அஞ்சலி: ஆனியெஸ் வர்தா

நேற்று என் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவு என்னைத் துயரிலாழ்த்தியது. ஃபிரெஞ்சு சினிமாவின் முதுபெரும் மேதை ஆனியெஸ் வர்தா மறைந்த செய்தி குறித்த தன் வருத்தத்தை அவர் எழுதியிருந்தார். இந்த மேதையின் திரைப்படங்களில் எனக்குப் பிடித்த படங்கள் குறித்த நினைவுகள் கிளர்ந்தெழுந்தன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் “அஞ்சலி: ஆனியெஸ் வர்தா”

ஆனியெஸ் வர்தா

திரைப்படத் துறைக்கு வெளியிலிருந்து வந்து, ஒரு படத்தைக் கூட அதுவரையில் இயக்காமலே, தன் சொந்தப் பணத்தையும், நண்பர்களின் உதவியை மட்டும் மூலாதாரமாகக் கொண்டு, சராசரி பிரெஞ்சுப் படங்களின் பட்ஜெட்டின் பத்தில் ஒரு பங்கில், முக்கியமான ஒரு படத்தை எடுத்தார் என்பதுதான் Bazin போன்ற விமர்சகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது அவரது Cinecriture அழகியல் கோட்பாடுகளுடன், Cine-Tamaris என்ற அவரது தயாரிப்பு நிறுவனமும் புதுஅலைக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது என்பதே வர்தாவின் சாதனை.

முத்தத்தின் சுவை – வாசிப்பனுபவம்

மரத்திலேயே கனிந்த கனிகள் சுவையானவை என்றாலும் பறவைகள் தேர்ந்தெடுத்து கொத்திய கனிகள் இன்னும் சுவையானவை.அதை சுவைத்தவர்கள் அறிவார்கள்.அதுபோலவே சிறுபிள்ளைகளுக்கு மூத்தவர்கள் சொல்லும் கதைகளும்.அதனாலேயே குழந்தைகள் பெரும்பாலும் சிலகதைகளை மீண்டும் மீண்டும் “அந்தக்….கதை…சொல்லு” என்று கேட்பார்கள்.அந்த கதைசொல்லி தாத்தாக்களும் பாட்டிகளும் நம் உறவாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஆனால் அவர்களே ஒரு சமூகத்திற்கான முன்னவர்கள்.

மேலாண்மை பொன்னுசாமியின் ‘பாட்டையா’ என்ற கதை ஊருக்கே தாத்தாவான கதைசொல்லியைப் பற்றியது.ஒவ்வொரு கிராமத்திலும் அப்படி ஒருவர் இருப்பார் அல்லது இருந்தார்.அவரை “காந்திகாலத்தில பெறக்கவேண்டிய மனுசன்,” என்ற ஒரே வாக்கியத்தில் அலட்சியமாகவும் பெருமையாகவும் ஊருக்குள் சொல்வார்கள்.எங்கள் ஊரில் என்பால்யத்தில், இந்தக்கதையில் வரும் அரிஞ்சர் பாட்டையா போன்ற பாலுப்பிள்ளைதாத்தா எனக்கும், என்அய்யாவுக்கும், ஊரில் சிலருக்கும் கதைசொல்லியாக இருந்தார்.

‘வட திசை எல்லை இமயம் ஆக!’

கண்கொட்டுதல், இமையாடுதல் என்றோம். இமையாடாமல், கண் சிமிட்டாமல், கண் கொட்டாமல், கண்ணிமைக்காமல் பார்த்தான், அல்லது பார்த்தாள் என்கிறோம். இமைப்பொழுது என்றால் கணம் அல்லது குறுகிய கால அளவு. உறங்கிப் போதலை, இமை பொருந்துதல் என்றோம். கண் இதழ்கள் சேர்தலே இமை கொட்டுதல். இமைப்பளவு என்றாலும் கண்ணிமைப் பொழுதே! சீவக சிந்தாமணி, இமைப்பளவைக் குறிக்க, ‘இமைப்பு’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. இமைப்பு எனும் சொல்லுக்கு dazziling, brilliance, விளக்கம் ஆகிய அர்த்தங்களும் உண்டு.

