20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-7

மிக அண்மைக் காலமாகப் பெண்ணியவாதிகள் தனக்கும் தனதுடலுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதான ஓவியம்-சிற்பங்களைப் படைக்கிறார்கள். அவற்றைப் பெண் என்பவள் இறைவனால் ஆணுக்காகப் படைக்கப்பட்ட அழகான கவர்ச்சி மிக்க போகப்பொருள் என்பன போன்ற கற்பனைகளைத் தகர்க்கவேண்டியே படைக்கிறார்கள். இனி பெண்ணின் பார்வையில் சித்தரிக்கப்படத் தேவையில்லை என்னும் கருத்தில் உறுதியாக உள்ளனர். ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த வலிகளைச் சொல்கிறார்கள். சமுதாயத்தின்மேல் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆண் என்பவன் அவர்களிடத்தில் காண மறுக்கும் சில விஷயங்களை படைப்பில் கொணர்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 6

எழுபதுகளில் இவ்வகைக் கலைஞர்கள் தங்களை அச்சமின்றி வெளிப் படுத்திக் கொண்டனர். “மகிழ்ச்சியே எல்லாம்” என உரத்துக் கூறிய ஆண் கலைஞர்கள் பெண் கலைஞர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டிருந்தனர். 1980களின் தொடக்கத்திலிருந்து இவர்களின் படைப்புவெளிப்பாடு அதிகரித்தது. ஆனால், அத்துடனேயே மற்றொன்றும் பரவலாகப் பேசப்பட்டது. அதுதான் AIDS என்னும் ஆட்கொல்லி நோய்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்- 5

Lianozovo என்பது மாஸ்கோ நகரத்தின் எல்லைப்புறத்தில் அமந்துள்ள ஒரு கிராமம். கலைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்குதான் வசித்தனர். கிராமத்தின் பெயரை தமது குழுவுக்கானதாக அமைத்துக்கொண்டு அவர்கள் மிக வீரியமாகச் செயற்பட்டனர். குழுவில் பலர் அரூபப் பாணி ஓவியங்களைப் படைத்தனர். 1957 இல் அரசின் ‘Thaw’ கொள்கை ருஷ்யாவின் தொன்மையான கலை உத்திகளையும், மேலை நாட்டு புதிய கலைசார்ந்த சோதனைகளையும் பற்றி இளைய தலைமுறை அறிய உதவியது.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்- 4

சூப்பர்மாட்டிஸம் என்னும் புதிய பாணி தொடர்பற்ற ஒரு வழியல்ல. மாறும் உலக ரீதியான கலைத்தளங்களுக்கு ஏற்ப அது தோற்றம் கண்டது. குழுவிலிருந்து பலர் ஊர் மாறிச் சென்றனர். சிலர் வேறுபாணிக்கு மாறினர். எல் லிஸ்சிட்சி, இலியா சாஷ்னிக் போன்றவர் தமது வாழ்நாள் முழுவதும் இந்தப் பாணியை விட்டு விலகாமல் ஓவியங்களைத் தொடர்ந்து படைத்தனர்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-3

தொன்மையான கிராமியக் கலைகள், அரங்கம், இலக்கியம் – குறிப்பாக கவிதை – ஓவியம் என்று பல கலைத் தளங்களில் விரைவாகப் பரவிய நவீன சிந்தனைத் தாக்கம் புதிய பாதையில் பயணிக்க உகந்த களமாக அப்போது 20ஆம் நூற்றாண்டின் தொடக்க கால ருஷ்யா அமைந்தது. குறியீட்டு ஓவியர்களுக்குப் பின்னர் (Icon Painters) அங்கு அலுப்பூட்டும் அகடமிக் (Academic) வழிதான் பின்பற்றப்பட்டது. வரவிருக்கும் 1817-இன் புரட்சியை முன்னரே அறிந்தது போல கலையியக்கம் செயற்படத் தொடங்கியது.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 2

கலையும் கைவினையும் அங்கு ஒருங் கிணைந்து வளரத்தொடங்கின. அது, இங்கிலாந்தில் நிகழ்ந்த கலை கைவினை சார்ந்த எழுச்சி (Arts and Crafts Movement)உடன் ஒப்புநோக்குதற்குறியது. அங்கு பல தொழிற்கூடங்கள் நிற்மாணிக்கப்பட்டு, கைவினைக்கலைகள், பீங்கான் பண்டங்கள் உருவாக்கல், பட்டு நெசவு போன்றவற்றில் ருஷ்யாவின் தொன்மையான கருப்பொருள்களும், கற்பனையும் இடம் பெற்றன.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்

ரஷ்ய நாட்டின் ஏறக்குறைய அனைத்து கலை இயக்கங்களும் சங்கத்துடன் இணைக்கப்பட்டன. யுக்ரேன் (Ukraine), லாட்வியா (Latvia), அர்மேனியா (Armenia) பகுதி ஓவியர்களும் இயக்கத்தில் இணைந்தனர். சங்கத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் ஆட்சிக்குத் தலைவலி கொடுத்ததால், அதை ஒடுக்கவும் அடக்கவும் ஆட்சி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.