kamagra paypal


முகப்பு » பொருளாதாரம், மொழிபெயர்ப்பு

மேற்கு வங்கத்தின் வழியில் செல்கிறதா தமிழ்நாடு?

1950,60களில் வங்காளம் பல தொழில்களில் முன்னணியில் இருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். வேதிப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் பொறியியல் சம்பந்தப்பட்ட தொழில்களில் அது பெயர் பெற்றிருந்தது. கல்கத்தா மற்றும் ஹவுராவைச் சுற்றியும் மிகப்பெரிய உப்பளங்கள் பெருமளவில் இருந்தன. இந்தியாவின் முதல் கணிப்பொறி நிறுவப்பட்டது பி.டி. ரோடிலிருக்கும் இந்திய புள்ளியியல் கல்விநிறுவனத்தில்தான். கைத்தறித்தொழில் மிகச் சிறப்பானதாகவும், சாயமேற்றும் தொழில்திறன் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் இருந்தன.

ஆனால், பிரிவினையின்போது அலைஅலையாக அகதிகளின் வருகை நிகழ்ந்தது;கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பலர் இடதுசாரிக் கொள்கையைத் தழுவினர். ஒடுக்கப்படுவதாக ஏற்பட்ட ஒருவித உணர்வானது தில்லிக்கு எதிரான உணர்வாகத் திரும்பியது. உண்மையில், வங்காளத்தின் இடதுசாரி சித்தாந்தம் என்பது சித்தாந்த முலாம் பூசப்பட்ட பிராந்தியக்குரல்தான்.நாட்டின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டதை அறிவுஜீவிகளான பல பெரியமனிதர்கள் வங்காளத்திற்கு எதிரான பாகுபாட்டின் ஆரம்பமாக நினைத்தார்கள்.

தொழிலதிபர்களை ஒடுக்குமுறையாளர்களாகவும், தொழில் முனைவோரை இரக்கமில்லாதவர்க்ளாகவும் சித்தரித்தது அரசியல் வர்க்கம்; எழுபதுகளிலிருந்து அங்கு நடைபெற்றத இடதுசாரிகளின் ஆட்சியில் இந்தப் பாகுபாடுகள் தீவிரமானது; RPG, பங்குர்  போன்ற பழமையான தொழில்குழுமங்களைத் தவிர மற்ற தொழிலதிபர்கள் வங்கத்தைத் தவிர்க்க ஆரம்பித்தனர். புதிய தொழில் முயற்சிகள் இந்தியாவின் மேற்குப் பகுதியை நோக்கிச் சென்றுவிட்டன. சிங்கூரில் டாடா துவங்கவிருந்த கார் தொழிற்சாலையை வரவிடாமல் விரட்டியடித்த த்ரிணமுல் காங்கிரஸோ “வங்காளம் ஒடுக்கப்படுகிறது” என்ற ஒப்பாரியை உச்சத்திற்கு கொண்டுசென்றது. அந்தப் போராட்டத்தை விவசாயத்திற்கும், இரக்கமற்ற தொழிலதிபர்களுக்கும் இடையேயான போராட்டமாகச் அது சித்தரித்தது. பின்னர் அந்தத் திட்டம் அங்கு கைவிடப்பட்டதும், குஜராத்திற்கு மாற்றப்பட்டதும் நாடறிந்த விஷயம்தான்.

தற்போது சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவெனறால், முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிலும் ’ஒடுக்கப்படுகிறோம்’ என்ற ஒரு கோஷம் எழுவதுதான். வேறு வழியின்றி,பல அரசியல் கட்சித்தலைவர்களும் இதே கோஷத்தைப் போட வேண்டியுள்ளது.

