லீ குவான் இயூவுக்கு அஞ்சலி

சிங்கப்பூரில் அப்போது எவருமே அதிகபட்சம் சில தலைமுறைகளாகத்தான் அங்கே வசித்துவருகின்றனர். அதுவும் இன்றைய மலேசியாவோடு சேர்ந்த மலாயாவின் ஒரு பகுதியாக இருப்பதை நம்பித்தான். இவர்கள் அல்லது இவர்களது முன்னோர்கள் ஆயிரமாயிரமாண்டுகள் வரலாறுள்ள தங்கள் தோற்றுவாய் நாடுகளைக் கைவிட்டு இங்கு இடம்பெயரக்காரணம் தாங்களாகப் பெரும்பொருளீட்டிவிடும் ஆசையினாலோ அல்லது பிரிட்டிஷார் கொடுத்த (பொய்யான) உத்தரவாதத்தின் பேரிலோதான். ஒருவேளை குறுகியகாலத்தில் சிங்கப்பூர் சொந்தக்காலில் நின்று சமாளித்துப் பொருளாதார ரீதியில் வளரத்தொடங்காவிட்டால் இவர்கள் நேரத்தை வீணடிக்காமல் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு புறப்பட்ட இடங்களுக்கே போய்ச்சேர …

டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் – அஞ்சலிக்குறிப்பு

தூய்மையான ஸ்வீடிஷ் மொழியில் எந்தவித தேவையில்லாத ஒப்பனையும் இல்லாமல் அவர் எழுதினார். இயற்கையைப் பற்றிய அவருடைய விவரிப்புகள் ஜப்பானிய ஓவியம் போல் உயிர் ஊட்டத்தோடும் அதே சமயம் மட்டுப்படுத்திய மொழியும் வைத்திருந்தது. 1954ல் அவருடைய பதினேழு கவிதைகள் வெளியான தருணத்தில் இருந்தே அவருக்கு பல பரிசுகளும் பரவலான பாராட்டுகளும் வந்து சேர ஆரம்பித்தன.

பாடலை நிறுத்திய பாணன் – எஸ். பொ.

எஸ்.பொ. என்று தமிழிலக்கிய உலகில் அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை அவர்களைப் பற்றி நான் அறிந்தது அதிகமில்லை. நான் மட்டுமன்ன? ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனை பேர்களை தமிழ்நாட்டு தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள்? அல்லது அறிந்திருப்பார்கள்? எஸ். பொ. ஏதாவது தமிழ் சினிமாவில் தலை காட்டியிருந்தால் ஒருவேளை தமிழர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.

ராஜம் கிருஷ்ணன் – தமிழ் இலக்கியப்பாதையில் பதிந்த அடிகள்…

அரசியல்வாதிகள் அப்படி என்றால் நாளிதழ் போன்ற அச்சு ஊடகங்கள் , திரைக்கலைஞர்களின் மறைவுக்கு ஒதுக்கும் மிகுதியான இடத்தைக்கூட ராஜம் கிருஷ்ணனின் மறைவுச்செய்திக்கு ஒதுக்க முன் வரவில்லை என்பது வேதனையளிப்பது. அச்சு ஊடகங்களிலும் இணைய அஞ்சலிகளிலும் வெளியான ஒரு சில கட்டுரைகளிலும் கூடராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலத் துன்பங்கள் முன்னிறுத்தப்படும் அளவுக்கு அவரது வாழ்நாள் சாதனைகள் அதிகமாக நினைவுகூ̀றப்படுவதில்லை.

'அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா

திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த “அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கி “'அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா”

அம்ரிதா ப்ரீதம்

அம்ரிதா ப்ரீதமின் பிராபல்யத்துக்கும் புகழுக்கும், அவரது அழகு, இடது சாரி, கவித்வம் எல்லாமே உதவின. அதற்கும் மேல் அவரது சுதந்திர தாகம் கொண்ட வாழ்க்கை. அது தன் முனைப்புக்கொண்ட பெண்யம். தன் ஆளுமையிலிருந்து கிளர்ந்த பெண்­யம். சுதந்திரம். கோட்பாடாகப் பெற்றதல்ல.

ராஜம் கிருஷ்ணன் – அஞ்சலி

கலைமகள், ஆனந்த விகடன் நாவல் போட்டிகள், சோவியத்லாந்து-நேரு, இலக்கிய சிந்தனை, பாரதீய பாஷாபரிஷத், தமிழ் நாடு அரசு , சாஸ்வதி பரிசுகளையும், சாகித்ய அகாதமி, திரு.வி.க., தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் முதலிய விருதுகளையும் பெற்றவர். அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது ‘ஊசியும், உணர்வும்’ என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத்தொகுப்பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.