மிருத்யுஞ்சய்

This entry is part 26 of 48 in the series நூறு நூல்கள்

‘மிருத்யுஞ்சய்’ என்ற பி.கே. பட்டாச்சாரியாவின் அஸ்ஸாமிய நாவலின் களம் 1942ஆம் ஆண்டு காலகட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைக் களமாய்க் கொண்டது. நாவல் புரட்சியாளர்கள் கொண்ட ஒரு குழுவைப் பற்றியது. அவர்கள் பிரிட்டிஷ் ராணுவ ரயிலொன்றைக் கவிழ்க்கச் சதி செய்கின்றனர். இந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றுகின்றனர், அதற்கு அவர்கள் தரும் “மிருத்யுஞ்சய்”

ராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity: புத்தக விமர்சனம்

ராபர்ட் கனிகல் எழுதிய The Man Who Knew Infinity என்ற புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரு வேறு நண்பர்களிடமிருந்து எனக்கு பரிசாய்க் கிடைத்தன. அதுவும் ஒரே டிசம்பர் வாரத்தில் இரு வேறு நாட்களில் இந்தப் புத்தகங்கள் என்னை வந்தடைந்தன (இதோ இதை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதியும்கூட புத்தக காதலர்களுக்கு விசேஷமான நாள்: இன்று சர்வதேச புத்தகப் பரிசு தினம் கொண்டாடப்படுகிறது). ஆங்கில புத்தகத்தைக் கொடுத்த நண்பரும் நானும் ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் புத்தக பரிவர்த்தனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த வழக்கப்படி ஆங்கில பிரதி கிடைத்ததில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. 2015ல் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வையொட்டிய இந்தப் புத்தகம் திரைப்படமாக வடிவெடுத்து வெளிவந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் படம் பார்த்திருந்ததால் கதையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது நினைவில் நன்றாகவே பதிந்திருந்தது. எனவே, “அப்புறம் படிக்கலாம்,” என்று ஆங்கிலப் பிரதியை எடுத்து வைத்திருந்தேன்.

ஆட்டத்தின் ஐந்து விதிகள் – 2

நேரடியாக பேசுவோம். விற்பனை என்பது அடிப்படையில் ஒரு பரிமாற்றச் செயல்பாடு. விற்பனையாளரும், வாங்குபவரும் இணைந்து அவர்களுக்கிடையே நிகழ்த்தும் பரிமாற்றச் செயல். இதில் வாய்ப்புகள் அதிகம் இருப்பது வாங்குபவரிடமே. ஏனெனில் ஏற்பு, மறுப்பு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முடிவு வாங்குபவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் விற்பனையாளர் என்ன செய்துவிட முடியும்? வாங்குபவரை ஏற்பினை நோக்கி உந்துவதே அடிப்படையில் விற்பனையாளரின் செயல். இந்த உந்துதலைச் செய்வதில்தான் விற்பனையாளருக்கு எண்ணற்ற வழிமுறைகள் போதிக்கப்படுகின்றன.

புள்ளரையன் கோவில்

விக்கி தன் நண்பர்களைச் சந்திப்பதற்கு என ஒரு இடத்தில் கூரை வேய்ந்து வைத்துள்ளான். ஒரு சிறு சமையலறை. கேஸ் அடுப்பு. ஜே.சி.பி வைத்து ஒரு கிணறு தோண்டியுள்ளான். அதில் கோடையிலும் வற்றாமல் தண்ணீர் இருக்கிறது. வீட்டுக்கு முன்புறம் ஒரு கயிற்றுக் கட்டில். சுற்றிலும் நெல் வயல்கள். இதைத் தாண்டி விக்கி வர வேண்டும் என்றால் அவனுக்கு இதை விடப் பெரிய இன்பம் சென்னையில் இருக்க வேண்டும் அல்லது இங்கே அவனால் இருக்க முடியாத அளவுக்கு பெரும் நெருக்கடி வர வேண்டும். இரண்டுக்குமே வாய்ப்பில்லை.

