உள்ளங்கை வியர்வையை கைகுட்டையில் துடைக்க துடைக்க அது வியர்த்துக் கொண்டேயிருந்தது. எட்வின் வராண்டாவில் அவனுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்திருக்கும் காட்சி அவள் மனதிற்குள் வந்தது. மனம் மீண்டும் இல்லை என்றது. இது என்னையே நான் வீழ்த்திக்கொள்ளும் கண்ணி. ஒருபார்வை , ஒருசொல், ஒருமுகக்குறிப்பு அன்று உணர்த்திய எள்ளலை மீண்டும் கண்டால் எழுப்பிய அனைத்தும் சரியும். ஆனால் உள்ளுக்குள் மிக ஆழத்தில் எட்வின் முகம் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான்.
Category: இதழ்-209
ஒரு மழைநாள்
வெளியே மழை ஒழுகிக்கொண்டிருந்தது. பெரியப்பா என் கண்களை நேருக்கு நேர் பார்த்தார். அகல் திரியின் கடைசிச்சுருள் தீப்பிடிக்க சுடர் கரகரத்து எழுந்ததில் பெரியப்பாவின் கண்களில் உறைந்திருந்த குரோதத்தின் ஜுவாலை தெரிந்தது. தீயின் ஒளி முகத்தில் நீர் போல் வழிந்திறங்கியது.
ஒரு பயணம்
“அவருக்குப் போன வாரம் இன்னொரு முறை ரத்த அடைப்பு வந்தது,” அவள் சொன்னாள், ஆனால் அது ஏனோ நிஜமில்லை, பொய் என்பது போலவும், ஏதோ அவனுக்கு அதிர்ச்சி கொடுத்துத் தன்னோடு பேசவைக்கவென்று அவள் அதைச் சும்மா சொல்கிறாள் என்பது போலவும் இருந்தது. ஆனாலும் அவன் பேசவில்லை; தன் சிகரெட்டை வலுவாக அவன் உறிஞ்சுவது அவளுக்குக் கேட்டது.
2020- நிலமடந்தை
“ஆண் குழந்தைகள் பேச்சில நிதானமாத்தான் இருக்கும். அதுவும் வீட்டிலயே வளர்ந்திருக்கான். ப்ரீ-ஸ்கூல்ல போடு! மத்த குழந்தைகளோட விளையாடினா பேச்சு தன்னால வரும்.”
அறிவாளியாக வளரப்போகிறான் என்ற ஆசையில் வித்யாகேந்திரம். விரைவிலேயே காப்பாளர்களின் முறையீடுகள்.
“தானாகவே விளையாடுகிறான்.”
“மற்ற குழந்தைகளுடன் பேசுவதில்லை, உறவாடுவதும் இல்லை.”
“எங்களையும் சரி, மற்ற யாரையும் சரி, நேருக்குநேர் பார்ப்பதில்லை.”
காத்திருப்பு
ரயில் நிலையத்துக்கு ஃபோன் செய்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் விவசாயக் கல்லூரி மாணவிக்கு வீட்டுச்சாவி கிடைத்து விடும். ஆதலால் அவளது நண்பர்கள் திட்டமிட்டவாறு ரயிலில் பயணிக்கலாம். பயணத்தின் அடுத்தடுத்த நிலையங்களில் எங்காவது சாவியைத் தவற விட்டவர் சேர்ந்து கொள்வார் என்ற தகவலை அறிவிக்கச் சொன்னான். ஸ்டேஷன் மாஸ்டர் பயணியின் பெயர் சொல்ல வேண்டுமா என்றார். லக்ஷ்மி பெயர் சொல்ல வேண்டாம் என்றான்.
மாசிக் களரி
கரங்கூப்பி கண்களை மூடியிருந்த பெண்களில் சிலர் கண்களிலிருந்து ஈரம் கசிந்தது. பெரும்பாலானவர்கள் கண்களிலிருந்து மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது. மூடிய கண்களை அப்பெண்கள் திறக்கவேயில்லை. துயரமோ ஆற்றாமையோ ஏமாற்றமோ பொருட்படுத்தப்படாத புறக்கணிக்கப்பட்ட உரிமை அல்லது அன்பின் வஞ்சம் என அனைத்தும் அங்கு நின்று கொண்டிருக்கும் பெண்களின் கண்களில் துடித்து திரண்டதைப் போல விழித்தார்கள். பெண்ணினத்தின் யுகத்துயரை அழவே தங்களுக்கு கண்கள் வாய்த்தது போல் எல்லா பெண்கள் பொங்கிப் பொங்கி அழுதார்கள். ஓங்கிக் குலவையிட்டார்கள்.
காண்பவை எல்லாம் கருத்துகளே – 2
நம் சிந்தனைகள் எல்லாவற்றுக்கும் பின் ஒரு சுயம் இருக்கிறது. நம் எண்ணங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றினைக் குறித்து நிகழ்கின்றன. ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்து நம் மனது எண்ணுகிறது. நாம் எந்த விஷயத்தைப் பற்றி எண்ணுகிறோமோ அது நம் அகத்தில் ஒரு அறிபடுபொருளாக(Object) ஆக்கப்படுகிறது. நமது சுயத்தைப் பற்றி சிந்தித்தாலும் சுயம் ஒரு அறிபடுபொருளாக ஆக்கப்பட்ட பின்னரே சிந்திக்கப்படுகிறது. இருப்பினும் சுயம் முழுமையாக அறிபடுபொருளாக ஆக்கப்படுவதில்லை. சுயத்தை எவ்வளவு தான் நாம் அறிபடுபொருளாக ஆக்க முயற்சித்தாலும் அந்த மாற்றத்தை அடையாத சுயம் எஞ்சி நிற்கிறது. இதை மீறுநிலை சுயம் (transcendental ego) என்கிறார் ஃபிஷ்ட.
மொழிபெயர்ப்பு கவிதை – குண்டர் க்ராஸ்
சிறு பிராயத்தில்
திரும்பிய பக்கங்களிலெல்லாம்
‘கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்’
என்ற அறிவிப்பில் உறைந்துபோனேன்
ஊழின் நிரடல் – இதயசகி
நகாசு அற்ற உரையாடலின்
சாத்தியக் கூறுகளுக்காக
தவமிருந்த செவிகளை
புள்ளின வலசையின்
உள்தூண்டல் மொழியோடே
பிணைத்து மரிக்கின்றேன்!
குளக்கரை
ஆபத்து அதிகமானதால் லாபம் அதிகமாவதில்லை. ஆபத்துகளைத் தாண்டி தப்பித்தால் சில சமயம் சிரஞ்சீவித்தனத்துக்கான குளிகை கிட்டுமோ என்னவோ. இந்த எழுத்தாளர் குழந்தை வளர்ப்பைப் பற்றித்தான் எழுதுகிறார். மிகச் சாதாரணமான தலைப்பு. ஆனால் எதிர்த் திக்கில் போய்ப் பார்க்கும் கட்டுரை இது. துவக்கத்திலிருந்தே
எதிர்.