மகரந்தம்


[stextbox id=”info” caption=”பண்டிட் ரவிஷங்கரின் ஆபரா அரங்கேற்றம்”]

anushka

சிதார் மேதை ரவிஷங்கரின் மற்றொரு ஆபரா வெளியீடு அடுத்த வருடம் லெஸ்டர் நகரில் அரங்கேற்றமாகும் எனும் விவரத்தைக் குறிப்பிடும் இந்தக் கட்டுரை அவரது முதல் ஆபரா நிகழ்வு 2012 ஆம் வருடம் ராயல் ஃபெஸ்டிவல் ஹால் என்று வழங்கப்படும் லண்டனின் இடதுகரை வளாகத்தில் நிகழ்ந்ததைக் குறிப்பிடத் தவறியிருக்கிறது. அந்த நிகழ்வை நாம் சொல்வனத்திலும் கட்டுரையாக வெளியிட்டோம் (சொல்வனம் இந்திய இசையில் முதல் சிம்பொனி – ரா.கிரிதரன்). பண்டிட் ரவிஷங்கரின் புதல்வி அனுஷ்கா ஷங்கர் தலைமையில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வுக்காக சுகன்யா எனும் தலைப்பில் இந்திய கதை ஒன்றை ராகங்களில் இயற்றியுள்ளனர். பெரும்பாலான இசைக்கோர்வைகளை பண்டிட் முடித்துவிட்டிருந்ததால் முழுநீள கதைப்பாடலாக மாற்றுவதில் சிரமமில்லை என்கிறார்கள்.

https://www.theguardian.com/music/2016/sep/21/ravi-shankar-opera-sukanya-world-premiere-curve-leicester-anoushka-shankar-lpo
Ravi Shankar opera to get posthumous world premiere | Music | The Guardian
[/stextbox]


[stextbox id=”info” caption=”தர்க்கமும் சமூக பாய்ச்சல்களும்”]

lead_960

நமது ஞானியரும் குருக்களும் பரவலாக்கிய நம்பிக்கைபடி ’அறிவு விருத்தியடைவது பூரண உண்மையை அல்லது மெய்ஞானத்தை அடைவதற்காக’ எனும் காரணத்தைக்கொண்டிருக்கிறது. கீழைத்துவ தத்துவங்களின் அடிப்படை ’பூரண ஞானத்தை அடையும் வழிகளிலும் அவற்றின் மூலம் அடையும் விடுதலையையும்’ நோக்கி அமைந்திருக்கிறது. தர்க்கத்தின் விரிவாக்கத்துக்கு ஓர் எல்லை உண்டு என நம்பத்தொடங்கியிருக்கும் மேற்கு சிந்தனை உலகம் இன்று நமது தர்க்கச் சிந்தனையானது சமூகத்தேவைகளை முக்கியமாகக் கருதி இருக்கும் செயல்பாடு எனும் தளத்தை நோக்கி நகர்ந்துவருவதை இக்கட்டுரை விளக்க பிரயத்தனப்படுகிறது. அந்த சமூக செயல்பாடும் முன்னேற்றப்பாதையில் அமைந்திருக்க வேண்டிய அவசியமில்லாது இனப்பெருக்கத்தையும் நமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான வழிமுறைக்கு வழிவகுப்பதாகக் கூட அமைந்திருக்கும் என்கிறது.

http://www.theatlantic.com/science/archive/2016/09/moral-psychology-rationality/500219/
The Irrational Idea That Humans Are Mostly Irrational – The Atlantic
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.