தமிழ் தட்டச்சு மெசினின் முழுப்பயனையும் ஒரு காலத்தில் நான் அனுபவித்திருக்கிறேன். பதின்ம வயதிலேயே நான் கவிதைகளும் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்துவிட்டேன். என் கையெழுத்து மோசமாக இருக்கும். அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யும் யாரிடமாவது கெஞ்சி தட்டச்சு செய்யவேண்டும். அகில இலங்கை நாடகப் போட்டி ஒருமுறை நடந்தது. அதற்கு 100 பக்கத்தில் கையினால் ஒரு நாடகம் எழுதினேன். அதை ஒரு நண்பர் தட்டச்சு செய்து தந்தார்.
…
கணினியில் தமிழ் எழுதலாம் என்று வந்தபோது அதைவிட மகிழ்ச்சி அளித்த விசயம் எனக்கு அந்தக் காலத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம். அமெரிக்காவில் தமிழில் எழுதும் செயலியை ஒருவர் உருவாக்கிவிட்டார் என அறிந்து அவர் வீடு தேடிப்போனேன். சூரிய ஒளிபுகமுடியாத நீண்ட வீடு. இருட்டு தொடங்கும் இடத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் ஒரு செயலியை இலவசமாகத் தந்தார். நான் உழைப்புக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி 100 டொலர் தந்து அதை வாங்கினேன். அது என் வாழ்க்கையை மாற்றியது. கம்புயூட்டரில் தமிழில் எழுத ஆரம்பித்து விட்டேன். நானே ஆசிரியன்; நானே மாணவன். செயலியில் எல்லா வசதிகளும் இருந்தன. சொற்களைத் தேடலாம். மாற்றலாம். எண்ணலாம். நகல் செய்யலாம். வெட்டி ஒட்டலாம். மனைவி பொறாமைப்படும் அளவுக்கு அதனுடனேயே முழுநேரத்தையும் கழித்தேன்.
நீங்கள் மிக அதிக வேகத்தில் பயணங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில், உங்களைச் சுற்றியுள்ள வெளி மட்டும்தான் மாறுகிறது என்பதல்ல, காலமும் ஒரு பச்சோந்தியைப் போல் சூழலுக்குத் தகுந்த வகையில் தன்னை மாற்றிக் கொள்கிறது! …. ஐன்ஸ்டீன் சொல்வதை இப்படி சுருக்கமாகச் சொல்லலாம்- நகர்ந்து கொண்டிருக்கும் கடிகாரத்தில் காலம் தாமதிக்கிறது. இது உண்மைதான் என்று பல பரிசோதனைகள் கண்டறிந்துள்ளன. இவற்றில் மிக சுவாசரியமான ஒரு ஆய்வில், நான்கு அணுத்துகள் ஆற்றல் கடிகாரங்கள் ஒரே நேரம் காட்டும் வகையில் திருப்பி வைக்கப்பட்டன. அவற்றுள் சிலதை அதிவேக ஜெட் விமானங்களில் வெவ்வேறு திசைகளில் உலகைச் சுற்றி கொண்டு சென்றனர். அந்த விமானங்கள் திரும்பி வரும்போது, பூமியில் இருந்த கடிகாரங்களை விட விமானத்தில் பறந்து சென்ற கடிகாரங்கள் ஒரு சில நானோ வினாடிகள் மெல்லச் செல்வது கண்டறியப்பட்டது. ஆக, வேகமாய்ச் செல்லும் விமானமும்கூட காலத்தின் சிறகை, அதாவது கடிகார முள்ளை, கொஞ்சம் கட்டி வைக்கிறது. …
“எனக்குத் தெரிஞ்சவரையில் தன்னியக்க வரிசைக் கணினிய ஒரு டிபெட்டிய துறவிமடத்துக்கு அனுப்பும்படி உலகத்துலேயே முதல் முறையா இப்பதான் கேட்கப்பட்டிருக்கு. மூக்க நுழைக்கிறேன்னு நெனச்சுக்காதீங்க, ஆனா உங்க மாதிரி – என்ன சொல்றது, ஆ – நிறுவனத்துக்கு இந்த மாதிரி இயந்திரம்லாம் தேவைப்படும்னு நான் கனவுல கூட நெனச்சிருக்க மாட்டேன். நீங்க இத வெச்சு என்ன செய்யப் போறீங்கங்கறத கொஞ்சம் விளக்க முடியுமா?”
“வலியது வாழும்” எனும் டார்வினின் கொள்கையைப் புரிந்துகொள்ள இந்த இணைய பரிணாமம் எனும் அமைப்பு உதவும். இன்னும் சொல்லப்போனால் இது டார்வினின் கொள்கையை இன்னும் விரிவான தளத்தில் பேசி முன்னகர்த்தியுள்ளது. “குதிரையின் பரிணாம வளர்ச்சியையும் அது தின்னும் புல்லின் பரிணாம வளர்ச்சியையும் எடுத்துக்கொள்ளுங்கள். பரிணாம அடைந்தது குதிரையோ அது தின்னும் புல்லோ அல்ல. அவை இரண்டுக்கும் இடையில் இருந்த உறவே பரிணாம மாற்றம் அடைந்தது”… ஒட்டுமொத்த பூமியே ஒரு கூட்டு உயிரினம் எனும்போது வலியவை, எளியவை என்பதன் எல்லைகள் நெகிழ்ந்துவிடுகின்றன. ஆலவித்தில் ஆல் ஒடுங்கி இருப்பதைப் போல காரண-காரியத்தொடர்பில் இரு பக்கங்கள் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றன. காரணமில்லாமல் காரியமில்லை. ஆனால் காரணத்தில் செயலுக்கான விதை உறங்குவதாக நாம் சிந்திக்கும்போது காரியத்தின் விசாலம் நம் கற்பனையையும் தாண்டுகிறது. இப்படிப்பட்ட சிந்தனையில் நம்மால் தொடர்பில்லாத பல விளைவுகளைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. நமது மரபில் இப்படிப்பட்ட சிந்தனையினாலேயே நம்மால் அண்டத்தையும் பிண்டத்தையும் இணைக்க முடிகிறது.
’ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தமது மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களின் வலிமையால் தம் ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட பண்பாடுகளை தம் பார்வையிலிருந்து நோக்கி உருவாக்கிய’ அறிதல் புலம் அது. அவர் இந்த பார்வைகள் அனைத்துமே குறுகிய காலகட்டங்களில் மட்டுமே இயங்கியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார். ”காலனிய மானுடவியல் முறை என்பது உருவாகி நானூறு ஆண்டுகளே ஆகியுள்ளது. அதற்கு மேல் அது வாழ முடியவில்லை. சோவியத் மானுடவியல் முறையோ உருவாகி நாற்பதாண்டுகளே ஆகியுள்ளது. அது எத்தனை ஆண்டுகள் இன்னும் தாக்குப்பிடிக்குமென்பது தெரியாது.” என்று சொல்லும் ஹால்டேன் மார்க்சிய மானுடவியலில் காலனியக் கூறுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த அறிதல் முறைமையின் அடிப்படையில் அடுத்து வரும் இன்னொரு புதிய பறவையை கவனிக்க ஆரம்பிக்கிறோம். அது வாயிலின் வழியே பறந்துவந்து அமர்ந்து கூ..கூ..கூ என்று இனிமையாக கூவுகிறது. சிலர் அந்த இசையில் மெய்மறக்கிறார்கள். வேறு ஒரு கூட்டம் முன்பு வந்த காகத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மரங்கள், விலங்குகள் என்று வரும் ஒவ்வொன்றையும் அவதானிக்கிறோம். இவ்வாறு சுவரின் அந்தப்புறம் இருந்து வரும் அனைத்து பொருட்களையும் இந்தப்புறம் அமர்ந்து அவதானிக்கிறோம். அந்த சிறுசிறு அவதானிப்பில் இருந்து கட்டி எழுப்பிய கோபுரங்கள்தான் இன்று நாம் காணும் ஒவ்வொரு அறிவுத்துறையும்.
காவலன் தயாராகும் முன் கள்ளன் தயாராகி விட்ட நிகழ்வு நாட்டிற்கு நல்லதல்ல. உதாரணமாக சமீபத்தில், நடந்த தமிழக தேர்தலில், தேர்தல் ஆணையம் ஊடக விளம்பரங்கள் செய்வது மற்றும் அதற்கான செலவுக் கணக்குகளை ஆணையத்திடம் ஒப்படைப்பது குறித்து சுற்றறிக்கை ஒன்றை அறிவித்திருந்தது. அதில், ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்காகச் செய்யும் விளம்பரங்களில் ஆன்லைன் விளம்பரங்களும் அடங்கும். எனவே அதற்கான செலவுக் கணக்கையும் கணக்கில் கொண்டு வரவேண்டும் என்கிறது ஆணையம். ஆனால், ஆன்லைனில் விளம்பரம் எனில் ‘எவை ஆன்லைன்?” “எவை விளம்பரங்கள்?” “எவை ஆன்லைன் விளம்பரங்களுக்கான செலவு?” அந்தச் செலவுக் கணக்கை ”எப்படிக் கணக்கிடலாம்?” என பல கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதில் சொல்லவில்லை.
