பயணக்குழுவில் சாஹிப்புகளைத் தவிர, என் ஷெர்பா அணியில் இருந்து ப்யு தார்கே, டா நாம்க்யால், அஜ்பா, டோர்ஜி மற்றும் நோர்பு……அன்று மட்டும் கிட்டதட்ட எட்டு மணி நேரங்கள் ஏறியிருப்போம்.
25,680 அடிகள் உயரமான நெப்ட்ஸ்ஸின் சிகரம் (nuptse) இப்போது எங்களுக்குப் பின்னால் இருந்தது. நாங்கள் அதற்கு சரிக்கு சரியான உயரத்தில் இருந்தோம். ….சூரிய ஒளி சுருங்கிக்கொண்டே வந்தது, குளிர் மேலும் கடுமையாக எங்களை போர்த்திக்கொண்டு இறுக்கி அணைத்துக்கொண்டிருந்தது. சற்று நேரம் சிரமப்பட்டுக்கொண்டு வந்த நோர்பும் டோர்ஜாவும் திடீரென நின்றார்கள்.
Category: இதழ்-219
நிழல்
“மைந்தர்கள் தந்தையரின் உச்ச கணத்தில் பேரண்ட பெருங்களிப்பில் நிகழ்கின்றனர். தந்தையரின் விந்தில் நாம் உற்ற போது மைந்தராகிய நாம் நிகழ்ந்துவிடுகிறோம். பிறத்தல் என்பது பின்னர் தான் நிகழ்கிறது. “தந்தையே, தந்தையே ” என்ற நம் குரலை அவர் அப்பெருங்களிப்பில் இருக்கும் போது செவி மடுக்கவேண்டும். ஆயிரமாயிரம் குரல்களில் எக்குரலுக்கு அவர் செவி மடுக்கிறாரோ அவரையே தந்தையர் தன் மகன்களாகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களே அன்னையரின் கருவில் திகழ்ந்து பிறக்கவைக்கப்படுகின்றனர்.
திருவண்ணாமலை
“கண்ணன், நீங்க இப்படி திருவண்ணாமலைன்னு சொல்றீங்க பாருங்க.. அது ஒரு நல்ல பழக்கம்.. அதன்மூலம் கோபத்தை அடக்கலாம்.. ஆயிரத்தியெட்டு முறை சொன்னால் ஒரு கிரிவலம் சென்ற பலன் கிடைக்கும்… தெரியுமா,” என்றார் லேத்து மிஷின் இன்சார்ஜ்.
தரிசனம்
உள்ளே சின்ன அறையில் வழக்கத்துக்கு அதிகமாக ஆட்கள் கூட்டமாகத் தென்பட்டார்கள். ஓரமாக தரையில் படுக்கை, ஜூர வேகத்தில் உடம்பு அதிர ,அரைக் கண்ணைத் திறந்தபடி ராமானுஜன் படுத்திருந்தான். மூச்சு சிரமப் பட்டு வந்தது. பக்கத்தில் கைக்கெட்டும் இடத்தில் சில பேப்பர்கள். இரண்டு நாள் முன்பு கூட ஏதோ எழுதிக் கொண்டிருந்தாக லட்சுமி சொன்னாள். அருகிலேயே ஜானகி தரையில் உட்கார்ந்திருந்தாள். அந்தப் பக்கம் தோல் பெட்டி இருந்தது. ராமசந்திரராவ் நின்றிருந்தார். ராமானுஜனின் தம்பிகள் இரண்டுபேர், கூடவே இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். ராவ்தான் வருகையைக் கண்டு லேசாக தலையை அசைத்தார். மௌனம், ராமானுஜனின் கனத்த மூச்சைத்தவிர.
