எவ்வளவு தூரத்தில், எப்படிப்பட்ட உலகமாக இருந்தாலும் சரி; அங்கே தொண்டையை நனைக்கக் கொஞ்சம் தண்ணீர் மட்டும் இருந்தால் போதும், ஏதோ ஒரு வகை உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் சல்லடை போட்டுத் தேடுகிறார்கள். அட,அட அசடர்களா, பூலோக மனிதனுக்குத்தானேய்யா தண்ணீர் தேவை? மற்றக் கிரகங்களில், செலினியத்தைத் தின்று மீதேனைக் குடித்து வாழும் உயிர்கள் இருக்க முடியாதா என்ன? அவர்கள் சினிமா பார்க்கும்போது பாப் கார்னுக்கு பதிலாக ப்ளூட்டோனியத்தைக் கடித்துத் தின்றாலும் ஆச்சரியம் உண்டா?
Category: இதழ்-215
வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1
இது ஒரு நோய் என்று ஆரம்பத்தில் யாருமே நினைக்கைவில்லை. இன்றும் உலகில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் இதை ஒரு வளர்ச்சி சார்ந்த விஷயமாகவே பார்க்கிறார்கள். சமிபத்தில், ஆப்பிள் நிறுவனம் செய்த தில்லாலங்கடியை யூரோப்பிய நீதிமன்றம் ஒன்று சுட்டிக்காட்டி ஆப்பிளை சரி செய்ய வைத்தது. ஆப்பிள், ஐஃபோனில் அடிப்படை நிலைபொருள் (firmware) புதுபித்தலில் வேண்டுமென்றே பழைய திறன்பேசிகளை மெதுவாக இயங்கும்படிச் செய்தது. வெறுத்து போன நுகர்வோர், புதிய ஐஃபோன்களை வாங்க வைக்க இந்த நிழல்வேலை செய்து மாட்டிக் கொண்ட்து, ஆப்பிள் நிறுவனம்.
களியோடை
கொடிய கோடையில், ஏரிகள் நீரின்றி வரள, பறவைகள் தங்க இடமின்றிச் செல்ல, இந்த வெப்பம் மிகுதியான சூழ்நிலையில், குளங்கள் நிறையுமாறு ஓர் அதிகாலையில் பெய்த மழையால் ஊர் மக்களுக்குள்ளும் பெய்த உவகை எல்லாம் ஒரு சேர என்னுள் பெய்ததது போலிருந்தது என்று அந்த பாடல் சொல்கிறது.
பிரகாசமான எதிர்காலம்
அப்போது தான் அவன் மனமாற்றம் தாற்காலிகமானது இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவள் காதல் வாழ்க்கையில் புதிய அனுபவம். கல்வி அல்லது தொழில் நிமித்தம் ஊர் மாறியதால், இன்னொரு பெண் அபகரித்ததால், பழக்கம் புளித்துப் போனதால் உறவுகள் முறிந்திருக்கின்றன. அவனிடம் நிகழ்ந்த மாற்றங்கள் அவள் எதிர்பாராதவை. உலர்சலவை செய்த வர்த்தக ஆடைகளுக்கு பதில் சுருங்கிய சட்டையும் பான்ட்ஸும். கடைகளில் வாங்காமல் அவனே தயாரித்த மதிய உணவு. முகத்தில் தீவிர சிந்தனையின் ஆழம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு கொலை
“படிச்சி என்ன புண்ணியம், பிள்ளைய பரலோகம் அனுப்பவா படிக்க வச்சேன். எங்க நிலம் அணைக்கட்டு தாண்டியும் உண்டு. இந்த ரப்பர் எஸ்டேட் காரங்க எங்க நிலத்தை கேட்டானுங்க. கவெர்மென்ட்ல ஆளுங்க வந்தாங்க, காசு கீசு தாரேன்னு சொன்னாங்க. இது எங்க காடு, எப்புடி கொடுக்க. டவுனுக்கு தண்ணீ வேணும்னு பாதி காடு டேம்முக்குள்ள முங்கி கிடக்கு. இதையும் கேட்டா, எங்க போவோம். எம்பிள்ள கேசு போட்டான். சந்தோசம் எங்க ஆளுங்க எல்லாரும் பெருசா பேசுனாங்க. ஆனா இழப்பு எனக்கு தானே”
எவ்வழி நல்லவர் ஆடவர்
வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் அடையும் தட்பவெப்ப இடர்களைப் பற்றி பாகிஸ்தானின் மற்ற பகுதி மக்களுக்குப் புரிதல் இல்லை. மீண்டும் தாக்கும் போலியோவும், காஷ்மீரமும் ஆளுவோரின் மிகப் பெரும் சிந்தனையாக(!) இருக்கிறது.வரும் பத்தாண்டுகளில் நீர்ப் பற்றாக்குறை என்பது நகரங்களில் வாழும் மக்களைப் பாதிக்கும் என்ற உணர்தல் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள்.