திருநவேலியில் தேடித் தேடி சாப்பிட்டது போக, சென்னையில் சாப்பிட்ட சாப்பாட்டுக் கடைகளின் பட்டியல் புதிய கடைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகச் வளர்ந்து கொண்டேதான் வருகிறது. அந்த வகையில் பழையன கழிந்து புதியன பல புகுந்து விட்டன. சாலிகிராமத்திலிருந்த ‘முத்துலட்சுமி பவன்’ ஹோட்டலை கழுகுமலை அண்ணாச்சி மூடி விட்டார். சுடச் சுட இட்லியும், பருப்பு சாம்பாரும், ரகசியமாக எனக்கு மட்டும் (ஊர்ப்பாசம்) கெட்டிச் சட்னியும் கொடுப்பார். அவர் கொடுக்கும் உணவையும், உபசாரத்தையும் மறப்பதற்கில்லை. ‘ஸார்! வாருங்கோ! சும்ம இருக்கேளா?’ என்று …
கருவிகளின் இணையம் பற்றி இத்தனை பகுதிகளிலும் அதன் நல்முகத்தைப் பற்றி எழுதி வந்தவர், எப்படி பல்டி அடித்து இப்படித் தாக்குகிறார் என்று உங்களுக்கு தோன்று முன், முதலிலேயே சொல்லி விடுகிறேன். எல்லா புதுத் தொழில்நுட்பங்களிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். பல ஊடகங்கள் அதன் குறைகளை ஆரம்ப நாட்களில் பெரிது படுத்துவதில்லை. பரவலாக அந்தத் தொழில்நுட்பம் பயனில் வந்த பின்புதான் அதன் குறைகள் மக்களுக்குப் புரிய வரும்
புறக்காரணிகள் இல்லாத குழப்ப-வெப்பச்சலனம் ஒழுங்கின்மையை அதிகரித்துகொண்டே போகும் என்பது வெப்ப இயக்கவியிலின் இரண்டாவது விதி (Second Law of Thermodynamics). இதுவே பொருட்கள் அழிவதற்கான அடிப்படை. கட்டிடங்கள்,பாலங்கள் சாலைகள், கப்பல்கள், தண்டவாளங்கள், மலைகள் என எல்லாம் அழிவதற்கு மூலகர்த்தா. உயிரற்ற பொருட்களால் இந்த விதியோடு போட்டி போட முடியாது. ஆனால் உயிருள்ளவை அப்படி அல்ல, தொடர்ந்து புரதம் உயிரணுக்களை உருவாக்கி புதுப்பிட்டுக்கொள்கிறது. இயற்பியல் விதியை சரிகட்டுகிறது. ஒருவகையில் உயிர்ப்பு என்பது உயிரியில், இயற்பியலுக்கு எதிரான போட்டியில் வெல்வதே. அப்படி எனில் நாம் ஏப்படி முதுமையடைகிறோம். அல்லது இயல்பாகவே நாம் முதுமை அடைந்துதான் ஆகவேண்டுமா.
இன்று நீங்கள் மருத்துவரைப் பார்ப்பதானால் கண்ணாடி மாற்றிக் கொள்ளவோ காண்டாக்ட் லென்ஸ் பொருத்திக் கொள்ளவோ கண் மருத்துவரை நாடுகிறீர்கள். அல்லது வெவ்வேறு இயந்திரங்களின் அலைவரிசைகள் உங்கள் உடலை ஊடுருவி கண்ணுக்குத் தெரியாத உறுப்புகளை, அவற்றின் இயக்கங்களை, ஒளி கொண்டு வரைந்து கொடுக்கின்றன- ஒளி என்றால் என்ன என்று யாரிடமாவது கேட்டால், அவர்கள் “அது ஒரு சக்தி”, “அது ஒரு வெப்பம்”, “அது நாம் பார்க்க உதவுகிறது” என்றெல்லாம் சொல்லக்கூடும். ஒளி என்றால் என்ன என்பதை நாம் யோசித்துப் பார்க்காமலேயே பதில் சொல்லக்கூடிய வகையில் அறிந்திருக்கிறோம், ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர், இருபதாம் நூற்றாண்டின் துவக்கங்களில்தான் ஒளியின் அடிப்படைத் தன்மை என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது- மின் மற்றும் காந்த மண்டலங்களின் மிக நுட்பமான பின்னல் அது, ஒளி தன் இயல்பில் அலை போலவும் துகள் போலவும் பரவக்கூடிய தன்மை கொண்டது. இது குறித்த தேடலின் சாதனைகள் மற்றும் தேடல் நாயகர்களை அறிந்து கொள்ள ஒரு சிறு பயணம் மேற்கொள்வோம்.
ஆயுஷ் மருத்துவர்களை நவீன மருத்துவம் புரிய அனுமதிப்பதால் என்ன சிக்கல் வரும்? நவீன மருத்துவர்கள் ‘மருத்துவ தரம்’ இழிந்து போவதை குறித்து எழுப்பும் சிக்கல்கள் ஒரு புறமிருக்கட்டும், மிக முக்கியமாக அது ஆயுஷ் மருத்துவ முறைகளை மொத்தமாக அழிக்கும். நவீன மருத்துவம் புரிய அரசாங்க அனுமதியுள்ள மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இதுவே நிகழ்கிறது. நவீன மருத்துவத்திற்குச் செல்ல செலவற்ற பின்வாசல் வழியாக இவை மாறிவிடும். உண்மையிலேயே ஆர்வம் உள்ள மருத்துவர்கள் சிறுபான்மையினராக எங்கோ ஒடுங்கிப் போயிருப்பார்கள்.
வர்மம்(life centers in the human body),, இரசவாதம்(Alchemy -Study of transmutation of elements, forerunner of modern chemistry and pharmacology), , காயகல்பம் (procedures of rejuvenating the entire human system and ultimately produces immortality), ஓகக் கலை(Eight divisions of YOGA), சிறப்பான நோய் கணிப்பு முறைகள் (நாடி, சிறுநீர் பரிசோதனைகள் உள்ளடக்கிய எண்வகை பரிசோதனை முறைகள் – Eight unique type of diagnostic parameters, ), மணிக்கடை நூல் -The wrist portion just proximal to the hand is measured with a rope and health condition of a patient is ascertained based on the actual measurement by the patient’s finger), சிறப்பான மருந்துகள் ( முப்பு, கட்டு, களங்கு, சுண்ணம், குரு குளிகை ), சிறப்பான வெளிப்புற மருத்துவ முறைகள் (External medical applications), சரக்குவைப்பு (Art of preparing naturally available salts, minerals and other materials artificially) போன்ற சிறப்புகள் பலவற்றை உள்ளடக்கிய தனித்துவம் சித்த மருத்துவ முறைக்கு உண்டு.