மேண்டலின் ஸ்ரீநிவாஸ் – அஞ்சலி

மேதைத் தன்மை என்றதும் உன் உலகைச் சேர்ந்தவன் நானில்லை என்ற பார்வையோ, இது எப்பேற்பட்ட தவம் தெரியுமோ என்ற த்வனியோ, கஜப்பிரசவம் முடித்த களைப்பாகவோ இல்லாமல், இயல்பாக வெளிப்படும் அழகு. Embodiment of Effortlessness என்பதை சிலரிடம் தான் காணமுடியும். அதன் விசேஷம் என்னவென்றால், அவர்கள் அதைச் செய்யும்போது மிக எளிதாகத் தோன்றுவதால் அடடே, இதை நாமும் செய்யலாமே என்று செய்யப்போய், ஐயையோ.. ரொம்பக் கஷ்டம்.. எப்படி விழுந்துதுல்ல அந்த சங்கதி என்று கற்றறிந்த வித்வான்களும் வியந்து, அது அவருக்கு ரத்தத்துல ஊறியிருக்கு என்று பிரமித்து நிற்றல்.

பி.கே.எஸ். ஐயங்காரின் அதிமானுட யோகா முறைகள்

யோகா பயிற்சிகளை அமெரிக்காவுக்கு ஏற்றவாறு மாற்றினார். “குரு ஒரு மாணாக்கருக்கு பல வருடங்கள் சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாக இருந்ததை ஒரு வகுப்பின் பல மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் சொல்லிக்கொடுக்கும் பயிற்சி மையமாக மாற்றியவர் ஐயங்கார்”, என்றார் ஷுமாக்கர். வளைய சிரமப்பட்ட மாணவர்களுக்கென நவீன முறை பயில் சாதனங்களாக பட்டா, தட்டைகட்டை, கயிறுகள், கற்கள், சின்ன மரத்துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு சுலபமாக்கினார். ஹிப்பிக்கள் நிரம்பிய 1970களில் கூட அவர் பொது ஜனங்களுக்கான பயிற்சிகளை மட்டுமே சொல்லிக்கொடுத்தார்.

நடீன் கோர்டிமர் [1923 – 2014]

காலனியாதிக்கத்தின் கோரப்பிடிப்பிலிருந்து விடுபட்ட கருப்பின மக்களின் சிக்கல்களைப் பேசுவதாகட்டும், ஆப்பிரிக்க நாட்டுப் பிரஜைகளிடம் எஞ்சியிருந்த பழக்கங்களையும் திரிபுகளையும் எதிர்கொண்ட நவீன மனிதனின் பார்வையைச் சித்தரிப்பதாகட்டும், காலனியச் சிறையில் தமது இறக்கைகளை இழந்த நவீன பெண்களின் நிலையை விவரிப்பதாகட்டும் நடீன் கோர்டிமர் ஒவ்வொரு வகையான வாழ்வைப் பற்றியும் மிக விரிவாகப் பதிந்துள்ளார்.

சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து

ஆனால் வெகு சீக்கிரம் நாலைந்து வருடங்களுக்குள் அவரது வெளிப்படையான தைரியமும், கபடமற்ற எண்ணங்களும், மனதில் பட்டது எதையும் அதன் சாதக பாதகங்களைப் பற்றிச் சிறிதும் யோசிக்காது வெளிப்படுத்துவதும் என்னை மிகக் கவர்ந்தன. அவரிடம் எனக்கு மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டன. பெரிய செல்வந்தரான குடும்பத்தில் பிறந்தவர் தில்லி தலைநகரமாக நிர்மாணிக்கப்படும் கால கட்டத்தில் கட்டிட குத்தகைகாரராக சம்பாதித்தவர் அவருடைய தந்தை. குஷ்வந்த் சிங் அந்தச் செல்வத்தின் படாடோபம் சற்றும் இல்லாதவர்…

