kamagra paypal


முகப்பு » மகரந்தம்

மகரந்தம்


இரான்: பெண்கள் பத்திரிகைக்குத் தடை

Shahla_Sherkat _journalist_monthly_Zanan-e Emruz_Iran_Magazine_Journal_Women_Feminist_Rights_Iran_Muslim_Rights_Islam

ஷாஹ்லா ஷேர்கட் என்னும் இரானியப் பத்திரிகையாளரின் படத்தைப் பார்த்தால் இவர் இரானியர் என்று உங்களுக்கு உடனே புரியாமல் இருக்கலாம். பல மேற்காசிய முஸ்லிம் பெண்கல் தற்காலத்தில் கட்டாயப்படுத்தப்பட்டு அணியும் தலை முக்காடு, கருப்பு அங்கி போன்றனவற்றோடுதான் காட்சி தருகிறார். ஆனால் தோற்றத்துக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் இஸ்லாமியத்தின் காவலர்களுக்கு அதெல்லாம் போதவில்லையாம். கருத்தைத் துளைத்து, வாழ்வைத் துளைத்து எங்கும் தம் கருத்தில் எது இஸ்லாமோ அதையே எல்லாரும் ஒரே அச்சில் வார்த்த மாதிரி கடைப்பிடிக்க வேன்டுமென்று வற்புறுத்தாமல் இருந்தால் தம் அதிகாரத்தை எப்படித்தான் அவர்களால் நிலைநாட்டிக் கொள்ள முடியும், இல்லையா? ஷாஹ்லா நடத்தும் பத்திரிகையில் பெண்ணியக் கருத்துகள் பரப்பப் படுகின்றன என்று குற்றம் சாட்டி அவரை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்.

இது அவருக்குப் புது அனுபவம் இல்லை. அவர் பத்தாண்டுகள் நடத்திய ஒரு பத்திரிகையை ஏற்கனவே அஹமதிநிஜாத் என்ற  கடுமைவாத இஸ்லாமிஸ்டின் முன்னாள் அரசு மூடி விட்டது. சமீபத்தில் பதவிக்கு வந்த ரோஹானி என்பாரின் ஆட்சியில் சிறிது கடுமை குறைந்து சுதந்திரச் சிந்தனைக்கு இடம் கிட்டும் என்று பலரால், குறிப்பாக இரானியப் பெண்களால் எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எல்லாம் பெண்களுக்கு உரிமை கொடுத்தால் அப்புறம் அதென்ன இஸ்ளாமிசம்? முதல் கட்ட நடவடிக்கையே பெண்களை வீட்டில் அடைப்பதுதானே இஸ்லாமியக் கடும்வாதத்தின் நோக்கம்? உலகில் உள்ள பல மதவாதங்களுமே பெண்களைத்தான் முதலில் இலக்காக்கிச் சிறைப்படுத்துகின்றன.

செய்தியைப் படித்து இதில் மேலும் என்னென்ன சிக்கல்கள் உண்டு என்று கவனியுங்கள். இந்திய இஸ்லாமிஸ்டுகளோ, இந்திய முற்போக்குகளோ, இந்தியப் பகுத்தறிவு ஜோதிகளோ இதைப் பற்றி ஏதும் உருப்படியாகச் சொல்வார்கள் என்று நாம் யாரும் எதிர்பார்க்க மாட்டோம்தானே? அவர்களுக்கு இந்து சமயக் கடுமை வாதிகள் மட்டுமல்ல, மிதவாதிகள் கூட எதைப் பற்றி என்ன சொன்னாலும்தான் பொத்துக் கொண்டு ஆத்திரம் வரும். இஸ்லாமிசம், தீவிரக் கிருஸ்தவம், கொடும் கம்யூனிஸம் போன்ற செமிதிய மதங்கள் என்ன செய்தாலும், சொன்னாலும் அது பொன்னுலகிற்கு வழி என்றுதான் தெரியும். என்ன செய்வது காலனியத்தில் ஆயிரம் ஆண்டு அடிமைப்பட்டவர்களின் மரபை வேறு யார்தான் தொடர்வது? இவர்கள் தொடர்கிறார்கள். அப்படி ஒரு கடமை வீரர்கள்!

http://www.theguardian.com/world/iran-blog/2014/sep/05/iran-editor-feminist-views


பார்: மாயா... மாயா?

universe-hologram_2f_Projection_3d_Theory_Galaxy_Earth_Experiments_Science_Physics

பேரண்டமே மாயத்தோற்றமா என்றும் அகில உலகுமே ஹோலோகிரம்தானா (hologram) என்றும் இயற்பியல் ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தேகம் வந்தது. தொலைக்காட்சியில் தெரியும் பிம்பங்களுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியும் என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன எண்ணுவார்கள்? ‘டிவி பெட்டிக்குள் இருந்தாலும், நம்முடையது முப்பரிமாண உலகம்! நாம் அனைவருமே நிஜம்!!’ பூவுலகின் மனிதர்கள் கூட இப்படித்தான் கற்பனையில் வாழ்கிறோமா என்பதை சோதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். மென் இன் பிளாக், மேட்ரிக்ஸ் போன்ற திரைப்படங்களில் இது போன்ற கற்பனைகளைப் பார்த்து இருப்போம். நீல் டைசன் எடுத்த சமீபத்திய காஸ்மோஸ் தொலைக்காட்சித் தொடரிலும் இதே கேள்வியை விஞ்ஞானபூர்வமாக எழுப்பினார்கள். ஆய்வகங்களில் எவ்வாறு கோட்பாட்டில் இருந்து நடைமுறை பௌதிகவாதிகளுக்கு இந்த சோதனை விடை கொடுக்கும் என்னும் விளக்கத்தை இங்கே அறியலாம்.

