வாசகர் மறுவினை

w008

திரு பிரகாஷ் சங்கரனின் கட்டுரை தெளிவான மொழியில் மிகக் கடினமான ஒரு பொருளை திறமையுடன் தந்திருக்கிறது.

தமிழில் இத்தகைய கட்டுரைகள் தேவைகள் அதிகம், ஆனால் அரிதாகவே வருகின்றன. சமீபத்தில் ஒரு புத்தகத்தில் moving bodies என்ற ஆங்கிலச் சொற்கள் ‘இயங்கும் உடல்கள்’ என மொழிபெயர்க்கப்பட்டிருந்தன!

‘அடியிலிருந்து ஒளியூட்டுவது’ என்பது மிகப் பொருத்தமான சொற்றொடர். மொழிக்கும் அடியிலிருந்து ஒளியூட்டுவது மிகவும் அவசியம்.

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பி ஏ கிருஷ்ணன்

    ******************

சி.சு.செல்லப்பா- தமிழகம் உணராத வாமனாவதார நிகழ்வு

இதுவரையிலான, இந்த கட்டுரைத் தொடரை மறுபடியும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஒரு ஜிக்சா புதிர் போல, ஒவ்வொரு நினைவுத் துண்டுகளும் இயல்பாக இணைந்து சி.சு.செல்லப்பாவின் சித்திரத்தை முழுமை செய்வது போல இருக்கிறது. தொடர் முழுவதுமாக தன் தலைப்பை ‘தமிழகம் உணராத’, ‘வாமனாவதார நிகழ்வு’ என்பதை நியாயப்படுத்திக்கொண்டே செல்கிறது. தன் நெருங்கிய நண்பர்களும் ஆதர்ஸங்களுமே தன் மீது நம்பிக்கை இல்லாதிருந்த நிலையில், அவர்களையும் அதில் முதலீடாக சேர்த்துக்கொண்டு தான் விரும்பியதை, மிகவும் திடமாக நம்பியதை விடா முயற்ச்சியுடன் முன்னெடுத்து சென்றிருக்கிறார், செல்லப்பா. அந்த முயற்சி மூன்றடியே இருந்தாலும், அதன் தாக்கம் தமிழ் நவீன இலக்கியத்தையே எப்படி மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது என்பதை கட்டுரை இயல்பாக சொல்லுகிறது. இத்தனை வருடங்களுக்கு பின் இதை திரும்பி பார்க்கும்போது இந்த மாறுதல் எத்தனை குழுக்கள் அரசியல்கள் எல்லாம் தாண்டி வந்திருக்கின்றது என்று பார்க்க முடிகின்றது. இதுவொரு சாதாரண ஆவணக் கட்டுரையாக இருந்தால், கீழே அமர்ந்து மேடையில் நடக்கும் சாகஸ நாடகத்தைப் பிரமித்துப் பார்ப்பவர்களாக இருந்திருப்போம். ஆனால், இந்த நாடகத்தில் பங்குபெற்ற ஒருவரது பார்வையிலிருந்து பார்ப்பதென்பது வேறு ஒரு அனுபவத்தைத் தரக்கூடியது. அவர் தாமே இந்த நாடகத்தில் பங்குபெற்ற தருணங்கள், திரைக்குப் பின்னிருந்து நாடகத்தையும் அதை தாண்டிய பார்வையாளர்களையும் பார்த்த கோணங்கள், அந்த நாடகம் அடைந்த பரிணாம வளர்ச்சி என்று எல்லாவற்றையும் சேர்த்து தருவது ஒரு இணை நாடகமாகவே இருக்கிறது.

