நான் விரும்புவது

மழையும், வெயிலும், அவற்றின் பற்றாமையும்
ஓர் அத்திப்பழத்திலோ அல்லது ஆப்பிளிலோ
உறைவது போல்
என் வாழ்க்கை என்னுள் வசிக்கவேண்டுமென
நான் விரும்புகிறேன்

டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது

இரண்டு போலீஸ்காரர்கள் தம் இடுப்பிலிருந்த துப்பாக்கிகளை வெளியே எடுத்து காளைகளின் அருகே மெதுவாகச் சென்றனர். பாதுகாப்பான தூரத்தில் தெருவில் முட்டியிட்டுக் குனிந்து உட்கார்ந்தனர். பொதுமக்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தனர். கூட்டத்தில் யாரோ கத்தினார்கள்: ஏய், அது மஹாதேவக் கடவுளின் காளை – அவற்றைக் கொல்வதில் என்ன பலன்? இன்னொருவன் பதில் சொன்னான்: ஆனால் அவை கம்யூனிஸ்ட் காளைகள் – அவற்றைக் கொல்வது பாவமில்லை!

வங்க இலக்கியங்கள்

This entry is part 9 of 13 in the series வங்கம்

வங்க மொழி நூல்களில் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை பற்றிய சுருக்கமான அறிமுகம் இங்கே தரப்பட்டுள்ளது. முக்கியமான எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் இங்கே கிடைக்கும். உஷா வை. தாராசங்கர் பந்தோபாத்யாய் (1898 – 1971) தாராசங்கர் பந்தோபாத்யாய் (1898-1971) எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர். அவர் இந்திய சுதந்திர இயக்கத்திலும் அதற்குப் பிற்பட்ட “வங்க இலக்கியங்கள்”

நானறிந்த வெ.சா

இதழ் வெளியீடு தேதியை கன்ஃபர்ம் செய்துகொண்டு அதற்கு இரண்டு நாட்கள் முன்பு கட்டுரைப்பகுதியை அனுப்புவார். அனுப்பும்போது மறக்காமல் ஒரு வரி இருக்கும். ‘சொன்ன தேதிக்கு முன்பே அனுப்பி விட்டேன். அதை பாராட்டி இரண்டு வார்த்தைகள் சொன்னால் தப்பில்லை’. சொன்ன தேதிக்கு இதழ் வெளிவரவில்லை என்றாலும் கோபப்படுவார். ’யாருடைய கட்டுரைக்கும் காத்திருக்கக் கூடாது. இதழ் வெளியீடு தேதி முடிவு செய்து விட்டால் வெளியிட்டு விடவேண்டும்’ என்பார். படைப்புகள் பற்றி வாசகர்களிடமிருந்து கருத்துப் பரிமாற்றம் இல்லை என்பது அவருடைய குறை. நமது வாசக சூழலே இன்று இப்படித்தான் இருக்கிறது என அங்கலாய்ப்பார். அவர்களுக்கு சொந்தக் கருத்தே இல்லையா. அல்லது சொல்லத்தயக்கமா அல்லது எதற்கு எதையாவது சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வது என்கிற நினைப்பா எனப் புரியவில்லை என்பார்.

ரங்கநாயகி தாத்தம்

“…குமுதினி’ எழுதிய முதல் கட்டுரையைப் படித்த உடனேயே எனக்கு ஒரே வியப்பாய் போய்விட்டது. தமிழ் பாஷையை இவ்வளவு லாவகமாகக் கையாண்டு எழுதும் இந்தப் பெண்மணி யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ என்று பிரமித்துப் போனேன். ஊர், பேர் முதலியன தெரிந்து போய் விட்டதினால் பிரமிப்பு நீங்கி விடவில்லை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.”

கிராமத்து வீடு

” இதோ இந்த முத்தத்துலேதான் பாண்டிக் கட்டம், தாயக்கட்டை கட்டமெல்லாம் போட்டு விளையாடுவோம். இந்த தூண்களுக்கு நடுவிலே நாலுமூலை தாச்சி என ஒரு விளையாட்டு. அதெல்லாம் ஒரு காலம் .எல்லாரும் போய் சேர்ந்தாச்சு. இப்போ என் காலமும் முடியப் போறது. நம்ம குடும்பத்தோட ஒரோரு சிரிப்பும் அழுகையும் இந்த வீட்டுக்குத் தெரியும். நமக்குத் தெரியாத ரகசியங்கள் கூட இதுக்குத் தெரியும்“.