ரிச்சி ஸ்ட்ரீட்டிடன் சகல இடுக்குகளிலும் நுழைந்து, கிடைத்த அனைத்து பிட் நோட்டீஸ்களையும் அலசி, ஆராய்ந்து ஒருவழியாக தன்னுடைய லேப்டாப்பை தேர்வு செய்திருந்தார். இன்டெல் பென்டியம் 1.5 பிராசசர், 8 ஜிபி ராம், 1 TB ஹார்ட் டிஸ்க், 2 MP HD வெப்காம், ஹெச்டி கிராபிக்ஸ் கார்ட் என ஏகப்பட்ட அம்சங்களை காட்டி 52 ஆயிரம் ரூபாய்க்கு பில் கிழித்திருந்தார்கள். ‘பேஸ்புக், ஜிமெயில், யுடியூப் பார்க்குற நமக்கெல்லாம் எதுக்குங்க இது?’ என்னும் கேள்விக்கு சரியான பதிலை நண்பரால் சொல்ல முடியவில்லை. நம்முடைய தேவை என்ன என்பதில் யாருக்கும் தெளிவு இருப்பதில்லை. வாங்கி குவிக்கும் வரை யோசிப்பதில்லை. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. 300 ஜிபி கொள்ளளவு கொண்ட வன்தட்டில் 30 இயங்குதளத்தை நிறுவி, அதை 3000க்கும் அதிகமானோர் எவ்வித இடையூறும் இன்றி, பயன்பாட்டுக்கு கொண்டுவருவது இன்று சர்வ சாதாரணமாகியிருக்கிறது.
ஏழாவது வகுப்பு என நினைக்கிறேன். அறிவியலில் தனிமங்கள் பற்றிய பாடம். உலகின் அத்தனை பொருட்களும் தொண்ணூற்றியிரண்டு தனிமங்களால் ஆனவை. எல்லா பொருட்களுமா? மேஜை, செங்கல், மணல், நாய், நான், அமராவதி ஆறு, அணு குண்டு. எல்லாமுமா? ஆமாம். நம்பமுடியவில்லையே. சரி அது போகட்டும். அடுத்தது, சர்க்கரை நெய் இரண்டும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூன்று மூலகங்களால் செய்தவை. இதை என்னால் கொஞ்சமும் ஏற்க முடியவில்லை. இரண்டும் எனக்கு அப்போது மிகவும் பிடிக்கும். (இப்போதும்தான், சாப்பிடத்தான் மனம் வருவதில்லை.) கார்பன் என்றால் கன்னங்கரேல் என்ற அடுப்புக்கரி, மீதி இரண்டும் கண்ணுக்கு தெரியாத வாயுக்கள். மூன்றும் சேர்ந்து எப்படி சர்க்கரையோ, நெய்யோ ஆக முடியும்? அப்படியே வைத்துக்கொண்டாலும், சர்க்கரை நெய் இரண்டும் ஏன் ஒன்றுபோல் இல்லை?
ஒலி, வடிவமும் உருவமும் இல்லாதது என்று காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிர்வுகளால் ஆன, காதால் மட்டும் கேட்டுணரப்படும் புலனான ஒலியில் ஒரு குறிப்பிட்ட வீச்சுக்கு அப்பாற்பட்ட அதிர்வெண்கள் சாதாரண மனிதப்புலன்களுக்கு எட்டாதது என்பதும் அறிவியல் உண்மைகளில் ஒன்று. கேளா ஒலி என்று அறியப்படும் இந்த வகை ஒலி அதிர்வுகள் சில உயிரினங்களால் உணரக்கூடியது என்பதும் நாம் அறிந்த ஒன்று. ஆனால் கேட்கக்கூடிய, அதன் அதிர்வுகள் மூலம் உணரக்கூடிய ஒலியை சில வடிவங்களாகக் காணவும் செய்யலாம் என்பது உலக அறிவியல் வரலாற்றின் அண்மைக்காலத்திய ஆராய்ச்சிகளின் முடிவு.
கல்பாக்கத்தில் இருந்து ஆரம்பித்து உலகெங்கிலும் ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் அணு மின் நிலையங்களும் சரி, செர்நோபில், புகுஷிமா போல விபத்துக்குள்ளாகி பேரிடர் நிகழ்வித்த அணு மின் நிலையங்களும் சரி, மின்சார உற்பத்திக்கு அணுவைப்பிளக்கும் (Nuclear Fission) தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கின்றன. ஒழுங்காய் இருக்கும் குடும்பத்தை உடைத்துப்போடும் விவாகரத்தை போல, அணுவைப்பிளந்து இரண்டாக உடைக்கும்போதும் பல மோசமான பின் விளைவுகள் ஏற்படும். அத்தகைய விளைவுகளை சரியாக கையாள்வது மிக அவசியம். கூடங்குளத்தின் தயவில் சமீபத்தில் இந்த விளைவுகளைப்பற்றி சரியும் தவறுமாய் ஊடகங்கள் நிறைய விவாதித்திருக்கின்றன.