கண்ணியமெனும் ஒழுக்கம்- அதன் தேவையும் நாயகத்தன்மையும்
“..பண்பட்ட வாழ்வின் தொனிக்கு அதற்கேயுரிய அவசியம் உண்டு, ஏன், அதற்கென்று ஒரு நாயகத்தன்மையும் இருக்க முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள நாம் கற்க வேண்டியது மிகவும் முக்கியம் என்றும், நவீன இலக்கியத்தின் சீற்றமிகு பாவனையால் பொருள்படுவது அனைத்தும் சிறிது மாற்றத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும்தான் என் உரைநடை குறித்து நான் சொல்லியிருக்கக்கூடியது.”
விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி
விருந்தாளி ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது.யானையை விட சிறியதுஎலியை விடப் பெரியது. முதல் அடி என் சகோதரி மீது அடுத்து என் தந்தைக்கு ஒரு உதைபின் என் தாயை தள்ளிவிட்டது.நான் வெறி கொண்டவனானேன். ரோவரை கிச்சு கிச்சு மூட்டியது.பூனையை பயங்காட்டியது.கழுத்துப் பட்டையை கிழித்தது.தொப்பியை முரட்டுத்தனமாய் நசுக்கியது. தலையில் தேனை மெழுகியது.குளியல் தொட்டியில் கற்களை நிரப்பியது.கோபத்தில் கத்தும்போது காலணியையும் காலுறைகளையும் களவாடியது. அப்படித்தான் “விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி”
கோடிட்ட இடங்களில் நிரம்புகிறோம்
நிச்சயமின்மையுடன் இணைகையில் நம் எச்சமாகக்
கோடுகளே மிஞ்சுகின்றன
கோடுகள் என்றும்
கோடுகளால் தான்
நிரப்பப்படுகின்றன.
வாசகர் கடிதம்
இறகுப் பந்து எனப்படும் ஷட்டில் பாட்மின்ட்டனின் பெரும் நுணுக்கங்களை வாசகன் மீது விட்டெறிந்து அவனைத் தெறித்து ஓடச் செய்யாமலும், பந்தடிப்பிலிருந்து அதிகம் விலகிச் சென்று தனி மனித அவலங்களில் – புலம் பெயர்ந்தவர்களின் அவலங்களில் உழன்று விடாமலும் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள புனைவு.
குளக்கரை
‘மண்புழு குடியானவர்களின் நண்பன்’ என்பது பழைய தொடக்கப் பள்ளிகளில் ‘இயற்கைப் பாடமும் தோட்ட வேலையும்’ என்ற பாடப்பிரிவின் பாடப் புத்தகத்தில் நான் படித்த வாசகம். அதை விவசாயியான என் தாத்தாவிடம் காட்டி விளக்கம் கேட்டேன். அவர் ‘‘நாக்குப்பூச்சி தானே ? ஒரு பிரயோசனமும் இல்லை . அது நெல்வயலில் மண்டிப் போனால், வயல் நிறைய நீர் உறிஞ்சும். அதனால் நீர் இறைப்பு சிரமமாகி விடும்’ என்றார்.