செல்லப்பாவைப் பற்றி நாம் வேறு எங்கும் அறிந்துகொள்ள முடியாத விஷயங்கள், அவரது உடல் மொழி, அவரது அன்றாட சூழலில் அவரது இலக்கிய செயல்பாடுகள், அவரது குடும்பம், நட்பு வட்டம் என்று ஓரளவு அவரது வாழ்வில் ஒரு நாளையாவது நம்மால் கற்பனை செய்துகொள்ள முடியுமளவிற்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதில் வெசா குறிப்பிட்டிருக்கும் முதல் சந்திப்புகள் எல்லாமே சுவாரஸ்யமானவை. இன்றும் நினைவில் இருக்கக்கூடிய அந்த முதல் எண்ணப்பதிவுகள் இன்னும் புத்தம்புதியதாக இருக்கின்றன. தருமூ சிவராமுவை முதன் முதலில் எதிர்பாராது சந்தித்தது, பி.எஸ்.ராமையாவை சந்தித்தது போன்றவை, நாமும் அவருடன் சேர்ந்து அந்த ஆளுமைகளை முதன்முதலில் சந்திக்க போவது போன்ற ஒரு ஆவலை எழுப்புகிறது. இன்னுமொன்று, இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா படைப்பாளிகளும் நினைவுகூரப்பட்டிருப்பது வெறும் ஆளுமைகளாக இல்லை, மனிதர்களாக அவர்கள் படைப்புகளுடன் அவர்கள் தனிப்பட்ட நேர்மையையும் சேர்த்தே. அதனால் தான், செல்லப்பாவைப் பற்றி எந்த தயக்கங்களும் இல்லாமல் அவரது அத்தனை முகங்களையும் பற்றி பேச முடிந்திருக்கிறது. ஏனென்றால், செல்லப்பா தன் பலவீனங்களையும் மீறி கருத்தளவிலும் நடைமுறையிலும் மிகவும் நேர்மை மிக்கவராக மனிதர்களை, நட்புகளை மதிப்பவராக இருந்திருக்கிறார்.

ஆட்டவிதிகளும் பாத்திரங்களும் தெளிவாக வகுக்கப்பட்டுவிட்ட, பரிட்சார்த்தத்தைவிட சுய தேடலுக்காகவென முதிர்ந்துவிட்ட இன்றைய எழுத்துலகிலிருந்து, முதன் முதலாக நவீன இலக்கியத்தை அறிந்துகொண்டு அதற்கான களத்தை அமைக்க முயன்ற ஒரு தலைமுறையை திரும்பிப்பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. எப்படி ஒவ்வொரு அலையாக நாம் இதுவரை தள்ளப்பட்டிருக்கிறோம் என்று பார்க்க முடிகிறது. இங்கிருந்து அவர்களது உலகம் மிகவும் வித்தியாசமானதாக ஒரு இலட்சியவாத அந்தரத்திலிருப்பதாக தோன்றுகிறது. சி.சு.செல்லப்பாவினுடையது என்னுடைய தாத்தாவின் தலைமுறை. தம்முடைய செல்வங்களையெல்லாம், தாம் கண்ட புதிய இலட்சியவாதங்களுக்காக, எவரையும் பொருட்படுத்தாது கரைக்க துணிந்தவொரு தலைமுறை. அவர்களிடமிருந்த நாம் இன்று என்ன பெற்றுக்கொள்ள முடியும் என்று சிந்திக்க இது போல ஒரு கட்டுரை மிகவும் உதவியாக இருக்கிறது.

இந்த கட்டுரைகளுடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு பழுப்பேறிய (கம்பீரமான தெளிவான இளைஞனாக செல்லப்பா, மொட்டைமாடியில் வரிசையான நாற்காலிகளில் குடும்ப தலைவர்கள், அவர்கள் பின்னே அமைதியாக நிற்கும் குடும்ப தலைவிகள், பின் சாய்வு நாற்காலியில் வயதான செல்லப்பா) புகைப்படத்தையும் போல இக்கட்டுரைத் தொடர் செல்லப்பாவை மட்டுமல்லாது, அவரது காலகட்டத்தையே ஆவணப்படுத்துகிறது.

ச.அனுக்கிரஹா

    **********************

It was an excellent article by Lalitha Ram on Seenakkutti. Of the articles written by Lalitha Ram, this one shares the top spot, other being the Kanjira’s Story. It sometimes happens that people who had contributed so much to music, does not get their share of the limelight. You people made sure that it was a person worthy to be remembered and must be too. Well done Solvanam & Lalitha Ram.

M.P.Ramachandran

    ************************

Dear Editor,

I just read Siva’s story – ‘Yakaavaaraayinum Naa kaakka‘. It is written in a very fluid style and involves the reader with the happenings as they occur. My hearty congratulations / appreciations to the writer. The simile of milk boiling and spilling out ha been used beautifully.

Regards,

R. Jagannathan

    *******************

அடப்பாவமே. அப்பாவுக்கு பாதுஷா தின்னக் கொடுத்துவைக்கல. பட்டாசு கொளுத்தவும் கொடுத்துவக்கலையே !

ராஜசுப்ரமணியன்

    *********************

நெஞ்சைத்தொடும் கதை. சரளமான நடை. எதிர்பாராத திருப்பம்.

ராஜசுப்ரமணியன்

    ***********************