புத்தகக்குறி

இலக்கிய பத்திரிகைகளின் சமீபத்திய வெளியீடுகள் குறித்த சிறு அறிமுகம்: n+1 – Death Wish https://nplusonemag.com/magazine/issue-38/ Stuart Schrader, Lizzie Feidelson, Jeremy O. Harris, Mark Doten, Nan Z. Da, Caleb “புத்தகக்குறி”

அறிவிப்புகள்

“விமுக்தா” என்ற கதைத் தொகுப்பிற்காக திருமதி ஒல்கா சாகித்ய அக்காதமி விருதை பெறுகிறார். இந்தக் கதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் ராமாயண இதிகாசத்தின் பின்னணியில் சீதை சூத்ரதாரியாக சொல்லப்பட்டவை.
 
திசைகள் தளம் மின்னூல்களைப் பதிப்பிக்கிறது. சொல் சார்ந்தவை (text based) , ஓவியங்கள், புகைப்படங்கள் கொண்டு மெருக்கூட்டப்பட்டவை (image based), காணொளிக் காட்சிகள் கொண்டவை (video books) என்று எல்லா வகையான நூல்களும் பதிப்பிக்கப்படும்.

இணையத்தில் கதை படிக்கும் கலை

நான் எதையும் ஒன்பது கேள்வியாக வைத்து பார்ப்பவன். இந்தத் தகவல் தொகுப்புக் கட்டுரையிலும் எனக்கு விடை தெரியாத சந்தேகங்களையும் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளையும் கேட்டு வைக்கிறேன்:

1. அமெரிக்காவில்/இங்கிலாந்தில் இருந்து எழுதும் ஆங்கிலத்தில் நிலைமை எவ்வாறு மாறுபட்டு இருக்கிறது? சன்மானத்தை விட்டுவிடுங்கள்; தரத்திலும், பதிப்பாசிரியரின் வெட்டுதல்களிலும், புனைவின் பல்சுவைகளிலும் ஆங்கிலச் சிறுகதைகளுக்கும் தமிழ்க்கதைகளுக்கும் வலையுலகில் என்ன வித்தியாசம்?

தாக்கல் சொல்லும் தான்தோன்றித்தனம்

இது தேர்தல் காலம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வேட்பாளர்களளைப் பார்க்க கூட்டத்திற்கு செல்ல வேண்டும். அங்கே விடிய விடிய எல்லோர் பேசுவதையும் கேட்பார்கள். துண்டு சீட்டில் விளம்பரம் அடித்து ஒட்டுவார்கள். சுவரெங்கும் ஓவியம் வரைந்தார்கள். இணையம் வந்த பிறகு இந்த முறை மாறுகிறது. வேட்பாளரை ட்விட்டரில் சந்திக்கலாம். ஃபேஸ்புக் மூலமாக வினா எழுப்பலாம். ஷங்கரின் ‘முதல்வன்’ திரைப்படத்தில் ஒரே ஒரு பேட்டியில், அதுவும் சில மணித்துளிகளே நீடிக்கக் கூடிய நேர்காணலில், நிருபர் ஒருவர், தமிழக முதல்வரை கேள்விகளால் துளைப்பார்….

தமிழினி கலை இதழ், உபு இணைய தளம்

தமிழறிஞர்கள், தமிழாராய்ச்சி, தத்துவம், சிற்பக்கலை, கல்வெட்டு ஆராய்ச்சி, சமூகம், சமகாலத் தமிழ்ச்சூழல் ஆகியவற்றைக் குறித்துத் தீவிரமான பல கட்டுரைகளை வெளியிட்டு வரும் சிறந்த சிற்றிதழான தமிழினியை இப்போது இணையத்திலும் படிக்கலாம். உபு டாட் காம் என்ற தளத்தில் ஏராளமான அரிய இசைத்தொகுப்புகளையும் திரைப்படங்களையும் பதிவிடுகிறார்கள். தொடர்ந்து புதிய படைப்புகளை இணைக்கிறார்கள்.

இணையத்தில் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், கணிதம்

தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானோருக்கு இப்போது வலைத்தளம் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் வலைப்பக்கத்துக்கென்று பிரத்தியேகமாக எழுதுகிறார்கள். அச்சுப்பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளையும் இணைய வாசகர்கள் பயன்பெறும் வகையில் தங்கள் வலைப்பதிவுகளில் வெளியிடுகிறார்கள். இவர்களில் சமீபத்திய குறிப்பிடத்தக்க புதிய தளங்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன் இருவருடையதுமாகும்.

வலைவெளியில்: உடுமலை.காம்

இணைய தளங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய பகுதி: தமிழில் நல்ல தரமான புத்தகங்களை வாங்குவதற்கான சிறந்த தளமாக இருக்கிறது உடுமலை.காம். உடுமலைப்பேட்டையிலிருந்து இந்நிறுவனம் இயங்குவதால் இத்தளத்திற்கு இப்பெயர். இத்தளத்தில் புத்தகங்களை எழுத்தாளர் வாரியாகவும் வகைகள் வாரியாகவும் தேட வசதியிருக்கிறது. இந்தியாவுக்குள் 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் தபால் செலவு ஏதும் இல்லாமல் இலவசமாகவே அனுப்பி வைக்கிறார்கள்.