ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து

இக்கட்டுரை இதழ்-198 இலிருந்து இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
…வாசகர்களும் விமர்சகளும் ஸேபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன்? அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உறைக்கவைக்குமாறு உரையாடுகிறது?….

ஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி?

2004 ஆம் ஆண்டின் ஒரு மதியப்பொழுதில் இருந்து மாலை வரை 6 விதமான மரணங்கள் எனக்கு தொடர்ந்து நிகழ்ந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நிகழ்ந்திருந்தாலும் அனைத்து மரணங்களிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. அது நான் என் குடும்பத்தை ஒவ்வொரு மரணத்திலும் ஆதரவின்றி நிறுத்தியிருந்ததுதான். ஆறு முறை மரணித்த பின் அன்றிரவு உறங்கப் போகையில் என் மரணத்திற்குப் பின் என் மனைவி, குழந்தைகளின் நிலைமையினை எண்ணி இன்னும் திருமணம் ஆகியிராத நான் கண்ணீர் சிந்தும்படி ஆனது.

தொலைந்து போனவன்

வெகு நேரம் ஆகியும், மதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. …கடைசியாக மதன் என்னிடம் பேசியது நினைவுக்கு வந்தது. நாங்கள் இருவரும், நின்று பேசிக் கொண்டிருந்த அந்த மேட்டினை பார்த்தேன். மதன் அங்கு நின்று அந்த ஆற்றை உற்றுப் பார்த்தது ஞாபகம் வந்தது. அந்த இடுங்கிய கண்ணில் எதைப் பார்த்திருப்பான். எத்தனைப் பொய்யான எதிர்காலம் நம் முன். நம்பிக்கை என்பது வெறும் ஊதிப் பெரிதுபடுத்தப்பட்ட ஒரு பலூன் என்று தோன்றியது. அது இரண்டு மணி நேரம் கூட தாங்கவில்லை.

ஓ ரசிக சீமானே…

இளவட்டங்கள் துண்டை ஹாண்டில்பாரில் கட்டிக்கிட்டு குளிர எண்ணெய் தேய்ச்சுகிட்டு ஒரே சைக்கிளில் மூன்று பேர் கூட செல்வதுண்டு. படிப்படியாக ஆத்துக்கு செல்வது குறைந்தது. யாராவது இறந்தால் கருப்பந்துறைக்கு(சுடுகாடு) போய் பின் ஆத்தில் குளித்து வருவது என்பதும் போய் இப்ப நேரே வீட்டுக்கு வந்து வெந்நீர் குளியல் (மாப்ள, உடம்புக்கு ஒத்துக்கிடமாட்டேங்குலா) என்றாகி போனது.

லீலாவதியைத் திருப்பி அனுப்புவது எப்படி?

ப்ரொஃபஸர் “அட அது இல்லப்பா! பாஸ்கராச்சார்யா கேள்விப்பட்டுருக்கயா?”என்றார்….
ப்ரொஃபஸர் ,”இல்லப்பா , கணக்குல பெரிய மேதை, பல புத்தகங்கள் எழுதியிருக்கார். கி.பி 1100கள்ள வாழ்ந்தவர். அல்ஜீப்ரா, தசம கணிதம், கால்குலஸ், ட்ரிக்னொமெட்ரி இதுல எல்லாம் புஸ்தகம் எழுதி இருக்கார்.
அப்புறம் பெல் ஈக்வேஷன்தெரியுமா? X2 =1+PY2. அதை சால்வ் பண்ணியிருக்கார். இருபடி சமன்பாடுன்னு சொல்லப்படற க்வாடராடிக் ஈக்வேஷன்ல எத்தனையோ பண்ணியிருக்கார். π மதிப்பைக் கண்டிபிடிச்சுருக்கார். அவரோட சித்தாந்த சிரோமணிங்கிற மஹாபெரிய புத்தகத்தில நாலு பாகங்களான பீஜ கணிதம், க்ரஹ கணிதம், கோலத்யாயா, லீலாவதி இதெல்லாம் ரொம்ப புகழ் பெற்றவை. பல மொழிகள்ல மொழி பெயர்ந்திருங்காங்க,” கொஞ்சம் மூக்சு விட்டார். தலை கலைந்து, கண்ணாடிக்குப் பின்னால் கண் பெரிதாக இருந்தார்.