தி க சிவசங்கரன் என்ற தி க சி

தி க சி யின் மரணம் அவர் நினைத்தபடியே நடந்தது என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. தனது மரணம் சமீபித்துவிட்டது என்பதை அவர் அறிந்திருந்தார்கள். 29.12.13 அன்று மதியம் 12 மணி சுமாருக்கு நானும் என் மனைவியும் திருநெல்வேலி சென்றிருந்த போது, அவர்களது 23, சுடலைமாடன் கோவில் தெரு வீட்டில், சந்தித்தோம். பழங்கள் (இனிப்பு கூடாது என்பதால்) காரவகைகளுடன் சென்றிருந்தோம். எதையோ படித்துக் கொண்டிருந்த தி.க.சி. எங்களைப் பார்த்ததும் சந்தோஷத்துடன் “வாங்கய்யா” என்று வரவேற்றார்கள். மிகவும் மெலிந்திருந்தார்கள் என்றாலும் முகத்தில் அயர்ச்சியோ சோர்வோ இல்லை.
என் கையில் கையினால் எழுதப்பட்ட ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள். “படியுங்க” என்றார்கள். அந்த பேப்பரில் “இதயம் பலவீனமாக இருக்கிறது. அதனால் சத்தமாகப் பேசவேண்டாம். கடலைமாவு பலகாரங்கள் கொடுக்கவேண்டாம். அதிக நேரம் பேசவைக்காதீர்கள்” என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.
படித்துவிட்டு நிமிர்ந்த என்னைப் பார்த்து சிரித்தார்கள். “டாக்டரோட யோசனைகள்” என்றார்கள்.

என் நண்பன் ஐராவதம்

அங்கு பெரியவர் ரா.வீழிநாதன் அவர்கள், “சாதனா சமாஜ்” என்று ஒரு சபையை நடத்தி வந்தார். அங்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பஜனை 2 மணி நேரம் நடக்கும். அங்குதான் நான் ஸ்வாமிநாதனை முதலில் சந்தித்தேன். பதினைந்து நிமிடம் அவன் லா.ச.ரா, தி.ஜானகிராமன் முதலிய பிரபல தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களது நாவல்களையும் பற்றிப் பேசினான். நானோ முழு சூன்யம். “நாளைக்கு ஸ்கூல் இல்லை. எங்கேயாவது வெளியே போவோம்,” என்றான். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு வெளியுலகை அறிமுகம் செய்தான். நாந்தான் அவற்றைச் சரியாய் உபயோகித்துக் கொள்ளமுடியாத சூழ்நிலையில் இருந்தேன். எனக்குக் குடும்பச் சுமைகள் அதிகம். ஆனாலும் ஸ்வாமிநாதன் என்ற அந்த நண்பன் என்மீது விடாமுயற்சிகள் செய்து வந்தான்.

காலத்தின் கட்டணம்

ஐராவதம் என்ற ஆர். சுவாமிநாதன் அவர் ‘கோணல்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து எனக்கு அறிமுகமானார். அவரை ஒரு பையன் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முன்னுரையில் நல்ல மனமுதிர்ச்சியை உணர முடிந்தது. அப்போது “காலத்தின் கட்டணம்”

திரு.ஐராவதம் அவர்களுக்கு அஞ்சலி

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஐராவதம் என்ற புனைபெயரில் எழுதியவரும், தமிழிலக்கிய ஆர்வலர்களிடையே நன்கு தெரிய வந்தவருமான மூத்த எழுத்தாளர் ஆர்.சுவாமிநாதன் சில தினங்கள் முன்பு சென்னை மாநகரில் காலமானார்.எழுத்து பத்திரிகையின் காலம் தொட்டே இலக்கிய உலகில் சஞ்சரித்தவர். 60களின் இறுதியில் பிரபலமாகி இருந்த, நடை, கசடதபற, ஞானரதம் போன்ற இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதியவர். 1974 இல் ’பிரக்ஞை’ மாத இதழ் துவங்கிய போது அதைத் துவக்கிய முன் அனுபவமில்லாத இளைஞர்களுக்கு நல்ல ஆசிரியராகவும், இலக்கியப் படைப்புகளைச் சீர்தூக்குவதில் வழிமுறைகளைச் சுட்டியவராகவும் இருந்தவர்….

என்னை ‘நான்’ ஆக்கியவர் . . .

தொன்னூறுகளில் துவக்கத்தில் நான் அவருடன் வந்து இணைந்த நாளிலிருந்து இன்றுவரை என் வாழ்வின் ஆதாரமாகத் திகழும் பாலுமகேந்திரா என்னும் உன்னதமான கலைஞன்பால் எனக்கேற்பட்ட ஈர்ப்புக்குக் காரணமென்னவோ அவரது திரைப்படங்கள்தான். ஆனால் பாலுமகேந்திரா என்கிற மனிதர், பாலு மகேந்திரா என்னும் ஆளுமை, பாலுமகேந்திரா என்றழைக்கப்படுகிற என்னுடைய குருநாதரை மறக்க முடியாமல் செய்து, தொடர்ந்து அவருடைய நினைவுகளால் இன்னும் கதறச்செய்து கொண்டிருப்பது அவருடனான எனது தனிப்பட்ட அனுபவங்கள்தான். […] ‘தலைமுறைகள்’ திரைப்படத்துக்கு அடுத்ததாக ஒரு திரைக்கதையை எழுதும் திட்டத்திலிருந்தார். முழுக்கதையையும் என்னை அழைத்துச் சொன்னவர், ’உன்கிட்ட சொன்னதுக்கப்புறம்தான் ராஜாக்கிட்ட சொல்லணும்னு நெனைக்கிறேன். இன்னும் இதை கொஞ்சம் ஷேப் பண்ணிட்டு, ராஜாவப் போய்ப் பாத்து சொல்லிடலாம். நீயும் வந்திடு’ என்று சொன்னபோது, அது நடக்கும் என்று நம்பினேன்.

