சிவிங்கி – அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 3 in the series சிவிங்கி

அழுக்கான ஈரச் சிறகுகளை உடம்போடு உயர்த்தி மடித்துச் செருகிச் வழுவழுப்பான கால்கள் வெளித்தெரிய இரண்டு  தேவதைகள் கிணறுகளைச் சுற்றித் தாழப் பறந்து கொண்டிருந்தன. ஈரவாடையோடு அங்கங்கே நகம் உதிர்ப்பது போல் சிறு சிறகு உதிர்த்துக் களைந்தபடி கண்ணில் மையிட்ட அத்தேவதைகள் வாய்ச் சண்டையிட்டுக் கிணறுகளை சுற்றிப் பறந்தபடி

ஜகன்னாத பண்டித ராஜா -3

This entry is part 3 of 3 in the series ஜகன்னாத பண்டித ராஜா

இந்த ஸ்லோகங்கள் ஜகன்னாதர் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் எழுதினவையாக இருக்கக்கூடும். ஏனெனில் இதில்
தம் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்;
தாமியற்றிய செய்யுள்களின் இனிமையை, நயத்தை, உயர்வாகப் பெருமிதத்துடன் பேசுகிறார்;

நன்றே செய்வாய், பிழை செய்வாய்!

“எல்லாமே ரெண்டு வரி, மூணுவரி கவிதைதான். இப்பம் எனக்கு ஒரு யோசனை பாத்துக்கிடுங்கோ. நம்ம ஓட்டல்லே டபுள் ரூம், சூட் எல்லாம் சேத்து எழுவத்திரண்டு ரூம் இருக்கு… எல்லாமே ஏசிதான். எல்லா ரூம்லேயும் நாலு செவுருலேயும் நம்ம கவிதைகளைப் பெரிய எழுத்திலே, ஓவியரைக் கொண்டு எழுதி பிரேம் போட்டு மாட்டுனா என்னாண்ணு

மிளகு   அத்தியாயம் ஐம்பத்தேழு

வரிசையாக மூன்று சாரட்டுகள் ஐந்து நிமிட இடைவேளையில் வந்து நிற்கின்றன. மிர்ஜான் கோட்டையில் மகாராணி வசிக்கிறார் என்பதோடு அவருடைய பிரியத்துக்குரிய வைத்தியரும் மனைவியும் கூட கோட்டைக்குள் வசிப்பதால், நடந்து கூட வந்திருக்கலாம். மொத்தம் பத்து நிமிடம் தான் பிடித்திருக்கும். ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அதை அனுமதிப்பதில்லை என்பதால் ரதங்கள் குதிரை பூட்டி வரவேண்டியிருக்கிறது. 

அதிரியன் நினைவுகள் -25

This entry is part 24 of 24 in the series அதிரியன் நினைவுகள்

இத்தகைய தருணத்தில் ஒழுக்கவாதிகளுக்கு என்னை வெற்றிகொள்ள ஓர் எளிதான வாய்ப்பு கிடைத்தது. நான் படும் இன்னல்களுக்கு, என்னுடைய மிதமிஞ்சியபோக்கும், நெறிமுறைகளில் நான் இழைத்த தவறுகளும் காரணம் என்பது என்னை விமர்சிக்கும் மனிதர்களின் குற்றசாட்டு. ஆனால் எனக்கோ நெறிமுறைகளில்தவறுதல், மிதமிஞ்சியபோக்கு என்பதெல்லாம்  கடினமான விஷயங்கள், அத்தகைய சிரம்ங்கள், அவர்கள் கருத்திற்கு  முரண்படும் விஷயத்திலும் இருந்தன. எனது குற்றத்தை, அப்படியொன்று உண்டெனில், கூடுதல் குறைவின்றி திரும்ப பரிசீலிக்க விருப்பம். இக்காலத்தில், தற்கொலை என்பது அடிக்கடி நடக்கும் சம்பவம், அதிலும் இருபது வயதில் இறப்பது பரவலாக நிகழ்கிறது.