http://gizmodo.com/physicists-want-to-know-if-were-all-actually-living-in-1627042162


இங்கிலாந்து: வல்லுறவும் வெறுப்பும்

Rotherham-Child-Abuse-England_Pakistani_Faces_UK_London_Kids_Molest

லன்டனில் இருந்து மூன்று மணி நேர தூரத்தில் ரோட்டர்ஹாம் இருக்கிறது. குழந்தைகள் விளையாடும் உள்ளரங்குகளில் சிநேகிதமாக சக வயது சிறுவர்கள் இயல்பாக பழக ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சம் சாக்லேட், கொஞ்சம் ஐஸ் க்ரீம் என்று தூண்டில் போட்டு, தங்களின் புரவலர்களிடம் அறிமுகம் செய்கிறார்கள். பெரும்பாலும் பாகிஸ்தானிய வம்சாவளியினர். உள்ளுரில் வாடகை வண்டி ஓட்டுபவர்களும் தெற்காசிய உணவகங்கள் வைத்திருப்பவர்களும், வலை போட்டு குழந்தைகளை போதை மருந்திற்கும் மதுவிற்கும் அறிமுகம் செய்விக்கிறார்கள். அதன் பின் மிரட்டுகிறார்கள். தங்களுக்கு அடிபணிய வைத்திருக்கிறார்கள். மேற்கத்திய உலகில் பெண்களுக்கு உரிமையும் காவல்துறையின் உதவியை நாடினால் பாரபட்சமற்ற உதவியும் சமூக மதிப்பும் இருப்பதாக பரவலாக எண்ணப்படுகிறது. ஆனால், பன்னிரெண்டு வயதுச் சிறுமி தன்னை வல்லுறவில் ஈடுபடுத்துகிறார்கள் என்று காவலர்களிடம் முறையிட்டாலும், எள்ளி நகையாடப்பட்ட அவலத்தை இந்தச் செய்தி சொல்கிறது.

http://www.nytimes.com/2014/09/02/world/europe/reckoning-starts-in-britain-on-abuse-of-girls.html


துருக்கி: அனாதை விலங்குகளுக்கு இலவச உணவு

Stray_Dog_Cat_Dispenser_Food_Turkey_Recycle_Cans_Trash_Environment_Animals_Orphans_Feed_Good

தமிழ்நாட்டைப் போல்தான் துருக்கியும். தெருவெங்கும் திரியும் நாய்களும் பூனைகளும் சென்னையில் மட்டுமல்ல; இஸ்தான்புல் நகரத்திலும் உண்டு. இந்தப் பிராணிகளுக்கு உணவு எப்படி தருவது என்னும் பிரச்சினையை தீர்த்தவருடன் டெர் ஸ்பீகல் பேட்டி எடுத்திருக்கிறது. சாலையில் கழுத்துப்பட்டி இல்லாமல் அலையும் அனாதை விலங்குகளை ஜீவகாருண்ய முறையில் கொல்லவும் அழைத்துச் செல்லவில்லை. அதே சமயம், கொடை கேட்டு ஒவ்வொருவரிடமும் பணமும் கோரவில்லை. மக்கள் தூக்கிப் போடும் காலி பாட்டில்களையும் கோக் புட்டிகளையும் வைத்துக் கொண்டே ஒன்றரை இலட்சம் தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் பெட்டிகளை நிறுவி வருகிறார்.

http://www.spiegel.de/international/turkish-stray-dog-feeding-machine-a-model-for-social-design-a-986392.html


அமெரிக்கா: பள்ளிக்கூடம் வேண்டாம்

Education_Home_School_kids_Children_Charter_Public_Future_House_Stay_At_Outside_Rich_Parents_Poor_Ed_unschooling-ben-hewitt_h

அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்திருக்க வேண்டும். ஆறரை மணிக்கு ஸ்கூல் பஸ் வந்துவிடும். மாலையில் வீடு திரும்பினால் மூன்று மணி நேர வீட்டுப் பாடம். அதன் பின் இன்ன பிற பாடத்திட்டம் சாரா புறச் செயல்களுக்குத் தயாராகி அணிவகுக்க வேண்டும். இந்த அமெரிக்க வாழ்க்கையை ஹூவிட் தம்பதியினர் வெறுத்தார்கள். தங்கள் மகன்களுக்கு இந்த மாதிரி சேணம் கட்டிவிட்ட அட்டவணை வழி வாழ்வைத் தர விரும்பாமல், பள்ளிக்கூடத்திற்கே அனுப்பாமல் இருந்த அனுபவத்தை இங்கேப் பகிர்கிறார்கள். அமெரிக்காவில் பாடசாலை சென்று படிக்காவிட்டாலும், வீட்டிலேயே முழுமுச்சாக பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். அதையும் இவர்கள் செய்வதில்லை. கூடை பின்னுகிறார்கள். காட்டிற்குள் சென்று இயற்கையைக் கற்கிறார்கள். அப்பாவும் அம்மாவும் ஓரளவு வசதி படைத்தவர்களாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும், அமைதியாக அனுபவித்து ஆராய்ந்து கற்கலாம். அன்றாடங்காய்ச்சியாக உழைப்போருக்கு இதெல்லாம் சரிப்படுமா?

http://www.outsideonline.com/outdoor-adventure/nature/Unschooling-The-Case-for-Setting-Your-Kids-Into-the-Wild.html

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.