கைச்சிட்டா

This entry is part 1 of 8 in the series கைச்சிட்டா

இந்தப் பகுதியின் குறிக்கோள்கள்:
1. சுருக்கமாகச் சில புத்தகங்களை அறிமுகம் செய்வது; அறிமுகம் செய்த பதிவுகளைப் பகிர்வது.
2. ஆங்கிலமோ, தமிழோ, மொழியாக்கமோ (அல்லது) கதையோ அபுனைவோ கிளாசிக்கோ – எல்லாவற்றிலும் ஒன்றைப் படித்தீர்களா எனக் கேட்டுப் பதறச் செய்வது.
3. உங்களிடமிருந்து இலவசமாக நூல்களைப் பெறுவது (அல்லது) பழைய விமர்சனங்களைப் புதுப்பிப்பது.

சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2)

பதினான்கு அத்தியாயங்களுடன் வெளி வந்திருக்கும் இந்தப் புத்தகம் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல், மருத்துவம், ஜனநாயகம் முதலிய பல துறைகளில் புகுந்து ஆங்காங்கே நிலவும் பிரச்சினைகளை அலசுகிறது. வாரக்கணக்கில் குடும்பத்துடன் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் இந்த சமயத்தில் மிக எளிய நடையில் பள்ளிக் குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் வடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், சுவையான விவாதங்களுக்கு தீனி போடும்.

சுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம்

“Patient பேரு என்ன?” என்ற கேள்விக்குத் தன் கணவனின் பெயரைக் கேட்கிறார்கள் என நினைத்துக்கொண்டு அவர் இறந்துவிட்டதாகக் கூறும் இடத்திலும், “எத்தன ரூபா மாசம் சம்பாதிப்பே?” எனும் கேள்விக்கு “அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும், அப்புறம் கம்பு, கேழ்வரகு!” என்று கூறும் இடத்திலும் வள்ளியம்மாளின் அப்பாவித்தனத்தையும், அறியாமையையும், அன்றாடங்காய்ச்சி நிலைமையையும் எளிதில் உணர்த்தி விடுகிறார் சுஜாதா.

யானை யானையாகும் தருணம்

நாங்கள் இப்போது பாதி மனித உடலுடனும், மீதி தாவர உடலுடனும் இருக்கிறோம். இந்த நிலைப்பாட்டில் எங்களுக்கான சாதகங்கள் அதிகம். உடலுக்கு தேவையான சக்தியை உடலில் இரண்டறக் கலந்துள்ள தாவரம் சூரிய சக்தியிலிருந்து பெற்றுவிடும். தாவர உண்ணிகளான மான்கள், ஆடுகள், மாடுகள் போன்ற தாவர உண்ணி விலங்குகள் எந்தத் தாவரங்களை உண்பதில்லையோ அந்தத் தாவரங்களின் விதைகளோடு எங்கள் மரபணுக்களைக் கலந்து பிறழ்வு செய்துகொண்டால் மட்டும் போதும். அந்தத் தாவரங்களாக எங்கள் உடலின் ஒரு பாதி இருப்பின், தாவர உண்ணிகள் எங்களை தவிர்த்துவிடும்.

நோயாளி எண் பூஜ்யம் -1

This entry is part 1 of 2 in the series நோயாளி எண் பூஜ்யம்

“நீங்கள் நம்பாத மூலப்பொருள் எது?”
“சிலிக்கான் தான், வேறென்ன! பிராணவாயுவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் இருப்பதும் அதுதான்; அது இல்லையெனில் ட்ரான்ஸிஸ்டர்களோ, ட்ரான்ஸ்ஃபார்மர்களோ இருக்காது. அது புதுவகைக் களிமண், செயல்பாட்டுக்குத் தக்கபடி உரு மாற்றப்படக் கூடிய பொருள். இன்று ஒரு மதம் கொண்டுவரப்பட்டால், அதில் கடவுள் சிலிக்கானிலிருந்து மனிதர்களைப் படைத்தார் என்று சொல்வார்கள்.”