கடன்காரன்

எங்கிட்ட ஐம்பதாயிரம், ரெஜினாக்கிட்ட ஐம்பதாயிரம், அப்புறம் எங்க க்ளாஸ்மேட்ஸ் சதீஷ்கிட்ட அம்பதாயிரம், மகேஷ்கிட்ட எழுபதாயிரம்னு நிறைய பேர்ட்ட இப்டி வாங்கியிருக்காண்டா, இன்னும் யார் யார்லாம் இருக்காங்கன்னு தெரியல! சத்தியமா உன்னோட பேரு என் நெனப்புக்கே வரலடா, வந்திருந்தா உன்னையாவது காப்பாத்தியிருக்கலாம்..’ என்று கவின் சொல்லிக்கொண்டே போக என்னால் என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தேன்.

காலத்தைக் கைப்பிடித்து கண் விழிக்கும் புதைநிலம்

என்றிருந்தோ
ஒரு தொந்தம்?
இன்றில்லா முன்னோர்
எவர் எவருடனோ
ஒரு பந்தம்?
தொல்புதைவின்
தொன்றிருந்தா
என் தொடர்ச்சி?
வென்று விடத் தான்
பார்க்கிறேன் காலத்தை

வாலு போச்சி கத்தி வந்தது

சம்பந்தி அனுப்பிய லிஸ்ட்டை எடுத்துக்கொடுத்து  சாமான்கள் அத்தனையும் வாங்கிக்கொண்டான். ரூபாய் மூவாயிரத்து முந்நூற்றி முப்பத்து மூன்று  . ரூபாயை இரண்டு முறை எண்ணினான். கடைக்காரனிடம் கொடுத்தான்.  அவன் சொல்வதுதான் கணக்கு.  எந்த பொட்டலத்தில் என்ன வைத்துக்கட்டினானோ யார் கண்டார்கள். நேராக வாயுவேகா கொரியர் காரனிடம் போய் நின்றான். 

காத்திருப்பின் கனல்

இந்தப்பாடலும் நீண்ட நாள் பிரிவைப் பாடும் பாடல். மாமரத்தின் கிளையில் மின்னும் கரியநிறத்தில் குயில் அமர்ந்திருக்கிறது. அந்தக்குயிலை பார்த்தபடி தென்னம் நெய்யிட்டு வாரப்படாத தன் கூந்தலை வருடிய தலைவி பிரிவை நினைத்து கலங்குகிறாள். மாம்பூக்களின் மஞ்சள் நிற மகரந்ததுகள்கள் கரியகுயில் மீது படிந்திருக்கிறது.

வலிவிடு தூது

இப்பாடலில் சில சொற்கள் இரட்டுற மொழிதலாகப் (சிலேடையாக) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, えやはいぶき என்ற சொல்லின் இறுதியில் வரும் いぶき என்பதற்கு இயூபெக்கி – சொல்ல வேண்டியது என்றும் இபுக்கி – மலையின் பெயர் என்றும் இருபொருள் கொள்ளலாம். சஷிமொ என்ற சொல் மூன்றாம் அடியிலும் நான்காம் அடியிலும் இருவேறு பொருள்களில் பயின்று வந்துள்ளது.

வேணு தயாநிதி கவிதைகள்

குழந்தையை எரித்த தீ
பயிர்களைக் காயவிட்டு 
புயலாகி 
கரையைக் கடந்த பருவமழை
கொலைகாரனின் மனம்
துரோகியின் சுவாசம், பிணம்
ஆகியவற்றை ஆராய்பவன்

தீர்த்தம்

 எல்லா திசைகளிலும் தேடி அலைந்தவளுக்கு இன்னும் கீழத்தெரு மட்டும் பாக்கியிருந்தது.நேற்று தேடிவிட்டு வரும் வழியில் வாரியூர் வெற்றிலைக் குறிகாரரை பார்த்துவிட்டு வந்தாள்.’ஒன்னோட மாடு இந்நேரம் வண்டியேத்தி அறுப்புக் கடைக்கு போயிருக்கும்’ என மை தடவி கை விரித்த குறிகாரரின் வார்த்தைகளைக் கேட்டு மயங்கி விழுந்தவளை தண்ணீர் தெளித்து தெளிய வைத்து அனுப்பி வைத்திருந்தார்கள்.கல்யாணிக்கு இரண்டு நாட்களாக சரியான உறக்கமில்லை

என்னுடைய கடவுள் – கவிதைகள்

பேனாதான் எழுதுகிறதென்றெண்ணி
அதைப் பற்றிப் பெருமைப்பட்டோம்
ஆனாலும் அஃதொரு கருவி மட்டும்தானென ஐயமற அறிந்தற்பால்
வீணான உபசாரமின்றி
விருப்பு வெறுப்புமின்றி

நகரமா? நரகமா?

