ஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன – 2?

ஆகவே மனிதனை நேசிப்பதற்கும், மனிதனில் கடவுளை காண்பதற்கும், காலம் தோறும் துணை செய்வதற்கும், வேதம் என்று பெயர். இந்த காலத்தில் அது பொதுமை செய்யப்பட்டிருக்கிறது. அதை செய்தவர் பாரதி. தமிழில் எல்லாவற்றையும் அறிந்து கொண்டீர்கள் என்றால் பொதுமையாக இருக்கிறது. எதை அறிந்து கொள்வது தமிழிலே? தமிழில் தானே எல்லாம் இருக்கிறது, எதை அறிந்து கொள்வது?

ஃபீல்ட்ஸ் பதக்கம் – ஓர் எளிய அறிமுகம்

1932 ஆம் ஆண்டு பீல்ட்ஸ் கணிதத்திற்கான பரிசைக் கொடுக்க பல நாடுகளின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்தப் பதக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றார். இதற்குக் காரணமாக “ஏற்கெனவே கணிதத்தில் செய்த சாதனைக்காகவும், பரிசு பெற்றவர்கள் எதிர்காலத்தில் ஊக்கத்துடன் செயல்படவும் மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும் அமைய வேண்டும்” என்பதை முன் வைத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக ஃபீல்ட்ஸ் 1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீடீரென காலமானார். மரணப்படுக்கையில் இருக்கும்போது உயில் எழுதிய பீல்ட்ஸ்…

வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் -5

2000 –வாக்கில் பல பல்கலைக்கழகங்கள் எப்படியாவது இந்த நிரலமைப்பை எளிமை படுத்த வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டன. இதை ஒரு ஓடை போல (stream) பாவித்தல் அவசியம் என்று முடிவெடுக்கப் பட்டது. ஓடையில் சேரும் பல்வேறு சிறு நீரமைப்புகள் போல, பல்வேறு தரவுகள் மற்றும் அடிப்படை அமைப்புகள் (ஓடையில், தண்ணீர், கற்கள், மணல் பெரிய ஆறுடன் சேறுவதைப் போல) சேர்த்து விட்டால், ஓடை மற்றவற்றை பார்த்துக் கொள்ளும். அதாவது, கடல் வரை அந்த நீர், கற்கள், மணலை கொண்டு சேர்க்க வேண்டியது நதியின் பொறுப்பு. இவ்வகை சிந்தனையின் வெற்றி, nVidia –வின் CUDA மற்றும் AMD –யின் CAL போன்ற நிரலமைப்பு என்ற இன்றைய மென்பொருள் புரட்சி.

இணையமும், இணையத்தில் தமிழும் – ஆரம்ப நாட்கள்

இப்படி இணையத் தமிழுக்கு முக்கியப் பங்காற்றியவர்களில், மறைந்த சிங்கப்பூர் தமிழர் நா. கோவிந்தசாமி, பல வருடங்களாக ஸ்விட்சர்லாந்தின், லொஸான் (Lausanne) நகரில் பணியாற்றும் கல்யாணசுந்தரம், மலேஷியத் தமிழர் முத்து நெடுமாறன், மற்றும் தமிழக மென்பொருள் வல்லுனர்கள் பலரும் தமிழ் இணையச் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் நான் அந்த சமயம் சிங்கப்பூரில் இருந்ததால் நா. கோவிந்தசாமியுடன் நல்ல பழக்கம் இருந்தது. அவர் செய்யும் முயற்சிகளை எல்லாம் ஆர்வத்துடன் என்னுடன் பகிர்ந்து கொள்வார்

தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் – 2

முதல் பக்கத்திலேயே ரஸ்கோல்னிகோவ் மனநிலையின் ‘தடயம்’ நமக்கு அளிக்கப்படுகிறது: “அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை முயற்சிக்க விரும்பினேன், ஆனால் அதே நேரம் அப்படிப்பட்ட சில்லறைத்தனங்கள் எனக்குச் சங்கடமாய் இருந்தன”. “அவன் தன் வீட்டுக்கார அம்மாளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ‘கடனில் மூழ்கியிருந்தான்” என்பதுவும் முதல் பக்கத்தில் சொல்லப்படுகிறது.. இங்கு துப்பறியும் கதை வகைமையின் எதிர்பார்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தாஸ்தோயெவ்ஸ்கி நாவலெங்கும் நிஜமானதும் பொய்யானதுமான தடயங்களை ஆங்காங்கே இட்டுச் செல்கிறார் (அவன் தன் லோகாயத தேவைகளுக்காகக் கொலை செய்கிறானா அல்லது அவன், “அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை முயற்சி” செய்கிறானா?).

நாகதேவதை

ஆறு மாதத்திற்கு முன்பு அவன் இந்த இடத்தை பார்க்க வரும் போது தரகரிடம் பேசியது நினைவுக்கு வந்தது. சுற்றியுள்ள மற்ற மனைகளை விட இந்த இடத்திற்கு மட்டும் கணிசமாக விலை குறைத்து சொல்லியிருந்தார்கள். காரணம், இந்த மனையின் தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய கரையான் புற்று ஒன்று இருந்தது. கூட வந்த தரகர், “எத்தனை முறை இடிச்சு விட்டாலும், மறுக்கா இங்க புத்து உருவாகிருதுப்பா…

என் மறதிக்கு ஆளானவர்கள்

மறந்து தொலைக்கிறது. என்ன செய்ய?

 

நண்பர் ராம்ஜியாஹூ சில பெயர்கள் விட்டுப் போனது பற்றி எழுதியிருந்தார். எனக்கு இப்பெயர்கள் புதியன. எல்லா எழுத்துக்களையும் ஒருவர் தெரிந்திருப்பது துர்லபம். எல்லாவற்றிற்கும் ஒரு சாத்திய எல்லை உண்டு தானே. தெரிந்திராதது ஒரு புறம் இருக்க, தெரிந்தவர்களே, படித்த எழுத்துக்கள் கூட ஒரு சமயம் மறந்துவிட்டால் என்ன செய்ய?

ஆழி பெரிது – ஒரு மதிப்புரை

நூலின் பேசுபொருள் வேதப்பண்பாடு. வேதப் பண்பாடு எனும்போது என்றோ, எங்கோ என்பதுபோன்ற அர்த்தம் தொனிப்பதால், நமது பண்பாடு எனும் பதத்தைப் பயன்படுத்துகிறேன். நமது பாரதப் பண்பாட்டின், அனைத்து கூறுகளும், விழுமியங்களும் விதைகொண்டு வேர் விட்ட காலம் வேதகாலம். அன்றைய சமுதாயத்தின் பண்பாட்டின் சிகரமுகமாக விளங்குபவை வேதங்கள். வேதங்கள் எனும் இலக்கியத் தரவுகளைக்கொண்டு,அதன் உள்பரிமாணங்கள், பன்மைத்தன்மை ஆகியவற்றை பல்வேறு அறிஞர்களின், ஆய்வுகளின் முடிவுகளைக்கொண்டு, அன்றைய வேத சமுதாயம் எத்தன்மையதாக உள்ள ஒன்று என்ற சித்திரத்தை முதல் அத்தியாயத்தில் அளிக்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.

மூன்று விருதுகள்

எழுத்தாளர் அம்பை முன்னின்று நடத்தி வரும் ஸ்பாரோ(SPARROW – Sound & Picture Archives for Research on Women) என்ற ஆவணக் காப்பு அமைப்பிற்கு இந்த ஆண்டின் பிரின்ஸ் க்ளௌஸ்(Prince Claus) விருது வழங்கப்படுகிறது.

