kamagra paypal


முகப்பு » மகரந்தம்

மகரந்தம்


முதலியம் தடம் புரண்டதா?

TOPSHOTS-BRITAIN-TRANSPORT-STRIKE

இப்பத்தான் மேற்கின் பத்திரிகைகளுக்கு ஞானோதயம் ஆகி இருக்கிறது. முதலியம் உருப்படாது, மக்களையும், நாட்டையும், சமூகவாழ்வையும் அழிக்கும் என்று தெரிந்து கொள்ள இத்தனை வருடங்களாகி இருக்கின்றது. அதிலும் ஜெர்மனியின் பத்திரிகைகள், ஒரு வேளை சூழலில் எங்கும் ஸ்டாலினிய பயங்கரம் தலைவிரித்தாடியதாலோ என்னவோ, முதலியத்தைக் கட்டி மாரடித்துக் கொண்டிருந்தன. டெர் ஷ்பீகல் என்னும் ஒரு பத்திரிகை இன்னுமே ஜெர்மனிய மேலாட்சி, வெளளையரின் இயல்பான மேன்மை, ஓரளவு கிருஸ்தவத்தின் உயர்வு போன்ற கருத்தியல் மோசடிகளைக் கை விட்டுவிடவில்லை. ஆனால் அறியாமைக் கோட்டையின் சுவர்கள் விரிசல் விடத் துவங்கி இருக்கின்றன. அந்தக் கோட்டைக்குள் புறவெளியின் சூரிய வெளிச்சம் கொஞ்சம் விழுந்து ரத்தம் சுண்டிய மேலைக் கருத்தியல் உயிரும் வாழ்வும் வெளியில் இருக்கின்றன என்று ஒத்துக் கொள்ளத் துவங்கி இருக்கிறது. கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

http://www.spiegel.de/international/business/capitalism-in-crisis-amid-slow-growth-and-growing-inequality-a-998598.html


செஞ்சிலுவைச் சங்கம்: தொண்டா? மேனாமினுக்கியா?

red-cross-Donations_Super_Storm_Sandy_Public_Relations_PR_New_Orleans_Volunteer_Controversy_Aid_Workers_NGO

நியு யார்க் நகரத்தைப் பெரும்புயல் தாக்கிய பின் செஞ்சிலுவைச் சங்கம் என்ன மாதிரி தொண்டாற்றியது என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளிவந்திருக்கிறது. புயலினால் வீடிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதை விட தன்னுடைய மக்கள் தொடர்பு மேலும் மின்னவே செஞ்சிலுவை (ரெட் கிராஸ்) சங்கம் முயன்றதாக, அவர்களுடைய ஊழியர்களே தெரிவித்திருக்கிறார்கள். உடல்நிலை சரியில்லாதவர்களுக்காகச் செலுத்த வேண்டிய முதலுதவி வண்டிகளை, மருத்துவ வசதிக்காகப் பயன்படுத்தாமல், தொலைக்காட்சிப் பேட்டிகளுக்கு பின்னணியாக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்தைத் தொலைக்காட்சியில் காண்பித்து கோடி கோடியாக நன்கொடையைப் பெற்றாலும், அவற்றை அரசியல் ஆதாயங்களுக்காகவும், பதவியில் இருப்போர் பணித்ததின் படி உபயோகிக்கவும் ரெட் க்ராஸ் சுணங்கவேயில்லை. விநியோகிக்க எவருமே இல்லை என்பதை அறிந்திருந்தும் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் சாப்பாடுகளை தருவித்து இருக்கின்றனர்; அவற்றை அப்படியே குப்பையில் போட்டு இருக்கின்றனர். ஹரிகேன் சான்டி (Superstorm Sandy) மட்டுமல்ல… லூயிசியானாவிலும், மிஸ்ஸிசிப்பியிலும் (Hurricane Isaac) கூட இதே அலட்சியம் கலந்த கண்துடைப்புதான் கோலோச்சுவதாக செஞ்சிலுவைத் தொண்டர்களே வருந்தியிருக்கிறார்கள்.

http://www.npr.org/2014/10/29/359365276/on-superstorm-sandy-anniversary-red-cross-under-scrutiny