“விக்டோரியாவும் அப்துல்லும்” – ஷ்ரபணி பாசு

அவருடைய அதிகாரிகள் பலரையும் இந்த நட்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தி இதற்கான காரணங்களை ஆராய வைத்தது. பலரும் ராணி தெளிவாய் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார் எனத் தீர்மானித்தாலும் சிலர் வேறு காரணங்களை நினைத்தனர்.

ராணியின் ஐரோப்பியப் பயணங்களின் போது அவர் பின்னே தனி வண்டியில் பவனி வரும் இந்தியரை ராணியின் அரசு கைப்பற்றிய ஏதோவொரு இந்திய ராச்சியத்தின் இளவரசர் என்றும், தன் அரசின் வலிமையைக் காட்டுவதற்காக ராணி அவரை வலம் அழைத்துவருவதாகவும் பலரும் நினத்தனர். ஆங்கிலேய அதிகாரிகளிடையே கருத்து அரசியின் உளநிலை மனநிலை பற்றிய ஆராய்ச்சியாக இருந்தது. பிரதம மந்திரி ஸால்ஸ்பரி ஒரு கடிததில் இப்படிச் சொன்னார்: “மகாராணிக்கு தொடர்ந்த பரபரப்பு பிடிக்கும், இப்போது முன்ஷிதான் அத்தகைய பரபரப்பைக் கொடுக்க முடியும்.”

கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை'

இக்கதையில் வரும் பெண்களில் ஒருத்திகூட பலவீனமானவள் அல்ல. கணவன் இறந்த பின் ஒற்றை ஆளாய் கூலிக்கு உழைத்து தன் மூன்று பெண்களுக்குத் திருமணம் செய்து மகனையும் ஐ.டி ஐ வரை படிக்க வைக்கும் பாக்கியம். அஞ்சலை படும் பாட்டால் மனமொடிந்து போன நிலையிலும் மாட்டை கார்குடலிலிருந்து மணக்கொல்லை வரை ஓட்டி வந்து அஞ்சலை கன்னுக்குட்டியைத் திருடவில்லை என நிரூபிக்கிறாள். பெரிய அக்கா கல்யாணி, வெளிப்படையாய் கொழுந்தனுடன் உறவு வைத்துக்கொள்வது மட்டுமில்லாமல் ஊர்வாயை அடக்கவும் தெரிந்தவளாய் இருக்கிறாள். அவர்கள் இவளை ஒதுக்குவது பற்றி இவளுக்குக் கவலை இல்லை. சின்ன அக்கா தங்கமணி தன் அன்பாலும், நல்ல குணத்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களிடையே ஒரு பாலமாய் இருக்கிறாள். அஞ்சலையை ஊர்வாய் சீண்டிகொண்டே இருப்பதில் அவள் அடிபட்டாலும், அது அவளை ஒடுங்கச்செய்வதில்லை.

ஸியாட்டிலில் சில நாட்கள்

ஸியாட்டில் இருக்கும் வாஷிங்டன் மாநிலம் 4000 வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்கள் வாழ்ந்த இடம். அதனால் இன்னும் பல ஊர்களின் பெயர்கள். ஸமாமிஷ், இஸ்ஸாகுவா, ஏனும் க்ளா, ஸ்னோக்வால்மீ, புய்யால்லுப், ட்யூலலிப் என்பதுபோல் அவர்களின் மொழியிலேயே இருக்கும். ஸ்னோக்வால்மீ என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் ஒரு ஹோட்டலுக்குள். போனால் நம்ம தமிழ் மாமாவும் மாமியும் அவியல், தோசை, தயிர்சாதம் என்று மெனு கொடுக்கிறார்கள்.

பாட்டும் நானே பாவமும் நானே

ஒரு காலகட்டத்தில் எம்ஜியாருக்கு இவர் பாடுவது நின்றுபோனாலும், இன்றும் எம்ஜியாரின் முத்திரைப் பாடல்களாய் ஒலிப்பவை இவருடைய ‘ நான் ஆணையிட்டால்’ , ‘புதிய வானம் புதிய பூமி’, ‘ தூங்காதே தம்பி தூங்காதே’ போன்ற பாடல்கள்தான். கட்சிக் கொள்கைகளை மக்களிடையே பரப்ப அந்த அதிரடிக்குரல் அவருக்குத் தேவைப்பட்ட்டது.

