kamagra paypal

முகப்பு » தொகுப்பு

The Archives

கவிதை »

கவிதைகள்

நான் எப்போதும் பேசியே பார்த்திராத
குணசேகரின் தங்கச்சிக்குள்
அம்மன் வந்துவிட
பக்கத்திலிருந்த மாரியின் நாத்திகம்
கரகத்தின் உச்சியில்
உட்கார்ந்திருந்த
பொய்க்கிளிபோலவே
எந்த மத்தளத்தின் கொட்டிற்கோ
அசைந்ததாய்த் தெரிந்தது!

அனுபவம் »

செம்மை (Perfection) பற்றி மேலும் சில வார்த்தைகள்

புத்தம் புதியதாய்த் தோன்றினால்தான் சிருஷ்டி. சிருஷ்டி என்றால் அது முன்னர் இல்லாதது. புதியது. புதியது என்கையில் நிச்சயமாக அது பழையது இல்லை என்றாகிறது. அதே யுகயுகாந்திரமாய் உதிக்கும் சூரியன்தான். இன்று புதிதாய் உதிக்கிறது. அதே 20,30, 60,80, 90, 100 வயது உடல்தான். இன்று புதிதாய்க் கண் விழிக்கிறது. இக்கணம். அதில் இடமும் காலமும் எனவே நானும் இல்லை. அதுவே செம்மை. அதை வாழவொட்டாமல் மனம் தடுக்கிறது.

அனுபவம் »

வார்த்தையும், செம்மையும்

படைப்பாளி! அப்பாடி எவ்வளவு பெரிய வார்த்தை. நாம் அதிக பட்சம் துணையிருக்கலாம், கவனத்தைக் குவிக்கலாம், ஒளி பாய்ச்சலாம் அவ்வளவுதான். ஒரு விவசாயி எழுதுகிறவர்களை விட சிறந்த படைப்பாளி. அவன் கூட படைப்பாளி இல்லை. ஒரு படைப்பை ஃபெசிலிடேட் செய்கிறவன். படைப்பு எழ, நிகழ உறுதுணையாய் உதவுகிறவன். படைப்பாளி என்ன, எழுத்தாளன் என்பதே பெரிய வார்த்தை. எழுத்தை உபயோகிப்பவர் அல்லது பயன்பாட்டாளர்தான் பலரும்.

இலக்கியம் »

விருதுகள், பரிசுகள், பதவிகள், அங்கீகாரங்கள்

தனிப்பட்ட பிடித்தங்கள், சார்புகள், காழ்ப்புகள் தேர்வு, ஆதரவு, எதிர்ப்பு எல்லாவற்றையும் கறைபடுத்துகின்றன. நாஞ்சில் நாடனின் கும்பமுனி தனக்கு ஏன் ஒரு விருதும் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணங்களைப் பட்டியலிடுவார். நான் முற்போக்கு இல்லை, பிராமணன் இல்லை என்று அது போகும். லா.ச.ரா. தனக்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் எதுவும் கிட்டாததற்கு தான் பிராமணன் என்பது காரணம் என்பார்.

மறுவினை »

சாமத்தில் முனகும் கதவு – சிறுகதை குறித்து…

காற்றில் சரியாக அண்டக் கொடுக்காத கதவின் ‘க்றீச்சிடலும்’ சம்போக உச்சத்தில் மனைவியின் முனகலும் ‘கற்பனை இன்பத்தில்’ சுகமாய் வாழும் கூத்தையனுக்கு ஒன்றாகப் போகின்றன. கற்பனையின் மீது ஓரளவாவது இருக்கும் ‘கன்ட்ரோல்’ அவனுக்குக் (யாருக்குமே) கனவு-நனவுக் கலப்பின் மீது இல்லை. கனவின் நடுவில் நிகழும் விழிப்புலகச் செயல் கனவில் ஒரு தர்க்க ரீதியான செயலாவதை நாமனைவரும் அனுபவித்து இருக்கிறோம். காலிங் பெல், தட்டப்படும் கதவு போன்றவை கனவுக் காட்சியின்சரியான இடத்தில் வேறாகத் தெரிந்து நாம் தெளிவது அனைவருக்கும் தெரிந்தது. அதை அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார்.