சிறுநீர்த் தத்துவம்

Illusion_Free_Choice_Will_Self_Perception_Cognition_Epilepsy_Diet

சுதந்திரமாக முடிவெடுக்கிறோம் என்னும் எண்ணம் வலிப்பு நோய் இருப்போருக்கு மிகக் குறைவாகவே இருக்கிறது. அதே போல் மனக்குழப்பத்தால் பாதிக்கப்பட்டோரும் ‘நம்முடைய ஒவ்வொரு விஷயத்தையும் நாமே தீர்மானிக்கிறோம்’ என எண்ணுவதில்லை. அதாவது உடல் உபாதையைக் கொண்டு சுய இச்சையை அனுமானிக்க முடிகிறது. சிறுநீர் கழிக்கும் உந்துதல் அதிகமானால், நமக்கு சுயமாகத்தான் முடிவெடுக்கிறோம் என்பதில் நம்பிக்கை குறைகிறது. ஆதாம் இறைவனின் கட்டளையை மீறி ஆப்பிளை உண்டபோது அவனுக்கு சிறுநீர் வராமல் இருந்திருக்கலாம்; அல்லது உடல் களைப்படையாமல் முழுபலத்தோடு இருந்திருக்கலாம்; அல்லது பாலியல் இச்சை எழாமல் இருந்திருக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.

http://www.scientificamerican.com/article/the-philosophical-implications-of-the-urge-to-urinate/


அமெரிக்காவில் லட்சக்கணக்கான சிறார்கள் பாலியல் கடத்தலுக்கு உள்ளாகிறார்கள்

the-victims-of-sex-trafficking

உலக முதலியத்தின் தலைநாடாக இருப்பதாகப் பெருமை கொள்ளும் அமெரிக்காவில் பெண்கள்/ சிறு வயதினரின் நிலை எப்படி இருக்கிறது? உலக நாடுகளுக்கெல்லாம் குழந்தைகளை எப்படிப் பராமரிப்பது என்று புத்திமதி கொடுக்கும் மேட்டிமைப் பார்வை கொண்ட நாடான அமெரிக்காவில் சிறுமிகளும், சிறுவர்களும் பால் சந்தையில் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள் என்று இன்று ஒரு பத்திரிகை தகவல் கொடுத்திருக்கிறது. சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் இப்படி வருடம்தோறும் சந்தையில் அகப்பட்டுக் கொள்கிறார்களாம்.

http://www.huffingtonpost.com/2014/11/02/sex-trafficking-kids-us_n_6083890.html


ஐம்பதாண்டுகளாகத் தொடர்ந்த கொள்ளைகளும் வல்லுறவுகளும்: தேவாலயம்

Chicago_Priest_Rape_Pope_Cardinal_Church_Christianity_Jesus_Vatican_Abuse_Pillage_Rome_USA_Bishop

கருணை மார்க்கம், அன்பு மார்க்கம், அமைதி மார்க்கம்- இப்படித்தான் பொய்மையே பூச்சாகக் கொண்ட பல கருத்தியல்கள் உலகில் உலவுகின்றன. இவற்றில் சில வெறும் நம்பிக்கையை மட்டுமே கைக்கொள்ளச் சொல்லி மக்களை வற்புறுத்தும் மார்க்கங்கள். சில ஏதோ ஒரு புத்தகத்தை அனைத்தையும் படைத்த பரமபிதா ஒருவன் கொடுத்ததாகச் சொல்லி அந்தப் புத்தகத்தைப் பல்லாயிரக்கணக்கான மனிதரின் உயிர்களையும் விட மேலாகக் கருதி அவர்களைக் கொன்று கூறு போட்டாவது அந்தப் புத்தகத்தின் ‘புனித’த்தை நிலை நாட்டச் சொல்லும் கேவலத்தைத் தொடர்ந்து செய்யும் மார்க்கங்கள். அத்தனை மூட நம்பிக்கை, ஏதோ ஒருவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னதை அப்படியே நம்பும் அபத்தம்.

நம்பிக்கை மார்க்கங்கள் மட்டுமே அபத்தம் என்றில்லை. அறிவு பூர்வமாகச் சிந்திப்போம் என்று முழக்கத்துடன் உலகப் புர்ச்சியை நாடிய கருத்தியல்களும் இப்படி ஏதோ ஒரு சில ‘மேதாவிகள்’ 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எழுதி வைத்த சில புத்தகங்களில் என்றென்றைக்குமான விடுதலைப் பத்திரம் அடங்கி இருக்கிறது என்ற கற்பனாவாதத்தை அறிவியல் என்று உலக மக்களின் தலையில் சுமத்தி விடப் படாத பாடு பட்டு 20 ஆம் நூற்றாண்டை ஒரு பயங்கரக் கனவாக்கி இருந்தனர். அறிவு பூர்வமாகச் சிந்தி என்று யாராவது சொன்னால் அந்த மனிதன் ஒரு மகா மோசடிப் பேர்வழி என்று நாம் கருதக் கூடிய நிலைக்கு நம்மைக் கொண்டு நிறுத்தி இருக்கிறது இந்த புர்ச்சிப் பித்தலாட்டம்.

