நான் எழுத்தாளனான கதை

பாரதி கவிதைகளைப் பற்றி நிதானிக்குமளவு ‘சிந்தனை’ எகிறவுமில்லை. ஆனால் வாராவாரம் கல்கியைப் படித்தேன். சினிமா ரகமான தீரச்செயல் கதை என்ற அளவுக்குமேல் அந்த வாசிப்பைப் பற்றி கணித்துப் பார்க்கும் வில்லங்கம் தோன்றவில்லை. 1950-இல் என்று ஞாபகம். கல்கி, புதுமைப்பித்தன் மறைவை ஒட்டி ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்ற கதையை மறுபிரசுரம் செய்தது. ‘கதை’ இலக்கியமாகுமா என்ற ஸ்மரணையே இல்லாதிருந்த எனக்கு இக்கதையை 1954 வாக்கில் படித்தபோது அது ஒரு புதிரான புதுவித அநுபவமாயிற்று.

சிலிக்கான் கடவுள் – அறிவியல் எழுத்துக்கான திறவுகோல்

அறிவியல் முறைமையும் எளிமையான விவரணைகளும் இரு தண்டவாளங்கள் போன்றவை; ஒன்றாகப் பயணம் செய்ய முடியாதவை எனும் கோட்பாட்டை சர்வ சாதாரணமாக ராமன் ராஜா தாண்டியுள்ளார். அறிவுசார் முறைமைகளை விளக்கும்போது அத்துறை சார்த்த மொழிக் களஞ்சியம் கைகூட வேண்டும். மேலும் மிகவும் தட்டையான பாடப் புஸ்தக நடையில் இல்லாமல், நம் சிந்தனைக்குச் சவால் விடும் விதத்தில் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். இவை இரண்டும் இக்கட்டுரைகளில் மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன.

ஓர் அஞ்சலி – மறைந்த விஜயபாஸ்கரனுக்கு

விஜய பாஸ்கரன் முற்போக்கு குழாத்தில் அடையாளம் காணப்படுபவர். சரஸ்வதி பத்திரிகையில் அதிகம் எழுதுபவர்கள் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். பத்திரிகையும் ஜனசக்தி அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியினராலும் மற்ற முற்போக்கு எழுத்தாளர்களாலும் மிகவும் மதிக்கப்படுபவர் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் லிட்டரரி கமிஸாராக அதிகாரம் வகித்து வந்த, கொஞ்சம் மென்மையாகவும், நம் மரபு ஒழுகியும் சொல்வதென்றால் தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு கொள்கை வழிகாட்டும் குரு எனச் சொல்லத்தக்க அந்த சிதம்பர ரகுநாதனை எழுத்து பத்திரிகையில் சமீபத்தில்தான் நான் மிகவும் கடுமையாகவும் கிண்டலாகவும் எதிர்த்து எழுதியிருந்தேன். அந்த சாமிநாதனையாக்கும் விஜய பாஸ்கரன் சரஸ்வதியில் எழுதச் சொல்கிறார். இது தகுமா ஒரு முற்போக்கு பத்திரிகையாளருக்கு?

வெங்கட் சாமிநாதன் – பகுதி 2

தனது கடுமையான விமர்சனப் பார்வைகளுக்கு நடுவிலும் கூட வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய பல குத்தல்களைப் பொதிந்து வைத்திருப்பவர் வெ.சா. ”எந்தவொரு 35 வயதான இந்தியனுக்கும் என்றாவது ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பது போலவே என்றாவது ஒரு நாள் மு.மேத்தாவும் கூட கவிதை ஒன்றை எழுதக் கூடும்” என்ற கிண்டல் வெகு பிரபலமான ஒன்று. இதழாளர் மாலனை “தென்னாட்டு குல்தீப் நய்யார் என்றும் பெஞ்சமின் ப்ராட்லி” என்றும் புகழும் உதயமூர்த்தியைப் பற்றி தனக்கேயுரிய அங்கதத்துடன் வெ.சா எழுதுகிறார், “ இதன் மூலம் மாலனைப் பற்றி மட்டும் அல்ல தன்னைப் பற்றியும் எம்.எஸ்.உதயமூர்த்தி சொல்லிவிடுகிறார்.”

