kamagra paypal


முகப்பு » அஞ்சலி, ஆன்மீகம், ஆளுமை, உயிரியல், மொழிபெயர்ப்பு, வீடியோ

பி.கே.எஸ். ஐயங்காரின் அதிமானுட யோகா முறைகள்

இறுகப்பற்றிய கால்சராயோடு கரதலமாய்த் தரையில் விழாமல் நிற்பது நகைப்புக்குறியதாக இருந்தாலும், தியானம் என்பதாக இல்லாமல் வேர்க்கவிறுவிறுக்க உடல்வலிமைக்காகச் செய்யப்படும்  பயிற்சியாக அமெரிக்காவில் யோகா நடைமுறையில் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் குறைந்தபட்சம் 2500 ஆண்டுகள் நெடிய ஆன்மிகப் பாரம்பரியம் கொண்டது யோகா. இந்த இருபதாம் நூற்றாண்டில்  தென்கிழக்கு ஆசியாவைத் தாண்டி யோகா பிரபலமடைய யோகா குரு பி.எஸ்.ஐயங்கார் முதன்மையான காரணம் ஆவார். பூனாவில் தனது 95ஆம் வயதில் கடந்த புதன் கிழமை அன்று இறந்துபோனார். தனது தொன்னூறு வயதின் ஆரம்பக் காலகட்டம் வரை கரதலமாக யோகா செய்து வந்தார்.

Yoga: The Art of Transformation எனும் கண்காட்சியை நடத்தி வரும் ஸ்மித்ஸோனியன் அமைப்பின் பொறுப்பாளரான டெப்ரா டயமண்ட் “இன்றைக்கு உலகத்தில் யோகாவின் பரவலான விழிப்புணர்வுக்கும் புரிதலுக்கும் இவரது வகுப்புகள் முதன்மையான காரணம். மற்ற வகை யோகா பயிற்சிகளெல்லாம் இவரது பாடத்திலிருந்து கிளை பிரிந்து சென்றவையே”, என்கிறார். இக்கூடத்தில் ஐயங்கார் அவர்களின் பல காணொளிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. 1938 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதல் யோகா காணொளியும் பார்வையாளர்களுக்காக இக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஐயங்காரின் குரு கிருஷ்ணராஜ உடையார் அவர்களுடன் செய்யும் தியான மூச்சுப்பயிற்சிகளையும், யோக ஆசனங்களையும் இக்காணொளியில் பதிவு செய்துள்ளனர். மனதளவிலும் உடலளிவிலும் இவர்களுக்கு இருக்கும் உறுதி நம்மை அசரவைக்கிறது.

இவரது நீண்டகால மாணக்கரும், அமெரிக்கா கொலம்பியா மாநகரில் Unity Woods Yoga Center நடத்திவருபவருமான ஜான் ஷுமாக்கர் கூற்றுப்படி, உடல் சார்ந்த பயிற்சிகளும் ஆன்மிக தியானங்களும் இருவேறானவையாக ஐயங்கார் பார்க்கவில்லை என்கிறார். “உடல் என்பது ஆன்மிக நிலையின் பருப்பொருள் மட்டுமே. நம் தேகேந்திரயங்களை வசப்படுத்துவது என்பது மனம், புத்தி, ஆத்மா, மூச்சு, உணர்வு சம்பந்தபட்ட கலவை.” இந்தப் பயிற்சிகள் கூட்டத்தினரிடம் கைதட்டல் வாங்குவதற்காகச் செய்யப்படுபவை அல்ல; தியான பயிற்சிகளின் மூலம் நமது தேக ஆரோக்கியத்துக்கு  அவசியமாகிறது” , என்றார் ஷுமாக்கர்.

ஸ்மித்சோனியன் அமைப்பின் இந்திய அமெரிக்க மரபு திட்டவமைப்புக் குழுவின் தலைவர் மோசம் மோமையா, “யோகாவுக்கு அமெரிக்காவிலும் நெடிய வரலாறு உண்டு. ஆனால் இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் பயிற்சிகள் அனைத்தும் ஐயங்கார் அவர்கள் முயற்சியின் பயனால் விளைந்தவை”, என்றார். 1956 ஆம் ஆண்டு அமெரிக்கா வந்திருந்தபோது தற்போது நாம் சொல்லும் ஐயங்கார் யோகா முறைகளை அறிமுகப்படுத்தி வைத்தார். அடுத்த இரு தசாப்தங்களில் அது மிகவும் பிரபலமாகிவிட்டது. “அஷ்டாங்க யோகாவில் துல்லியத்தையும் தேர்ச்சியையும் முக்கியபாணியாக அறிமுகப்படுத்தியவர். அபிரிதமான சக்தியை உழைப்பாக மாற்றிவிட வேண்டும் எனத் துடியாக இருந்த 1980களின் இளைஞர்களிடையே இது தீ போலப் பரவிவிட்டது. “