டெம்பிள் க்ராண்டின்: பேட்டி

சிலருக்கு, அவர்கள் படிக்க முயல்கையில், அச்செழுத்துகள் பக்கங்களில் குலுங்குவது போல உணர்வார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘எழுத்துக் கோர்வைக் குழப்பம்’ (டிஸ்லெக்ஸிக்) உள்ளவர்களாக தரம் பிரிக்கப்பட்டு விடுவார்கள். இதில் விஷயம் என்னவென்றால், இந்த அச்செழுத்து குலுங்கும் பிரமையை, சில சமயம் அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் நிறத்தை மாற்றினால் போதும், நீக்கி விடலாம். வேறு வெளிர் நிறக் காகிதங்களில், உதாரணமாக, வெளிர் லாவெண்டர், வெளிர் சாம்பல், வெளிர் நீலம் என்று பலவகை வெளிர் நிறக் காகிதங்களில் அச்சடித்தால் இந்தக் குறை ஏற்படுவதில்லை. இது ஏன் வேலை செய்கிறது என்பதை நான் அறியேன்.

அளவு மீறினால் பாலும் விஷமோ?

பால் உடற்பருமனை குறைக்க உதவும் என்பது பொதுவான அபிப்பிராயமாக இருந்தாலும் 29 ஆய்வுகளின் கூட்டாய்வு இதை ஆதரிக்கவில்லை. மேலும் முழுகொழுப்பு பால், மற்றும் பாலடைக்கட்டியிலிருந்து கொழுப்பு குறைந்த பாலிற்கு மாறுவதின் மூலம் பருமன் குறைவதாக தெரியவில்லை. ஆனால், தயிருக்கு மாற்றிக்கொண்டால் பருமன் அதிகமாவது குறைகிறது. பாலிற்கு பதில் தயிரை சேர்த்து கொள்வதால் பருமனாவது குறைவதோடு குடல்வாழ் நுண்ணுயிர்களுக்கும் இது சாதகமாக இருப்பதால் இதர ஆதாயங்களுக்கும் வழிவகுக்கிறது.

நெகிழி முகங்கள்

முகங்களுக்கு ஒரு சாபம் இருக்கிறது இப்போது – ‘அதே போலவே பல வருடங்கள் இரு, கண்டு பிடிக்க இயலாதபடி சட்டென்று மாறி விடு.’ இந்தக் கவசம், நமக்கு அதிர்ஷ்டமிருந்தால் நம் இறப்பிற்குப் பிறகும்கூட நம்முடன் இருக்கக் கூடும், அல்லது இறப்பின் முன்னறிவிப்பென கழலக் கூடும். பல ஆண்டுகளாகப் பேணிப் பாதுகாத்த அது இறப்பின் அறிவிப்பாக வருவது என்றும் பொருள் கொள்ளும். வருங்காலத்தில் ஒருவரின் முகம் அவர் வாழ்நாள் சரிதத்தைச் சொல்லாது, அவரின் வாழ்க்கைப் பயணங்களை, அவரது அனுபவங்களை, அவரது குணாதிசயங்களை, எதையுமே உணர்த்தாது.

பிரபஞ்சம்

சூரியனுக்கும் நமக்கும் உள்ள தூரம் வெறும் 8.3 ஒளி நிமிடங்கள் என்றால் , நம் விண்மீன் மண்டலத்தின் மையப் பகுதியிலிருந்து வரும் ஒளி நம்மை வந்து சேரக் கிட்டத்தட்ட 270 நூற்றாண்டுகள் ஆகும். நாம் இப்பொழுது அந்த ஒளியைக் கண்டுகொண்டிருந்தால் அது ஏறத்தாழ 27,000 ஆண்டுகளுக்கு முன் கிளம்பிய ஒளியாகும்.

புஷ்பால ஜெயக்குமார் – கவிதைகள்

நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறையும்
எனது சுதந்திரம் அர்த்தமற்றது என்னைப் போலவே
மிகைகொள்ளாது நிலைபெற்ற வழியில் வெடித்தபோது
வெளியே நடமாடுகிறேன் நான்