ஆனால், கல்வித்தகுதி மற்றும் சான்றிதழ்கள் உள்ள ஒரு பணியாளருக்கு லக்ஸ் அதிகம் ஊதியம் தர வேண்டும். என் போன்ற கல்வித்தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் அற்ற ஒருவருக்கு அடிப்படை ஊதியம் தந்தால் போதும். அங்கே தான் அவருக்கான லாபம் இருக்கிறது. இது செவ்வாயில் அமையப்பெற்ற அரசாங்கத்தை அவர் ஏமாற்றும் விதம்.
Category: அறிவியல் கதை
தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்
அண்டவெளியின் பெரும்பரப்பில் ரேடியோ அலைகள் வெகு வேகமாக க்ஷீணிக்கின்றன, அவள் விளக்கினாள். தொலைதூர நட்சத்திரங்களின் சுற்றுப் பகுதியில் உள்ள கோள்களிலிருந்து அண்டவெளியின் பாழில் யாராவது தொடர்புக்கான செய்திகளை விநியோகித்துக் கொண்டிருந்தால், அவர்களுடைய அண்மையில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
தொலைந்துபோன புயல்
மனிதனின் ஆவி அவனைவிட்டுப் பிரிந்ததும் புவியீர்ப்பு அவன் நகர்வைக் கட்டுப்படுத்தவதில்லை. சிலரின் கூற்றுப்படி, மரணம்கூட மனிதனை இப்புவியிலிருந்து விடுவிக்க முடியாது, ஏனெனில் ஆவிகள்கூட பிரம்மஞான சபையின் கட்டளைகளுக்குட்பட்டுத்தான் அலைய முடியும்.
அமிழ்தல்
அக்கா, முன்பு நீ தேடிக்கொண்டிருந்த சுட்டுப் பெயர்; உன் புத்தியிலிருந்து மறைந்துவிட்டதாகத் தோன்றுகின்றவற்றில் அதுவும் ஒன்று. நீ வார்த்தைகளைப் பெறப் போராடுகிறாய்; ஆனால் அந்த அமிழ்த்தி உனக்குக் கொடுப்பவை எல்லாம் நடுவாந்திரமாக, தொடர்பறுந்த வகைச் சுட்டுப் பெயர்களாகவே உள்ளன, அவற்றில் ஒன்று உனக்கு உள்ளுணர்வால் உடனே தெரிகிறது, தவறான சொல் என்று – அதை வெளிதேசத்தவரும், அன்னியரும்தான் இந்த மாதிரிச் சூழல்களில் பயன்படுத்துவார்கள். “அக்கா,” நீ அந்தச் சுட்டுப்பெயரை, இறுதியில், திரும்பச் சொல்கிறாய், ஏனெனில் உனக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.
அனாதை
”…சூரியனைச் சுற்றிய ஒன்பது கிரகங்களின் விசைகள் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு, சமன்படும் இடங்களில்தான் ஒவ்வொரு கிரகத்தின் இருப்பும் சாத்தியமாகிறதா? சமன்படுதலும், சமரசமும்தான் குடும்பமென்கிற ஒருங்கிணைப்பின் மையமா?” சிந்தனையில் ஆழ்ந்திருந்த ப்ரீத்தியின் முகம் சட்டென ஒளிர்ந்தது.
சந்தா
நெற்றியையும் புருவங்களையும் சுருக்கி அவனைப் பார்த்து,”ஆனால் பார் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.”
“என்ன மாதிரியான பகடி இது? அதுதான் அனைவருக்கும் வாழ்வுரிமை சந்தா இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதே. உயிர் வாழ்வதிலோ உணவு உண்பதிலோ என்ன பெரிய இம்சை வந்துவிடப் போகிறது?”
சுடோகுயி – பாகம் 2
“சுடோகு விளையாட்டில் வருபவை அனைத்துமே வெறும் வரிகள் அல்ல, கதைகள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை குறுங்கதை எனும் ஏழு வரிகளில் எழுதப்படும் கதை ரோம் மக்களிடையே புழக்கத்தில் இருந்தது. ரோமின் இரண்டாவது இருண்டகாலத்தின்போதும் சிறு குழுக்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டது. அக்கதைகளுள் சில புலனாய்வுத்துறையின் கணினிகளின் பொருள்கூட்டுகளையும் தாண்டி சங்கேத குறியீடுகள் கொண்டிருந்ததால், புலனாய்வு அதிகாரிகள் தங்களால் புரிந்துகொள்ள முடியாத செய்திகளின் ரகசிய பட்டியலில் நெடுங்காலம் வைத்திருந்தார்கள்.
விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க்
“நான் வேண்டுமானால் இன்னுமொரு நூறாண்டுகள் காத்திருக்கிறேன். அதுவரை தொந்தரவு இல்லாத ஓரிடத்தைத் தேர்வு செய்து என்னை உறக்கத்தில் ஆழ்த்தி உறைய வைத்தோ அல்லது ஏதாவது ஒரு வகையில் பாதுகாத்து வைத்திருங்கள். அதை உங்களால் செய்ய முடியும் என்பதை அறிவேன்” என்றார்.