 

கடந்த நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எம்.ஜி.சுரேஷ் அவர்களுக்கு இலக்கிய வீதியும், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து வழங்கும் 2014-ஆண்டுக்கான அன்னம் விருது வழங்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் வெ. சுரேஷ் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை பிரிவினரால், கோவை மாவட்டத்தின் நேர்மையான அலுவலர்களுள் ஒருவர் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகரந்தம்

தற்செயலாக நூலகத்திலிருந்து கொண்டு வந்த ஸர் ஜான் ப்ராங்கிளினின் ஆர்க்டிக் கடற்பயணம் பற்றிய புத்தகத்தினால்தான் துருவப் பயண சாகஸங்கள் பற்றி ஆர்வம் ஏற்பட்டது. இரு முறை, இந்த மனிதர் ஆர்க்டிக் நோக்கி வடமேற்கு திசையில் செல்வழியைத் தேடிப் பயணமானார். இந்த நடைப்பகுதியே கற்பனை; இரண்டாம் முறை திரும்ப வரவேயில்லை. காணாமல் போனவர்களைத் தேடிப் பல பயணங்கள் நடந்தன. கப்பல்கள் மூழ்கின என்று இனூயிட் மக்கள் சொல்ல, மூழ்கும் முன் மனிதர்கள் நடந்து போனதைப் பார்த்ததாகவும் சொல்ல, பின் வெகு சிலரின் சமாதிகளும் கண்களில் சிக்கினாலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் தலையெழுத்து என்ன என்பது மர்மமாகவே இருந்தது. உயிர் பிழைக்க, பலரும் நர மாமிசம் சாப்பிட்ட தடயங்களும் கிடைக்க…

மேண்டலின் ஸ்ரீநிவாஸ் – அஞ்சலி

மேதைத் தன்மை என்றதும் உன் உலகைச் சேர்ந்தவன் நானில்லை என்ற பார்வையோ, இது எப்பேற்பட்ட தவம் தெரியுமோ என்ற த்வனியோ, கஜப்பிரசவம் முடித்த களைப்பாகவோ இல்லாமல், இயல்பாக வெளிப்படும் அழகு. Embodiment of Effortlessness என்பதை சிலரிடம் தான் காணமுடியும். அதன் விசேஷம் என்னவென்றால், அவர்கள் அதைச் செய்யும்போது மிக எளிதாகத் தோன்றுவதால் அடடே, இதை நாமும் செய்யலாமே என்று செய்யப்போய், ஐயையோ.. ரொம்பக் கஷ்டம்.. எப்படி விழுந்துதுல்ல அந்த சங்கதி என்று கற்றறிந்த வித்வான்களும் வியந்து, அது அவருக்கு ரத்தத்துல ஊறியிருக்கு என்று பிரமித்து நிற்றல்.

ஜெனீவா கார் கண்காட்சி

கீழே பார்க்கக் கிடைப்பது கார் தான். நம்புங்கள். இதை நீங்கள் 3டி அச்சுப்பொறி கொண்டே தயாரிக்கலாம். சின்னச் சின்னப் பொருட்களாக முப்பரிமாணத்தில் அச்சிட்டு, ஒன்று சேர்ப்பது 2014 காலம்; மொத்தமாக முப்பரிமாண அச்செடுத்து வடிவமைப்பது தற்காலம் என்கிறார்கள். இது மாதிரி தானே உண்டாக்கும் கார்கள் தவிர மாசெராட்டியும் லம்போர்கினியும் “ஜெனீவா கார் கண்காட்சி”

உங்கள் கேள்விக்கு என்ன பதில் – 4

அபினி விஷயம் இன்னும் விஸ்தாரமானது. சுருங்கக் கூறினால், கஞ்சாவுடன் ஒப்பிட்டால் அபினி சித்த-ஆயுர்வேத-யுனானி மட்டுமல்ல அலோபதியிலும் பயன்படும் அற்புத மூலிகை. இதன் விஞ்ஞான பெயர் பபாவர்சோம்னிஃபெரம். ‘சோம்னி’ என்ற லத்தீன் சொல்லுக்கும் ‘சோம’ எனும் சம்ஸ்க்ருத சொல்லுக்கும் தொடர்பு இருக்கலாம். “சோமபானம்” என்பது அபினியா? கஞ்சாவா? இதற்கு ரிஷிகள்தான் பதில் சொல்லவேண்டும். அபினிஸ் செடியில் விளைவது போஸ்த்தக்காய். போஸ்த்தக்காய் முற்றினால் கசகசா விதைகள் கிட்டும். கசக்சா இந்திய சமையல் ருசிக்கு அரும்பங்கு ஆற்றுகிறது. கசகசா இல்லாமல் குருமா செய்ய முடியாது. கசகசாவும் மருந்து. லாகிரி வஸ்து அல்ல.