சாய்ந்துகொள்ள வசதியான பாதங்கள்- வாசிப்பனுபவம்

வாழ்க்கைக்கு துணையாக ஒருமரம் போதும் என்று அடிக்கடித் தோன்றும். முதுகை சாய்த்துக்கொள்ள, அப்படியே கால்நீட்டி கிட்டத்தட்ட படுத்துக்கொள்ள, இலைகளின் சலசலப்புச் சத்தத்தில் அப்படியே உறங்கிப்போக, வெயிலில் நடக்கையில் பின்புறமிருந்து தலைக்கு மேல் விரியும் அம்மாச்சியின் முந்தானையைப்போல நிழல் கவிய நின்றிருக்கும் ஒற்றை மரம் போதும் என்ற ஆசுவாசத்தை, ஒருவரை இன்னொருவரில் கண்டுகொள்ள, பதின்வயதின் புரிந்து கொள்ளமுடியாத பாழ்தனிமையில் விடுதிவாழ்வில் இத்தகைய வெளிச்சத்தை இலக்கியமன்றி எனக்கு எதுவும் தந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு

This entry is part 27 of 48 in the series நூறு நூல்கள்

படைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைத்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது.

வெளியும் உள்ளும்

புராதன வெளியில் வந்திறங்குகின்றனவலசைப் பறவைகள்.வரப்புகளில் தேங்கும் நீரில் சுற்றிலும் புல்வெளியில்அவை தனித்துப் பொருத்தமற்று தோன்றுகின்றன. பறவைகள் ஒன்றை ஒன்றுபார்த்து நிற்கையில்புல்வெளியின் பரப்பில்மார்கழி இரவின் பனிகாலைக் கதிரவனின் வெம்மையில்மெல்லக் கரைந்து கொண்டிருக்கிறது.

ஆதி விடம்

அவன் முன்பின் நகரமுடியாத இக்கட்டில் மாட்டியபோது  சரியாக அச்சொல்லை எய்ய         இவனைத் தூண்டி  அவன் குருதியைக்  கொப்பளிக்க வைத்தேன் சொல் தைத்துப்பெற்ற தீந்துயரை திரும்ப அளிக்கக்  காத்திருந்து பிடுங்கப்பட்ட அதேசொல்லை எறிந்தான் இவனை நோக்கி எளிய வழியில் எதிரிக்கு வெந்நோவை அளிக்க பாவனை செய்கிறான் இவன் வலிக்காதது போல “ஆதி விடம்”

யயாதி

“தேன்மொழி, முதுமையின் காரணங்களைக் கண்டறிந்தால், அதைத் தவிர்த்துவிடலாமல்லவா? தவிர்ப்பதில் வெற்றி வந்தால், இளமை மட்டுமல்ல, வாழ்வும் நிரந்தரமல்லவா?”

‘நீங்கள் சொல்வது நோயற்ற உடல், முதுமையற்ற வாழ்வா?’

“அதேதான்”

‘விபத்துக்கள் நடந்தால்?’

“நாங்கள் மரணமில்லை எனச் சொல்லவில்லை.”

கோடை ஈசல் – பீட்டர் வாட்ஸ் & டெரில் மர்ஃபி

குழந்தைகளை வதைப்பதில் ஒரு சிந்தனைச் சோதனை இது: அப்போதே பிறந்த ஒரு குழந்தையை, நேர்க்கோடுகளே இல்லாத ஒரு சூழலில் கிடத்துவது. அவளுடைய மூளை ஒரு சமன நிலைக்கு வரும்வரை, மூளையின் நரம்புத் தொடர்புகள் எல்லாம் உறுதியாகும் வரை, அங்கேயே இருக்கச் செய்வது. உருக்களின் அமைப்புகளை ஒன்றோடொன்று பொருத்திக் காட்சிப்படுத்தும் கண் விழித்திரையின் மொத்த இணைப்புகளும், தேவை என்று கேட்கும் தூண்டுதலே இல்லாததால், செயல்படுவதை நிறுத்தி விடும், இனிமேல் அவற்றை மறுபடி செயல்பட வைக்க முடியாது போகும். தொலைபேசிக் கம்பங்கள், மரங்களின் தண்டுகள், வானளாவும் கட்டிடங்களின் செங்குத்து உயரங்கள்- உங்களுக்குப் பலியான அந்தப் பெண், தன் வாழ்நாள் பூராவும் நரம்புகளின் வழியே இவற்றைப் பார்க்க முடியாதவளாகவே ஆகி இருப்பாள்.