சம்பூர்ணமான பூரணி

ஏழு ஸ்வரங்களும் கூடி வரும்போதுதான் இசை சம்பூர்ணமாகிறது என்கிறார்கள். கவிஞர், கலைஞர், இலக்கிய ஆர்வலர், கதைசொல்லி, எழுச்சி கொண்ட பெண், சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதாபிமானி, மொழிபெயர்ப்பாளர் என்று ஏழு வகைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பூரணி நூறு ஆண்டுக் காலம் வாழ்ந்து சம்பூர்ணமடைந்தார் நவம்பர் 17ம் தேதி. ஒரு மாதம் முன்னால்தான் தன் நூறாவது வயதை எட்டியிருந்தார் பூரணி. அதற்கான எந்தக் கொண்டாட்டத்தையும் அவர் விரும்பவில்லை. இத்தனை வயதாகியும் உடல் நலத்தோடு இருக்கிறோமே, குடும்பத்தினருக்குத் தன் சாவு பற்றி எந்தவித நம்பிக்கையும் தராமல் இருக்கிறோமே என்று வருந்தியவர் பூரணி. மிகவும் அபூர்வமான நபர்.

ஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்

1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தெரிகிறது, அவர் தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் காலத்திய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தே அவற்றை மீறி தன்னை விகசித்துக்கொண்டு தன் இரண்டு தலைமுறை சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டிய ஆதர்சமாக இருந்தவர்.

சங்கீத் சாம்ராட் மன்னா டே

பர்ஸாத் கி ராத் என்ற இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து 1960-ல் வெளிவந்த படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் பாடல்கள்- சாஹிர். பரத்பூஷண் – மதுபாலா ஜோடி. அதில் வரும் ஒரு கவாலிப் பாடல் mother of all qawalis  என்ற மகத்துவம் பெற்றது. ‘நா தோ காரவான் கி தலாஷ் ஹை’ தொடர்ந்து ‘ஹே இஷ்க் இஷ்க்’ என்று காதலின் பெருமையை உயர்த்தும் பாடலைப் பாடியவர்கள் ரஃபி, மன்னா டே, ஆஷா போன்ஸ்லே, பாடிஷ் (batish – qawali specialist) சுதா மல்ஹோத்ரா குழுவினர்.கண்டிப்பாக பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

அறியாமையின் விலை

அப்படி என்னதான் பெரிதாகச் செய்து விட்டார்? “சொற்களின்றி, வெறும் ஒலிகளின் அடிப்படையாக, ஓடும் உணர்வுகள் மூலம் மனித மூளை விவரத்தை வெகு விரைவாக – இரு நொடிகள் அளவில் புரிந்து கொண்டு விடுகிறது” என்பது அவரது கோட்பாடு. அதனை பல உரையாடல்களின் சிறு சிறு துண்டுகள் மூலம் நிரூபித்தார். இரு மனிதர்களின் உரையாடல் நாடாவில் பதிவு செய்யப்படுகிறது. அதில் வரும் சொற்களின் அதிர்வுகளை ஒரு அதிர்வு வடிகட்டி (Frequency filter) மூலம் பிரித்து எடுத்துவிடுகிறார் நளினி. எஞ்சி இருப்பது வெறும் ஒலிகள் மாத்திரம் – சில அடிக்குரலில், சில உச்சஸ்தாயியில்…

கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 1

ரஃபி என்கிற புயல் திலீப் குமார், ஷம்மி கபூர் முதலிய சூப்பர் ஹீரோக்களுக்குப் பாடும் குரலாகையில் ராஜ் கபூருக்கு முகேஷும், தேவானந்துக்கு கிஷோரும் என்று பொருந்திப் போய் விட்டது. தலத் முகம்மதும், ஹேமந்த் குமாரும் மங்கிப் போகையில் ராஜ் கபூருக்கும், பால்ரஜ் சஹானிக்கும் பின்னணி பாடிய மன்னா டே அசரீரியாகவும், நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் ஆகி விட்டார். ராஜேஷ் கன்னா என்கிற சூப்பர் ஸ்டாரின் வருகை மேதை கிஷோர் குமாரை முன்னணிக்குக் கொண்டு சென்று பிறரைப் பின்னுக்குத் தள்ளிய போதும் மன்னா டே இருந்தார்.