வெளி மூச்சு – 2
நம் மூளைகளைப் பற்றிய ஒரு ஆய்வு நம் கடந்த காலத்தைப் பற்றிய மர்மங்களை விளக்கவில்லை, மாறாக எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்று விளக்கியதை சிலர் ஓர் அங்கதமாகக் கருதுகிறார்கள். ஆனால் நாம் கடந்த காலத்தைப் பற்றியும் மதிப்பு மிக்கதாகச் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த அண்டம் ஒரு பிரும்மாண்டமான மூச்சுப் பிடிப்பு நிலையில் துவங்கி இருக்கிறது. அது ஏன் என்று யாருக்குத் தெரியும், ஆனால் காரணம் என்னவானாலும், அப்படி நடந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சிதான், ஏனெனில் என் இருப்புக்கு அதுதான் காரணம்.
வெளி மூச்சு
சாவு நேரும் வகையான விபத்துகளில், மண்டை ஓடு உடைந்தால், மூளை தங்கத்தால் ஆன மேகம் போல சீறிப் பாய்கிறது என்பதும், சின்னாபின்னமான சரடுகளையும், தகட்டையும் தவிர பயனுள்ள எதுவும் கிட்டுவதில்லை என்பதும் சராசரி நிகழ்வு. பல பத்தாண்டுகளாக, ஒரு நபரின் அனைத்து அனுபவங்களும் தங்கத் தகடுகளில் பொறிக்கப்படுகின்றன என்ற கருத்துதான் நினைவு சக்தியைப் பற்றிய கோட்பாடாக இருந்தது; விபத்துகளுக்குப் பிறகு காணப்பட்ட துகள்களுக்கு, வெடிப்பால் கிழிக்கப்பட்ட இந்தத் தகடுகளே காரணம். உடற்கூறியலாளர்கள் இந்தத் தங்கத் தகடுகளின் சிறு துகள்களைச் சேகரிப்பார்கள்- அவை அத்தனை மெலிதாக இருப்பதால் ஒளி அவற்றூடே கடந்து போகையில் பச்சையாகத் தெரியும்- பிறகு பல வருடங்கள் செலவழித்து அவற்றைத் திரும்ப இணைக்க முயல்வார்கள்,
டேடா மதம்!
என்னுடைய வயது அறுபதைத் தாண்டி விட்டது. என்னுடைய வழக்கமான மாலைப் பொழுது போக்கு, பக்கத்தில் உள்ள பூங்காவிற்குச் செல்லுவது. அங்கு விளையாடும் குழந்தைகளின் சத்தம், பறவைகளின் ஒலி, எதுவும் என்னை அதிகம் பாதிப்பதில்லை. அத்துடன், அங்கு வரும் பெரும்பாலானவர்களுடன் பேசுவதையும் தவிர்ப்பவன். சில மாலைப் பொழுதுகளில், அங்கு ஒரு “டேடா மதம்!”
த்ருஷ்டி
பூமியின் ஒவ்வொரு மூலைகளிலிருந்தும் மக்கள் கொண்டுவரப்பட்டு, அவர்களில் தேர்ந்த அதி தீவிர தகவமைப்புத் திறன் பெற்ற ஜீன்களைக் கொண்டுள்ள மனிதர்களுள் முதல் முப்பது மனிதர்களை தெரிவு செய்து, அவர்களை விண்கலம் மூலம் வானத்தில் ஏவி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பூமியில் அவர்களை குடி அமர்த்த முடிவெடுக்கப்பட்டு இருந்தது. அத்தகைய மனிதர்களை அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மரபணு மாற்றத்தில் ஈடுபடுத்தி வம்சாவளிகளாக பேணிக்காத்து வந்திருந்தனர். அவர்களின் மரபணுக்கள் அதீத கதிரியக்கங்களை தாங்குவதற்காகவும், குறைந்த ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி சுவாசிப்பதற்காகவும் சேர்ப்பனவற்றைச் சேர்த்தும் கழிப்பன வற்றை கழித்தும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. இப்படி மாற்றி அமைக்கப்பட்ட மரபணுக்களால் உடனடியாக எந்த விளைவுகளும் இருக்காது. மந்த நிலையில் இருக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும்போது தூண்டப்பட்டு விழித்துக்கொண்டு, மனித பரிணாமத்தின் அடுத்த படிநிலையை எட்டும்.
கூடுகள்
கூட்டுக்குள்ளிருக்கும் நிலை ஒரு வாரம் போல நீடிக்கும்- சில நேரம் மேலும் கூடுதலான அல்லது குறைவான நாட்கள் பிடிக்கும். ஏனென்று எங்களுக்குத் தெரியவில்லை. என்ன வெளியே வருகிறதோ, அது மனிதனில்லை. அந்த உருவுக்கு இன்னும் இரண்டு கால்கள், இரண்டு கைகள், உடல், மேலும் தலை இருந்தது. அந்த மங்கிய சிவப்புத் தோலில் எங்கும் தூரிகை முடி போலச் சிறு முண்டுகள் இருந்தன- மயிர் இல்லை, மிருக உரோமம் இல்லை, செதிள்களில்லை- அவற்றின் பயன் என்ன என்று தெரியவில்லை. தலைதான் அருவருப்பூட்டியது.
பெரும் மௌனம்
அலெக்ஸ் என்ற ஆஃப்ரிக்க சாம்பல் நிறக் கிளி இருந்தது. அந்தக் கிளி அதன் அறிவுத் திறனால் புகழ் பெற்றதாக இருந்தது. அதாவது, மனிதர்களிடையே புகழ்.