கூடங்குளம் ஒரு மிகப்பெரிய அளவிலான அணுமின்நிலையத் திட்டம். வெளிநாட்டு நிதியுதவியுடனும், சர்ச்சின் ஆதரவோடும் போராட்டம் நடத்திய NGOக்களால், இந்த திட்டம் பல ஆண்டுகள் முடக்கப்பட்டதால், திட்டத்தின் செலவுத்தொகை ரூ.ஆயிரம் கோடிக்கும் மேல் அதிகரித்தது. அப்போதைய பிரதமரான, பொறுமையானவர் எனப்பட்ட மன்மோகன் சிங் அவர்களே கூட இந்த முட்டாள்தனமான பிடிவாதத்தைக் குறித்த தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து ஏற்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்னையிபோதும் தில்லிக்கு எதிரான உணர்வு தூண்டப்பட்டது. த்ற்போது, அந்த வரிசையில் சேர்ந்தது நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம். சமீபத்தில் நடந்து முடிந்த  சிறிய நிலத்தடிவயல்களின் ஏலத்தில், காரைக்கால் மற்றும் நெடுவாசல் ஆகிய இரண்டு ஒப்பந்தப்பகுதிகள் தனியாருக்கு அளிக்கப்பட்டன.இவ்விரண்டு பகுதிகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மொத்த உள்ளிருப்பு 4,30,000 டன்களாகும். தற்போதைய மதிப்பீட்டின்படி, இவ்விரண்டு பகுதிகளிலிருந்து மாநில அரசுகளுக்கு ரூ.300 கோடி மொத்த வருமானமும்,ராயல்டி வகையில் ரூ.40 கோடியும் கிடைக்கும்.ONGC ஓஎன்ஜீசீ மாநில அரசுக்கு ராயல்டியாக வருடத்திற்கு ரூ.250-350 கோடி கொடுத்துக்கொண்டிருக்கிறது.

மாநில அரசுக்கு இத்திட்டம் குறித்து தெரிவிக்கப்படவில்லை, ஆய்வுக்கோ,ஏலத்துக்கோ மாநிலஅரசிடம் முன்னனுமதி  வாங்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் மறுக்கின்றனர்.
”சுரங்கங்கள் குத்தகைக்கு மாநில அரசு அனுமதி வழங்குகிறது;இது ஏற்கெனவே கண்டறியப்பட்ட ஒரு சுரங்கப்பகுதி-எண்ணெய் வளஆய்வு முடிந்துவிட்டது.; மாநில அரசுக்கு இது முன்பே தெரிந்த்துதான்”.
ஒரு அதிகாரி சொன்னதாக ஊடகங்களில் வந்த செய்தி:

’     “இந்தப்பகுதியானது எண்ணெய் வளஆய்வுக்கான லைசன்ஸின் கீழ் 1986ல் ONGCக்கு அளிக்கப்பட்டது.  ஆய்வுக்கு 2008ல் மாநில அரசு அனுமதி வழங்கியது;சுரங்கக்குத்தகை 2013ல் ஏழு வருட காலத்திற்கு வழங்கப்பட்டது. இந்த குத்தகைக்காலத்தை 20 வருட காலத்திற்கு நீட்டிக்குமாறு கோரி நெடுவாசலின் மாவட்ட நிர்வாகதிற்கு 2016,டிசம்பர் 30 அன்று  ONGC கடிதம் எழுதியுள்ளது. இந்த்த் திட்டக்காலம் முழுவதும் மத்தியிலிருந்த காங்கிரஸ், திமுக அமைச்சர்கள் அனுமதி வழங்கியே வந்திருக்கிறார்கள்;ஆனால், தற்போது இந்த போராட்டக்காரர்களோ மோடி ராஜினாமா செய்யவேண்டும் என்கிறார்கள்.இத்தகைய ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தமிழகத்துக்கோ, தஞ்சைக்கோ புதிதல்ல. ஏற்கெனவே 100க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசு பற்றிய கவலைகள் தொடங்கி வளமான விவசாய நிலங்களை அபகரிக்கும் மத்திய அரசின் சூழ்ச்சி என்ற அபத்தமான கூற்று வரை இந்தத் திட்டத்தை எதிர்த்து வாதங்கள் தரப்படுகின்றன. துளையிடுவதற்கும், உற்பத்திக்கும் மிகக் குறைந்த நில அளவே(120 X 120 ச.மீ) தேவை;அது விவசாயத்தையோ,மண்ணையோ பாதிக்காது;உபயோகத்திலுள்ள நிலத்தின் மற்ற பயன்பாட்டுக்கு மிக்க் கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகள் உள்ளன; நிலத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் ஆழத்திலிருந்துதான் ஹைட்ரோகார்பன் எடுக்கப்டுவதால், இத்ற்கு மிகவும் உயர்ந்த தளங்களில் இருக்கும் நிலத்தடி நீர்படுகைகளுக்கு பாதிப்பில்லை.”