டேவிட் ஃபாஸ்டர் வாலெஸ் (1962-2008) – எழுத்தாளர் அறிமுகம்

இவர் படைப்புக்களின் வடிவம், அதில் உள்ள உத்திகளில் ஜான் பார்த், பிஞ்சன், காடிஸ் போன்றோரை சற்றே நினைவு படுத்துவார். வாசகன் அப்படியே கதைக்குள் மூழ்கி விட வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகளுக்கு நேர்மாறாக, ஆசிரியர் இடையிடையே வாசகனுடன் உரையாடி அவன் ஒரு கதையைத் தான் படித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வை ஏற்படுத்துவது, நாவலுக்குள் இன்னொரு நாவலோ அல்லது சிறுகதையோ ஒரு கதாபாத்திரத்தால் எழுதப்படுவது, அடிக்குறிப்புக்கள், அடைப்புக்குறிகள் பயன்படுத்துவது என பல யுத்திகள் இவர் படைப்புக்களில் உண்டு.

அஞ்சலி: கர்நாடக சங்கீதக் கலைஞர் அனந்தலக்ஷ்மி சடகோபன்

கேள்வி ஞானத்தில் பாடத்துவங்கிய அனந்தலக்ஷ்மி, எம். எஸ். சுப்புலட்சுமியின் திரைப்பாடல்களை வீட்டில் பாடிக்காட்டுகையில், “பாப்பா அப்படியே குஞ்சம்மாவைப் போலவே பாடுகிறதே” என்று சண்முகவடிவு உச்சிமுகர்வாராம். ஹிந்து நாளிதழில் 2006இல் அளித்த பேட்டியில் அனந்தலக்ஷ்மி இதைக் குறிப்பிட்டுள்ளார். 1939இல் தன் முதல் மேடைப்பாட்டை வழங்கிய அனந்தலக்ஷ்மி, தொடர்ந்து பன்னிரெண்டு வயதில் சென்னை வானொலியில் பிரதானமான பாடகியாய் ஸ்தாபித்துக்கொண்டார். 1943இல் ‘மியூசிக் அகடெமி’ நடத்திய போட்டியில் நடுவர்களான ஜி. என். பாலசுப்ரமணியன் மற்றும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பதினைந்து வயதான அனந்தலக்ஷ்மிக்கு எச். எம். வி. நிறுவனத்தின் தங்கப்பதக்கத்தை பரிசளித்தனர்.

பாட்டும் நானே பாவமும் நானே

ஒரு காலகட்டத்தில் எம்ஜியாருக்கு இவர் பாடுவது நின்றுபோனாலும், இன்றும் எம்ஜியாரின் முத்திரைப் பாடல்களாய் ஒலிப்பவை இவருடைய ‘ நான் ஆணையிட்டால்’ , ‘புதிய வானம் புதிய பூமி’, ‘ தூங்காதே தம்பி தூங்காதே’ போன்ற பாடல்கள்தான். கட்சிக் கொள்கைகளை மக்களிடையே பரப்ப அந்த அதிரடிக்குரல் அவருக்குத் தேவைப்பட்ட்டது.

தாகூரின் பேரன்

சொல்லிவைத்தாற்போல அநேகமாகத் தன்னுடைய எல்லா படங்களுக்குமே தேசிய விருது பெற்றவர் ரிதுபர்ண கோஷ். இந்திராணி ஹல்தார், ரிதுபர்ண சென்குப்தா, கிரண் கேர், சுதிப்தா சக்ரபர்த்தி, ராக்கி என ரிதுபர்ண கோஷின் படங்களில் நடித்த நடிகைகளுக்கும் தேசிய விருது தேடி வந்தது. வங்காள சினிமாவின் பெருமைமிகு கலைஞர் அவர்.

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்

இன்று காலை அவரது எண்பத்து இரண்டாவது வயதில் P.B.ஸ்ரீனிவாஸ் இறந்துவிட்டார் எனும் செய்தியை இணையத்தில் பார்த்து அறிந்துகொண்டேன். பலவிதமான நினைவுகள். யூடியூப்பைத் திறந்துவைத்து அவரது எந்தப் பாடலைக் கேட்கலாம் என குழம்பியபடி ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்தேன். நெடுங்காலம் பல அற்புதமானப் பாடல்களைப் பாடியிருந்தாலும், பாடல் வரிகளைத் தாண்டி அவரது குரல் இன்றும் மறக்க முடியாததாக இருக்கிறது.

