெரிந்தது. அதை எப்படி வார்த்தையாக சொல்வது என யோசித்தாள். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து தன் கையைக் குவித்து வாய்க்கு அருகில் இரண்டு , மூன்று முறை கொண்டுபோய் ஆயிற்றா என்ற பாவனையில் தலையை ஆட்டினாள்.
இறைவி
அவளது நிலை, அவளது துயரம், அவள் ஒரு அனாதை என்பது, கர்ப்பிணியான அவள் தம் கணவனால் சந்தேகப்படப்பட்டு அடித்து விரட்டப்பட்ட விவரம், எல்லாம் அவள் செவிகளில் அவள் குரலிலேயே மீண்டுமொருமுறை பேசப்பட்டன.
சில மாதங்களுக்கு முன் பேருந்து நிலைய நடைபாதையில், தம் இரு கை விரல்களும் முழுவதுமாக இழந்து விட்டிருந்த முதியவர் ஒருவர், மிகுந்த சிரமப்பட்டு உணவருந்திக்கொண்டிருந்தது, ஒரு பெட்டிக்கு கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த, முகம் முழுவதும் ஏதோ நோய் போல கொப்புளங்களும், வரிகளுமாய் சற்றும் பார்க்க சகிக்காதவாறு இருந்த, ஒருவர், என எப்போதோ பார்த்த அனைத்து சபிக்கப்பட்டவர்களும் அடுத்தடுத்து மனக்கண்ணில் தோன்றிச் சீனிவாசனை ஏதோ செய்தனர்.
பேய்
ஹரி தன்னைச்சுற்றிப் படர்ந்து கிடந்த காட்டை பயத்துடன் கூர்ந்து கவனித்தான். பேய் பிசாசுகள் மீது அவனுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. ஆனாலும், அந்தக் கணத்தை, அது தரும் உணர்வை, அவற்றின் கூட்டு பலனாக அவன் மனம் அடையும் மனக்கிலேசத்தை எவ்விதம் பகுப்பது என்று தெரியாமல் தடுமாறினான்.
எறும்புகளைக் கொல்பவன்
இந்தப் பல்லியைப் போலவே சுவரில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை, ஏதாவதொரு இடுக்கில் சிக்கி நசுங்கி விடுவோமோ என்கிற பதற்றம், அது நசுங்குவதைப் பார்த்துவிடுவோமோ என்கிற அசூயை, சுண்ணாம்பு அடித்த சுவரை நக்கினால் ஏற்படும் சுவை — ஒரு பல்லியைப் பார்க்கும்போது இப்படிப் பல உணர்வுகளின் கலவையே அவனைத் தாக்குகிறது. இவை அனைத்தும் முன்னே நிற்க, பல்லிகளுடன் இதுவரை ஏற்பட்ட சகல அனுபவங்களும் பின்னணி இசையாக மனதினுள் ஓடுகின்றன.
விடுதலை
அவன் சட்டென என்னிடம், “இங்கிலிஷ் சொல்லிக்கொடு” எனக் கேட்டான்.
நான் சற்றுத் தடுமாறி அவன் சொல்வதை மீண்டும் நினைவுபடுத்தி, “என்ன?” எனத் திருப்பிக் கேட்டேன். பின்பு ஏன் அவ்வாறு கேட்டோம் என நினைத்துக்கொண்டேன்.
அவன் மீண்டும், “இங்கிலீஷ். பேசணும்” என்று ஒவ்வொரு வார்த்தையாகக் கேட்டான். அப்படி அவன் கேட்டபொழுது, அத்தனை பற்களும் தெரியச் சிரிப்பும், கூச்சமும், வெட்கமும் தெரிந்தது.
படுகளம்
சியாமளா நால்வருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டு வந்தாள். மது அந்த சாப்பாட்டையே பார்த்தான். அதில் விஷம் ஏதாவது கலந்திருக்குமா எனச் சந்தேகமாய் இருந்தது. ஆனால் அவனுள் எந்த உள்ளுணர்வும் இல்லை என்பதால் சாப்பாட்டை பிசைந்து எடுத்துச் சாப்பிட்டான். முதல் வாயில் கூர்மையாகக் கவனித்தான் ஏதாவது மெல்லிய கசப்பு அல்லது ஒவ்வாத ஒரு வாசனை. எதுவும் இருக்கிறதா என்று. அப்படி எதையும் உணர முடியவில்லை. மவுனமாகச் சாப்பிட்டு எழுந்தான்.
என் ஆத்துமாவே தேவனை நோக்கி அமர்ந்திரு
சூப்பர்வைசரின் பார்வை வித்தியாசமாய் அவளை நோக்கியது, வாடிய பூவைப்போல இருந்தாள். மேரியின் கண்களை நேருக்குப் பார்ப்பதை எப்போதும் அவர் தவிர்த்து விடுவார். பரிதாபமான ஒளியிழந்த கண்கள். “இல்லமா, மேனேஜர் உன்னால என்னத் திட்டிட்டார். நீங்க வேணும்னா வேற வேலை பாருங்க” என்றார் அவர். இதைக் கூறும்போது அவரின் தலை கவிழ்ந்தே இருந்தது. “இல்ல சார், மன்னிச்சிருங்க இனி லீவு எடுக்க மாட்டேன்”
“சொன்னா புரிஞ்சிக்கோங்க, இப்போல்லாம் சம்பளம் குறைவா வேல பாக்க அசாம், பெங்கால் காரங்க வராங்க. நா என்னால முடிஞ்சதச் செய்றேன். நீங்களும் புரிஞ்சிக்கணும்” என்றார்.
கனியன் கவிதைகள்
தனித்த வாழ்வாகவோ
வாழாமல் விட்டுப்போன
வாழ்க்கையையோ
சலிப்போடு தேடிவருபவர்களோடு
மலரில் அமர்ந்து தேனை
உறிஞ்சத்தொடங்குகிறது இரவு
நா.பாலா கவிதைகள்
முற்பகல் முடிவதற்குள்
ஐன்ஸ்ட்டின் ஆக மாற எத்தனிக்கையில்
பசி வந்துவிடுகிறது.
மந்தம் சூழ்ந்த மதியப் பொழுதுகளில்
லாவ்-சு ஆகிக் காற்றையும் இலைகளையும்
பார்த்துக் கிடக்கிறேன்.
நிறையிசை!
காப்புகளிட்டச் சங்கிலி உரச நகரும் நான்
மூலையிலிருக்கும் பியானோவை வாசித்திருக்க
என்னை ஓடிவந்து அணைத்துக் கொண்டாள்