யோகா பயிற்சிகளை அமெரிக்காவுக்கு ஏற்றவாறு மாற்றினார். “குரு ஒரு மாணாக்கருக்கு பல வருடங்கள் சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாக இருந்ததை ஒரு வகுப்பின் பல மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் சொல்லிக்கொடுக்கும் பயிற்சி மையமாக மாற்றியவர் ஐயங்கார்”, என்றார் ஷுமாக்கர். வளைய சிரமப்பட்ட மாணவர்களுக்கென நவீன முறை பயில் சாதனங்களாக பட்டா, தட்டைகட்டை, கயிறுகள், கற்கள், சின்ன மரத்துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு சுலபமாக்கினார். ஹிப்பிக்கள் நிரம்பிய 1970களில் கூட அவர் பொது ஜனங்களுக்கான பயிற்சிகளை மட்டுமே சொல்லிக்கொடுத்தார். “எங்களுக்குப் பிடிபடாத வஸ்துக்களை அவர் ஓரளவு விலக்கிவைத்து யோகாவை அறிமுகப்படுத்தினார். விளக்குகளை நாங்கள் அணைக்க மாட்டோம், இசை இருக்காது, வாசனை வத்திகளை உபயோகப்படுத்தமாட்டோம். வேறு பல விஷயங்களில் எங்கள் கவனம் முழுவதும் இருந்தது”, என்கிறார் ஷூமாக்கர்.

இத்தனை இருந்தும் ஐயங்காரது பயிற்சி முகாம்கள் எளிதானவை அல்ல. “பி.கே.எஸ் எனும் அவரது பெயரை beat-kick-shout அல்லது beat-kick-slap என வேடிக்கையாக நாங்கள் கூறுவதுண்டு. அவருடன் பயிற்சி செய்வது பரவசமூட்டக்கூடிய, பயமுறுத்தும், சிரமமான அனுபவம். ஆனால் அந்த அனுபவத்தை இரு வார்த்தைகளில் நினைவுகூற வேண்டும் என்றால் அர்ப்பணிப்பு மற்றும் ஆற்றுப்படுத்தும் அனுபவம் எனலாம்”, என்றார் ஷூமாக்கர். ஒரு முறை அமெரிக்காவில் மாநாட்டை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவதற்காக விமான நிலையத்தில் காத்திருக்கும்போது ஷூமாக்கரை டால்பின் முறை எனும் கரதலப் பயிற்சியைச் செய்யச் சொல்லியிருக்கிறார் ஐயங்கார். “இதென்ன பிரமாதம் , இதை விடப்பெரிய வித்தைகளைச் செய்வேனே என நினைக்கும்போதே இது மேலோட்டமான பயிற்சி மட்டுமே என்பதைக் காட்டிவிடுவார்.”

இப்படிப்பட்ட பல கடினமான யோகா முறைகளை 1977 ஆம் ஆண்டு பதிவு செய்த ஒரு பயிற்சி வகுப்பின் காணொளியில் கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம். எவ்விதமான முயற்சியும் செய்யாதது போல பிரட்சல் பாணி வடிவங்களில் தன்னை மாற்றிக்கொள்கிறார். தங்கள் தோள்பட்டைகளை விரிவாக்கிக்கொள்வதற்காக விட்டத்திலிருந்து தொங்கும் மாணவர்களையும், ஓர் அறை முழுமையுமாக காக்கி நிற அரைநிஜாருடன்  அமெரிக்க மாணவர்கள் பயில்வதையும் பார்க்கலாம். பத்தாவது நிமிடத்தில் நடப்பது தான் நம் கண்களையே குழப்படிக்கும் ஒரு வித்தை. “டாங், டாங், டாங்” என மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் அதே மாணவர்கள் தங்கள் இடத்திலிருந்து சிறிது கூட நகராதது போல இருந்தபடியே மிகக் கடினமான யோகா பயிற்சிகள் செய்வதை நம்பவேமுடியவில்லை.

யோகியில்லாதோருக்கு ஐயங்காரின் உடல் நெளிவுகளும், முறுக்கல்களும், தேக உறுப்புகள் வழி சமநிலை செய்வதையும் பார்ப்பதற்கு கடினமானப் பயிற்சி போக இருக்கும். ஆனால் ஷூமாக்கரின் கூற்றுப்படி அவரது குருவின் மிக மேலான சாகசம் ஆச்சரியப்படும் வகையில் மிக எளிமையானதாகும். தனது மாணவர்களுக்காக ஐயங்கார் அவரது ஆரம்பக் காலத்தில் செய்த ஒரு பயிற்சிக்கூடத்தில் அதைச் செய்துகாட்டியிருக்கிறார். “முதலில், ஒலிவாங்கிக்கு அருகே சென்று மூச்சை உள்ளிழுத்தார். அவர் மூச்சை இழுத்தார், இழுத்தார், இழுத்தார், இழுத்துக்கொண்டே இருந்தார். மனித சாத்தியங்களுக்கு அப்பார்பட்ட வகையில் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே சென்றார். அவரது யோகா முறுக்கல்களும், உடல் நெளிவுகளையும் நினைத்துப் பார்ப்பவர்களுக்கு இது சாதாரண வித்தையாகத் தெரியலாம். ஆனால்… இப்படிப்பட்ட அசாத்தியமான மூச்சுப் பயிற்சியை செய்வதென்பது… அதுவும் அத்தனை பெரிய கூட்டத்தின் முன்னிலையில் செய்து காட்டியது… மனம் உடல் சாத்தியங்களுக்கெல்லாம் அப்பார்ப்பட்ட ஒன்று…”

மூலம்http://www.theatlantic.com/international/archive/2014/08/bks-iyengars-amazing-contortions/378895/

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.