ஐரீன் பெப்பர்பெர்க் என்ற மனித ஆய்வாளர் அலைக்ஸை முப்பதாண்டுகள் கவனித்து ஆராய்ந்தவர். அவர் அலெக்ஸுக்கு வடிவங்களுக்கும், நிறங்களுக்கும் உள்ள சொற்கள் தெரிந்திருந்தன என்பதோடு, அவனுக்கு வடிவுகள், நிறங்கள் ஆகியவற்றின் கருத்துருக்களும் புரிந்திருந்தன என்றும் கண்டறிந்திருந்தார்.
ஒரு பறவையால் அரூபமான கருதுகோள்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பது பற்றிப் பல அறிவியலாளர்கள் ஐயம் கொண்டிருந்தனர். மனிதர்களுக்குத் தாம் ஏதோ தனிச் சிறப்புள்ள உயிரினம் என்று நினைக்கப் பிடிக்கும். ஆனால் இறுதியில் பெப்பர்பர்க் அவர்களை அலெக்ஸ் வெறுமனே சொற்களைத் திருப்பிச் சொல்லவில்லை, அவனுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்பது புரிந்திருந்தது என்று ஏற்க வைத்தார்.
கோடை ஈசல்
முந்தைய பகுதிகள்:பகுதி – ஒன்றுபகுதி – இரண்டு பீட்டர் வாட்ஸ் + டெரில் மர்ஃபி அந்த அறை காயங்கள் ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதற்கென கட்டமைக்கப்பட்டிருந்தது. அங்கு படுப்பதற்கு ஒரு கட்டில் இருந்தது. அதன் ஒரு மூலை கிழக்குப் புறச் சுவருக்குள் பதிந்திருந்தது. அது போதுமானதாக இருந்தது. அவள் ஓடிய “கோடை ஈசல்”
கோடை ஈசல்
பாதி உலகம் தள்ளி தூரத்தில இருக்கற கதகதப்பான உங்க ஆஃபிஸ்ல உட்கார்ந்துக்கிட்டு, எங்களுக்கு போதனை செய்யறது உங்களுக்கு சுலபமா இருக்கு. நாங்கதான் ஜீனியோடு போராட வேண்டி இருக்கு, அவ தன்னோட முட்டிகளை தன் முகத்திலே குத்திக்கறா, தன் கையில இருக்கற தோலை உரசிப் பிச்சுப்புடறா, வெறும் மாமிசம்தான் அவ கையில தொங்கறது, அல்லது தன்னோட கண்ணுல ஒரு ஃபோர்க்கால குத்திக்கறா. அவ ஒரு தடவை (உடைஞ்ச) கண்ணாடியைத் தின்னா, ஞாபகம் இருக்கா? ஒரு மூணு வயசுக் குழந்தை அடாவடியா கண்ணாடியைத் திங்கறா! நீங்க இருக்கீங்களே, டெர்ரகானோட சோமாறிகள், எல்லாராலும் என்ன செய்ய முடியறது?
யயாதி
“தேன்மொழி, முதுமையின் காரணங்களைக் கண்டறிந்தால், அதைத் தவிர்த்துவிடலாமல்லவா? தவிர்ப்பதில் வெற்றி வந்தால், இளமை மட்டுமல்ல, வாழ்வும் நிரந்தரமல்லவா?”
‘நீங்கள் சொல்வது நோயற்ற உடல், முதுமையற்ற வாழ்வா?’
“அதேதான்”
‘விபத்துக்கள் நடந்தால்?’
“நாங்கள் மரணமில்லை எனச் சொல்லவில்லை.”
கோடை ஈசல் – பீட்டர் வாட்ஸ் & டெரில் மர்ஃபி
குழந்தைகளை வதைப்பதில் ஒரு சிந்தனைச் சோதனை இது: அப்போதே பிறந்த ஒரு குழந்தையை, நேர்க்கோடுகளே இல்லாத ஒரு சூழலில் கிடத்துவது. அவளுடைய மூளை ஒரு சமன நிலைக்கு வரும்வரை, மூளையின் நரம்புத் தொடர்புகள் எல்லாம் உறுதியாகும் வரை, அங்கேயே இருக்கச் செய்வது. உருக்களின் அமைப்புகளை ஒன்றோடொன்று பொருத்திக் காட்சிப்படுத்தும் கண் விழித்திரையின் மொத்த இணைப்புகளும், தேவை என்று கேட்கும் தூண்டுதலே இல்லாததால், செயல்படுவதை நிறுத்தி விடும், இனிமேல் அவற்றை மறுபடி செயல்பட வைக்க முடியாது போகும். தொலைபேசிக் கம்பங்கள், மரங்களின் தண்டுகள், வானளாவும் கட்டிடங்களின் செங்குத்து உயரங்கள்- உங்களுக்குப் பலியான அந்தப் பெண், தன் வாழ்நாள் பூராவும் நரம்புகளின் வழியே இவற்றைப் பார்க்க முடியாதவளாகவே ஆகி இருப்பாள்.