ஸ்னேக் ப்ரேக்

தாத்தா வீட்டுக்கு போறப்போ மணி ஒம்பது ஆயிடுத்து. நாங்க கேட் கிட்டெ போறப்பவே பைக் சத்தம் கேட்டு வெள்ளியும், சுப்பியும் ஓடி வந்துடுத்து. பைக் பின்னாடியே ஓடி வந்துது ரெண்டும். கூடவே அந்த புது பப்பியும் காலுக்கு நடுலே ஓடி வந்தது. கறுப்புக் குட்டி. கால்லே மாத்ரம் ஸாக்ஸ் மாதிரி வெள்ளை. அதை கைலெ தூக்கிண்டு வீட்டுக்குப் பின்னாடி போனேன். தாத்தா கார்த்தாலே ஆறு மணிக்கே பின்னாடி அனிமல்ஸ் கிட்டே போயிடுவார்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 10

18/19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மேலைநாடுகளின் வாழ்க்கை முறையில், அது சார்ந்த நம்பிக்கைகளில் ஒரு புதிய சிந்தனையை உட்புகுத்தியது ரொமான்டிஸிசம் (Romanticism) என்னும் கலை அணுகல். மதம் சார்ந்த சமூக ஒழுக்கம் முன் நிறுத்தியிருந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், அவற்றுக்கான அளவு கோல் மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கு எதிரான சிந்தனையை ரொமான்டிஸிசம் பரிந்துரைத்தது. தனிமனித உணர்வின் சிந்தனை வெளிப்பாடு என்பது உயர்வானதாகப் போற்றப்பட்டது.

ஆயிரம் தெய்வங்கள் – 8

“மெஸப்பட்டேமியா” என்பது பல நாடுகளைக் குறிக்கும். அதில் சுமேரியாவும் அடக்கம். சுமர் திரிந்து சுமேரியாவாயிற்று. எரக் பின்னர் ஈராக் ஆனது எரிது, லகாஷ், உர் ஆகியவை சுமேரிய நகரங்கள். இந்த நகரங்களில் தொழப்பட்ட தெய்வங்கள் வேளாண்மைக்கும், நீர் மேலாண்மைக்கும் எடுத்துக்காட்டுகள். சுமேரியாவின் தனிச்சிறப்பு. உலகிலேயே முதல் விவசாயப் பண்பாடு என்று வரலாற்று அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பெருமையாகும்.

வன்மம்

நாகர்கோயிலுக்கு வரும் பெரும் தலைவர்கள், அதற்கு முன்னதாக முத்தம் பெருமாள் அண்ணாச்சியின் அழைப்பின் பேரில் ஊரில் ஒரு அரை மணி நேரம் பேசி விட்டுப் போனார்கள். இயக்கத்தின் கோட்டையாக ஊர் மாற ஆரம்பித்தது. காங்கிரஸ்காரர்களின் பிள்ளைகளும் இரகசியமாக இயக்கத்துக்கு ஓட்டுப் போடப் போவதாகப் பேசிக் கொண்டார்கள். இயக்கத் தலைவரே நாகர்கோவிலில் பேச வரும் போது, “நாஞ்சில் நாட்டில் நான் கண்டெடுத்த முத்துதான் இந்த முத்தம்பெருமாள்” என்று தூக்கி வைத்து பேசினார். அண்ணாச்சிக்கு பிரச்சாரம் செய்ய “அறிவுலக மேதையே” ஒருமுறை மெனக்கெட்டு வந்து போனார்.

ரெசுமே

நான் ஏபெக்ஸ் கோவில்லே பத்து வருஷமா அர்ச்சகராக இருந்தேன். கோவில் பூஜையெல்லாம் சுந்தரேசன் மேற்பார்வைலே. உங்களுக்குத்தான் தெரியுமே, அவர் நல்ல பக்திமான், விஷயம் தெரிஞ்சவர். அவர்தான் என்னை மன்னார்குடிலேர்ந்து அழைச்சிண்டுவந்து விசா வாங்கிக்கொடுத்தார். தினப்படி பூஜை, அர்ச்சனை. அது தவிர அப்பப்ப கோவில்லே கல்யாணம், யாகம் நடக்கும். அவ ஆத்திலே பண்ணின லட்டு, மிக்ஸ்சர், பிசைந்த சாதம் வித்து கொஞ்சம் வருமானம். கோவில் பக்கத்திலேயே ஒரு மோபில் ஹோம். இப்படி காலம் ஓடிண்டிருந்தது.