சீனா குட்டி

சுத்த தன்யாஸி வர்ணம் அறை நிரம்பி ஓய்ந்த போது, “இது மிருதங்க கலைஞர் அமைத்த பாட்டா”, என்று ஆச்சர்யப்பட்டேன். ஒரு வாய்ப்பாட்டுக்காரரோ, வயலின் கலைஞரோ கடினமான கணக்குகளை உபயோகித்து பாடல்களை புனைந்தால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு மிருதங்க கலைஞர் கணக்கு வழக்குகளை பின்னுக்குத் தள்ளி ராக பாவம் சொட்டச் சொட்ட பாடல்களைப் புனைந்திருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

பண்டிட் ரவிஷங்கர் (1920 – 2012)

சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் இவ்வாண்டு டிசம்பர் 11ம் தேதியன்று தனது 92வது வயதில் காலமானார். இந்திய செவ்வியல் இசையை உலக அளவில் எடுத்துச் சென்று அதன் நவீன பரிமாணங்களும் வெளிப்படக் காரணமாக இருந்த “பண்டிட் ரவிஷங்கர் (1920 – 2012)”

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நினைவஞ்சலி

ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்தது பெரும் சலனங்களை ஏற்படுத்தியிராவிட்டாலும் கூட, ஐரோப்பாவின் மாபெரும் தொழிற் புரட்சிக்குப் பின்னால் மனித குலம் சாதித்த மாபெரும் சாதனை, மனிதன் நிலவில் கால் பதித்த அந்தத் தருணமே. ஒவ்வொரு முறை முழு நிலவைக் காணும் பொழுது மனம் அடையும் பரவசத்துடன் கூடவே, அதே நிலவில் முதன் முதலாகக் கால் பதித்த மனிதனின் நினைவும் நிலைத்து விட்டது.

‘லைட்ஸ் ஆப்’ – ரா.கி.ரங்கராஜன்

எழுத்தாளர், சாதனையாளர் ரா.கி.ரங்கராஜன் இன்று (18-08-2012) காலமானார். இந்த தருணத்தில் சொல்வனம் ஆசிரியர் குழு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது: பல முறை அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தாலும் ஒரே ஒரு முறைதான் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்பிலேயே அவரிடம் பல நாள் பேசியது போன்ற உணர்வு. 80+ வயதிலும் மூன்று மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

நன்றி ஸ்டீவ்!

இப்போது ஜாப்ஸின் உரையை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டேன். எங்கே போனாலும் ஒரு notepad-டும் அதற்குள் இந்த உரையும் இருக்கும். எதோ ஆராய்ச்சிக் கட்டுரை படிப்பது போல்
படித்துக் கொண்டிருப்பேன். சென்ற வருடத்தில் மட்டும் பல முறை அதை படித்திருக்கிறேன். எப்போதெல்லாம் என்னுடைய எண்ணம் சரியான திசையில் இல்லை என்று உணர்ந்தேனோ அப்போதெல்லாம் அந்த தாளை எடுத்து படிக்கத் தொடங்கிவிடுவேன். மனம் நிலைப்படும்.

கரிச்சானின் கீதம்

கு.ப.ராவின் ஒரு பெரிய குணத்திற்கும் இந்தக் கரிச்சான் காதலுக்கும் சம்பந்தமுண்டு. இளம் எழுத்தாளர்களுக்கு அவர் பெரிய ஆதரவாக இருந்தார். அவர்கள் எழுதி வாசித்துக் காட்டிய ஆயிரக்கணக்கான கட்டுரை, கதைகளை அலுப்பில்லாமல் சுணங்காமல் கேட்டுத் திருத்தங்களைச் சூசித்துக் கொண்டே இருப்பார். இந்த இளம் ஹிருதயங்களை முன்னுக்குக் கொண்டு வந்த ஆர்வம் கரிச்சானையும் முன்னுக்குக் கொண்டு வந்தது. ஆனால் கரிச்சானைத் திருத்த வேண்டிய அவசியம் மட்டுமிருக்கவில்லை. அது பிறக்கும்போதே மகாவித்வானாகத்தான் பிறக்கிறது.

தி ஜானகிராமன் – ஓர் அஞ்சலி

சரியாக இனம் கண்டுகொள்ளப்பட்டிருந்தால் தமிழ் இலக்கியச் சூழலில் தீர்க்கமான கலையுணர்வு இருந்திருக்குமானால் மோகமுள் எழுதிய கைகளுக்கு முதல் ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில், இன்றைய தமிழ்நாட்டில் அது அமிழ்ந்திருக்கும் ரக அறிவார்த்த கலைச்சூழலில் எந்த ஒரு கலைஞனும் அறிவாளியும் சிலுவை சுமக்கப் பிறந்தவன்தான். தி.ஜானகிராமன் அதிர்ஷ்டவசமாக, அல்லது அவருக்கிருந்த அவர் எழுத்துக்கிருந்த இனிமை, கவர்ச்சி காரணமாக அவருக்கிருந்த அடங்கிப்போகும் சுபாவம் காரணமாக சிலுவை சுமக்க நேர்ந்ததில்லை.