மிக நேர்த்தியான ஒரு இந்திரஜாலத்தை சமைக்கும் அளவுக்கு இன்றைய தொழில்நுட்பம் முதிர்ந்திருக்கிறது. ஆனால் அந்த ஒவ்வொரு சாதனத்திற்குள்ளும், அதற்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் மிகச் சிக்கலான ஒரு பிரம்மாண்டமான மின்னணு உலகம் உள்ளது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அந்த உலகத்தின் மென்பொருள் (software) கண்ணுக்குப் புலப்படாதது. வன்பொருளின் (hardware) வெளித்தோற்றம் கண்ணுக்குப் புலப்படக் கூடியது. எந்த மின்னணு சாதனத்தைத் திறந்து பார்த்தாலும், அதன் பிரதான உள்ளுறுப்புகளாக, விதவிதமான மரவட்டைகள் போல அமைதியாக வீற்றிருக்கும் ‘சிப்’களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த ‘சிப்’களின் கருஞ்சாம்பல் நிற மூடிக்குள் உள்ள அதிசிக்கலான மின்னணுச் சுற்றுகள் (Electronic circuits) தான் அந்த சாதனத்தின் முக்கியமான வன்பொருள் கட்டமைப்பாக இருக்கின்றன. இன்றைய கணினி யுகத்தின், இணைய யுகத்தின் வளர்ச்சி என்பது சிப் தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சியுடன் இணைந்தே பயணித்துள்ள ஒன்று.
செயற்கை அதி நுண்ணறிவு (Artifical Super Intelligence). நாமறிந்த எல்லாத் துறைகளிலும், இருப்பதிலேயே சிறந்த மனித மூளைகளை மிஞ்சும் அறிவு கொண்ட நிலை இது. அறிவியல் சார்ந்த துறைகள் மட்டுமின்றி, கலை, சமூக நடத்தை, நிர்வாகம், என்று எல்லாமே இதில் அடக்கம். பாடங்களில் சோபிப்பது மட்டுமில்லாமல், விளையாட்டிலும் இன்னும் பல எக்ஸ்ட்ரா கரிகுலர் நடவடிக்கைகளிலும் பட்டையைக் கிளப்பும் மாணவர்கள் இருப்பார்களல்லவா, அவர்கள் தான் இது. செயற்கைப் பொது நுண்ணறிவு நிலையையே இன்னும் எட்டவில்லை என்பதால் செயற்கை அதி நுண்ணறிவு நிலை அதற்கடுத்து எதிர்காலத்தில் இருக்கிறது.
2004 இல் ரீட் மாண்டேக் (Read Montague) குழுவினர் ஒரு வித்தியாசமான பரிசோதனையை மேற்கொண்டனர். சோதனைக்கு உட்படுத்தப் பட்டவர்களிடம் பெப்சி மற்றும் கொக்க கோலா பிராண்ட் பெயர்களை மறைத்துக் கொடுத்ததில், பெப்சியே சுவை மிக்கதாக பதில் அளித்தனர். பின்னர், பிராண்ட் பெயர்களை அவர்கள் அறியுமாறு கொடுக்கையில் கோக் தான் சுவையாய் இருப்பதாக அவர்கள் பதில் அளித்தனர். ப்ராண்ட் இமேஜிற்கு அவ்வளவு வலிமை. 2010 இல் கேம்ப்பெல் சூப் நிறுவனம் தனது சூப் வகைகளின் விற்பனை குறைந்ததால் கவலையுற்று, ந்யூரோமார்க்கெட்டிங்கின் உதவியுடன் அதன் சூப் பேக்கிங்கை வாடிக்கையாளர்களிடம் தந்து அவர்களின் இசிஜி,மூளை ஸ்கேன் மற்றும் பயோமெட்ரிக்ஸ் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்துக் கீழ்கண்ட விஷயங்களைக் கண்டறிந்தது. சோதனைக்குப் பின் அந்த நிறுவனம் தனது பேக்கிங்கில் கீழ்க்கண்ட மாற்றங்களை உருவாக்கியது.
