“ஆமாங்க, இவங்க இப்ப நாலு வருசம் போகட்டும்னு சொல்வாங்க; அதுக்கப்பறம் பையனும் வேலைக்குப் போயிடட்டும்னு சொல்வாங்க; படிச்சு முடிச்சவுடனேயே என் தங்கைக்கு வேலை கெடைக்கணும். இல்லன்னா இன்னும் ரெண்டு வருடம் பொறுத்துக்கோன்னு சொல்வாங்க” அவள் பேச்சில் தெரிந்த தீவிரம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
Author: வளவ. துரையன்
பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்
எம்பெருமான் நாராயணன் இப்பூவுலகில் வந்துதித்த போதில் அவரின் திருப்பாதங்கள் முதன் முதல் பட்ட இடம் திருவேங்கடம்தான். அத்தகு தெய்வத் தன்மை பொருந்திய திருவேங்கடத்தை ஆழ்வார் பெருமக்கள் பலர் மங்களாசாசனம் செய்து அனுபவித்திருக்கின்றனர். மூவாழ்வார்களில் முதலாம் ஆழ்வாரான பொய்கையாழ்வார் தம் முதல் திருவந்தாதியில் பல இடங்களில் திருவேங்கடத்தைப் போற்றிப் பாடி “பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்”
வெறியாடல்
தற்காலத்தில் பேய் பிடித்து விட்டதென்று அதை ஓட்டப் பாட்டுப் பாடி ஆடுவோரிடத்தும், சாமி வந்து ஆடும் மகளிரிடத்தும் பண்டைய வெறியாடலின் கூறுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இக்காலத்தில் குறி சொல்லும் நிகழ்வுகளும் இப்போக்கிலேயே அமைந்திருக்கின்றன. இந்த வெறியையே மையமாக வைத்துப் பாட்டுகள் பாடியதால் ஒரு சங்க காலப் புலவர் “வெறி பாடிய காமக்கண்ணியார்” என்று அழைக்கப்படுகின்றார். ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையைப் பாடிய கபிலர் அதில் ‘வெறிப்பத்து’ என்று பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பகுதியையே படைத்துள்ளார்.
அருளிச்செயல்களில் அணைகட்டுதல்
பாசுரத்தின் நான்கு அடிகளும் ‘வெற்பு’ என்னும் ஒரே எதுகை பெற்று வரும். வெற்பு என்பது மலையைக் குறிக்கும். இப்பாசுரத்தில் மந்தர மலையை எடுத்துக் கடலைக் கலக்கியதும், வானரர்களைக் கொண்டு மலைகளை எடுத்து தெற்குக் கடலிலே அணைகட்டியதும், மலையாலே சூழப்பட்ட இலங்கையின் அரணை அழித்ததும், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததும் சொல்லப்படுகின்றன.
”வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய், அதன்றியும்
வெற்பெடுத்து வேலைநீர் வரம்புகட்டி வேலை சூழ்
குவெம்புவின் படைப்புலகம்
”பிறைச்சந்திரன்” என்றொரு கவிதை. அதில் ஒரு சிறுவன் தன் தாயைப் பார்த்துத் தனக்குத் தெரிந்த உவமையைக் கொண்டு,
”கடவுளின் பெப்பர்மெண்டா அம்மா
வானில் சுழலும் சந்திரன்”
என்று எளிமையாகக் கேட்கிறான். அம்மா பதில் சொல்கிறாள்.
”நீயும் கடவுளின் குழந்தையானால்
உனக்கும் தருவான் கண்ணே”
திருப்பாவையின் மறைபொருள்
பாசுரங்களுக்கு மேல்பூச்சான பொருளை நோக்கினால் பெண்களை எழுப்புவதுபோல் தோன்றினாலும், மறைமுகமான ஆழ்ந்த பொருளை நுணுகிப் பார்த்தால் ஒவ்வோர் ஆழ்வாரையும் எழுப்பி அவர்களின் அருள் வேண்டுவதை நாம் உணரலாம்.
யாப்பில் தோய்ந்த மொழியாக்கம்
நாஞ்சில் நாடனிடம் கம்பனைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவர் ரா. பத்மநாபன் பற்றிக் குறிப்பிடாமல் இருந்ததில்லை. மும்பையில் இருந்தபோது ரா.ப. அவர்களிடம் மூன்றரை ஆண்டுகள் நாஞ்சில் கம்பராமாயணத்தை எழுத்தெண்ணிப் பாடம் கேட்டவர். இன்றக்கும் நாஞ்சிலின் எழுத்தில் அவ்வப்போது கம்பனின் வரிகள் மின்னுகின்றன என்றால் அதற்கு ரா.ப. அவர்களே காரணம். தமிழ் நாட்டின் முக்கியமான கம்பன் மேடைகளில் நாஞ்சில் மேடை ஏறி இருப்பதற்கும் அவரே காரணம்.