பாதல் சர்க்கார் – மண்ணில் உறைந்தும், மனிதனில் கிளைத்தும்

பாதல் சர்க்காருக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைத்த அங்கீகாரம் வஙகாளத்தில் கிடைக்கவில்லை. அவர் கட்சி அரசியல் செய்தவரல்ல. இடதுசாரியாகவும், சமூகப் பிரக்ஞையுடைவராகவும் அவர் நாடகங்களில் அவர் தன்னை அவ்வாறே வெளிபடுத்திக் கொண்டாலும், பிரசார நாடகங்களுக்கு வெகு தொலைவில் அவர் நின்றார்.

கி.கஸ்தூரி ரங்கன் (1933 – 2011)

சென்ற புதன் கிழமை, 4.5.2011 அன்று மறைந்த கி.கஸ்தூரி ரங்கன் தமிழ் இதழ் வரலாற்றில் மறக்கப்பட முடியாத பங்காற்றியவர். தி.ஜானகிராமன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியவர்களுடன் இணைந்து கணையாழி இதழைத் துவங்கிய நாள் முதல் அவர் தன் பணத்தில்தான் இதழை நடத்தியிருக்கிறார். சுஜாதாவின் “கடைசி பக்கங்கள்”, தி ஜானகிராமன், ஆதவன், போன்றவர்களின் முக்கியமான நாவல்கள் கணையாழியில் வெளிவந்துள்ளன.

ஓர் அஞ்சலி – மறைந்த விஜயபாஸ்கரனுக்கு

விஜய பாஸ்கரன் முற்போக்கு குழாத்தில் அடையாளம் காணப்படுபவர். சரஸ்வதி பத்திரிகையில் அதிகம் எழுதுபவர்கள் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். பத்திரிகையும் ஜனசக்தி அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியினராலும் மற்ற முற்போக்கு எழுத்தாளர்களாலும் மிகவும் மதிக்கப்படுபவர் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் லிட்டரரி கமிஸாராக அதிகாரம் வகித்து வந்த, கொஞ்சம் மென்மையாகவும், நம் மரபு ஒழுகியும் சொல்வதென்றால் தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு கொள்கை வழிகாட்டும் குரு எனச் சொல்லத்தக்க அந்த சிதம்பர ரகுநாதனை எழுத்து பத்திரிகையில் சமீபத்தில்தான் நான் மிகவும் கடுமையாகவும் கிண்டலாகவும் எதிர்த்து எழுதியிருந்தேன். அந்த சாமிநாதனையாக்கும் விஜய பாஸ்கரன் சரஸ்வதியில் எழுதச் சொல்கிறார். இது தகுமா ஒரு முற்போக்கு பத்திரிகையாளருக்கு?

‘கான வன மயூரி’ – கல்பகம் சுவாமிநாதன்

தஞ்சாவூர் பாணியின் மிகச் சிறந்த கலைஞர். தஞ்சாவூர் பாணியில் வீணையைப் பொருத்தவரையில் கமகங்களின் சுத்தம், கமகங்களை வாசிக்கும் வழிமுறைகள், உத்திகள் இவற்றை அனுபவபூர்வமாக நன்கு கற்றறிந்தவர். அவர் வாசிக்கையில் பல முறை அவரே பாடியும் வாசித்திருக்கிறார். பல சமயம் அப்படிப் பாடாமல் இருக்கும் நேரத்திலும் நமக்கு யாரோ உடன் பாடுவது போலவே தோன்றும். ‘காயகி முறை’ எனப்படும் வாத்தியத்தில் வாய்ப்பட்டைப் போன்றே ஒலிக்க வைக்கும் நேர்த்தியை அவர் செவ்வனே அறிந்திருந்தார்.

தம்புராவின் மெளனம்

தஞ்சை இசைச்சூழல் தமிழகத்தின் தொன்மையான கலாசாரப் பின்னணியை உயிர்ப்போடு வைத்திருந்த ஒன்று. தஞ்சை இசைச்சூழலில் எஞ்சியிருந்த வளமான இசைக்கலைஞர்களில் ஒருவரான தஞ்சை வெங்கடேசய்யங்கார் சென்ற வாரம் தன்னுடைய 85-ஆவது வயதில் மறைந்தார். அவரைக் குறித்தும், தஞ்சை இசைச்சூழலைக் குறித்தும், தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்ட தஞ்சை K.சிவசுப்ரமணியன் அவர்களிடம் ஒரு பேட்டி கண்டோம்.

