அந்த முதல் வெற்றியை, நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே கவனித்து கொண்டிருந்த, மறக்கவே முடியாத கணங்களை அன்றிரவு வீடு திரும்பும்போது அசை போட்டேன். கை குலுக்கியபின் திரும்பிய டோடியாவின் தளர்வான நடையை, ஸ்கோரை மைக்கிடம் சொன்ன போது மைக்கின் கண்களின் ஆச்சரியத்தை, அன்றிரவு வீடு திரும்பி காரை அணைத்த பின்பும் ரேடியாவை அணைக்காமல் pink-கின் million dreams பாடல் முடியும் வரை கேட்டுக்கொண்டிருந்ததை, காரிலிருந்து இறங்கிக் கடும் குளிர் காற்றிலும் வானத்தின் மூன்று நேர்கோட்டுத் தாரகைகளைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்ததை…அடுத்த நாள் அலுவலகப் பயணத்திலும் அசை போட்டேன். மாலை, இரவு என்று அந்த வாரம் முழுவதும் யோசித்ததை நினைத்துச் சிரிப்பாக வந்தது.
Category: இதழ்-214
உயிராயுதம்
சுட்டெரித்த சுடலையின் வெப்பம் தணிந்தபின் சாம்பல் தரித்த கங்குகளென என்புகள் கிடந்தன. இந்திரன் முனிவருக்குரியவைகளைச் செய்து என்புகளை பாதுகாத்தான். விஸ்வகர்மாவை அழைத்தான்.
அவர் என்புகளை கங்கையின் நீரில் முழுக்கி எடுத்தபின் அவை வைரம் என, மின்னலின் பருவடிவென ஔிகொண்டிருந்தன. ’என்பினாலான மானுட உயிர்ப்பொருள் இத்தகைய ஒன்றாகுமா!’ என்று அவரின் மனம் பதைத்துக்கொண்டிருந்தது.
சட்டம் யார் கையில் – பகுதி 2
ஒரு சொல்லைத் தனியாகப் பார்க்கக் கூடாது. அதனுடன் தொடர்புடைய வாக்கியத்தின் மற்ற சொற்களோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். இதுவே இதன் சாராம்சம். உதாரணத்திற்கு, I like to joke என்பது ஒரு வாக்கியம். I like the joke என்பது இன்னொரு வாக்கியம். முதல் வாக்கியம் சுயவிளக்கம். இரண்டாவது வாக்கியம் மற்றவரின் செயலின் தாக்கம். இரண்டிலும் joke என்ற சொல் இருந்தாலும், சுற்றியுள்ள வார்த்தைகளைப் பொறுத்து, அந்த சொல்லின் பொருள் மாறுபடும்.”
ப:. “நீங்க சொன்னவுடன் இதை எப்படி நாம் புரிந்து கொள்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது. எல்லாம் ஒரு context என்பதை மனித மூளை எப்படியோ புரிந்து கொள்கிறது.”
2016 – எண்கள்
“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இருக்கும். எல்லாருடைய வீட்டிலும் டிவிக்கு கேபிள் இருக்கு, நாமும் வச்சுண்டா என்னன்னு கேட்டான். நமக்கு கட்டுப்படியாகாதுன்னு சொல்றதுக்குப் பதிலா அவனையே வீட்டுக்கணக்கு போடச்சொன்னேன். நான் வீணை சொல்லித்தரேன், அவ பாட்டு க்ளாஸ் நடத்தறா. அதில வரும்படி இவ்வளவு. வீட்டு வாடகை, எலெக்ட்ரிக் பில், சாப்பாட்டுச்செலவு… எல்லாம் கணக்குப்போட்டு கடைசியில அறுபது டாலர் தான் மிச்சம்னு கண்டுபிடிச்சான். அதில ஐம்பது டாலரைத் தூக்கி கேபிளுக்கு கொடுக்கறது அனாவசியம்னு அவனுக்கே தோணிடுத்து.”
“நீங்க செஞ்சது புத்திசாலித்தனமான காரியம். முடியாதுடான்னு ஆரம்பத்திலயே பட்னு சொல்லியிருந்தா அவனுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.”
இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும்
காசிமெ சுலைமானி, ஈரானில் கொண்டாடப்பட்ட மூத்த ராணுவத் தளபதி. அந்நாட்டின் பெருந்தலைவர் அயதுல்லா அலி ஹோமேய்னிக்கு அடுத்த நிலையில் மக்களால் அதிகம் மதிக்கப்பட்டு மத்திய கிழக்கிலும் தனிப்பெரும் சக்திவாய்ந்த நபராக கருதப்பட்டவர். அமெரிக்காவிற்கு எதிராக நடக்கும் போரில் ஈடுபட்டு வந்த ஈரானின் ராணுவப் பிரிவின் அங்கமாக விளங்கும் குத்ஸ் “இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும்”
முரல் நீங்கிய புறா- நூல் அறிமுகம்
கொண்டாட்டங்களால் உடலெங்கும் புழுதியாய், மனதெல்லாம் வெள்ளையாய் கிராமத்தில் தன் பால்யம் கழித்த தாத்தா தங்க, நாற்கரச் சாலை புழங்கும் நகர வாழ்க்கைக்கு வருகிறார். பள்ளி செல்லும் தன் பேரனுக்கு கையசைக்கிறார். அப்பொழுது அவர் பால்யம் பேரனுக்கானதாய் இருக்கும் போது உடையும் நரையும் வெள்ளையாய் / மனசெல்லாம் புழுதியாய் மாறிப்போன மாற்றத்தை மேவுகிறது “அகவையுள் படிந்த புழுதி”.
ஒரு தூரிகை
ஸியனூக் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தி அகற்றப்பட்டபோது, அவள் கம்போடியாவை விட்டு நீங்கியிருக்கிறாள், ஒருக்கால் ஸிஐஏ உதவியோடு வெளியேறி இருக்கலாம். அப்போது பௌல் பாட்டின் தலைமையில் கமேயர் ரூ(ஸ்)ஜ் தலைநகரைக் கைப்பற்றி, அதன் இருபது லட்சம் குடிமக்களைக் கிராமப்புறங்களில் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பத் துவங்கியபோது, அங்கே தனிச் சொத்து இல்லாத கூட்டுச் சமூகங்களில் ‘புது கமேர்களாக’ ஆக அவர்கள் பயிற்சி பெற வேண்டி இருந்தது! சுமார் பத்து லட்சம் பேர்கள் இதில் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய வருடங்களில் பெனாம் பென் நகரும், அதைச் சூழ்ந்திருந்த கிராமங்களும், அமெரிக்க பி-52 விமானங்களால் திட்டமிட்டுக் குண்டு வீச்சால் தாக்கப்பட்டிருந்தன. அதில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர்.
விஜயா சிங் கவிதைகள்
எங்கேயோ கை வளையலில்
கணீரென ஒலித்தது
மூக்குத்தியில் மினுங்கியது.
மஞ்சள் வெயில் பட்டு
புத்தரின் காதணியில் ஊஞ்சலாடியது
வார் செருப்பின் மென் நடையில் கரணமடித்தது .
தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்
மலையகப் பெண்ணொருத்தி மஞ்சள் வயல்வெளியில் தனியளாய் நிற்பது காண். பாடலே துணையாய் கதிரறுக்கும் அவள் குரல் கேட்காதோர் பையவே சென்றிடுக. தனியே கதிரறுத்துக் கட்டுமவள் இசைக்கும் அழுத்தமிகு சோக கீதம் வெளியெங்கும் ததும்பி வழிகின்றதே கேட்டீர்களா? பாலை நிலங்களில் களைத்துப் போன தேசாந்திரிகளுக்கு உற்சாகமூட்டும் குளிர் சோலைக் குயில்கள் “தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்”
நிழலென்னும் அண்ணன்
நேற்று கண்ட நிஜம் போல என் கண்களில் நிழலாடுகின்றன நினைவுகள் ஆளுக்கு பாதியாய் பிரித்து அம்மா தந்த பத்தல்கள் நேற்று சுவைத்ததாய்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது.. விவரமறியா பருவத்தில் வாங்கிய என் பங்கு அடிகளுக்கு இதுதானா உன் தண்டனை? பள்ளி நாட்களில் நீ என் உடன் இருந்தாய்.. கல்லூரிச் “நிழலென்னும் அண்ணன்”
மகரந்தம்
2012-ல் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சோதனையில் கண்டறிப்பட்ட ஹிக்ஸ்-போசான் துகளுக்குக் ‘கடவுள்-துகள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஹிக்ஸ் என்பது பீடர் ஹிக்ஸ் என்பவரையும், போசான் என்பது நமது சத்யேந்த்ர நாத் போஸையும் குறிக்கும். போசான்களைப் பற்றி மிகத் தெளிவாக மிகவும் முன்னதாக ஆய்வு செய்து அடிப்படைகளை அமைத்தவரின் பெயர் பின்னர் வருகிறது-மேலும் குவாண்டம் துறையில் நடைபெற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசுகள் பலருக்குக் கிடைத்துள்ளன -ஆனால், இவருக்குக் கிடைக்கவில்லை.