ஒளிநகல்
இது எந்த இடம்? எப்படி இங்கு வந்தேன்? டெக்ஸாஸிலிருந்து இங்கே ஏன் வந்தேன்? என்ன ஒரு குழப்பம்?எல்லாமே மாறித் தோன்றுகிறதே? என்னவோ நடக்கிறது, உள்ளிருந்து ஒரு ஊமைக்குரல் கேட்கிறது.புரியவில்லை கடவுளே, என்ன ஆகிக் கொண்டிருக்கிறது எனக்கு? எதிரே ஒரு கோயில்; ஸ்மரண் தன்னை அறியாமல் கை கூப்பினான்.அவனருகில் மாருதி கார் வந்து நின்றது.அழகிய இளம்பெண் ஒருத்தி இறங்கி‘ கெட்இன்’ என்றாள். இவன் திகைத்தான். அவளுடைய இறுக்கமான உடை இவனைப் போல பலரையும் இம்சித்திருக்கக்கூடும். ”இவள் யார்? ஏன் தன்னை காரில் ஏறச் சொல்கிறாள்?
பகிரும் காற்று
அந்தக் காலத்து மனுசங்க ஒருத்தர் மத்தவரின் காற்றையே பகிர்ந்துக்கிட்டாங்க, என்ன மாதிரிக் கொடுமை அது!! ஒவ்வொருத்தரின் கிருமிங்களையும், எல்லாரோட கழிவுப் பொருட்களையும், தங்கள் முச்சுக்குழாய் அழற்சியிலிருந்து விடுபட்ட சளியையும், பலரின் உடல் கழிவுகள் பலதையும் காத்து மூலமா வாங்கிக்கிட்டு மூச்சில் கலக்க விட்டார்கள். தண்ணீரோ கிருமி அழிப்பு செய்து சுத்தமாகாத குழாய்கள் வழியாப் பல மைல்கள் தாண்டி வந்து எங்கேயிருந்தோ கொண்டு வந்து அவங்களுக்குக் கொடுக்கப்பட்டது. சில நேரம் மாசுபட்ட பூமியிலிருந்தே கூட நீர் எடுத்துக் கொடுக்கப்பட்டது. சக்தி தேவைப்பட்டதுக்கு, அதை எங்கிருந்தெல்லாம் பெற முடியுமோ அங்கேயிருந்தெல்லாம் அவங்க அதை எடுத்துக்கிட்டாங்க. அவங்களோட கருவிங்க அத்தனை நுட்பமெல்லாம் இல்லாத, மொண்ணையான கருவிங்களா, உயிர்த்துடிப்பே இல்லாம இருந்தது…
வெற்றிட நிலைகள்
பெருவெடிப்புக்கு முன்னால் பேரண்டத்தில் அறிவுள்ள ஜீவன்கள் இருந்தனவோ என்னவோ. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நாம் கற்பனை கூடச் செய்ய முடியாது. அவர்களின் உலகம் பெரும் திணிவும், உயர்ந்த உஷ்ணமும் கொண்டு, மிகச் சிறியதாக இருந்தது; அவர்களின் மொத்தப் பேரண்டமும் ஒரு ஊசியின் கூர்முனையை விடச் சிறிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும், அவர்கள், நமக்குச் சாத்தியமாகியிருக்கிற கால அளவைகளிலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள், நூறாயிரம் கோடி (1ட்ரில்லியன்) தலைமுறைகள் வாழ்ந்திருக்கக் கூடும். ஒரு வேளை அவர்களில் ஒருவர், தாம் வாழ்கிற வெற்றிடம் ஒரு போலி வெற்றிடம் என்று உணர்ந்திருக்கக் கூடும், அதனால் அந்த வெற்றிலிருந்து சக்தியை உருவாக்க முடியும் என்று புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஒரு வேளை ஒருவர் அதை முயன்றாரோ என்னவோ.
தானாக உய்த்தறியும் எர்க் எப்படி ஒரு வெள்ளையனை ஒழித்தான்
ஹோமோஸ் வெகு சீக்கிரம் அறிவுள்ள பேச்சைக் கற்றுக் கொண்டு விட்டது, எனவே தைரியமாக எலெக்ட்ரீனாவிடம் பேசியது.
ராஜகுமாரி அதனிடம் ஒரு தடவை கேட்டாள், அதன் முகத் துவாரத்தில் மின்னுகிற வெள்ளைப் பொருள் என்னவென்று.
“அதை நான் பல் என்று அழைப்பேன்,” அது சொன்னது.
“ஓ, எனக்கு அதில் ஒன்றைக் கொடேன்!” என்று வேண்டினாள் அரசகுமாரி.
“அதுக்குப் பதிலாக நீ எனக்கு என்ன கொடுப்பாய்?” அது கேட்டது.
“நான் என்னோட சின்ன தங்கச் சாவியைத் தருவேன். ஆனால் ஒரு கணம்தான்.”
“அது என்ன சாவி?”
“என் சொந்தச் சாவி. தினம் மாலையில் அதை வச்சு என் மூளைக்கு நான் சாவி கொடுப்பேன். உனக்கும் ஒண்ணு இருக்கணுமே.”
ஆட்டோஃபாக்
மூன்றாவது நபர் எதுவும் சொல்லவில்லை. ஓ’நீல் வேறொரு குடியிருப்பிலிருந்து இங்கு பார்வையாளராக வந்தவர்; அவர்களோடு வாதிடும் அளவுக்கு அவருக்குப் பெரீனையோ, மோரிஸனையோ அவருக்கு அதிகம் தெரியாது. மாறாக அவர் கீழே குனிந்தமர்ந்து, தன் அலுமினம் சோதிப்பு அட்டையில் இருந்த காகிதங்களைத் திருத்தி அமைத்தார். எரிக்கும் சூரியனில், ஓ’நீலின் கைகள் பழுப்பாகி, ரோமமடர்ந்து, வியர்வையால் மின்னின.
ஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை
“என்னோட பழம் கணினியே! என் நல்ல கணினியே! அப்படி இப்படி, இந்த ட்ராகன் என் சிம்மாசனத்தைப் பிடுங்க உத்தேசிக்கிறது, என்னைத் துரத்தப் போகிறது, உதவி செய், பேசு, நான் எப்படி அதைத் தோற்கடிப்பது?”
“ஓ-ஓ,” என்றது கணினி. “முதலாவது நீங்கள் முந்தைய விஷயத்தில் நான் சொன்னதுதான் சரி என்று ஒத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, நீங்கள் என்னை டிஜிடல் பிரதம மந்திரியே என்றுதான் அழைக்க வேண்டும், ஆனால் நீங்கள் என்னை ’மாண்பு மிகு இரும்புகாந்த்’ அவர்களே என்று வேண்டுமானாலும் அழைக்கலாம்! “
“நல்லது, நல்லது. உன்னை நான் பிரதம மந்திரி என்று நியமிக்கிறேன். நீ எது சொன்னாலும் ஏற்கிறேன், என்னைக் காப்பாற்றுவதை முதலில் செய்!”
எந்திரம் விர்ரிட்டது, சிர்ரிட்டது, ஹம்மியது, ஹெம்மியது, பிறகு சொன்னது.
உயிரெச்சம்
“பிரியப் பெற்றோரின் பெற்றோர்களே,
எத்தனை பெரிய இழப்பு நமக்கு. அவர்கள் இருவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். நீங்களாவது வர மாட்டீர்களா? எலும்புகள் வளரத் தொடங்கிவிட்டன, ஜெனிடல்ஸ் அமைந்துவிட்டன, கண்களை மூடித் திறக்கப் பயிலுகிறேன். நுரையீரலும் தசைகளும் வலுவாக ஆரம்பித்திருக்கின்றன. யுகந்தராவும் நானும் ஏங்குகிறோம். எங்கள் உணவை நாங்களே தயாரித்துக் கொண்டிருக்கிறோம், ப்ரசன்னாவின் உதவியோடு. ஆனால் எவ்வளவு நாள்?”
வாசகர் மறுவினை
இந்த வகைக் கதைகளை அடிக்கடி மேற்கு எழுதி உளைச்சல்பட ஆதிக் காரணம் ஒன்று உண்டு. யூதத்தில் மனிதர் கடவுளின் படைப்புக்குச் சவாலாகத் தாமும் படைக்க முயன்ற கோலெம் என்ற மண் பொம்மைக்குக் கொடுக்கப்பட்ட உயிர்ப்புடைய விபரீத விளைவுகள் பற்றிய பழங்கதை அது. ஒற்றைக் கடவுள் என்ற கருத்துருக்குள் மனிதக் கற்பனையை அடைக்க முயலும் செமிதியக் கருத்தியலின் பல விகார அணுகல்களில் இது ஒன்று. இந்த பயம் முன்பு வெறும் அச்சுறுத்தல் கதையாகவும். ஒழுங்குக்குள் மனித நடத்தையைக் கொணர முயலும் செயலாகவும் இருந்திருக்கலாம், இன்று இது வெறும் மனப் பேதலிப்புகளில் ஒன்றாக் ஆகி, ஐஸிஸ் போன்ற கொடுங்கோல் அரசியலுக்குக் கூட இட்டுச் சென்றிருக்கிறது. இதன் ஒரு அபத்த விளைவுதான் மார்க்சியத்தின் ‘ஏலியனேஷன்’ (அன்னியமாதல்) என்ற ஆர்ப்பரிப்பான கருத்துருவுக்கும் அடிப்படை. இணைவைத்தல் என்ற ஒரு இஸ்லாமியக் கோட்பாட்டிலிருந்து பிறக்கும் பயங்கரங்களைப் போன்ற கருத்துரு பேதலிப்புதான், மார்க்சின் ரைஃபிகேஷன் என்ற அச்சுறுத்தல் கோட்பாடு. இதையே ஃப்ரெஞ்சு நவீனக் கடப்பு வாதிகள் இன்னமும் தாண்ட முடியாமல் தத்தளிக்கிறதை, மீடியம் ஈஸ் த மெஸேஜ் என்ற கருத்தில் துவங்கி …
சமர்த்த குப்பை மடல் வடிகட்டி
ஜோ அசௌகரியமாக உணர்வானோ? உறுதிப்படுத்த முடியவில்லை. மனித உணர்வுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். “Mr.கோவால்ஸ்கி, ஒரு இருக்கையில் அமருங்கள்,” என்றார் பில் மோரிசன். அவர்தான் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி. அவருடைய மின்னஞ்சல்கள் சுவாரசியமாக இருப்பதில்லை. எல்லாம் அலுவலக விசயங்கள், அன்றாட அறிக்கைகள் மட்டுமே. ஜோ இருக்கையில் அமர்ந்தான். சூட் அணிந்தோரிடையே ஜீன்ஸ் -டி -சர்ட் அணிந்த ஒருவனாக வித்தியாசப்பட்டுத் தெரிந்தான்.