36 – குறும்படம்

ஸ்பானிய அரசு அலுவலகங்களை, அதன் அலுவலகர்களை மெல்லிய புன்னகையுடன் சாட்டையால் விளாசும் ஒரு குறும்படம். மொழி மற்றும் மனிதர்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்தியச் சூழலுக்கு எந்த உறுத்தலுமின்றி இந்தப் படம் பொருந்தும். சீனாவில் இடப்பெயர்வு குறித்து ஜெயந்தி சங்கரின் கட்டுரைத்தொடரைப் படித்துப் பார்த்தால், இந்தக் குறும்படம் சீனாவிற்கும் பொருந்துவது “36 – குறும்படம்”

வாசகர் கடிதங்கள்

என் அப்பாவே ஆசிரியராகப் பணியாற்றியிருந்தாலும், குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லை என்பதால் அவருக்கு ஆசிரியர்கள் மீது பொதுவாகவே கோபம் இருந்தது. ஒருமுறை ஒரு மாணவன் எல்லா கேள்விகளுக்கும் விடையாக பானிபட் போரைப் பற்றியே எழுதியிருந்தான் என்று சொல்லியிருக்கிறார். அந்த விடைத்தாளில் பின்குறிப்பாக, “நான் 12 மைல்கள் நடந்து பள்ளிக்கு வருகிறேன். வீட்டுக்குத் திரும்பியபின் எனக்கு படிப்பதற்காக மிகக் கொஞ்சமே நேரம் இருக்கிறது” என்று எழுதியிருந்தானாம். அவனுக்குக் குறைந்தபட்ச பாஸ் மார்க் வழங்கி அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிட்டேன் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

’பறவைப் பார்வை’ ஒளிப்படங்களின் வரலாறு

உலக பூமி நாளை (World Earth Day – ஏப்ரல் 23) முன்னிட்டு ஸ்லேட் இணையதளம் ஒரு சுவாரசியமான ஒளிப்படங்களின் தொகுப்பைத் தந்திருக்கிறது. அதில் வான்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் வரலாற்றை உதாரணப் படங்களோடு தந்திருக்கிறது. அதைப் பார்க்க, படிக்க இங்கே செல்லுங்கள்.

பகுதி 03 – செஞ்சீனாவின் பெரும் மாறுதல்கள்

1997ல் 12 மிலியன் பேர் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். உள்ளூர் ஆசாமிகள் செய்யத் தயங்கிய/மறுத்த ஆபத்தும், கடின உழைப்பும், அழுக்கு நிறைந்ததுமான கட்டட வேலைகளையும் மற்ற பல சேவைகளையும் நகரில் இவர்கள் மேற்கொண்டனர். இதனாலேயே கட்சியும் நகரவாசிகளை ‘கிராமவாசிகளிடமிருந்து கற்றுக்கொள்ள’ச் சொன்னது.

அரபு நாடுகளில் புரட்சி – ஜனநாயகம் சாத்தியமா?

பேரரசின் மிகப்பெரிய பலமும் பலவீனமும் மன்னன் என்கிற ஒற்றைப் பேரதிகார மையம்தான் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டிக்கொண்டே வந்திருக்கிறது. சர்வாதிகார அமைப்பில் இரக்கம் மிகுந்த சர்வாதிகாரி இருக்கும்வரை படகு நன்றாகச் செல்லலாம். ஆனால் அது எளிதில் கவிழ்க்கப்படக்கூடிய நிலையற்ற ஒரு அமைப்பு. மட்டுமன்றி, பல சர்வாதிகாரிகளுக்கு மக்களின் அதிருப்தி தெரிவிக்கப்படும் ஊடகப் பாதைகள் மூடப்பட்டு விடுகின்றன. எனவே தவறான பாதையில் படகு சென்றாலும் சரியான நேரத்தில் சரியான வழியில் திருத்திச்செலுத்துவது கடினமாகிறது. அவசர நிலைக்குப்பிறகு நடந்த தேர்தலில் இந்திரா தோற்றவுடன், தனது நண்பர் குஷ்வந்த் சிங்கிடம் “இவ்வளவு கொடுமைகளும் துஷ்பிரயோகங்களும் நடக்கின்றன என்று ஏன் என்னிடம் ஒருவருமே சொல்லவில்லை?” என்று கேட்டதற்கு, குஷ்வந்த் சிங் சொன்ன பதில் “சொல்லக்கூடிய அத்தனை வாய்களையும்தான் நீங்கள் அடைத்து விட்டிருந்தீர்களே?”