‘மைபோல நிறம்கொண்டவன் என் பிள்ளை. இந்த ஆயர்குலத்துக்கே அவன் கொழுந்தாக விளங்குபவன். அவனை அழகாக நீராட்டி, அவன் விருப்பப்படி வீடுவீடாகச் சென்று குறும்புகள்செய்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு ஆகவில்லையோ? கம்சனை அழித்த வீரக்கழல் அணிந்த அந்தத் திருவடிகள் நடந்து நடந்து வலிக்குமே! மாடுகளை ஓட்டி ஓட்டிக் களைத்திடுமே! இவ்வாறு சிறிதும் சிந்தியாமல் அவனை கன்றுகாலிகள் பின் அவன் கெஞ்சினான் என்று அனுப்பிவிட்டேனே! ஏன்தான் இப்படிச் செய்தேனோ? சிறுகுழந்தையை இவ்வாறு அனுப்பியது நான் செய்த பாவமே,’ என மனம்பதைக்கிறாள் அவள். கம்சனை அழித்த செயல் ஆய்ப்பாடியினின்று கண்ணன் சென்றபிறகே நிகழ்ந்தது. யசோதைக்கு இப்போது இதனைப்பற்றித் தெரிந்திருக்க வழியில்லை. பெரியாழ்வாரின் ஆர்வத்தில் எழுந்த பாடல்கள் இவை; அவ்வாறே படித்துப் பொருள்கொள்ள வேண்டும்
படிவம் – ஸ்கீமா என்பதை முன் அனுபவமென, முன் உணர்வு, முன் கற்றதின் கூட்டமைவு என்றே தத்துவஞானி இம்மானுவல் காண்ட் கருதினார். படிவத்தை டானியல் கோல்மன் தனது Vital Lies and Simple Truth என்ற புத்தகத்தில் விரிவாகக் கையாளுகிறார். எல்லாப் படிவமும் சம தளத்தில் மட்டும் இயங்குவதில்லை. ஒரு படிவத்தை ஆளும் மேலடுக்குத் தளத்தில் இருக்கும் படிவமும் தானாக இயங்கும் அல்லது இயக்கப்படும். ”கோபப்படு” என்று ஒரு படிவம் ஒரு எதிர்வினையை தன்வழியே வழுகி வர வைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எந்த விதமான கோபம்? எப்படிப்பட்ட எதிர்வினை? கையா, வாயா? வாய் என்றால் நையாண்டியா, கண்டிப்பான சொற்களா அல்லது கெட்ட வார்த்தைகளா? இதனை முடிவு செய்வது மற்றொரு படிவக் கூட்டும், நினைவு ஆளுமை, உணர்வுப்பகுதி (awareness). சீதை அசோகவனத்தில், அனுமனுக்குச் சொல்கிறாள். எப்போதோ இவர்களை சுட்டெரித்து என்னால் வந்திருக்க முடியும். ஆனால் …
நீங்கள் ஒரு ஐம்பதாயிரம் கொடுத்து ஒரு நிலத்தை கிரையம் செய்கிறார்கள். அந்தப்பணத்தை வங்கியில் கட்டுகிறீர்கள். வங்கிகள் என்ன செய்கிறது. பணத்தைக்ககொடுத்தவர் வீட்டு பின்புறத்தில் இந்தப்பணத்தை அச்சிடவில்லை என்று உறுதி அளிக்கிறது. விற்றவர் உங்களிடமும் வேறு ஒருவரிடமும் ஒரே இடத்தை இரண்டு பேரிடம் விற்கவில்லை என்று பத்திரப்பதிவு அலுவலகம் உறுதி அளிக்கிறது. ஒரு பரிவர்த்தனையில் இவை இரண்டும் நிகழ்கின்றன. அமேசானில், ப்ளிப்கார்ட்டில் எல்லாம். பரிவர்த்தனை நிகழ்ந்ததற்கான ஆதாரம். பரிவர்த்தனையின் உண்மைத்தன்மை இரண்டையும் பாதுகாக்கின்றன. இதில் நிறைய ஓட்டைகளும் இருக்கின்றன. ஒரே ஒரு முக்கியமான ஓட்டை என்பது…
தான் இருப்பதை பழுதாகும் வரையில் உணர்த்தாத எந்த ஒரு இயக்கத்துடனும் மின்மாடத்தை (லிஃப்ட் அல்லது எலிவேட்டர்) ஒப்பிடலாம். மின்மாடங்கள் இல்லாத கட்டடங்கள் இன்றைக்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு வணிக வளாகங்களிலும், வசிப்பிடங்களிலும், அலுவலகங்களிலும் மின்மாடங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. பார்ப்பதற்கு மேலே கீழே சென்று வரும் ஒரு கருவியாகத் தோன்றினாலும், விண்ணுயர் மாளிகைகளில் மின்மாடங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகளை அவரவர் இருக்கும் மாடிக்கு அனுப்பிவைக்கும் தலையாய பணியையும் செய்துகொண்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு கட்டடத்தின் போக்குவரத்திற்காக செங்குத்தாகச் சென்றுவரும் வாகனங்கள்தான் மின்மாடங்கள்.
தானியங்கி ஸ்மார்ட் கார்களை தயாரிக்கும் முயற்சியில் உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் களமிறங்கிவிட்டன. மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளில் சிலவற்றை இப்போதே தங்களது உயர்ரக கார்களில் பயன்படுத்தி பரிசோதிக்கத்தொடங்கிவிட்டன. இதில் சுவாரசியமாக கார் தயாரிப்பில், நாம் கேள்விப்படாத மூன்று நிறுவனங்கள்தான் ஸ்மார்ட் கார்களில் முக்கிய பங்களிக்கப்போவதாக நிபுணர்கள் கணிக்கிறார்கள். அவை கூகுள், டெஸ்லா மற்றும் உபர். இவர்கள் ஒவ்வொருவரின் திட்டம்…
வேலைக்குப் புதிதாகச் சேர்ந்தவர் வண்டிக்கு அருகே ரிப்பேர் செய்ய நிற்கிறானர், அந்த வேலையைச் செம்மையாகச் செய்யத் தெரிந்த வல்லுநர் சிகாகோவிலோ சின்னாளப்பட்டியிலோ தன் கணினி முன் இருக்கிறார். புது சிப்பந்தி கண்ணாடி மாட்டிக்கொள்கிறான். அந்தப் பிம்பம் வல்லுநருக்குத் தெரிகிறது, வல்லுநர் கழட்டவேண்டிய நட்டைத் தன் விரலால் தொட்டுக் காட்டுகிறார். வல்லுநர் விரலைப் புது ஆசாமி கண்ணாடி காட்டுகிறது. புது ஆசாமி அட்ஜஸ்ட்மெண்ட்டைச் செய்கிறான். வல்லுநர் வழிகாட்டுகிறார். இரண்டு நிமிட வேலை இரண்டு நிமிடத்திலேயே முடிகிறது. இப்படி ஒரு கற்பனைக் காட்சியைச் சமீபத்தில் ஒரு மாநாட்டில் பார்த்தபோது, “எப்படி இருந்த நாம” என்பதெல்லாம் நினைவலைகளில் புரள, உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.