பாடல்களில் அவர் தாலாட்டு

முதன்முதலாய் மிஸ்டர் சம்பத் படத்தில் இவர் பாடகராக அறிமுகமான சமயத்தில் இவர் குரலைக் கேட்ட ஜெமினி அதிபர் எஸ் எஸ் வாசன் அப்போது ஜெமினியின் இசைத்துறையின் தலைவராய் இருந்த ஏமனி சங்கர சாஸ்திரியிடம் சொன்னாராம்.”நீங்கள் கூட்டி வந்திருக்கும் பையன் நன்றாக பாடுகிறார். இவர் வெறுமே ஹம்மிங் செய்தால்கூட போதும், கல்லும் கண்ணீர்விடும்’ என்று. இரவின் அமைதியில் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ பாடலைக் கேட்கையில் தியானம் செய்தது போல் ஒரு அமைதி கிடைக்கும்.

பித்து

மறுநாள் மாலை வேலையிலிருந்து திரும்பும்போது அந்தப் பெண்ணை அதே கட்டிடத்தில் பக்கத்தில் திரும்பப் பார்த்தேன். 25 , 30 வயது இருக்குமோ என்னவோ. மொட்டைத் தலையில் முடி அங்கங்கே முளைத்திருந்தது. மண்டையில் நீளமாய் தையல் போட்ட தழும்பு இருந்தது. குச்சியான உடம்பிற்கு மிகபெரிதான ஒரு நைட்டியை போட்டுக் கொண்டிருந்தாள். நிறைய கிழிசல்கள். கையில் எதையோ வைத்துக் கொண்டு கட்டிட வாட்ச்மேனின் சின்னக் குழந்தையை ‘வா வா’ என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

கவிமொழியைக் கைமாற்ற முடியுமா? டெப்ரா ஏய்கர் கவிதையை முன்வைத்து…

கவிதை மொழிபெயர்ப்பு இன்னும் சங்கடமானது. கட்டுரைகளிலும், கதைகளிலும் அதன் படைப்பாளி சொல்ல வருவதை புரிந்துகொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரு விரிவும், பரப்பும், கவிதையில் இல்லை. வெகுசில வரிகளிலேயே சொல்லவருவதை சொல்லியும் சொல்லாமலும் குறிப்பது கவிதை. இதனாலேயே கவிதையை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் சொல்வது இயலாத விஷயம் என்று வாதிடுபவர்கள் உண்டு.

வைதேஹி – அறிமுகமும் கவிதைகளும்

ஜானகி ஸ்ரீனிவாசமூர்த்தி எனும் வைதேஹி சமகால கன்னட எழுத்தாளர். கதை, கட்டுரை, கவிதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு எனப் பலவகை எழுத்தில் தன் முத்திரையைப் பதித்துள்ளவர். இவர் தன்னை ஒரு பெண்ணிய எழுத்தாளராய் அடையாளப்படுத்திக் கொள்ளவிட்டாலும், ஆணாதிக்க சமுதாயத்தில் சாதாரண மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்வுப் போராட்டங்களைச் சுற்றியே இவரது கதைகள் பெரும்பாலும் அமைந்துள்ளன. உரத்து கோஷம் போடாமல் நம் சமுதாயத்தில் பெண்களின் வாழ்க்கையை அது இருப்பது போலவே காட்டி அதன் மூலம் தெரிந்து கொள்ளவேண்டியதை நமக்கே விட்டுவிடுகிறார்.

நாகரஹாவு

அந்த இருபது நிமிடங்களில் பக்கத்து வீட்டில் வேலை நின்று போய் அத்தனை ஆட்களும் இங்கே வேடிக்கை பார்க்க வந்துவிட்டனர். ரோட்டில் போவோரும் இந்தக் கூட்டத்துடன் சேர்ந்துகொள்ள வாசல் முழுவதும் ஒரே கூட்டம். ‘நாகப்பாம்பு இல்லை, சாதா எலி தின்னும் பாம்புதான்’ என்கிறான் ஒருவன். அது படம் எடுத்ததைப் பார்த்த இருவரும் ஐந்து விரல்களையும் அகல் விரித்து அதன் படம் எப்படி இருந்தது என்று விவரித்துக்கொண்டிருந்தார்கள். மறுபடியும் படம் எடுக்குமா என்று ஆசையாய் சிலர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

கஹானி

வெறும் திரைக்கதையையும், தேர்ந்த நடிப்பையும் மட்டும் முக்கியமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பெறும் வெற்றியும், ஷாரூக் கான் போன்ற சூப்பர் ஸ்டார்கள் கூட கோடிக்கணக்கில் செலவு செய்து படமெடுத்து, ஒரு வருடம் விளம்பரப்படுத்தி எடுக்கும் படங்கள் படுதோல்வியும் அடைவதைப் பார்க்கும்போது இவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தப் பொய்யைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்று ஆச்சரியப்படவைக்கிறது.

தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது… – இறுதிப் பகுதி

நான் இதை முன்பும் சொல்லி இருக்கிறென்: எனக்கு உலகைப் பற்றிய மேம்பட்ட புரிதல் இல்லை. மேம்பட்ட புரிதலை விடுங்கள், நிஜத்தில் எனக்கு இந்த உலகம் புரிபடவில்லை. நான் புரிந்தவளல்ல. எனக்குப் புரியவில்லை என்பதினால்தான் நான் எழுதுகிறேன். அதற்கான விலையைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், அது எதற்கும் ஈடில்லை. ஒருவரின் துன்பம், வாழ்க்கை என்பதே, இருப்பதிலேயே மிக்க மதிப்புள்ளது.

பாத்திரங்கள் சுருங்கும்

எழுதாமல் இருப்பதற்கு
முன்னால் வருவது எழுத்து. அங்குதான் இருக்கிறது
சிறிய பெரிய ஏனைய கவிதைகளை ஊட்டி
வளர்த்திருக்கும் ரகசியம்.

தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது…

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மையும், அந்த உலகத்துடன் ஒரு தனி உறவும் கொண்டவரென நான் நம்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் இப்படியே. மேலும் நாம் செய்யும் எதையும் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக செய்கிறோம். ஏனெனில் நமக்கு வேறு வழிகளில்லை.

மாக்ஸீன் க்யூமின் – இரு கவிதைகள்

பத்து நிமிடங்களுக்குப் பின் அவன் அம்மாவை வீழ்த்தினேன்.
அவள் காற்றில் கர்ணமடித்து விழுந்தாள், ஊசிப்பற்கள்
இன்னும் ஒரு ஸ்விஸ் கீரை இலையில் குத்தியபடி இருக்க.
அடுத்து ஒரு குழந்தை. ஓ, ஒன்று இரண்டு மூன்று
என்னுள் இருந்த கொலைகாரி முறுக்கி மேலெழும்ப.
கழுகுக்கண் கொலையாளி மேடையேறி முன் நின்றாள்.

ஸ்னேக் ப்ரேக்

தாத்தா வீட்டுக்கு போறப்போ மணி ஒம்பது ஆயிடுத்து. நாங்க கேட் கிட்டெ போறப்பவே பைக் சத்தம் கேட்டு வெள்ளியும், சுப்பியும் ஓடி வந்துடுத்து. பைக் பின்னாடியே ஓடி வந்துது ரெண்டும். கூடவே அந்த புது பப்பியும் காலுக்கு நடுலே ஓடி வந்தது. கறுப்புக் குட்டி. கால்லே மாத்ரம் ஸாக்ஸ் மாதிரி வெள்ளை. அதை கைலெ தூக்கிண்டு வீட்டுக்குப் பின்னாடி போனேன். தாத்தா கார்த்தாலே ஆறு மணிக்கே பின்னாடி அனிமல்ஸ் கிட்டே போயிடுவார்.

அக்கூ குருவி

யாழ்பாணத்தில் கலவரம் ஆரம்பித்தது. எல்லாம் பாழாய் போச்சு. ஒரு நாள் ராஜன் ஊரில் இல்லை. எங்கள் ஊரில் ராணுவத்தினர் வீடுகளில் புகுந்து சோதனை நடத்துகிறார்கள் என்று செய்தி. இதற்கு முன்னால் இதுபோல் நடந்த சில இடங்களில் ராணுவம் நுழைந்தபோது நடந்திருந்த பயங்கரங்களைக் கேள்விப்பட்டிருந்த்தினால் ஏதும் தவறு செய்யவில்லை என்றாலும் கூட ரொம்ப பயந்து போனேன்.

உயர் நிர்வாகக் குழுக்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு

உலகம் முழுவதிலும் வேலைகளில் பெண்கள் எதிர்கொள்ள நேர்கிற தடைகளுக்கு, மொத்தமாக ஒரு உருவகம் கொடுக்கப்படுகிறது. அது, வேலைகளில் பெண்களை உயர விடாமல் தடுக்கும் ’கண்ணாடிக்கூரை’ என அழைக்கப்படுகிறது. நிறுவனங்களின் உயர் தளங்கள் தகுதி உள்ள பெண்களால் அடையப்படக் கூடியவை என்ற தோற்றம் தரும். ஆனால் உயர முயற்சி செய்யும்போதுதான் ஏதோ ஒரு தாண்டமுடியாத தடை அங்கிருப்பது தெரியும்.