கவிதை »

மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)

விரி சிரிப்பை, சுக ஒளியைப்
பரப்பி வரும் சிறு குழந்தை
மழைப் பூக்கள்; பூ மழைகள்.

சிறுகதை »

தர்ப்பணம்

அப்பா எல்லாவற்றையும் அப்படி பத்திரமாக வைத்துக் கொள்வார். அதில் டென்ஷனும் இருக்காது. தன் உடம்பைத்தான் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அது அவரோட அப்பா அம்மா கொடுத்தது. சின்ன வயசில் கால் முட்டி வலியோடு ஜுரமும் வந்திருக்கிறது. யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘முட்டியை நக்கிய கிருமி இதயத்தை கடித்து’ விடுமாம். பின்னால் ‘ருமாடிசம்’ என்கிற அந்த வியாதி பற்றி எங்கோ படிக்கையில் தெரிந்துகொண்டான். சாவதற்கு சில நாட்கள் முன்பு கூட ஆபீஸிலிருந்து திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட அப்பா எதற்கோ அவர் பர்ஸை எடுக்கச் சொன்னார். அவன் நல்ல லெதர் வாசனை இப்போதும் அடிக்கும் அந்த பழங்காலத்துப் பர்ஸை எடுத்து அவரிடம் கொடுத்தான். “என் கிட்டே ஏன் கொடுக்கற. இனிமேல் நீதான் பர்ஸ் பணம் எல்லாம் வச்சுக்கணும்; அப்பாவையும், அம்மாவையும் பாத்துக்கணும்.காலேஜ் சேர்ந்தாச்சு” என்று புன் முறுவல் பூத்தவாறே சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வெறுமனே தலையை ஆட்டினான். அந்த முறுவல் அவனுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கும் போது மட்டும் விசேஷமாக வரும்.

கவிதை »

மூன்று கவிதைகள்

தீபப் பிறை வர்த்தி
ஏற்றப்படும் முன்
இருந்ததா கடவுள்?
இருந்ததா வன்முறை?
இல்லையா கடவுள்?
இல்லையா வன்முறை?

பேட்டி »

தி.ஜானகிராமன் குறித்து அசோகமித்திரனுடன் ஒரு பேட்டி

“Essentially a far better short story writer than a novelist” நிறைய கதைகள் நன்னாருக்கும். ஜானகிராமனுடைய நாவல்களை விட சிறுகதைகள்தான் மிகவும் சிறப்பானவை என்பது என் அபிப்ராயம். அவர் சிறுகதைகளில் பெரிய master. தமிழின் மிகச்சிறப்பான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். பாயசம், கண்டாமணி ஆகியவை மிகவும் சிறந்தவை. ஜானகிராமன் கதைகள் கருணையை மட்டுமே சொல்பவை என்று பொதுமைப் படுத்திவிட்டார்கள். ஜானகிராமனின் எத்தனையோ சிறுகதைகளில் – பாயாசம் கதையில் வரும் பெரியவரைப் போல – மனித மனத்தின் வேறு குணங்களையும் பதிவு செய்திருக்கார்.

கவிதை »

மரமும் நிழலும், மற்றும் சில கவிதைகள்

சற்று முன் பார்த்த
சந்திரன் – அருகில் ஒரு தாரகை –
அவற்றை
நாலு அடி நடந்த பின்
தீர முழுதாய்ப் பார்த்துவிட வேண்டும் எனத்
திரும்பினால்
தெரிவது அவற்றை மறைக்கும்
மரமும் நிழலும்தான்.

ஆளுமை »

பிரமிள் (1939-1997)

அவர் கவிதைத் தொகுப்புக்கு ‘கைப் பிடியளவு கடல்’ என்ற தலைப்பைத் தந்து, அதற்கு அட்டைச் சித்திரத்தையும் அவரே வரைந்து தந்தார். செல்லப்பாவும் பிரமிளும் பேசாதும், சந்திக்காதும் இருந்த போதும் அந்தப் புத்தக உருவாக்கத்திலும் செல்லப்பா பெரிதும் உதவி செய்தார். பிரமிளும் செல்லப்பவிற்காகவே “ஒரு பாப்பாத்தி நகத்தோடு என் பறை நகம் மோதி..” என்ற கவிதை வரிகளை ” ஒரு உயர் ஜாதிக்காரி நகத்தோடு என் பறை நகம் மோதி..” என்று செல்லப்பா அதைப் படிப்பதற்கு முன்பே மாற்றிக் கொடுத்தார். முதலில் அந்த கவிதைத் தொகுப்பை செல்லப்பாவிற்கே சம்ர்ப்பணம் செய்யலாமா என்று யோசித்தார். அது மிகவும் பர்சனலாக இருக்குமோ என்றே தன் தாயாருக்கு அதை சமர்ப்பித்தார்.