அண்ணன்களின் பாடகன்

வாசுதேவனின் பாடல்களை எனக்கு நிறைய அறிமுகப்படுத்தியவன் யாரென்று யோசித்துப் பார்த்தால் கணேசண்ணன்தான் நினைவுக்கு வருகிறான். கணேசண்ணன் அப்போது ஐ.டி படித்து முடித்துவிட்டு கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எந்த ஒரு புதிய பாடலையும் கணேசண்ணன் குரலில்தான் நாங்கள் முதலில் கேட்போம். ‘முடிவல்ல ஆரம்பம்’ திரைப்படப்பாடலான ‘தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்’ பாடலில் ‘வண்ணாத்திப் பாறைக்கு வரவேணும் நாளைக்கு’ என்னும் வரியை கணேசண்ணன் யாரையோ நினைத்தபடி ரசித்துப் பாடுவான். ‘கோழி கூவுது’ படத்தின் ‘பூவே இளைய பூவே’ பாடலின் ’காமாட்சி’ என்று துவங்கும் வசனத்திலிருந்தே ஆரம்பித்து விடுவான். அதுவும் ‘தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று சுற்றி அமர்ந்திருக்கும் எங்களில் யாரையாவது பார்த்துச் சொல்லுவான்.

எஸ்.வி.ராமகிருஷ்ணன்

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு, என் கைபேசியில் இருக்கும் எண்களைச் சரிபார்க்கும் போது எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்ற பெயர் பார்த்து, “அட இவரிடம் பேசி ரொம்ப நாள் ஆச்சே. பேச வேண்டும்” என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் பேசவில்லை. “பேசியிருக்கலாமே” என்று இனி ஆயுளுக்கும் வருத்தப்படப்போகிறேன். இலக்கியச் சர்ச்சை, மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தேவையில்லாத விமர்சனம் போன்றவை அவரிடம் கிடையாது. அவருடன் பேசிய சமயங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். அவருடையவை, தொப்புள் சமாசாரம் இல்லாத இதழ்களில் பெரும்பாலும் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் வகைக் கட்டுரைகளும், nostalgia-வையும் சார்ந்தவை.

எஸ்.வி.ராமகிருஷ்ணன்

ஹைதராபாதில் வசித்துவந்த எழுத்தாளர் திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் நேற்று (09-02-2011) காலை காலமானார். சுங்க ஆணையளாராக இந்தியாவின் பல பகுதிகளிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்ற திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். இந்தியாவின் வரலாற்றை சுவாரசியமான நடையில் தன்னுடைய செறிவான “எஸ்.வி.ராமகிருஷ்ணன்”

பீம்சென் ஜோஷி

எனக்கு நினைவு தெரிய முதன்முதலாய் நான் கேட்ட ‘ஹிந்துஸ்தானி’ குரல் பீம்சென் ஜோஷியுடையதாகத்தான் இருக்கும். ‘மிலே ஸுர் மேரா தும்ஹாரா’ என்ற குரலைக் கேட்கும்போதுதான் ஞாயிறு காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானதாக அர்த்தம். பல இந்திய மொழிகளும் “பீம்சென் ஜோஷி”

மார்ட்டின் கார்ட்னர் என்றொரு மாயப்புதிர்

‘சயிண்டிஃபிக் அமெரிக்கன்’ பத்தி ஒரு புரட்சியையே செய்தது எனலாம். அதில் அவர் ஒவ்வொரு இதழிலும் ஒரு புதிரைக் கேட்பார். அப்புதிர் கணிதம் தொடர்பானதாகவோ, ஜியாமெட்ரி தொடர்பானதாகவோ, வார்த்தை விளையாட்டாகவோ இல்லை வித்தியாசமான யோசிப்புமுறையைக் கோருவதாகவோ இருக்கும். அப்புதிருக்கான விடையை அதற்கு அடுத்த இதழில் வாசகர்கள் எழுதி அனுப்புவார்கள். புதிருக்கான விடையை கார்ட்னரும் விளக்கி பதிலெழுதுவார்.

லீனா ஹார்ன் (13.06.1917 – 09.05.2010)

சென்ற ஞாயிற்றுக்கிழமை (மே 09, 2010)  தன்னுடைய  92 வயதில் மரணமடைந்த லீனா ஹார்ன் (Lean Horne) ஒரு சிறந்த அமெரிக்க ஜாஸ் இசைப்பாடகி. நிறவெறி உச்சத்தில் இருந்த காலத்தில் அதைத் தகர்த்தெறிந்து தனக்கென “லீனா ஹார்ன் (13.06.1917 – 09.05.2010)”