மனித வளத் தலைமை அதிகாரி, எமிலி, “நன்று. இந்த விஷயம் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஜோ வைக் கேட்டாள்.
எமிலி கேலுக்கு மிகவும் பிடித்தமானவர். விதம் விதமான பற்பல மின்னஞ்சல்கள் எழுதுபவர். குறிப்பாக பூனைகளின் நிழற்படங்களை…
மகரந்தம்
எட்வர்ட் மன்ச் வரைந்த அதிபுகழ் பெற்ற ஓவியமான அலறல் (ஸ்க்ரீம்). அதைக் குறித்து அவர் இவ்வாறு தனது கையேட்டில் எழுதுகிறார்: ‘என்னுடைய இரு நண்பர்களுடன் சாலையில் நடந்தேன். சூரிய அஸ்தமனம் ஆனது. ஆகாயம் ரத்தநிறமானது. மனச்சோர்வு என்னைத் தொட்டதை உணர்ந்தேன். என் நண்பர்கள் என்னைவிட்டு முன்னே நகர்கிறார்கள். என் மார்பில் திறந்த காயம் இருப்பதை போல் பயம் கவ்விக் கொண்டது. சோர்வாக கைப்பிடியில் தளர்ந்தேன். கருப்பும் நீலமும் கலந்த மலையிடைக் கடல் நுழைவழி தெரிந்த நகரத்தின் மேகங்களில் இருந்து ரத்தம் சொட்டி உதிர அலை அடித்தது. இயற்கையினூடே மாபெரும் அலறல் துளைத்து வந்தது.’ அந்த ஓவியத்தைப் பார்த்தால் யாரோ அலறுவதை சித்தரிப்பது போல் இருக்கும். ஆனால், அந்த ஓவியம் தான் மட்டுமே கேட்ட ஓலத்தை, மற்றவர்களுக்குக் கேட்கக் கிடையாத அலறலைக் குறிக்கிறது. அது போல் புத்தாக்கங்களைக் கொணர கொஞ்சம் சித்தம் கலங்கியிருக்க வேண்டுமோ என எண்ணும் கட்டுரை
மதி நுட்ப நகரம்
சில்லு பொருத்தப்படாத அந்த பெண் ஒரு பாதுகாப்புக் கேமரா பக்கமாகக் கடந்து சென்றாள் . நகரம் அவள் முகத்தை நுட்பமாக ஆராய்ந்தது .அவள் கண்களின் வெண் படலம் நீலஒளி வழித்தடத்தில் கருமையாக நிறம்மாறித் தெரிந்தது . கடும் ஜுரம் தாக்கிய உடலையும் , குளிரில் விரைத்துப்போன கை கால் விரல்களையும் அகச் சிவப்புக் (infra red ) கதிர்கள் காட்டின – அவள் உடனடி மருத்துவக் கவனிப்பு தேவைப்படக்கூடிய மனுஷி என்று அடையாளம் காணப்பட்டாள் .
ஆடிப்பாவை
“மூளை வெறும் உயிர்க் கருவி மட்டும் தானா?”
‘வேறு என்னவாக இருக்க முடியும்?’
“மனம், விழிப்புணர்வு, ஆழ்நிலை, ஆத்மா இவையெல்லாமே மூளையில் தான் இருக்கிறதா?’
‘புல் ஷிட். ஆத்மா என்றெல்லாம் கிடையாது.மனம் என்பது மூளை கொள்ளும் எண்ணங்கள்.விழித்திருக்கையில் நீர் உணர்வுடன் இருக்கிறீர். உறங்குகையில் உமது மூளை பல பகுதிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சிறு எச்சரிக்கையுடன் உம்மைக் காக்கிறது. அதை நீர் ஆழ்நிலை என்று சொல்கிறீர்.’
ஜன்னல்கள்
அந்த லாட்டரியில், குருட்டு லாட்டரி அது, இதர சிலர் பெயர்களோடு அவள் பெயரும் பொறுக்கப்பட்டு வெளியே வந்த போது, அந்த லாட்டரியில் தான் வென்றதை பெரிய அதிர்ஷ்டமாகக் கருதினாள் அவள். அவர்கள் எல்லாரையும் விட்டுப் போகவும், அனைத்தையும் என்றென்றைக்குமாக விட்டு நீங்கவும் ஜெல் எத்தனை ஆர்வமாக இருந்தாள் என்பதை நினைத்தாலே வாஞ்ஜீ தன் இதயம் கிழிக்கப்படுவது போல உணர்கிறாள்.”நான் நட்சத்திரங்களை நோக்கிப் போகிறேன்!” என்றாள் ஜெல், ஆனால் அவள் செய்வதென்னவோ ஒரு தகரப் பெட்டியில் தன் வாழ்க்கையைக் கழிப்பதுதான், அதிலேயே வாழ்ந்து அதில் இறக்கவும் போகிறாள், ….
கடவுளின் தொள்ளாயிரம் கோடி நாமங்கள்
“எனக்குத் தெரிஞ்சவரையில் தன்னியக்க வரிசைக் கணினிய ஒரு டிபெட்டிய துறவிமடத்துக்கு அனுப்பும்படி உலகத்துலேயே முதல் முறையா இப்பதான் கேட்கப்பட்டிருக்கு. மூக்க நுழைக்கிறேன்னு நெனச்சுக்காதீங்க, ஆனா உங்க மாதிரி – என்ன சொல்றது, ஆ – நிறுவனத்துக்கு இந்த மாதிரி இயந்திரம்லாம் தேவைப்படும்னு நான் கனவுல கூட நெனச்சிருக்க மாட்டேன். நீங்க இத வெச்சு என்ன செய்யப் போறீங்கங்கறத கொஞ்சம் விளக்க முடியுமா?”