முறைப்படியான ஒரு பதில்
போகுமுன், கதவுப் பிடியில் கை வைத்தபடி, அவர் சொன்னார், “உனக்கு இங்கிலிஷ் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் இதைப் பற்றி யோசி: நம் கல்லூரியில் போதிக்கும் எந்தத் துறை உனக்கு மேலான தொழில் வாழ்க்கையை அளிக்கும்? சென்ற வருடம் நம் மாணவர்கள் இரண்டு பேர் பரீட்சைகளில் தேறி, ஆஃப்ரிக்காவுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகப் போனார்கள். அவர்கள் யூரோப்புக்கும், ஆஃப்ரிக்காவுக்கும் இடையே நிறைய தடவை பயணம் போகிறார்கள், …. ..எல்லாரும் முக்கியமான பதவிகளில் இருக்கிறார்கள். நீ இன்னும் இளைஞன். பலவகையான வாய்ப்புகள் உன் வாழ்க்கையில் கிட்டும். நீ அவற்றுக்கு உன்னைத் தயாராக்கிக் கொள்ளவில்லை என்றால், அவை எவற்றையும் கைப்பற்ற உனக்கு இயலாது. இப்போது இங்கிலிஷை ஆளக் கற்பதுதான் உன்னை நன்கு தயார் செய்து கொள்ள இருக்கும் ஒரே வழி, நீ அதை அறிகிறாயா?”
வேலைக்கு ஆள் தேவை
‘குச்சினா-க்ராஃப்ட்’டின் அதிவேக வளர்ச்சியில் தனக்கும் ஒரு பங்கு என்று ராகுல் நினைத்ததால் வேலை நிரந்தரம் என அடிமனதில் ஒரு நிச்சயம். அது இல்லாமல் போனதால் விரக்தி. அடுத்துவந்த சில வாரங்களில் அது ஏமாற்றமாக மாறியது. பதினோரு ஆண்டுகளுக்கு முந்திய பொருளாதாரத் தாழ்வின்போது அவன் மாணவன். அவனை அது பாதிக்கவில்லை. இப்போதைய பொருளாதார சுருக்கத்தின் இறுக்கத்தை முழுமையாக உணர்ந்தான். அவனுடைய அனுபவமும் அறிவுமே அவனுக்குப் பகை.
‘Luce’ -திரைப்பட விமர்சனம்
நாம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்காத அவ்வுண்மைகள்தான் என்ன? இவ்வுலகம் அருட்தொண்டர்களாலும் சூனியக்காரர்களாலும் நிரப்பப்பட்டதல்ல. சாதாரண மனிதர்களே நிரம்பியிருக்கிறார்கள் அவர்கள் எல்லோருமே எல்லா துறைகளிலும் மேன்மையடைந்தவர்களல்ல. சில துறைகளில் உயர்ந்தும் பல துறைகளில் தாழ்ந்தவர்களுமாகவே இருக்கிறார்கள். அவர்களின் நடத்தையும் அவர்களை ஊக்குவிக்கும் காரணங்களைப் பொறுத்து, நேர்வழியையோ, குறுக்குவழியையோ பின்பற்றுகிறது.
வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5
பழுதுபார்க்கும் மையங்களுக்குச், சில வரிச் சலுகைகள், முதலில் வழங்கப்பட வேண்டும். இது தொலைநோக்குடன் அணுகப்பட வேண்டும். மறுபயன்பாட்டில் அதிக முதலீடு செய்வதும் இதுவும் ஒன்றே. வருமுன் காக்கும் செயல் இது
வால்டிமர் ஏட்டர்டே
இந்நகருக்கு இப்பேரழிவைக் கொண்டுவந்திருக்கும் அவனா, அதே மனிதன் தானா இனிய வார்த்தைகளில் மென்மையாக அவளிடம் கொஞ்சியவன். அவனை சந்திக்கவா முந்தைய இரவு தனது தந்தையின் சாவியைத் திருடி ரகசியமாக நகரக் கதவை திறந்தாள்? பொற்கொல்லப் பயிற்சி மாணவனாக இருந்த தனது ஆடவனைக் கண்ட போது, அவனுக்கு பின்புறம் கையில் வாளுடன் போர் வீரன் ஒருவனும் இரும்பு கேடயமேந்திய ஒருவனும் நின்றுகொண்டிருந்தனர், அப்போது அவள் என்ன நினைத்திருப்பாள்? அவள் திறந்துவிட்ட கதவு வழியாக இரும்பு ஆறு அலையலையாக சென்றதைப் பார்த்த போது பிச்சியானாளா அவள்?
ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2
நான் உன்ன கேலி பண்றேன்னு நெனச்சுக்காதே. உடல்சார்ந்த விசயத்தில் உன் தைரியத்தின் மீது எனக்கு உண்மையிலேயே நிறைய மதிப்புண்டு. எனக்கோ அது சுத்தமா கிடையாது. உன் நண்பன் ஜெத்ரோ கூறினான், தேவதைக் கதையில் வர பையனப் போல பயத்தையோ கூச்சத்தையோ உன்னால உணரக்கூட முடியாதுன்னு. நான் அதுக்கு நெரெதிர். சில சமயத்துல, பார்க்கப்படுவதை, டார்லீனால் பார்க்கப்படுவதைக்கூட என்னால் சகிச்சிக்க முடியாது. இரண்டு இடது பாதங்கள், பத்து கட்டை விரல்களை வைத்துக் கொண்டு நாட்டியக்காரியாக ஆனது எனக்கு எப்படிப்பட்ட திருப்புமுனையாக இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாரு
வாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்
“நோய், வாழ்வில் வாழும் தாகத்தைக் கூட்டும் ஒன்று; வாழ்வாழ் என்று மீள மீள விழையச் செய்கிறது அது,”என்ற நீட்ஷாவின் கூற்றினை விளக்கும் வகை வாழ்வையே ஜேம்ஸ் வாழ்ந்திருந்தார். தன்னுடைய மனச்சோர்வாலோ, அல்லது அதற்கு எதிர்வினையாற்றும் எண்ணத்தாலோ, எப்போதும் எதார்த்தத்தில் ஊக்கம், அதிர்ச்சி மேலும் கிளர்ச்சியையே தேடிக் கண்டுபிடிக்க முயன்றவர் ஜேம்ஸ். தன் பதின்பருவ மகனிடத்தில் ஜேம்ஸ், ‘ஆழ்ந்து வாழ்,’ என்றார். நீட்ஷாவோ நம்மிடம், ‘பயங்கரமாக வாழ்,’ என்றார்.
கவிதைகள் – கா. சிவா
பல தடைகளைத் தாண்டி
இறையுருவைத் தரிசிக்கையில்,
மெய்யன்பை எப்போதாவது
எதிர்கொள்கையில்,
இயையிசையின் ஒரு சுரம்
உயிராழம் தீண்டுகையில்…
சுனிதா ஜெயின் -கவிதை
நீ பதினேழு வயதினள். மேலும் கன்னிமை இழந்தவள்
அவர்கள் உனக்குப் பயண ஏற்பாடு செய்கிறார்கள்,
வேறு நாட்டிலுள்ள உன் சொந்த ஊருக்கு.
அங்கே உன் உண்மையான ஆரம்பங்களின்
வேர்களை அறிந்து கொள்ளக் கூடும்.
புல்
இன்னொரு அதிர்ஷ்டப் புல்
எப்பொழுதாவது கிடைத்தால்
அதை அப்படியே விட்டுவிடுவேன்.
அல்லது அதை என்
சகோதரனுக்கு கொடுத்து விடுவேன்.
கவிதைகள்- வ. அதியமான்
என் பெருவிரலுக்கும்
ஆள்காட்டி விரலுக்குமான
இதே விரலிடுக்கில்
எத்தனை முறை
எத்தனை உலகங்கள்
நழுவிப்போயிருக்கிறது
என்பதை
மறந்து போனபடி…
மகரந்தம்
1811-ல் வெளியான பிரபலமான புதினம் Sense and Sensibility. ஆசிரியர் ஜேன் ஆஸ்டின். மூன்று பகுதிகள் கொண்ட இப்புதினம் 19-ஆம் நூற்றாண்டின் செவ்விலக்கியமாகக் கருதப்படுகிறது . அன்றிருந்த நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் காதலையும் அங்கதமும் நகைச்சுவையும் கலந்து விவரிக்கிறது. இப்புதினத்தின் ஒரு பாத்திரமான எட்வர்ட் பெர்ரார்ஸ் ஒரு வேலை இல்லாப் பட்டதாரி . வேலைக்குப் போகும் அவசியமும் இல்லாதவர். அவர் ஒரு பெரும் பணக்காரரின் தலைமகன். இருந்தாலும் வேலைக்குப் போகாமல் இருந்து விட்டதற்கு வருந்துபவர். காலம் கடந்தபின், தான் சேர்ந்திக்கக் கூடிய வேலைகளை நினைத்துப் பார்க்கிறார். தரைப்படை, கடற்படை, தேவாலயம், வக்கீல் என்கிற நான்கு வேலைகளில் ஏதாவது ஒன்று கிடைத்திருக்கலாம் என்றும், எதுவுமே அவருக்கு திருப்தி தந்திருக்காது என்றும்