இந்த பிரச்னைகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு விஞ்ஞானிகள்/அதிகாரிகள் நெடுவாசல் போகும்போதெல்லாம் அவர்கள் முற்றுகையிட்டு, மிரட்டப்படுகிறார்கள். இந்த ’ஒடுக்கப்படுகிறோம்’ என்ற ஒப்பாரி உச்சத்தை எட்டி, தற்போது தொழில்வளர்ச்சிக்கு எதிராகத் திரும்பிவிட்டது. இதற்கு ஆதரவானவர்களாலும், உள்ளூர் அமைச்சர்களாலும்  சொல்லப்படும் வாதம் – உள்ளுர் மக்கள் வேண்டாம் என்று சொன்னால், திட்டம் செயல்படக்கூடாது – இது அபாயகரமானது. இது ஜார்கண்டிலோ, சத்திஸ்கரிலோ பின்பற்றப்படலாம். எந்த சுரங்கத் தொழிலும் ஆரம்பிக்க முடியாது. சொல்லப்போனால், பூமிக்கு கீழே உள்ள எல்லா வளங்களும் மொத்த இந்திய சமூகத்தைச் சேர்ந்தே தவிர உள்ளூர் மக்களுடையதல்ல.

ஏற்கெனவே, புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததாலும்,மத்தியகிழக்கு பகுதிகளில் நிலவும் சூழலாலும், ஐடி தொழிலில் ஏற்பட்டுள்ள சரிவாலும் தமிழ்நாடு வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளது.இங்குள்ள கட்சிகளோ, இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மொழிவெறியையும், தில்லிக்கு எதிரான உணர்வையும் தூண்டுகிறார்கள். இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம்-காட்டுக் கொள்ளையன் வீரப்பனை ஆதரித்த சக்திகள் எல்லாம் கூடங்குளம்,நெடுவாசல் போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுப்பதுதான். அமெரிக்கா,ஐரோப்பா நாடுகளிலிருந்து நிதி பெறும் பல என்ஜீஓக்கள் இப்போராட்டங்களில் மிகவும் ஈடுபட்டுள்ளன.

மொத்தத்தில், தமிழ்நாடு வ்ங்கத்தைப் போன்றதொரு நிலைமையில் உள்ளதால், தொழிலதிபர்கள் இம்மாநிலத்தைத் தவிர்ப்பார்கள்;இதனால் இந்த ’ஒடுக்கப்படுகிறோம்’ என்ற எண்ணம் மேலும் அதிகரிக்கும். ஏற்கெனவே, எல்டிடிஈ போன்ற திவிரவாதக்குழுக்களின் ஆதரவில் தமிழ்நாட்டில் பல பிரிவினைசக்திகள் உள்ளன. பெருந்தீயாக மாறக்கூடிய தீக்கங்குகள் கன்ன்றுகொண்டிருக்கின்றன.

***

11 Comments »

 • Deepan said:

  Hi,

  In my opinion, this article speaks only one side of the story. What we learnt from Union Carbide/Chernobyl/Fukushima disasters then? I am a strong supporter of science development in the country. I am not against Kudankulam, Neutrino Observatory. But why Govt. didnt explore other options for hydrocarbon extraction? We have multiple easy methods to do the same. When the media takes a stand on a popular issue, it should have truths from the both the sides. Not like this article.

  Thanks,
  Deepan.

  # 18 April 2017 at 2:14 am
 • Augustine Paul C said:

  தீபன் அவர்கள் சொல்வது போல நானும் கூடங்குளம் திட்டத்திற்க்கோ, நியூட்ரினோ திட்டத்திற்க்கோ எதிரானவன் கிடையாது. என்னைப் பொருத்தவரையில் ஒரு திட்டத்தினை மக்கள் தீவிரமாக எதிர்க்கும் பொழுது அதை விடாப்பிடியாக செயல் படுத்தியே தீருவேன் என ஒரு அரசாங்கம் ஆடம் பிடிப்பது தவறு. முதலாவதாக மக்களுக்கு அது திட்டத்தினை தெளிவாக புரிய வைக்கவேண்டியது அரசின் கடமை. அப்படி செய்ய அவர்கள் தவறும்பொழுது அவ்வாய்ப்பை எதிர் கட்சியினர் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பது ஆளும் கட்சி உட்பட அனைவருக்கும் தெரிந்த உண்மை. எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது எதிர்க்கும் ஒரு திட்டத்தை ஆளும் கட்சியாக ஆட்சிக் கட்டிலில் அமரும் பொழுது ஆதரிக்கின்றனர். எனவே மக்கள் எப்படி நம்புவர்.

  LTTE ஐ ஒரு தீவிரவாத குழுவாக சித்தரிப்பதே தவறு. அது ஒரு ஒடுக்கப்பட்ட இனத்துக்காக தீவிரமாக ஆயுதம் ஏந்தி போராடிய ஒரு இயக்கம். அப்படியென்றால் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களும் பயங்கரவாதிகள்தான் என்பதை ஆசிரியர் ஒத்துக்கொள்வாரா?