நாஞ்சில்நாடன் கதைகளின் மையங்கள்
இரண்டாவது வேட்பாளர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் பணக்காரர் டாக்டர் பரமேஸ்வரன். இவர் ஆப்பிரிக்காவிலிருந்து வரும்போதே அங்கே ஒரு கிறித்துவப்பெண்ணை மணம் செய்து கொண்டு வருகிறார். இங்கும் அவருக்கு அவர் இனத்தில் ஒரு மனைவி உண்டு. இது அவருக்கு வாக்கு கேட்க வசதியாயிருக்கிறது. தன் இன மக்களைச் சந்திக்கப் போகும்போது இங்கு மணந்து கொண்டவளையும், அரிஜன சேரிக்குச் செல்லும்போது சிலுவை டாலரை எடுத்து வெளியே விட்டுக்கொண்டு வரும் கிறித்துவ மனைவியும் அழைத்துக் கொண்டு போகிறார். மூன்றாவது வேட்பாளர் அறிவரசன் இப்போதுதான் ஒரு சாதாரண வீட்டிற்குச் செல்கிறார். அங்கே உட்கார்ந்து கொண்டு ”வெறும் புளிக் கறையையும் காணாத் துவையலையும்” கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார். ஆக இவர்கள் …
முழுக்கு
”சரியா மதியம் மூணு மணிக்கு வண்டி ஒங்க வீட்டுக்கு வந்திடும். நாலுபேருக்கும் ஒங்க வீட்ல டிகிரி காப்பி. அதைக் குடிச்சிட்டு கெளம்பறோம். ஆறரை மணிக்கெல்லாம் சமயபுரம். அங்கே ஆத்தாளக் கும்பிடணும். அதுக்கப்புறம் சீரங்கம். அங்க பெருமாளச் சேவிக்கறோம். ராத்திரி அங்கியே தங்கிட்டு காலைல திண்டுக்கல் போறோம்”
“இல்ல கோவிந்து, அவங்க ரெண்டு பேரும்தான் வராங்களே?”
கோவிந்தன் சிரித்துக் கொண்டே “இருந்தாலும் ஒரு எழுத்தாளரு, அதுவும் இலக்கியவாதி கூட வந்தா…
வழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்
நாஞ்சில் சொற்கள்மீது தீராக் காமம் கொண்டவர். ஒரு புதுச் சொல்லைக் கண்டால் மிகவும் மகிழ்ந்து அதைத் தம் படைப்பில் பயன்படுத்தி வெளிக்கொணர்பவர். அதே நேரத்தில் நிறைய சொற்கள் பயன்பாடு இல்லாமல் போய்விட்டனவே என்று வருத்தமும் கொள்பவர். அந்தச் சொற்களெல்லாம் வீணாய்க் கிடக்கிறதே என்று வருந்தித்தான் இப்படி எழுதுகிறார்.
நாஞ்சில் நாடனின் ‘கம்பனின் அம்பறாத்தூணி’
காரைக் குடியில் பழனியப்பா—மீனாட்சி அறக் கட்டளை சார்பாக அவர் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவே ”கம்பனின் அம்பறாத்தூணி” எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. முதலில் இந்நூல் கம்பராமாயண நயங்களை வியந்தோதும் நூல் அன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்பனின் நயங்களைப் பலவகைகளில் எடுத்துக் கூறியும் அவனது நூலைப் பல வழிகளில் ஆய்ந்தும் எண்ணற்ற புத்தகங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ஆனால் நாஞ்சில் நாடனின் இந்நூல் அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டதாகும்.
வினை அறு நோன்பினாள்
வனத்திலே இராமனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து ஓர் ஆத்மா பல காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறது. பெருமாளை நினைந்து நினைந்து மனமெல்லாம் அவரே ஆகி அளவில் காலமாக அது பரமாத்மாவை நினைத்துத் தவம் செய்து வருகிறது. அதுதான் ‘சவரி’ என்னும் பெருமகள். அவள் வேடர் குலத்தைச் சார்ந்தவள். இராமபிரான் வருவதற்குச் சில நாட்கள் முன்பு ஈசனும் நான்முகனும் தேவரும் வந்து…
நற்றமிழ்ச்சுளைகள்
12 வகைச் சிற்றிலக்கியங்களை அவர் இந்நூலில் அறிமுகப்படுத்தி உள்ளார். பொத்தாம் பொதுவாகப் போகிற போக்கில் வாசிக்கும் நூலன்று இது. அதேநேரத்தில் படித்து உணரக் கடினமானதன்று. நூலின் இடையே வரும் நாஞ்சிலின் வழக்கமான எள்ளல் பாணி வாசகனுக்குச் சுவை ஊட்டுகிறது. மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை அப்படியே முழுதாய்க் கடித்துத் தின்னலாம். பலா மற்றும் ஆரஞ்சு முதலானவற்றைச் சுளை சுளையாகத் தின்றுதான் அனுபவிக்க வேண்டும். இந்நூல் இரண்டாம் வகையினது.