அரசியல் ஒரு ஆபாசமான விவகாரம், அதுவும் பெருமளவு ஒத்துழைப்பு மூலம் நடக்கும் அறிவியலை, குறுகிய காலத்தில் அரசியல் முழு முற்றாகவே குலைக்கக் கூடும். ஃப்ரெஞ்சுப் புரட்சியின் உச்சகட்டத்தில் நிறைய அறிவியலாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர், அல்லது கொல்லப்பட்டனர். தப்பித்த அதிருஷ்டக்காரர்கள், உதாரணமாக பெஹ்னாஹ்ட் டு லஸ்ஸிபெட், இவர் இயற்பியலையும், மீன்களையும் ஆராய்ந்தவர், ஒளிந்து தலைமறைவானதால் தப்பித்தார்: ’நான் உலகை மறந்தேன், அண்ட பேரண்டத்தைப் பார்த்தேன்,” என்று எழுதினார். மொன்மொஹாஸி மலைப்பகுதிக்குப் போய் வசித்து காட்டுச் சிலந்திகளை ஆராய்ந்தபடி இருந்தார் லூயிஸ் போஸ்க் என்ற பூச்சியியலாளர். யாரையும் பார்க்காமலும், எந்த அழைப்பையும் ஏற்காமலும், ‘எந்தக் குழுவிலும் சேராமல்’ தனியாக இருந்து தப்பித்தார் ஆண்ட்வான் ஃபூக்வா எனும் வேதியலாளர். நீண்டகால நோக்கில், அரசியலை அறிவியல் வெல்கிறது. பிற்காலத்தவர்கள் அன்று ரத்தக் களரிக்கும், கொடும் துன்பத்திற்கும் இட்டுச் சென்ற பல குழு மோதல்களுக்கான காரணங்களையும், அந்த விவரங்களையும் அனேகமாக மறந்து விட்டார்கள்: உலகை மேலானதாக மாற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நினைவு வைத்திருக்கிறார்கள்.
1940களிலேயே ஜெர்மனியில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்களுக்குச் சிகரெட் விற்கத் தடை விதிக்கப்பட்டது. ராணுவ வீரர்களும், போலிசாரும் யுனிபாரம் அணிந்து இருக்கையில் புகைக்கத் தடை விதிக்கப்பட்டது. புகையிலை விளம்பரம் தடுக்கப்பட்டது. உலகில் இன்னமும் கூட பல நாடுகளில் இத்தகைய கடுமையான தடைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை செய்த ஹிட்லர், சிகரெட்டை ஒரேயடியாகத் தடை செய்யாத காரணம் சிகரெட் விற்பனையில் கிடைத்த வரி வருமானம் தான். உலகப் போரை நடத்த, சிகரெட் வரி அவசியமாக இருந்ததால், ஹிட்லர் அதைத் தடை செய்யாமல் விட்டுவிட்டான். போரில் நாஜி ஜெர்மனி தோற்றபின் அவர்களது ஆய்வுகளை மேற்கத்திய நாடுகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தன. 1950கள் முழுக்கச் சிகரெட்டுக்கும் புற்றுநோய்க்கும் இருக்கும் தொடர்பை ஆராய்ந்து வரும் அறிவியல் ஆய்வுகளை அமெரிக்க விஞ்ஞானிகள் சங்கம் மறுத்தும் நிராகரித்தும் வந்தது.
பைபிள் தீர்க்கமான அறிவியல் எதையும் முன்வைக்கவில்லை. அதன் கதைகளிலிருந்தும் பாடல்கள்/கவிதைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட வரிகளிலிருந்து, அவை அரிஸ்டாட்டிலின் அறிவியலுடன் இயைந்தவையாக இருந்தமையால், புவிமையக் கொள்கை (Geocentirc Model5) கிறீத்துவ அறிவியல் கொள்கையாக உருவாக்கப்பட்டது. அரிஸ்டாட்டிலின் புவிமையக் கொள்கைக்கு முதல் பொருட்படுத்தத் தகுந்த மாற்றுக் கொள்கை கிறீத்துவத்தின் உள்ளிருந்தே எழுந்தது. சூரிய மைய வானியல் கொள்கையை (Heliocentrism6) முன்வைத்த கோப்பர்நிக்கஸ் ஒரு கத்தோலிக்க மதப்பணியாளர். அந்த காலத்துக்கு அது பெரும் புரட்சிகர கோட்பாடாக இருந்தது. அன்றைய அறிவியலையும் பொது நம்பிக்கைகளையும் மத நம்பிக்கைகளையும் அது புரட்டிப்போட்டது. அரிஸ்டாட்டிலிய அறிவியலறிஞர்கள் பலராலும் நிராகரிக்கப்பட்டது. வெளியிடப்பட்டு அறுபது ஆண்டுகளுக்குப் பிறகுகூட 15 அறிவியல் அறிஞர்களே சூரியமையக் கொள்கையை ஆதரித்தனர், பின்பற்றினர் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். அவற்றில் இருவரின் விதிமீது கிறீத்துவம் தீர்ப்பெழுதியது.