கடந்தகாலத்தின் எதிர்காலத்தவர்
2100-ஆம் ஆண்டில் மீண்டும் முதன்முதலாக செயற்கைக் கோளை ஏவினோம். 2105-இல் நிலவுக்கும் அதன்பிறகு பிறகிரகங்களுக்குமாக ஆய்வுக்கோள்களை வெற்றிகரமாக அனுப்பி ஆராய்ந்தோம். பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையேதான் அந்த ஏவுதல்கள் நிகழ்த்தப்பெற்றன. புவியளவுப் பேரிடர் நடந்தபோது அதன் தாக்கம், மிக மிக மிக குறைவான அளவில் என்றாலும், மற்ற கிரகங்களிலும் முக்கியமாக சந்திரனில் தாக்கத்தடயங்கள் காணப்பெறலாம் என்ற கணிப்பு இயற்பியலாளர்களிடம் இருந்தது.
வால்விழுங்கி நாகம்
எந்த இடத்தில் கருந்துளையில் நுழைகிறோமோ, ஐயாயிரம் வருடங்களுக்கு முன் அதே இடத்தில் இறங்குவோம். ஆகவே அது கடலாகவோ காடாகவோ இருந்துவிடாமல், மனித குடியிருப்புகளின் மிக அருகில் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். குஜராத்தில் லோத்தல் கிராமத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள். அந்தக் காலத்தில் கப்பல் போக்குவரத்துக்குப் பெயர் போன இடம், வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து போயிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கும் இடம். ஊருக்குள் கோபால் ஒரு வெளிநாட்டு வர்த்தகர் என்று சொல்லிக்கொண்டு நுழைவதாக ஏற்பாடு. அந்தக் காலத்தில் மதிப்பு நிறைந்ததாகக் கருதப்படும் செம்பு, தங்கம் போன்றவற்றைக் கொடுத்தனுப்புகிறார்கள். அதனுடன் ஒரே ஒரு துப்பாக்கி.
மனித விஞ்ஞானத்தின் பரிணாமம்
மீ-மனிதர்களின் அறிவியலால் விளைந்த பல நன்மைகளை யாரும் மறுக்கவில்லை. ஆயினும், மனித ஆராய்ச்சியாளர்கள் மீது இந்த நிலையின் தாக்கம் வேறு விதமாக இருந்தது. தங்களால் இனி அறிவியலுக்கு எந்த புதிய கண்டுபிடிப்பையும் அளிக்க முடியாது என்று உணர்ந்த அவர்களில் சிலர் ஆராய்ச்சித் துறையை விட்டு விலகினர்.
கண்ணெதிரே
இன்னும் மூன்று வினாடிகள் தேவைப்படுகின்றன, மீதமுள்ள பாதுகாப்பு முறை வரைவுகள் அழிக்கப்பட்டு அவனுடைய அடையாளச் சில்லுவின் உள்ளடக்கம் பிரதியெடுக்கப்படுகிறது. ஒரு மெல்லிய மணியொலிக்குப் பின் நான் தொடர்பைத் துண்டிக்கிறேன். என்னிடம் க்ளோன் கிட்டி விட்டது. லெய்லா ப்ராட்லியிடம் நான் வெறும் பொது அடையாளத்தைதான் எடுத்தேன், ஆனால் ப்ரின்ஸிடம் எடுத்தது வெறும் அடையாளம் மட்டும் அல்ல, அவன் இது வரை அடையாள சில்லுவில் சேர்த்து வைத்த அத்தனை தகவல்களும் என்னிடம் வந்திருக்கின்றன.
ஏற்கெனவே எப்போதும்
ஆதி உணர்வு அச்சம். எங்க நாம தாக்கப்பட்டுறுவமோன்னு ஒரு பயம். இதுதான் உலகத்தில் எந்த உயிருக்கும். மனிதன் சமூக விலங்கு. அவனும் முதலில் வெளிச் சமூகத்தை அச்சத்துடனே பார்க்கிறான். பின்னர் எப்படியாவது அதில் சேர்ந்து தனது தனித்தளத்தைக் கைவிட்டுக் கரைந்து விடப்பார்க்கிறான். கரைவதில் அவனுக்கு அபாயம் குறைவு.
பேச்சொலிகள்
சரளமான பேச்சு! அந்தப் பெண் இறந்ததற்குக் காரணமே அவளால் பேச முடிந்தது, அவள் அக்குழந்தைகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்தாள் என்பதா?அவள் கொல்லப்பட்டதற்குக் காரணம் ஒரு கணவனின் புண்ணான புத்தியில் எழுந்த கோபமா அல்லது ஒரு அன்னியனின் பொறாமையால் எழுந்த வெறியா?