  # 18 April 2017 at 9:34 am
 • Rajaram said:

  Why Rocket launching centre is not planned in Kulasekarapattinam ?(People didnt opposed this). Plans which pollute/affect the people’s places are coming to Tamilnadu.

  # 19 April 2017 at 2:19 am
 • Ramesh said:

  When you mention the LTTE as terrorists,we come to know about you clearly that you are a messenger of the ruling government and ambassador of the multi national companies. Even after Fukushima disasters you are supporting that automic power is a good source and useful one. you have to be made to stay in kudungulam or near kalpakkam power stations for years. You sit in a AC room and you worry about the investments of multi national company. People like you will keep mum when the tragedy happened like the union carbide. Or justify from the governments view. BTW who said there is no mine in chattisgarh and jarhkand?? have you been there??? one of my friend working in jarhkand in a mine works for L&T. you people steals the wealth of common man and in return you wont even ready to listen to the peoples concern and argue that those states are under naxalites. because of people like you the communist ideology developed in those states. FYI compared to Gujarat and maharastra taminadu’s GDP is in good range. Its the multi national company’s ambassador’s like you are creating a false propaganda that tamilnadu is worst then west Bengal. Let us know how much you got payment from the ruling government for this article.

  # 19 April 2017 at 10:12 am
 • Ramesh said:

  //துளையிடுவதற்கும், உற்பத்திக்கும் மிகக் குறைந்த நில அளவே(120 X 120 ச.மீ) தேவை;அது விவசாயத்தையோ,மண்ணையோ பாதிக்காது;உபயோகத்திலுள்ள நிலத்தின் மற்ற பயன்பாட்டுக்கு மிக்க் கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகள் உள்ளன; நிலத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் ஆழத்திலிருந்துதான் ஹைட்ரோகார்பன் எடுக்கப்டுவதால், இத்ற்கு மிகவும் உயர்ந்த தளங்களில் இருக்கும் நிலத்தடி நீர்படுகைகளுக்கு பாதிப்பில்லை//

  மிகவும் முட்டாள்த்தனமான கருத்து. 1000 மீட்டர் துளையிடும்போது வரும் நிலத்தடிநீர் கனிம தாதுக்கள் பாறை படிவங்கள் என அனைத்தையும் வெளியே எடுத்த பிறகே தான் ஹைட்ரொ கார்பன் பெறப்படுகிறது.
  நீர் படுகைகளுக்கு பாதிப்பில்லை என்று சான்றுடன் நிருக்கபிக்கட்டுமே உங்கள் ஆய்வாளர்கள்

  # 19 April 2017 at 11:30 am
 • Ramesh said:

  \இது ஜார்கண்டிலோ, சத்திஸ்கரிலோ பின்பற்றப்படலாம். எந்த சுரங்கத் தொழிலும் ஆரம்பிக்க முடியாது. சொல்லப்போனால், பூமிக்கு கீழே உள்ள எல்லா வளங்களும் மொத்த இந்திய சமூகத்தைச் சேர்ந்தே தவிர உள்ளூர் மக்களுடையதல்ல//

  சத்திஸ்கரிலும் ஜார்கண்டிலும் தொழில் அடித்து கூற உங்களால. அந்த பகுதிகளுக்கு சென்றிருக்கிறீர்களா? என் நண்பர் ஜார்கண்ட் பகுதிக்குட்பட்ட ஒரு சுரங்கத்தில் தான் வாகன பழுது நீக்கும் பணியில் இருக்கிறார்.

  பூமிக்கு கீழே உள்ள எல்லா வளங்களும் இந்திய சமூகத்தை சார்ந்தது என்று சொல்லிக்கொண்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு சல்லிசான விலையில் நிலங்களை தாரை வார்க்கத்தானே உங்களை மாதிரியான ஆட்கள் போராடுகிறீர்கள்

  # 19 April 2017 at 11:36 am
 • Ramesh said:

  \\மொத்தத்தில், தமிழ்நாடு வ்ங்கத்தைப் போன்றதொரு நிலைமையில் உள்ளதால்//

  உங்களை போன்ற அறிவுஜீவிகள் இப்படி பொய்யுரை பரப்புவதால் அவை உண்மை என்று ஆகிவிடாது.
  குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களை விட ஜி.டி.பியில் தமிழகம் முன்னணியில் இருக்கின்றது.
  மேற்கு வங்கத்தை தமிழகத்த்தோடு ஒப்பிடுவதில் இருந்தே தெரிகிறது நீங்கள் வல்லாதிக்க நாடு முதலாளிகளின் ஏவல் நாய் என்று