பிரமிள் (1939-1997)

அவர் கவிதைத் தொகுப்புக்கு ‘கைப் பிடியளவு கடல்’ என்ற தலைப்பைத் தந்து, அதற்கு அட்டைச் சித்திரத்தையும் அவரே வரைந்து தந்தார். செல்லப்பாவும் பிரமிளும் பேசாதும், சந்திக்காதும் இருந்த போதும் அந்தப் புத்தக உருவாக்கத்திலும் செல்லப்பா பெரிதும் உதவி செய்தார். பிரமிளும் செல்லப்பவிற்காகவே “ஒரு பாப்பாத்தி நகத்தோடு என் பறை நகம் மோதி..” என்ற கவிதை வரிகளை ” ஒரு உயர் ஜாதிக்காரி நகத்தோடு என் பறை நகம் மோதி..” என்று செல்லப்பா அதைப் படிப்பதற்கு முன்பே மாற்றிக் கொடுத்தார். முதலில் அந்த கவிதைத் தொகுப்பை செல்லப்பாவிற்கே சம்ர்ப்பணம் செய்யலாமா என்று யோசித்தார். அது மிகவும் பர்சனலாக இருக்குமோ என்றே தன் தாயாருக்கு அதை சமர்ப்பித்தார்.

மகரந்தம்

சீனா கட்டுமானத் துறையில் மிகையான அளவில் முதலீடு செய்திருப்பதன் பலனாக அங்கு புல்லட் ரயில்கள் காலியாக ஓடுகின்றன, சிறுநகர்களின் கட்டிடங்களில் குடியிருக்க ஆளில்லை, விமான நிலையங்களில் பயணிகள் இல்லை, அரசு கட்டிடங்களில் பணியாற்ற அலுவலகங்கள் இல்லை, தனியார் குடியிருப்புகளும் வாங்க ஆளின்றி கிடக்கின்றன. சீன அரசு தன் மக்கள் தங்களின் உழைப்பின் ஊதியத்தைப் பெற்று வசதிகளை அனுபவிப்பதைத் தடுப்பதேன்? உள்நாட்டு வளம் பணவீக்கத்தில் கொண்டு நிறுத்திவிடும் என்றும், அதனால் சீன பொருட்கள் உலகச் சந்தையில் போட்டியிட முடியாதென்றும் சீன ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள்.

அதெல்லாம் மாறியபோது – 3

வைலவேக்கு ஆண்கள் வரப் போகிறார்கள். இப்போதெல்லாம் சில இரவுகள் நான் தூங்காமல் விழித்துக் கவலைப்படுகிறேன், இந்த கிரகத்துக்கு வரப்போகிற ஆண்களைப் பற்றி, என் இரண்டு பெண்களைப் பற்றி, கடைசிக் குட்டி பெட்டா காதரீனாஸன்னைப் பற்றி, கேட்டியையும், என்னையும் பற்றி, என் வாழ்வுக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றி. எங்கள் முன்னோர்களின் நாளேடுகள் ஒரு நீண்ட கதறலாக ஒலிக்கின்றன, நான் இந்த மாறுதலைக் குறித்து மகிழ வேண்டுமோ என்னவோ. ஆனால் ஆறு நூற்றாண்டுகளை அப்படி உதறி எறிய முடியவில்லை. அல்லது 34 வருடங்களைக் கூட உதற முடியவில்லை.