ஆளுமை »

நாஞ்சில் நாடன் – ஒரு கனிந்த தமிழ் இதயம்

நாஞ்சில் நாடன் எழுத்தில் உடனே தென்படுபவை: வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையின் முன் முடிவுகள் அற்ற கூர்மை, கொள்கலனின் கொள்ளளவின் பிரம்மாண்டம், எங்கும் தங்காது எந்த முடிவுப் புதரிலும் சிக்காது இயங்கும் நேர்மை, அனாதைகள், அபலைகளின் மேல் (பிரச்சார, தன்னை ‘இன்னார்’ என்று வெளி உலகுக்கு பறைசாற்ற காட்டிக் கொள்கிற நீச புத்தி அற்ற) உண்மையாக உள்ள அக்கறை, சுவாரஸ்யம், பாதகம் செய்பவரைக் கண்டு அஞ்சாத எள்ளல், எல்லாவற்றுக்கும் மேல் வளமும், எளிமையும், குளிர்ச்சியும், செழுமையும் மிளிரும் தமிழ். காலங்கள் தோறும் இவர் கற்றுக் கொண்டேயிருந்திருக்கிறார். இன்னமும் கற்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியன் செய்ய வேண்டிய வேலையை தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து செய்து கொண்டேயிருக்கிறார்.

இலக்கியம் »

காஞ்சனை – ஓர் அனுபவம்

புதுமைப்பித்தன் எழுதிய காஞ்சனை சிறுகதை அக்காலத்துக்கே உரித்தான, வாழ்வின் பிரச்னைகளையும், வறுமையையும் மீறிய விச்ராந்தியான தருணங்களில் ஆரம்பிக்கும் கதை. இத்தகு தருணங்களை சத்யஜித் ராயின்படங்களில், தி.ஜா., கதைகளில் காண்கிறோம். படத்தைப் பார்க்கையில், கதைகளைப் படிக்கையில் ஒரு பறவையின் அழைப்பை, தூரத்து ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும். அதுதான் அடிப்படை. இயல்பு. சகஜம். அதன்மேல் இயக்கங்களும், இயக்கம் பற்றிய மாசு படிந்த கவனிப்புகளும், நினைவுப் பதிப்புகளும், அவற்றில் படியும் தூசிகளும் நிகழ்கின்றன.

திரைப்படம் »

முன்னோடிகளும், பின்வந்தவர்களும், ஈயடிச்சான்களும்

தாதா மிராஸி, அனந்து, பாலசந்தர் காலங்களை விட இப்போது உலக சினிமா சுலபமாக அனைவருக்கும் கிடைக்கிறது. திரையுலகில் உள்ள பலரும் இவற்றில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இத்தகைய நகலாக்கங்கள் உடனடியாக வெளிச்சத்துக்கு வந்து விடுகின்றன. பெரிய ஜனரஞ்சக வியாபரப் படங்களிலிருந்து, கலைப் படங்கள் சாயம் பூசி வெளிவருபவை வரை இது நடக்கிறது.

திரைப்படம் »

சிறிது சினிமா

சுதந்திர நாளன்று ரயில்வே ஸ்டேஷனில் வரும் வெற்றி கோஷங்களும், பொதுமக்கள் உரையாடல்களும் அபத்தக் களஞ்சியம். இதற்கெல்லாம் சிகரம் ‘சத்தியமூர்த்தி வாழ்க’ தான். ஆசாரியாரும் சத்தியமூர்த்தியும் வண்டியில் வருவதாக வேறு பேசிக் கொள்கிறார்கள். 28-3-1943ல் இறந்து போன சத்திய மூர்த்தியின் ஆவிதான் அங்கு வந்திருக்கக் கூடும். அந்த அளவில் ம.ப.(மதறாசப் பட்டணம்)வும் ஒரு ம.ப. (மர்மப் படம்) ஆகிவிட்டது.