மரமும் இசையும்

மரக்கட்டையின் ஒரு பகுதியை டிரௌபெக் (Traubeck) எடுத்துக் கொள்கிறார். அந்த மரத்துண்டின் பல்வேறு வண்ண மாறுபாடுகளையும் அடர்த்தி மாற்றங்களையும் ஒளிச்சிதறல்களாக மாற்றிக் கொள்கிறார். அடர் பழுப்புக்கு ஒரு தரவு. சாம்பல் நிறத்திற்கு இன்னொரு தரவு. வெளியில் காணப்படும் மெல்லிய பட்டைக்கு ஒரு ஒலித்துண்டு. நடுவே கல்லாகிக் கிடக்கும் வடப்பகுதிக்கு மொழியாக்கமாக மாற்று ஒலி. ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு வகை. பார்ப்பதற்கு உயரமாக ஒரே மாதிரி இலைகளுடன் காணப்பட்டாலும், இந்த ஒலிமாற்றக் கலவையில் அவற்றை புதிய பரிமாணத்தில் கேட்கலாம்.
நாம் விளையாடும் சோனி ப்ளேஸ்டேஷன் புகைப்படக் கருவியைக் கொண்டு இந்த விறகு → ஒலி மொழி மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார். மரத்துண்டின் வித்தியாசங்களைப் பதிவுசெய்து கணினிக்கு ஏற்றுகிறார். அந்தத் தரவுகளை பியானோவிற்கு ஏற்ற இசைக்குறிப்புகளாக மாற்றுகிறார். மர்மப் படத்தை பார்ப்பது போல் உணர்வை எழுப்பும் ஒலி கேட்கக் கிடைக்கிறது:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.