கட்டுரை வெளிவந்தபிறகு அதைத்தாக்கி வாசகர் கடிதங்கள். எழுதியவன் சோம்பேறிப் பொதுவுடமைவாதி. இங்கே பிடிக்கவில்லை யென்றால் வெனிஸுவேலாவுக்குப் போகட்டும். தனிமனிதர்களின் தோல்வி முதலீட்டுப் பொருளாதாரத்தின் தோல்வி என்ற கட்டுரையின் உள்ளடங்கிய கருத்து மேல்தட்டு மக்களின் மனசாட்சியை சுட்டிருக்க வேண்டும்.
மக்களின் எதிர்ப்புக்கு பயந்து அவன் எழுத்தைத்தொட பத்திரிகையாளர்கள் பயந்தார்கள்.
Category: இதழ்-213
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
ஆனால் காலம் போகப் போக, இலக்கிய வரலாற்றின் முரணியக்கத்தை உக்கிரமாக உணர்ந்து கொள்வதால், மற்றவர்களின் ஒட்டுமொத்த படைப்புத் தொகைக்கும் உங்களுக்குமான தொடர்பை சமாளிக்க உங்களுக்கு பல விழிப்புணர்வுகள் தேவைப்படுகின்றன. இலக்கியத்திற்கும், ஆசிரிய மற்றும் எழுத்துப் பணிக்கும் இருக்கும் தொடர்பைப் பொருட்படுத்துவதற்கான விழைவிற்கும் மேலும் மேலும் அடிமையாகி விடுகிறீர்கள். அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமானால், ஆரம்ப காலகட்டத்தில் சாத்தியப்பட்ட சில குறிப்பிட்ட விஷயங்கள் இனிமேலும் சாத்தியப்படுவதில்லை.
காந்தள் மெல்விரல்
அம்புகள் தாக்கியதால் உண்டாகும் புள்ளிகள் உடைய, போரில் பங்கேற்ற யானையின் முகத்தைப் போன்ற கல்லின் மீது பல காந்தள் மலர்கள் ஒருசேர மலரும் வனப்புடைய நாட்டின் தலைவன் என்கிறார். துடைத்தெறிய முடியாத இரண்டு காட்சிப் படிமங்களை நம்முள் இறக்கி வைக்கிறது இப்பாடல். ஓன்று, இது வர்ணிக்கும் பாறையும் அதன் மீது கொத்தாய் சாய்ந்து நோக்கும் காந்தள் கூட்டமுமாய் அன்றி வேறு யாதொரு காட்சி வடிவத்திலும் பெரும்பாலும் காந்தள் நம் கண்ணில் படுவது இல்லை.
மகிமை
இன்றைய பிளவுபட்ட நோக்குகள் பெருகி பேருருவமெடுத்து நிற்கும் உலகில் இச்சா போன்ற அடிப்படை மானுட விழுமியங்களை, அனைத்து வேற்றுமைகளுக்கு நடுவிலும் அடையப்படக்கூடிய ஒற்றுமைகளை பற்றி பேசும் நாவல் நமக்கு இன்றியமையாத தேவை என்றே நான் நினைக்கிறேன்.
தமிழ் நாவல்களுக்கு புலிட்சர் அல்ல புளிப்பு மிட்டாய்கள் கூட கொடுக்கப்படுவதில்லை. ஆயினும் புலிட்சர்வாங்கிய நாவலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, பல இடங்களில் அதனினும் மேம்பட்ட தரத்தில் எழுதுபட்டநாவல் இச்சா என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
விஜயா சிங் கவிதைகள்- மொழி பெயர்ப்பு
மீட்டெடுக்கும் துணுக்குகளில்
மக்களையோ
சரியாகப் பொருத்திய
முழுமையையோ பற்றவியலாது
எவராலும்
இத்தனை விரிசல்கள் தெரிகையில்
காத்திரமாக மீள்வது ஏதுமிராது
சட்டம் யார் கையில்?
“ரெண்டு பேரும் ரொம்ப தமிழ் சினிமா பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். ஷங்கர் சினிமா போல அவ்வளவு எளிதல்ல, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப உலகம். உடனே, ரோபோ நீதிமன்றத்தில் வாதாடுகின்றன என்று கற்பனை எல்லாம் வேண்டாம். இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு அது சாத்தியம் இல்லை. ஆனால், ரோபோக்கள் வழக்குத்துறையின் அடிமட்டத்திலிருந்து தங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.”
நவ திருப்பதிகள்
மதுரையில் பெரிய கோவில்களுடன் ஒப்பிடுகையில் ஸ்ரீவைகுண்டநாதன் பெருமாள் கோவில் சிறியது தான். கோவிலினுள்ளே இருந்த அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மனதைக் கொள்ளை கொண்டன். விமான கோபுரங்கள் பளிச்சென்று வண்ணக் கலவையுடன் வித்தியாசமாக தெரிந்தன. கோவில் கிணற்றில் நீர் இருந்தது மிகப்பெரும் ஆறுதல். பக்தர்களுக்காக குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே அமைத்திருந்தார்கள். கோடையிலும் கூட்டமான நாள்களிலும் உபயோகமாக இருக்கும். கோவிலைச் சுற்றிக் காண்பித்து சிற்பங்களின் அருமை பெருமைகளை எடுத்துரைக்க யாராவது உதவி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அறிந்திராத தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தவற விட்டேனோ என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது.