2022 ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து 110,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நியூயார்க் நகரத்திற்கு வந்துள்ளவர்களை எதிர்கொள்வதில் அல்லோலப்படுகிறது ‘பிக் ஆப்பிள்’ நகரம். தங்கும் இடமின்றி தவிப்பவர்களுக்கு அரசு இல்லங்களில் இரவு நேரத்தில் மட்டும் தங்கிச்செல்ல படுக்கைகளைக் கொடுக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை மாநில அரசிற்கு உள்ளது. ஆனால் அதிகளவில் வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது

தெய்வநல்லூர் கதைகள் -12

This entry is part 12 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

உள் பிரகார சுற்றுப் பாதை  கருவறை, அர்த்த , முன் மண்டபம் வரையிலான கட்டிடத்தை சுற்றி செவ்வக அமைப்பி‌ல் இருக்க சுற்றுப்பாதை ஓரத்தில் மூன்றடிக்கு  உயர்த்தப்பட்ட நீண்ட தாழ்வாரத் திண்ணைகள் இருக்கும். தாழ்வாரத்துக்கும் மையக்கோவில் கட்டிடத்துக்கும் நடுவேதான் சுற்றுப் பாதை. இந்தத் தாழ்வாரங்களில்தான் நாயன்மார்கள், சப்த மாதர்கள், ஜுரதேவர் ஆகியோர் தெற்கு சுற்றிலும், (தெற்குசுற்று மேற்கை முட்டும் சந்தில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் கன்னி மூல கணபதி)  சோமாஸ்கந்தர் , பஞ்ச லிங்கங்கள், காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, மகா லக்ஷ்மி, சரஸ்வதி, விஷ்ணு, ஆகியோரை மேற்கு சுற்றிலும் காணலாம்.

காமரூபம்

படகில் இருந்தவர்கள் பல கோணங்களில் தங்களை படம்பிடித்து கொண்டிருந்தார்கள். சியாமீஸ் இரட்டையர்கள் போல, தோள்கள் சேர்ந்து, தலைகள் ஒட்டி, மேல்தட்டின் தடுப்பு கம்பிகளின் மீது அமர்ந்து செல்ப்பீ எடுத்து கொண்டிருந்தது ஒரு வடக்கத்திய ஜோடி. நீரில் படிந்த அவர்களின் நிழல்களை கூட புகைப்பட சட்டத்திற்குள் கொண்டு வர சாய்ந்தும், நிமிர்ந்தும், நெளிந்தும் நடத்திய நடனம் வயிற்றில் புளியை கரைத்தது.

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 7

This entry is part 7 of 7 in the series கணினி நிலாக்காலம்

மேலே சொன்ன விவரத்தை, வழக்கு தமிழில் நாம் எப்படிச் சொல்கிறோம்? “20,000 வரை தள்ளுபடி இல்லை, 60,000 வரை 2%, 100,000 வரை 5%, அதுக்கு மேல 8%”. இந்த விஷயம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் சொன்னால் புரியும், ஆனால், கணினிக்கு, மிகவும் துல்லியமற்ற ஒரு கட்டளை. ஆனால், ஒரு அனலிஸ்ட் கேட்டால், பயனாளர், இவ்வாறுதான் சொல்லுவார். அதை ஒரு பயனுள்ள சட்டமாக கணினி மென்பொருளுக்கு மாற்றுவது ஒரு அனலிஸ்டின் கடமை. 

லாவண்யா கவிதைகள்

ஒருவன் பொரியிறைக்க
ஒருவன் சங்கூத
இருவர் பறையடிக்க
மூவர் வழிநெடுக பூவிறைக்க
நால்வர் ஆட்டம்போட
ஐவர் கம்பு சுற்ற
ஒருவன் வெண்ணீறு பூசி
செத்த பிணத்தை சுமந்து செல்லும்
சொர்க்கரதத்தின் முன்னே செல்ல