அதெல்லாம் மாறியபோது – 3
வைலவேக்கு ஆண்கள் வரப் போகிறார்கள். இப்போதெல்லாம் சில இரவுகள் நான் தூங்காமல் விழித்துக் கவலைப்படுகிறேன், இந்த கிரகத்துக்கு வரப்போகிற ஆண்களைப் பற்றி, என் இரண்டு பெண்களைப் பற்றி, கடைசிக் குட்டி பெட்டா காதரீனாஸன்னைப் பற்றி, கேட்டியையும், என்னையும் பற்றி, என் வாழ்வுக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றி. எங்கள் முன்னோர்களின் நாளேடுகள் ஒரு நீண்ட கதறலாக ஒலிக்கின்றன, நான் இந்த மாறுதலைக் குறித்து மகிழ வேண்டுமோ என்னவோ. ஆனால் ஆறு நூற்றாண்டுகளை அப்படி உதறி எறிய முடியவில்லை. அல்லது 34 வருடங்களைக் கூட உதற முடியவில்லை.
அதெல்லாம் மாறியபோது – 2
வாயில் முற்றத்தில் ஒரு நபர் நின்றான். அந்த இன்னொரு உயரமான மனிதன். சில நிமிடங்கள் அவனைக் கவனித்தேன் – வேண்டும் போது என்னால் கொஞ்சமும் ஒலியெழுப்பாமல் நகர முடியும்- அவன் என்னைக் கவனிக்கிற மாதிரி நான் நின்ற போது, அவன் தன் கழுத்தில் இருந்த ஒரு சிறு எந்திரத்துடன் பேசுவதை நிறுத்தினான், மிக உயர்ந்த தரமுள்ள ரஷ்யனில் பேசினான், “ பாலினச் சமத்துவம் பூமியில் மறுபடி நிலைநாட்டப்பட்டு விட்டதென்று உங்களுக்குத் தெரியுமா?”
கல்
பார்வைக் கோட்டின் ஓரத்தில் கட்டிடங்கள் தெளிவற்ற சிறிய உருவங்களாக எழும்ப ஆரம்பித்தன. பிறகு நெருங்க நெருங்க அவை பிரம்மாண்டமாக உயர்ந்தெழுந்தன. செயற்கை புல்வெளிகள் திடீரென வெண்பரப்பில் பச்சை கோடுகள் காட்டின. பெரும்பாலான கட்டிடங்கள் அரை வட்ட கோளமாக இருந்தன. மேலே சூரிய ஒளியை சேமிக்கும் வளைந்த கண்ணாடிகள் இருந்தன. ஆங்காங்கே சத்து மண் படுகைகளில் ராட்சத மரங்கள் வளர்ந்திருந்தன.
அதெல்லாம் மாறியபோது
எங்களை விட உருவில் பெரியவர்கள். பெரிதாக மட்டுமில்லை, அகலம் வேறு. இரண்டு பேர் என்னை விட உயரம், நானே ரொம்பவும் நெட்டை என்று பெயர். காலணி இல்லாமல் என் உயரம் ஒரு மீட்டர், 80 சென்டி மீடர். அவர்களைப் பார்த்ததுமே எங்கள் இனம் என்று தெரிந்தது, ஆனால் எங்களிடமிருந்து வேறுபட்டு இருந்தனர். எளிதில் சொல்லி விட முடியாதபடி மாறிய ஆட்களாகத் தெரிந்தார்கள்.
புரிந்து கொள் – 6
என் பெயரை ரெய்னால்ட்ஸ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நான் இத்தனை மாறுதல்களையும் செய்து தயார் நிலையில் இருந்தேன். அவனுடைய அடுத்த வாக்கியம் என் அழிப்புக்கான கட்டளையாகத்தான் இருக்க வேண்டும். இப்போது என் புலன்களின் உள்ளெடுப்பு நூற்றி இருபது மில்லி-வினாடித் தயக்கத்துடன் நேர்கிறது. நான் மனித புத்தி பற்றிய என் முந்தைய ஆராய்வை மறுபடி சோதிக்கிறேன், அவன் சாதித்தது சரியாக இருக்குமா என்று தெளிவாகச் சோதிக்கிறேன்.
மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லை
“நீ ஒரு பொழுதும் விஞ்ஞான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் விரும்பியதை நீ வெறுத்தாய். உனக்கு எப்போதும் குழந்தைகள் வேண்டும். இதெல்லாம்… வேண்டும்.” அவள் குப்பைக்கூளமாக இருந்த முன்புறத்தை சுட்டினாள். டேவிட் சென்று பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. பணம் அனுப்புகிறான். போதவில்லை.
மனிதர் உபயோகம்
மறுநாள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கானமைட்டுகள் முன்வைத்த புதிய எரிசக்தி குறித்த ஆய்வு அறிக்கைகள் மளமளவென்று குவிந்தன. அத்தனை முடிவுகளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. மிகமிக மலிவானதொரு விலைக்கு வழங்கப்படும் உலோகத்தாலான சிறு பெட்டிகள் ஓர் அணுமின்கலத்தைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தியை ஓய்வில்லாமல் வழங்கும் என்பதை நம்புவதா கூடாதா என்பதில் எனக்குங்கூட சிக்கலிருந்தது. விலை மிகவும் குறைவென்பதால் ஆளுக்கொன்று வைத்துக்கொள்ளலாம் என்பதுபோல உலகம் முழுக்கப் பேச்சு. பதினேழு நாடுகள் பெட்டிகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளைக் கட்டத் தொடங்கிவிட்டதாகப் பிற்பகல் செய்தி.