தம் வழியைத் தவிர வேறெல்லாம் பொய் என்று பிரச்சாரம் செய்யும் எந்த மார்க்கமும், எந்தக் கருத்தியலும் அடிப்படையில் வன்முறை மார்க்கமே, அதற்கும் அறிவியலுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அதற்கும் அறிவுக்குமே ஒரு தொடர்பும் இல்லை.

சென்ற இதழில் ஒரு அமைதி மார்க்கம் உலகில் என்னென்ன பயங்கரக் கொலைகளை, மகாபாதகங்களை, சொல்லவே மனம் பதைக்கும் அக்கிரமங்களை நடத்தி வருகிறது, எத்தனை லட்சம் மக்கள் தம் வீடிழந்து, ஊரிழந்து, நாடிழந்து, சுற்றமிழந்து அகதிகளாகப் பல்லாண்டுகளாகத் தவிக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் எழுதினோம். அதற்கு எதிர்பார்த்தது போலவே சப்பைக்கட்டு கட்டி ஒரு பதிலும் கிட்டியது. எத்தனை விவரம் கொண்டு வந்து கொட்டினாலும் தம் நம்பிக்கையே உண்மை, எல்லாத் தகவலும் பொய் என்று கருதுவோருக்கு விடிவு காலம் என்பது வரவே வராது.

இந்தக் குறிப்புக்குப் பிறகு சொல்ல என்ன இருக்கிறது என்றால் இன்னொரு அன்பு மார்க்கம், இந்தியாவெங்கும் இந்துக்களையும் இந்தியர்களையும் பாவிகள் என்றும், தேவனின் கருணைக்குரியவர்களாகவும், சொர்க்கத்துக்குப் போகத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக உடனே மதம் மாறுவதுதான் ஒரே வழி என்றும் பல நூறாண்டுகளாகவே போதித்து வந்த ‘அன்பு’ மார்க்கம் உலகெங்கும் எப்படி எல்லாம் க்ஷீணித்துப் போய் அஸ்திவாரத்திலேயே எல்லாம் இற்றுப் போகிற நிலையில் இருக்கிறதென்று பார்ப்போம்.

சிகாகோவில் இந்த ‘அன்பு’மார்க்கத்தின் ஒரு தலைமைப் பிரச்சாரகர் சமீபத்தில் ஓய்வு பெற்றுப் போகையில் பொதுமக்கள் பார்வைக்கு விடுவித்த 15,000 பக்க ஆவணங்கள் இந்த மார்க்கத்தின் பிரச்சாரகர்கள் சிறு குழந்தைகளை எப்படிப் பால் வற்புறுத்தல்களுக்கு ஆளாக்கினார்கள் என்பது குறித்த ஏராளமான தகவல்களைக் கொண்டிருக்கின்றன என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது.

இதற்குச் சில காலம் முன்பு இன்னுமொரு 5000 பக்க ஆவணக் கற்றை ஒன்றை இதே தலைமைப் பிரச்சாரகர் வெளிக் கொணர்ந்திருக்கிறார். அதிலும் இதே பால் வற்புறுத்தல்களின் சான்றுகள்தாம்.

இது ஏதோ ஒரு அமெரிக்க மாநிலத்தில் ஒரு சர்ச்சில் மட்டும் நடந்ததென்று நாம் நினைக்கத் தேவையில்லை.  அமெரிக்காவெங்கும் இந்தக் கருணை மார்க்கத்தின் பிரச்சாரக நிறுவனம் மீது தொடரப்பட்ட பற்பல வழக்குகளைச் சந்திக்க முடியாமல், உடன்படிக்கைக்கு இறங்கி வந்து கொடுக்க வேண்டி வந்த நஷ்ட ஈடு பல நூறு  மிலியன் டாலர்களுக்கு மேல் போயிருக்கும் போல் தெரிகிறது. அமெரிக்காவில் பற்பல மாநிலங்களில் இந்த மார்க்கத்தின் ஆலயங்கள் மூடப்பட்டு விற்கப்படுகின்றன. பல பள்ளிகளும் மூடப்படுகின்றன.