  # 19 April 2017 at 11:41 am
 • Ramesh said:

  //எல்டிடிஈ போன்ற திவிரவாதக்குழுக்களின் ஆதரவில் தமிழ்நாட்டில் பல பிரிவினைசக்திகள் உள்ளன\\

  இசுலாமியர் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என முழக்கங்கள் எல்லாம் உங்கள் செவிடான காதுகளில் ஏறவில்லையா அல்லது அதெல்லாம் தீவிரவாதம் அன்றி தேச பற்றா ???

  இனம் காக்க போராடும் குழுக்கள் எல்லாம் உங்களுக்கு தீவிரவாத குழுக்களாகவே தெரியும். ஏனென்றால் உங்களை போன்ற வல்லாதிக்க நாடுகளின் முதலாளிகளின் ஏவல் நாய்களுக்கு இனம் என்ற ஒன்றே கிடையாதே. நீங்கள் எல்லாம் நிறம் மாறும் மிருக வகையறாக்கள். உங்களுக்கு சுதந்திர போராட்ட குழுக்கள் இல்லம் தீவிரவாதியா தான் தெரிவார்கள்

  # 19 April 2017 at 11:46 am
 • Ramesh said:

  //இவ்விரண்டு பகுதிகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மொத்த உள்ளிருப்பு 4,30,000 டன்களாகும். தற்போதைய மதிப்பீட்டின்படி, இவ்விரண்டு பகுதிகளிலிருந்து மாநில அரசுகளுக்கு ரூ.300 கோடி மொத்த வருமானமும்,ராயல்டி வகையில் ரூ.40 கோடியும் கிடைக்கும்.ONGC ஓஎன்ஜீசீ மாநில அரசுக்கு ராயல்டியாக வருடத்திற்கு ரூ.250-350 கோடி கொடுத்துக்கொண்டிருக்கிறது//

  இப்படி அரசாங்கத்தின் பிரதிநிதியாக புள்ளிவிவரங்களை அடுக்கும் நீங்கள் இந்த திட்டத்தால் ஏற்படும் நிலா மாசு சுற்று சூழல் மாசு மற்றும் தனி மனித நஷ்டம் மற்றும் இன்னும் பிற இழப்புகளின் புள்ளி விவரங்களை வழங்க முடியுமா? ஒரு பக்கம் நின்று கொண்டு இப்படி ஒரு கட்டுரை எழுத உங்களுக்கு அருவருப்பாக தோன்றவில்லையா ???

  # 19 April 2017 at 11:52 am
 • TP SAMPATH said:

  As one from TN and having lived in West Bengal for many years, I completely agree with Prof Vaidyanathan. TN is losing out and leftists and funded NGOs are happy since lack of progress is a potent discontent situation which can be politically exploited. TN always kept its economic progress ahead of politics under DMK or AIADMK but is losing out now.Its auto industry is also not growing.

  # 19 April 2017 at 11:51 pm
 • நரேஷ் said:

  மீத்தேன் திட்டம் பற்றி உண்மையான ஒரு கட்டுரையை சொல்வனத்தில் எதிர்பார்க்கிறேன். இங்கே திருவாரூர்,நாகையில் பல இடங்களிலில் கடல் நீர் உள்ளே நிலத்தடிக்கு வந்து விட்டது. எங்குமே உப்புத் தண்ணீர் தான். நிறைய இடங்களில் ஆழ்துளாய் கிணறுகள் அமைத்து வேலைகள் நடந்து வருகின்றன,10 வருடங்களாக.அவற்றைப் பற்றி எந்த தகவலும் மக்களுக்குத் தெரியாது.எங்கள் வீட்டுக்கு அருகே கூட ஒன்று இருக்கிறது, அங்கே என்ன ஆய்வு நடக்கிறது என எனக்குத் தெரியாது..ஏன் மூடி மறைக்கிறார்கள்????? இங்கே ஆய்வுகள் தொடங்குமுன் மக்களிடம் அறிவித்தார்களா?????மீத்தேனால் நிலங்கள் பாழாகாமல் வருமானம் வருமென்றால் ஏன் இத்தகைய ரகசியத் தன்மை?????

  # 20 April 2017 at 11:21 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.