பொது பண்பாட்டுக்குள் நுழைந்த வானியல்

வேதாந்த துறவியாக இருந்த ஜான் டாப்ஸன் இரவு நேரங்களில் மடாலய சுவரேறி குதித்து தொலைநோக்கி வழியாக விண்மீன்களை பார்த்துக் கொண்டிருப்பார். இந்த தியானத்துக்காக மடாலயத்தை விட்டு செல்ல நேர்ந்தது. அறிவியல் ஒரு ஆன்மிக இசையாக முடியுமா என்றால் மானுடம் உருவாக்கிய எந்த ஆன்மிகக்குறியீட்டைக் காட்டிலும் வலுவான ஆன்ம உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யும் தன்மையை தன் தொலை நோக்கி காட்டிய பிரபஞ்ச தரிசனத்தில் கண்டவர் டாப்ஸன். வானியலை உலக மக்களின் பொதுவாழ்வின் அங்கமாக்க வேண்டும் என்பதற்காகவே அவர் உருவாக்கிய எளிமையான ஆனால் வலிமையான டாப்ஸனியன் வான்நோக்கி ஒரு வானியல் புரட்சியை கல்வி நிலையங்களில் ஏற்படுத்தியது எனலாம்.