அதே போல இந்தியாவில் பற்பல மாநிலங்களில் இந்தக் கருணை/ அன்பு மார்க்கங்களில் பல பிரச்சாரகர்கள் நடத்தும் பால் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றித் தகவல்களும், போலிஸ் குற்றப் பத்திரிகைகள் பற்றிய தகவல்களும் தொடர்ந்து வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலேயே இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளமாக வெளி வந்திருக்கின்றன. ஏராளமானவை வெளி வராமல் இன்னும் மறைவிலேயே இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.

யூரோப்பிலும் பல நாடுகளிலும் இந்த அன்பு மார்க்கத்துப் பிரச்சாரகர்கள் பலரும் குழந்தைகள் மீது செலுத்திய வன்முறையும், பால் வல்லுறவும் குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பொதுவாகச் சொன்னால், அன்பு என்பதையே கடுமையான வக்கிரத்துக்கு உட்படுத்தி இருக்கிறார்கள் இந்தப் பிரச்சாரகர்கள்.

இனி இக்கட்டுரையைப் படித்து முழுத் தகவலையும் பெறுங்கள்.

இது போன்ற விவரமான கட்டுரைகள் இந்தியாவில் நடந்த, நடக்கும் வன்முறைகள் பற்றி ஏன் இந்தியப் பத்திரிகைகளில் வெளி வருவதில்லை?
இந்து சாமியார்கள் ஏதும் கேடு செய்தால் அதைப் பக்கம் பக்கமாகக் கட்டம் கட்டி வெளியிடத் துணிவதோடு, அதையே வைத்துப் பல வாரம் வியாபாரம் செய்யும் இந்தியப் பத்திரிகைகள் ஏன் அன்னிய மதங்களைக் கண்டால் கோழையாகி, வாலைக் காலிடுக்கில் வைத்துச் சுவரோரம் ஒண்டும் சோனி நாய்களாகி விடுகின்றன என்பதையும் நாம் யோசித்தல் நல்லது. புத்தி கெட்டு வக்கிரமான சினிமாக்களை எடுப்பதே நோக்கமாக உலவுவதோடு, எதையும் அரை வேக்காடாகவே அறிந்திருக்கும் சினிமா நடிகர்களும், ஊழல் நாயகர்களாக உலவுவதில் சிறிதும் நாணமே அற்ற அரசியல் நோய்களும் தினம் இந்து மதத்தையும், இந்து நம்பிக்கைகளையும், இந்து சமூகத்தையும் பெரும் தீரம் கொண்டு தாக்கி அறிக்கை விடுகையில், அதே தீரசூர வல்லவர்கள் இந்த ‘உலக’ விடுதலை மார்க்கங்களின் அவலங்கள் உலகெங்கும் சந்தி சிரித்தாலும் நம் நாட்டில் அவை இருப்பது ஏதோ நம் மக்களை உய்விக்கவே என்பது போல பாவலா செய்யும் அவலம் ஏன் விடாது நம்மைச் சூழ்கிறது? இதைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும்.

700 ஆண்டுகள் அப்படி ஒரு மார்க்கம் இந்தியரை, இந்துக்களை ஒடுக்கி அடிமைகளாக வைத்திருந்தது, உண்மைதான். 300 ஆண்டுகள் இன்னொரு யூரோப்பிய மார்க்கம் இந்தியரை, இந்துக்களை ஒடுக்கி, அடிமைகளாக வைத்ததோடு பெரும் சுரண்டலில் உலக நாடுகளிலேயே பெரும் தரித்திர நாடாகவும் இந்தியரை ஆக்கிப் போனது உண்மைதான். ஆனால் அந்தக் காலனியங்கள் முடிவுக்கு வந்து 65 ஆண்டுகளுக்கு மேலாகியும் நம் ‘பெருந்தலை’கள், அறிவு சீவிகள் ஏன் காலனிய சக்திகளின் காலணியைத் தாங்கித் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.  சுதந்திரம் என்பது அத்தனை தூரம் எட்டிக்காயாகவா இருக்கும் இந்த அன்னியக் கருத்தியல் அடிமைகளுக்கு? அத்தனை அடிமை புத்தியா எத்தனை படித்தும் சிறிதும் கற்காத இந்த இந்தியருக்கு?

http://www.thedailybeast.com/articles/2014/11/06/chicago-archdiocese-s-shocking-priest-abuse-revealed.html

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.