உத்தமன் கோவில்

முன்புறமாக ஊன்றிய இரு கைகளும் பின்புறமாக ஊன்றிய இரு கால்விரல்களும் மட்டுமே உடலின் எடையைத் தாங்கிக்கொள்ள நடுவில் ஒரு பலகைபோல நீண்டிருந்தது அவர் உடல். பிறகு இடைவரை தரையில் படிய இடைக்கு மேலான உடலை வளைத்து வானத்தை அண்ணாந்து பார்த்தது அவர் முகம். அதுவும் ஓரிரு கணமே. மீண்டும் வளைந்து பாதங்களை கைகள் பற்றியிருக்க உடல்மட்டுமே நிமிர்ந்தது. தொடர்ந்து கூப்பிய கைகளுடன் சூரியனை நோக்கிய நிலைக்குத் திரும்பினார்.

அக்னி

அப்போதிருந்து அம்மாவிற்கும் நெருப்பிற்கும் ஒரு உறவு ஆரம்பித்திருக்க வேண்டும். உச்சபட்ச மகிழ்ச்சியிலும், கடும் துயரத்திலும் சில சமயங்களில் நீண்ட மௌனத்தின் முடிவிலும் அம்மா என்னிடம் கேட்பது, “அம்மய எரிக்கணும் மக்ளே” என்பதுதான்.

வடிவாய் நின் வலமார்பினில்

அத்தையும் மாமாவும், அம்மா அப்பாவுடன் பேசிக் கொண்டிருக்க நரேன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் உற்சவர் வருகிறாரா என மாடவீதியில் ஒரு கண்ணும், இன்னும் என்னையே பார்த்து கொண்டிருந்த நரேனின் மேல் ஒரு கண்ணுமாய் இருந்தேன். கோலாட்டமும், பஜனைக் குழுக்களும், வேத வரிசைகளும்தான் வந்துகொண்டிருந்தன. அவன் என்னையே இப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது பிடித்தது போலவும் இருந்தது, பிடிக்காதது போலவும் இருந்தது.

மருவக் காதல் கொண்டேன்

‘உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு?’
‘பி.எஸ்.சி முடிச்ச உடனே’
‘அவரைப் பார்த்த உடனே புடிச்சுதா?’
‘அவருக்கு என்ன… ராஜ்கபூர் மாதிரி இருப்பார்’
‘கண்டதும் காதலா’
வெட்கத்துடன் ‘இல்ல இல்ல… ஆரம்பத்துல ரொம்ப பயமா இருந்தது, இப்போ மாதிரி பார்த்துப்பேசிப்பழக முடியாதுல, என் கல்யாணமே எனக்கு வெறும் தகவல்தான்’

இருமை

சிங்கப்பூரிலிருந்து வந்த அவன் கொண்டு வந்த இரு பெட்டிகளையும் ஆளுக்கொன்றாய் தூக்கிக் கொண்டு திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சென்றோம். அது இரண்டாயிரமாவது ஆண்டு. வாடகை வண்டிகளெல்லாம் இப்போதளவிற்கு இல்லை. நான் வில்லிவாக்கத்திலிருந்து டி.வி.எஸ் எக்செல் வண்டியில் சென்று நுங்கம்பாக்கத்தில் நிறுத்திவிட்டு இரண்டு ரிடர்ன் சீட்டு வாங்கிக் கொண்டு திரிசூலம் சென்றிருந்தேன்.

சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி

அது, “எச்.டியின் படைப்பு வேலையைச் சுற்றியே அமைக்கப்பட்டிருந்த ஓர் அன்பான குடும்பம்,” என்று (உ)வேட் எழுதுகிறார். எச்.டி எழுத ஆரம்பிக்கும்போது, ப்ரெய்ஹர் எப்படித் தன்னை அந்த படிப்பறையின் வாயிலிலிருந்து தூக்கி எடுத்துப் போய் விடுவார் என்று பெர்டிடா நினைவு கூர்கிறார்; தன் அம்மா வேலை செய்யும்போது அவரைத் தொல்லை செய்யக் கூடாதென்று மிகச் சிறு வயதிலிருந்தே அந்தப் பெண்ணுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. (சமகாலப் பெண் எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு அப்படி ஒரு சுதந்திரம் அனுபவிக்கக் கிட்டி இருக்கும்?)

டாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம்

இலக்கிய உலகில் தற்போது காணப்படும் பெண்ணீயம், தலித் படைப்புகள், இடதுசாரி இலக்கியம், வலதுசாரி இலக்கியம் போன்ற அனைத்து வாதங்கள், இயங்கள், பிரிவுகள் பற்றி அறிந்திருந்தாலும் அவை எதிலும் சேராமல் மனிதாபிமானத்தோடு கூடிய படைப்புகளே தன்னுடையவை என்ற அவர் கூற்று, அவருடைய சிறு கதைகள், நாவல்கள், கவிதை, கட்டுரை நூல்கள், பத்திகள், விமரிசனக் கட்டுரைகள் போன்ற அனைத்திலும் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. எத்தகைய படைப்பாயினும் தனக்கான முத்திரையோடு வாசகர்களை சென்றடைவது அவருடைய தனித்திறமை.

“நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல்

நேர்காணல் – ராஜி ரகுநாதன் எழுத்தாளர் முக்தேவி பாரதியைப் பற்றிய அறிமுகம் கேள்வி: அம்மா! உங்கள் சிறுவயது வாழ்க்கை, உங்கள் ஊர், பள்ளிப் படிப்பு பற்றி கூறுங்களேன்: பதில்: நான் பிறந்தது 1940ல் கிருஷ்ணா ஜில்லாவில் ‘பெடனா’ என்ற கிராமம். அங்கு என் தாத்தா சப் ரிஜிஸ்ட்ரார் ஆக ““நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல்”

‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து

கிரியின் இந்தத் தொகுப்பு மேற்கத்திய செவ்வியல் இசைக்கு தமிழில் நல்ல அறிமுகமாக இருக்கிறது. நான் குறிப்பிட்ட முன்னறிமுகமும் , சிறு பயிற்சியும் மேற்கத்திய செவ்வியல் இசை கேட்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்தத் தொகுப்பில் கண்டிப்பாகக் கிடைக்கும். ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழேயும் அவர் கொடுத்திருந்த சுட்டிகள் அவர் பேசும் பொருளை உடனடியாகக் கேட்டு ரசிக்க மிகவும் உதவியாக இருந்தன…

இளம்பருவத்தோள்

அமெரிக்க வாழ் இந்தியர்களைப் பற்றிய முதல் நெட்ஃபிளிக்ஸ் தொடர் அமெரிக்கத் தலைமுறையினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தி ஆஃபீஸ்” என்ற அமெரிக்க நாடகத்தில் நடித்துப் பிரபலமான இந்திய வம்சாவளி மிண்டி கேலிங் தன்னுடைய சிறு வயது அனுபவங்களை “Never Have I Ever” தொடராக இயக்கியிருக்கிறார்.

விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்

This entry is part 1 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

மிகப் பெரிய தனியார் நிறுவனங்கள்., அரசாங்க சட்டங்களை தங்களுடைய லாபத்திற்காக மாற்றக் குறுக்கு வழிகளில் ஈடுபடுவது மனித வரலாற்றில் என்றும் நிகழ்ந்த ஒரு விஷயம். ஆனால், விஞ்ஞானம் வளர வளர, மறைமுகமாக, தனியார் நிறுவனங்கள், விஞ்ஞானம் சார்ந்த சட்டங்களை தங்களுடைய லாபம் குறையாமல் இருக்கத் திரிக்கவும் முற்பட்டது கடந்த 120 வருட வரலாறு. இதனால், பல விஞ்ஞான ஆராய்ச்சிகளில், தனியார் லாபமா, அல்லது பொது நலமா என்ற மிகப் பெரிய அறப்போர் நம்முடைய சமுதாயத்தில் நடந்த வண்ணம் இருக்கிறது.

சுடோகுயி

”வீ வாண்ட் சுடோகுயி!

வாசகங்கள் ஒளிரும் மின்பலகைகளை உயர்த்தி ஆட்டியபடி பலர் உரக்க கத்திக்கொண்டிருந்தார்கள்.

பிரதமரை நோக்கி ஓடிவர முயன்றவர்களை ரோபோக்களின் சைகையை கவனித்து ஸ்டாமினாக்கள் தடுத்து நிறுத்தின.

விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க்

“நான் வேண்டுமானால் இன்னுமொரு நூறாண்டுகள் காத்திருக்கிறேன். அதுவரை தொந்தரவு இல்லாத ஓரிடத்தைத் தேர்வு செய்து என்னை உறக்கத்தில் ஆழ்த்தி உறைய வைத்தோ அல்லது ஏதாவது ஒரு வகையில் பாதுகாத்து வைத்திருங்கள். அதை உங்களால் செய்ய முடியும் என்பதை அறிவேன்” என்றார்.

கைச்சிட்டா – 4

This entry is part 4 of 8 in the series கைச்சிட்டா

வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் ஜன்னலோர வாசமும் அண்டை அயல் நடப்புகளும் நிறையக் காணக் கிடைக்கின்றன. நான் உட்காரும் இடத்திற்கு வெளியே உள்ள கொல்லைப் புறத்தில் இரண்டு தனித்தனி ஜோடிப் பறவைகள் கூடு வேறு கட்டியிருக்கிறது. ‘கபாலி’ படத்தில் சிறையில் இருந்து வெளியே வரும் ரஜினி கதாபாத்திரம் சொல்வது போல், “அதப் பறக்க விடுங்கடா… அதுதான் அதன் இயல்பு” என மரக்கிளைகளுக்கு நடுவே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும். அந்தக் குருவிகளும் பட்சிகளும் உட்கார்ந்து கூட்டம் கூடி இரையைக் கொத்திக் கொண்டு காணாமல் போவது நாள் முழுக்க கணினி சந்திப்புகளில் அடைபட்டிருக்கும் எனக்கு உவகையைத் தரும். சிறகடிக்கும் ஜீவன்கள் குறித்த நூல்களைத் தேடினேன். சற்றே இன்ப ஆச்சரியம். அமெரிக்காவில் அதிகமாக விற்கும் நூல்..

அகத்திலிருந்து ஐந்தாம் நிலைப் பொருள்

ஒரு சிறு கிருமி, உலகம் முழுதும் பரவிப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள், வீட்டிலிருங்கள்’ என்று அரசுகள் கட்டளையிடுகின்றன, வேண்டிக்கொள்கின்றன, மீறுபவர்களைத் தண்டிக்கின்றன. வீட்டில் முடங்கும் ஆண்களைப் பற்றி, பெண்களுக்கென இச்சமூகம் நிர்ணயித்துள்ள வேலைகளை, அவர்கள் செய்ய நேரிடுவதைப் பற்றிப் பல கிறுக்குத்தனமான கேலிகளாலும், கிண்டல்களாலும் சமூக “அகத்திலிருந்து ஐந்தாம் நிலைப் பொருள்”