கா-மென் – ரேச்செல் ஹெங்
“கா மனிதர்கள் கடற்கரையோரம் நிலத்தை மீட்டுப் பயன்பாட்டுக்குக் கொணர புதிய, ஊக்கம் நிறைந்ததோர் திட்டத்தை முன்வைத்திருக்கிறார்கள். அது வடக்குக் கடற்கரையில் அறுபது சதவீதத்தைக் கையிலெடுக்கும். அதை முடிக்கப் பத்து வருடங்கள் போலாகும். இந்தப் புதுத் திட்டம் மக்களவையில் வரும் வாரம் வாக்களிப்புக்கு வரும்,” திரையில் இருந்த செய்தியாளர் சொல்கிறார்.
தேனாண்டாள்
இது வெறும் காடுல்ல. கரியராமன் உறங்குற எடம். அவனோட காடுல இது. இங்க இருக்க ஒவ்வொரு தேனீப்பூச்சியும் அவனோட இருப்பாகபட்டது தான். அதோட நாசில புகையபோட்டு வெரட்டினா அது எங்களுக்கே சாபமால்ல மாறிடும். அந்த பொகையோட நெடி அதோட நாசில அப்படியே தங்கிபோய்டும். அப்புறம் எந்தவொரு பூவும் அதுக்கு உவக்காது பாத்துக்கோங்க. பின்ன தேனேது மரமேது காடேது. நாளப்பின்ன இந்த காடேல்ல அழிஞ்சுபோகும். ஒரு பொட்டு காடு கூட மிஞ்சாது. அப்படிப்பட்ட வேலைய நாங்க செஞ்சிட மாட்டோம் சார். இது எங்க பாட்டன் காலத்து தொழிலு.
ஏனோ ராதா, இந்தப் பொறாமை?
கல்வியாலும், கலாசாரத்தினாலும் பொறாமையின் ஒரு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பண்பாடு, ஒன்றுமில்லாததிலிருந்தா பொறாமையைக் கொண்டு வந்திருக்கும்?நம் மனம் பதப்பட்டு, நம் கலவி இணையர் மற்றொருவருடன் கொள்ளும் உறவில் துன்பம் கொள்ளாமல், மகிழ்ச்சி அடைபவராக நாம் இருக்கிறோமா?அப்படிப்பட்ட பண்பாடுகள் இருக்கின்றனவா? உலகெங்கும் எல்லாப் பண்பாடுகளிலும் இணை வேறொருவரோடு கலவி செய்வது குறைந்த பட்சம் மனத் துன்பத்தைக் கொணராது இல்லை என்பது, இது பண்பாடுகளைத் தாண்டிய இயற்கை நியதி என்று காட்டவில்லையா?
லாவண்யா- கவிதைகள்
எந்தக் குதிரை பறக்கும் குதிரையென
சல்லித்துப் பந்தயம் கட்டின பல்லாண்டு.
கனவுக் குதிரைகள் ஒவ்வொன்றும்
கல்குதிரை, மண்குதிரை, மரக்குதிரையானதில்
பேச்சிழந்தான் ஒருவன். மூச்சிழந்தான் ஒருவன்.
முச்சூடுமிழந்தான் மற்றொருவன்.
கா. சிவா – கவிதைகள்
தாயின் இறகிற்குள் அணைந்த
புள்ளின் நிம்மதியைத் தந்த
அருகாமைதான் அளிக்கிறது …
எண்திசைக் காலும் சுழன்றடிக்கும் பாறைத்தூசியின்
நிலையின்மையை
கவிதைகள்
கணினியில் ஏதோ தட்டிக்கொண்டிருப்பான்
வாய்க்கு வராத பெயரிலிருப்பவற்றை
வாய்க்குள் திணித்து
நவநாகரிகத் தொட்டிலுக்குள்
சவப்பெட்டியாகக் கிடப்பான்
மகரந்தம்- குறிப்புகள்
எல்லாம் வானத்தில்தானா, பூமியில் இல்லையா என்பதற்கும் இராமானுஜனிடத்தில் விடை கிடைக்கிறது. இயந்திரக் கற்றல், தகவல் தேற்றங்கள், குறியீட்டு முறைகள், டிஜிடல் தொடர்புகள், அவற்றில் தவறுகளைத் திருத்தும் குறியீடுகள், தரவுகளை அடக்கிக் குறுக்கல், நெட்வொர்க், சமிக்ஞை வெளியீடுகளைப் படித்தல், கணிணியின் சங்கீதம் (ஐ ம்யூசிக்கில் அவரது உள்வெளித் துணையிடம்-சப்-ஸ்பேஸ்) டி. என். ஏ மற்றும் புரதங்களைத் தொகுத்தல் என எங்கும் எதிலும் இவர் கணிதம் செயல்படுகிறது.