உயிரூட்டப்பட்ட வாழ்வினங்கள் : கண்களுக்கப்பால் காணுதல்

இந்த அசைவூட்ட ஆவணப்படத்தில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிவியலாளரான ஆன்டனி (Antonie van Leeuwenhoek) கண்டறிந்த நுண்ணுயிரிகள் எவ்வாறு உயிரியல் துறையைப் புரட்டிப் போட்டது எனக் கொண்டாடுகிறார்கள். தயாரிப்பு: ஃப்ளோரா லிச்ட்மான் (Flora Lichtman) & ஷாரன் ஷாடக் (Sharon Shattuck) காணொலி குறித்த கட்டுரை வாசிக்க: http://nyti.ms/1wnXQcm

தூக்கத்தைக்கெடுக்கும் சிந்தனைச்சோதனைகள்

ஒரு விஷமக்கார விஞ்ஞானி நீங்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உங்கள் மூளையை மட்டும் எடுத்து ஒரு ஜாடியில் ஏதோ ஒரு ஸ்பெஷல் திரவத்தில் உயிரோடு இருக்கும்படி மிதக்க விடுகிறார். அதன்பின் ஒரு சக்தி வாய்ந்த கணினியை உங்கள் மூளையுடன் இணைத்து சாதாரணமாக கண், காது, மூக்கு, இத்யாதி வழியாக உங்கள் மூளைக்குள் வந்து சேரும் அத்தனை செய்திகளையும் உங்கள் மூளையுடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஒயர்களின் வழியாக அனுப்பி வைக்கிறார்! கணினி உங்கள் மூளைக்குள் அனுப்பி வைக்கும் சமிக்ஞைகள் அந்த விஞ்ஞானியின் கட்டுப்பாட்டில் இருப்பதால்…

வெண்முரசு – ஒரு பார்வை

எத்தனை முறை படித்தாலும், நாடகமாகவோ திரைப்படமாகவோ பார்த்தாலும் அலுக்காத ஒன்று மகாபாரதம். நவீன காலத்தில் அது பல இந்திய மொழிகளில் பலவாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் நான் மொழியாக்கங்கள் வழியே படித்திருப்பவை கன்னடத்தில் பைரப்பாவின் பர்வம், மலையாளத்தில் இரண்டாமிடம் (எம் டி வி), இனி நான் உறங்கலாமா (பி.கே பாலக்ருஷ்ணன்) மராத்தியில் யயாதி (காண்டேகர்). ஆனால் ஏனோ மகாபாரதம் தமிழ் இலக்கியவாதிகளை பெரிதும் கவரவில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் ராஜாஜி எழுதியது வியாசபாரதத்தின் சுருக்கமான நேரடி தமிழாக்கம், ராஜாஜியின் தனிக்கற்பனை கலவாத நூலென்பதால் அதை மறு ஆக்கம் என்று சொல்ல முடியாது.

பாஸனின் தூதகடோத்கஜம்

கடோத்கஜன் மூலமாக கௌரவர்களுக்கு கிருஶ்ணன் சொல்லி அனுப்பும் செய்தியை கருவாகக் கொண்டதால் நாடகம் தூதகடோத்கஜம் என்னும் பெயருடையதாகிறது. கடோத்கஜன் தூது என்ற நினைவே பாஸனின் கற்பனையில் உதித்ததுதான் மகாபாரத துணைப் பாத்திரம் ஒன்றைத் தன் எண்ணங்களுக்கு ஏற்றபடி வளைத்து நாடகக் கருவிற்கு மூலமாக்கி இருப்பது பாஸனின் நாடக அமைப்புத் திறனுக்கும், படைப்புத் திறனுக்கும் சான்றாகும்