வெங்கட் சாமிநாதன் – புத்தக வெளியீட்டு விழா

தமிழின் மூத்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களைக் குறித்ததொரு திறனாய்வு நூல் வரும் 30-ஆம் தேதியன்று (30-04-2011) தேவனேயப் பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படவிருக்கிறது. எழுத்தாளர்கள் திலீப்குமார், பா.அகிலன், சத்தியமூர்த்தி ஆகியோர் இந்நூலைத் தொகுத்திருக்கிறார்கள். பல மூத்த படைப்பாளிகளும் இப்புத்தகத்தில் வெ.சா அவர்களின் “வெங்கட் சாமிநாதன் – புத்தக வெளியீட்டு விழா”

பீடுநடை போடும் கியூபாவின் புரட்சி

1959க்கு முன்னால், கியூபா உலத்திலேயே மிக அதிக அளவு சர்க்கரை ஏற்றுமதி செய்யும் விவசாய நாடாக இருந்தது. ஆனால், தற்போது 80 சதவீத உணவு இறக்குமதி செய்யப்படுகிறது. இத்தனைக்கும் கியூபாவில் 30 சதவீத நிலங்கள் விவசாய நிலங்கள். நாட்டில் ஐந்தில் ஒரு பங்கு குடிமக்கள் விவசாயத்திலேயே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இருப்பினும் விளைச்சல் போதுமானதாக இல்லை. அனைத்து அரசாங்க நிலங்களில் வேலை செய்யும் மக்கள் உல்லாசமாக பொழுது போக்குவதால் விளைச்சல் எப்படி இருக்கும்?

இலவச இணையம் – எப்படி சாத்தியம்? – 2

மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg), இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது உருவாக்கிய அமைப்பு ஃபேஸ்புக். இதன் பின்னணியில் ஒரு தமாஷான விஷயம். பல ஓவியங்களைப் பற்றி அலச வேண்டிய ஒரு பணி இருந்ததாம். மார்க் தனக்கு தெரிந்த சில ஓவியங்களைப் பற்றி கருத்துக்களை ஃபேஸ்புக்கின் சுவர் பக்கத்தில் எழுதினாராம். அதைப் பார்த்த அவருடைய நண்பர்கள், ’இது சரியில்லை, இதைப் பற்றி மேலும் சில விஷயங்களை விட்டு விட்டீர்கள்’ என்று எழுதித் தள்ளினார்கள். மார்க்கின் சமர்ப்பிப்பைப் பார்த்து அசந்து விட்டாராம் அவரது பேராசிரியர்.

‘கான வன மயூரி’ – கல்பகம் சுவாமிநாதன்

தஞ்சாவூர் பாணியின் மிகச் சிறந்த கலைஞர். தஞ்சாவூர் பாணியில் வீணையைப் பொருத்தவரையில் கமகங்களின் சுத்தம், கமகங்களை வாசிக்கும் வழிமுறைகள், உத்திகள் இவற்றை அனுபவபூர்வமாக நன்கு கற்றறிந்தவர். அவர் வாசிக்கையில் பல முறை அவரே பாடியும் வாசித்திருக்கிறார். பல சமயம் அப்படிப் பாடாமல் இருக்கும் நேரத்திலும் நமக்கு யாரோ உடன் பாடுவது போலவே தோன்றும். ‘காயகி முறை’ எனப்படும் வாத்தியத்தில் வாய்ப்பட்டைப் போன்றே ஒலிக்க வைக்கும் நேர்த்தியை அவர் செவ்வனே அறிந்திருந்தார்.

பாலையும், சில பாம்புகளும்

மிஸ்டை தன் மடியில் இருத்திக்கொண்டு சமாதானம் செய்தாள். ஸ்னேக்கின் மெல்லிய இடுப்பைச் சுற்றிகொண்டு அவளின் கதகதப்பை உணர்ந்து கொண்டிருந்தாள் அந்த நாகப்பாம்பு. பசி வழக்கத்துக்கும் மேலாய் அந்த நாகத்தை பதற்றமாக்கியது. அவளுக்குப் பசி, ஸ்னேக்கிற்கும்தான். அந்த கறுத்த மணல் பாலைவனத்தினுள் வரும்போது அவர்களுக்கு போதுமான அளவு நீர் கிடைத்திருந்த்து ஆனால் உணவுக்காக ஸ்னேக் வைத்த பொறிகள் வெற்றி பெறவில்லை.