kamagra paypal


முகப்பு » மகரந்தம்

மகரந்தம்


மனிதக்காட்சிப் பூங்கா

InverseZoo

மிருகக் காட்சி சாலை என்பது மிருகங்களை மனிதர்கள் பார்க்கும் இடமா அல்லது மனிதர்களை மிருகங்கள் பார்க்கும் இடமா என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஃபிலடெல்பியாவிலுள்ள மிருகக்காட்சி சாலை இதை உண்மையாகவே பரிசோதித்துப் பார்க்க நினைத்திருக்கிறது. மிருகங்களை ஓரிடத்தில் அடைத்து வைக்காமல், அவைகளுக்கென்று தனிப்பாதைகள் ஏற்படுத்தி (மூடப்பட்ட, பாதுகாப்பான பாதைகள் தான்) அவற்றை அந்தப் பாதைகளில் உலவ விட்டிருக்கிறார்கள். தலைக்கு மேல் நடமாடும் மிருகங்களைப் பார்த்து மக்களும் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். ஆனால்அங்கு வரும் மனிதர்களைப் பார்த்து மிருகங்கள் என்ன நினைக்கின்றன ?

இதை ஆராய்வதெற்கென்று சில விலங்கு உளவியல் நிபுணர்களை நியமித்திருக்கிறது இந்த உயிரியல் பூங்கா. இந்தப் பாதைகளைக் கடந்து சென்று மனிதர்களைப் பார்ப்பதை மிருகங்கள் விரும்புகின்றனவா? அவை நடந்துகொள்ளும் விதத்தை வைத்து மட்டும் இதைக் கணிக்காமல், அந்த விலங்குகளைப் பராமரிக்கும் ஊழியர்களிடமும் பல கேள்விகளைக் கேட்டு இந்த ஆராய்ச்சி நடக்கிறது. புள்ளியியல் அடிப்படையில் இந்த ஆய்வின் முடிவுகள் அலசப்படுகின்றன. புலிகளும் சிம்பன்ஸிகளும் நம்மைக்கண்டு ஆனந்தமடைகின்றனவா அல்லது வெறுப்படைகின்றனவா என்பது சீக்கிரமே தெரியவரும்.

http://www.atlasobscura.com/articles/how-to-tell-if-a-lion-is-happy


வளரும் நாடுகளை பிரதிபலிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்

CorporateRegula

தீபத்தில் ஒளியினால் திருக்குறளும் படிக்கலாம், அதைக் கொண்டு வீட்டையும் கொளுத்தலாம் என்று சொல்வதுண்டு. எந்த விஷயத்திலும் நன்மை தீமை கலந்தே இருக்கும், நாம் எப்படி அதைக் கையாள்கிறோமோ அதைப் பொருத்தே அதன் குணம் இருக்கும் என்பதுதான் உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் இது பொருந்தும். அவற்றால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் விளைகின்றன என்று பலர், குறிப்பாக இடதுசாரிகள் கூறுவதுண்டு.

'எழுந்துவரும் சந்தைகள்' என்று அழைக்கப்படும் வளரும் நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் முறையான நடத்தை விதிகளைக் கடைப்பிடிக்கின்றனவா என்பது கேள்விக்குறி. அந்நாடுகளில் பொதுவாழ்வில்ஒரு அங்கமாக விளங்கும் லஞ்ச ஊழலுக்கு இந்நிறுவனங்களும் உடந்தையாக இருக்க வேண்டியுள்ளது. லஞ்சம் கொடுப்பதைத் தடுக்க கடுமையான விதிகளை இந்நிறுவனங்கள் செயல்படுத்துவதில்லை என்பது பரவலாகக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு. ஆனால் வளரும் நாடுகளைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் இந்திய நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. அவற்றில் இரண்டு 100 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளன என்பது ஆறுதலான விஷயம். மேலும் படிக்க

https://www.transparency.org/news/feature/emerging_markets_pathetic_transparency


இலவசம்

basic-income-poster-600x450

எல்லா மக்களுக்கும் அடிப்படை வாழ்வுக்கான வருமானத்தை அரசே கொடுத்தால் எப்படி இருக்கும்? இந்தக் கருத்து இப்போது மேற்கில் மேலெழுந்து வருகிறது. இதைச் செய்வது வறுமையை ஒழிக்கும் என்று பொருளாதாரத் துறையில் அதிக நிபுணத்துவம் இல்லாத பல எழுத்தாளர்கள் கருதுகிறார்கள். பொருளாதாரத் துறையில் பயிற்சி உள்ளவர்கள் என்ன கருதுகிறார்கள்? சில கருத்துக் கட்டுரைகளைக் கீழே கொடுக்கிறோம்.

  1. Why don’t we have universal basic income? – The New Yorker
  2. The basic economics of a guaranteed income – Equitable Growth
  3. The Unconditional Basic Income and the Hayekian Price System | Ordinary Times
  4. Two Problems With Universal Basic Income
  5. Bad arguments against a universal basic income – Lawyers, Guns & Money : Lawyers, Guns & Money
  6. Does President Barack Obama support basic income? – Business Insider


மோனாலிஸா

600_448643800

ரசனை என்பதை நாம் மிகவுமே உயர்த்திப் பொருத்தி, சமூகங்களை உடைத்துக் கொண்டிருந்தோமா? திரள் சமுதாயம், திரள் ரசனை என்பன உண்மைக்குப் புறம்பானவை, நன்மைக்கு எதிரானவை என்று முட்டைத் தலையர்கள் நம்புவது ஜனநாயகத்துக்கு எதிரான கருத்தா? அல்லது தம்மை உயர்த்திக் காட்டிக் கொள்ள அவர்கள் கடைப்பிடிக்கும் ஒரு தந்திரமா?

https://newrepublic.com/article/134094/tyranny-taste

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.