கோடை ஈசல்

பாதி உலகம் தள்ளி தூரத்தில இருக்கற கதகதப்பான உங்க ஆஃபிஸ்ல உட்கார்ந்துக்கிட்டு, எங்களுக்கு போதனை செய்யறது உங்களுக்கு சுலபமா இருக்கு. நாங்கதான் ஜீனியோடு போராட வேண்டி இருக்கு, அவ தன்னோட முட்டிகளை தன் முகத்திலே குத்திக்கறா, தன் கையில இருக்கற தோலை உரசிப் பிச்சுப்புடறா, வெறும் மாமிசம்தான் அவ கையில தொங்கறது, அல்லது தன்னோட கண்ணுல ஒரு ஃபோர்க்கால குத்திக்கறா. அவ ஒரு தடவை (உடைஞ்ச) கண்ணாடியைத் தின்னா, ஞாபகம் இருக்கா? ஒரு மூணு வயசுக் குழந்தை அடாவடியா கண்ணாடியைத் திங்கறா! நீங்க இருக்கீங்களே, டெர்ரகானோட சோமாறிகள், எல்லாராலும் என்ன செய்ய முடியறது?

மூச்சை அறிந்து முழுவதும் வாழ்

இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எதுவும் சுவாசிக்கவில்லை; கடல்களில் நீல நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி ஒளியிலிருந்து சக்தியைப் பெற்றுக் கொண்டு உயிர்வாயுவை வெளியேற்றின.அந்த வாயுக்கள் அளவில் மிகவே இரும்பும்,சல்ஃபரும் அதை உள் அடக்க முடியாமல் சுற்றுப்புறத்தில் வெளியிட அதன் விளைவாக மீத்தேன் வாயு குறைவுபட்டு இந்த பூமி மூன்று பில்லியன் ஆண்டுகள் பனி உலகமாகத் திகழ்ந்தது.

வேம்பில் ஒரு செண்பகம்

பூப்பெய்திய பருவம் முதல் கசப்புக்குள்ளே சில இனிய உணர்வுகளின் ஊடுறுவல்கள் இளமையின் நியதிகளான வாழ்வியல் காற்றின் வேகங்களை திசைகள் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது வயதின் மூப்பில் உலர்ந்துகொண்டிருக்கும் இளமையின் சுவைகள் ஆறிப்போன உணவாகி வெறுமையாக செரித்துவிடுகிறது முதிர் பருவத்தை நோக்கி கசந்துகொண்டிருக்கும் சுவர்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறது இளமையின் நிறுவிட இயலாத சுவடுகள் மட்டும் “வேம்பில் ஒரு செண்பகம்”

மரணபரியந்தம்

மரணபரியந்தம் கைளை உயர்த்தாதே என்றார்கள் கைகளைக் கட்டி நின்றேன்.. கைகளே கைகளை சிறைப்பிடித்தது. கால்களை மடக்கி வை என்றார்கள். தரையில் மண்டியிட்டேன். பாதைகள் இருந்தும் பயணம் முடிவுக்கு வந்தது. கண்களை மூடு என்றார்கள் இறுக்கி மூடிக்கொண்டேன். சூழ்ந்தது இருள். காதுகளை மூடு என்றார்கள். அதற்கும்   காது கொடுத்தேன். “மரணபரியந்தம்”

தேரோடும் வீதி…

வடம் போக்கித் தெரு…! கெட்டித்து போன கால உருளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு தெரு…தெரு என்றாகி, அதற்கொரு பெயர் சூடி சில‌ நூறாண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் அதன் கீழிருக்கும் மண்? மலையத்துவஜனும் காஞ்சனமாலையும் சுந்தரவல்லியை பெண்ணாய் பெறும் வேள்வியை செய்யக் கடந்து போயிருக்கக் கூடிய தெரு…அச்சுந்தரவல்லி, மும்முலை அரசியாய் கயிலை நோக்கி படைதிரட்டி சென்றிருக்கக் கூடிய தெரு…அங்கு நாயகனை கண்ட நாணத்தில் ஒரு முலை மறைந்து இருமுலை குமரியாய் திரும்பியிருக்கக் கூடிய தெரு…”மனமகிழ் துங்குநர் பாய்புடன் ஆடச் சுனைமலர்த் தாதுதும் வண்டுதல் எய்தா” பரங்குன்றம் நோக்கி பலர் சென்றிருக்கக்கூடிய தெரு…”பொன்தொழில் சிலம்பொன்று ஏந்திய கையள்