சொல்வனம் பத்திரிகையின் 250 ஆம் இதழைப் பற்றிச் சில எண்ணங்கள். சில பத்திரிகைகள்- மேலும் இதர பண்பாட்டு வெளிப்பாடுகள்- எடுத்த எடுப்பிலேயே உசைன் போல்ட் தடகளத்தைக் காற்று வேகத்தில் கடப்பது போல, அசாதாரண லாகவத்துடன், துரிதத்துடன் செயல்படத் துவங்கி விடுகின்றன. சொல்வனம் துவக்கத்திலிருந்து மதலை போல நடை பழகத் “பையப் பையப் பயின்ற நடை”
Category: பதிப்புக் குறிப்பு
சிறப்பிதழ் வரிசை: இந்திய மொழிகள்
இந்த இதழை வங்கமொழிச் சிறப்பிதழின் இரண்டாம் பாகமாகக் கொணர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்….இந்த இதழில் பல சிறுகதைகளைக் கொடுக்கிறோம். பனபூல், ராம்நாத் ராய், சமரேஷ் மஜும்தார், ஸீர்ஷோ பந்த்யோபாத்யாய், மஹாஸ்வேதா தேவி, ஆஷாபூர்ணா தேவி, சுபிமல் மிஸ்ரா, மோதி நந்தி, ரபீந்த்ரநாத் தாகுர்ஆகியோரின் கதைகள் உள்ளன. பிபூதி பூஷண் பந்த்யோபாத்யாயின் நாவல் ஒன்றின் அடுத்த பாகம் மொழிபெயர்க்கப்பட்டுக் கிட்டுகிறது. ஜாய் கோஸ்வாமி, ஸாங்க்யா கோஷ், புத்ததேவ் போஸ், சக்தி சட்டோபாத்யாயா ஆகியோரின் கவிதைகள் உள்ளன. தவிர நாடக உலகில் உத்வேகத்தைக் கொணர்ந்த பாதல் சர்க்கார் பற்றிய ஓர் அனுபவக் கட்டுரையையும், க்ளைவ் பெல் என்ற ஒரு குழல் இசைக்கலைஞரின் பேட்டியையும் கொடுத்திருக்கிறோம்.
வங்கச் சிறப்பிதழ்: அறிமுகம்
கலைச் செல்வங்கள் எங்கிருப்பினும் அவற்றைக் கொணர்ந்திங்கு சேர்ப்பது என்ற பணியில் சொல்வனம் எடுத்திருக்கும் முக்கிய அடுத்த படி இந்த வங்கமொழிச் சிறப்பிதழ். ….அம்மொழியின் உலகத்தரம் வாய்ந்த இலக்கியம், இசை, கலை சார்ந்த படைப்புகள் இத்தேர்வின் பொருத்தத்தை உறுதிப்படுத்தி உள்ளன.
சிற்றடி: ஏன் இந்த முயற்சி?
பல மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களைப் பெற்று வாசித்துப் பார்த்தபோது அவற்றின் சுகந்தம், நேரடித் தாக்கம், ஸ்பரிசானுபவமே போன்ற வாசிப்பனுபவம், எனக்கு இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குச் சென்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை, அதேபோல இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குப் போய் அங்கிருந்து தமிழாக்கம் பெற்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை.
ஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி
சிறப்பிதழ் என்பதே ஒரு பெரும் கூட்டுமுயற்சி. அதை “எடிட்” செய்வது சில சமயங்களில் நொந்து கொள்ளும்படியாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரு திறப்பாகவே இருந்தது. இவ்விதழின் பல கட்டுரைகளுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் நூற்றுக்கணக்கான திருத்தங்களையும் கருத்துகளையும் அளித்திருப்பது பெருமையளித்தாலும் அவற்றின் மூலமே பல வங்க இலக்கியப் படைப்புகளையும் நான் கண்டறிந்தேன் என்பதையும் இங்கு பதிவுசெய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
இதழ் 200- பதிப்புக் குறிப்பு
அம்பை அவர்களை மையம் கொண்ட இதழாக இதை ஆக்கத் திட்டமிட்டபோது அதற்குக்
கடும் எதிர்ப்பு வந்தது. அது எங்களுக்கு வியப்பை அளித்தது. இத்தனை கசப்பு, இத்தனை விலகலா
என்றுதான் வியப்பு. அந்த எதிர்ப்பு பூராவும் எங்களை இந்த முயற்சியைக் கைவிடச் சொல்லிச்
செய்யப்பட்ட வற்புறுத்தல்கள். செய்தவரோ நண்பர் மட்டுமல்ல, சிறப்பிதழின் நாயகியே அவர்தான்.