பெரும் அறிவியல் திறனுடைய பல்கலை அறிவுடைய நகரத்தில் 250,000 மக்களின் உணர்ச்சிகரமான வரவேற்பின் நடுவில் ஹிட்லர் வியன்னாவுக்குள் நுழைந்தார். அவரை நகரம் தங்கள் காவிய தலைவனாகவே பார்த்தது. சிறு எதிர்ப்பு மட்டுமே இருந்தது. இத்தனை பெரிய அறிவுலக அறிவியல் பார்வையின் பங்களிப்பு இருந்தும் , இனவெறி உணர்ச்சி பெருக்கெடுத்து நின்றது. அறிவுலகம் பெரும்பாலான மக்களின் அகவுலகை தொடவில்லை. பிரபஞ்சம் பெரும் லீலைகளை கொண்டது. பிரபஞ்ச லீலைகளின் உள்ளசைவையும், அழகியலையும் கேள்விகளால் தொடர்வது அறிவியலையும், அழகியலையும் மனிதருக்கு அளிக்கிறது.
அவர் ருஷ்யாவில் இருந்த காலத்தில் இயக்கவியல் பற்றிய “மெக்கானிகா” மற்றும் எண்கணிதம் குறித்த “அரித்மெடிகா” புத்தகங்களை எழுதினார். பொது வாசகர்களுக்காக பல அறிவியல் கட்டுரைகளை எழுதினார். குறிப்பாக நியூட்டனின் இயல்பியல் மற்றும் காபர்னிகஸின் கதிரவனை மையமாகக் கொண்ட வானியல் பற்றி எழுதி அவற்றை பிரபலப்படுத்தினார். பூமியின் வடிவம் குறித்த சர்ச்சையில், பூமி துருவங்களில் தட்டையாக ஆரஞ்சு போல் இருக்கும் என்ற நியூட்டனின் கருத்தை உறுதி செய்தார். நாட்காட்டிகளைக் குறித்து அறிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினார். இந்தியாவில் சூரிய நாட்காட்டி கிரிகேரியன் நாட்காட்டியை விட 23 நிமிடங்கள் அதிகம் இருந்ததையும் கண்டறிந்தார்.
தென் கொரியாவில் 50 மிலியன் மக்களில் 80 சதவீதத்தினரிடம் இத்தகைய தொலைபேசிகள் இருக்கின்றனவாம். இவற்றில் மூழ்கி இருக்கும் இந்த மக்களுக்குச் சமீபத்தில் பலவகை மன அழுத்த நோய்கள் ஏற்படத் துவங்கி இருப்பதால் இவற்றிலிருந்து விடுபட்டு இருப்பது சாலச் சிறந்த தேர்வு என்று சிலர் கருதத் துவங்கி இருக்கின்றனராம். அப்படி யோசிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு போட்டி சமீபத்தில் நடந்ததாக கார்டியன் பத்திரிகை தெரிவிக்கிறது. தலை நகரான சோல் நகரில், சுமார் 60 பேர் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதைப் பயின்றனராம். 90 நிமிடங்கள் தொலைபேசிகள், கணினிகள், ஏன் கைக்கடிகாரத்தைக் கூட பார்க்காமல் சும்மா இருக்க வேண்டும் என்பது போட்டி. ஒரு பூங்காவில் நல்ல வெப்பம் நிலவிய போதும் இந்த 60 பேர் அப்படி அமர்ந்திருந்தனராம்.
வன்முறைக்கு ஒரு கட்டுப்படுத்தும் முயற்சியும் அமெரிக்க அரசாலோ, காவல் துறையினராலோ, மேலும் சுற்றியுள்ள சமூகத்தினராலோ மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. 2015 இல் மட்டும் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவங்களை மட்டும் கணக்கிட்டால், 358 சம்பவங்கள் நடந்திருக்கின்றன, இந்த சம்பவங்கள் மத்திய தரச் சமுதாயங்கள் நடுவே இல்லை, ஏழை பாழைகள் நடுவேதான். இவற்றில் 18-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் அனேகமாக இறக்கிறார்கள். இறப்பவர்களில் நான்கில் மூன்று பேர் கருப்பினத்தவர். இவற்றில் பெருமளவும் கருப்பினத்தவரே கருப்பினத்தவரைக் கொல்வதாக அமைவதால் நாடோ, சுற்றுச் சமுதாயமோ இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. அரை மணிக்கு ஒரு குழந்தை அமெரிக்காவில் துப்பாக்கியால் கொல்லப்படுகிறது. இதுதான் உலகுக்கு நாகரீகம் என்றால் என்ன, ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பாடம் நடத்த முயலும் நாடு. இந்த நாட்டு அறிவாளர்கள் பலர், தம் நாட்டில் நடக்கும் பண்பாட்டுக் கொலை, இன அழிப்பை எல்லாம் பற்றி ஏதும் கவலைப்பட்டு செய்தித்தாள்களில் பத்திகள் எழுதாமல், நம் ஊர் செய்தித்தாள்களில்…