முகப்பு » தொகுப்பு

உலக அரசியல் »

லீ ஜியாபெள – அமைதியின்மை தந்த அமைதிப்பரிசு

இந்த வருடம் நோபல் அமைதிப்பரிசு லீ ஜியாபெள என்ற சீனருக்குக் கிடைத்திருக்கிறது. யார் இந்த லீ ஜியாபெள? பரிசு பெறும்விதமாக இவர் என்ன செய்தார்? உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றைப் பெற்ற இவரை சீன அரசாங்கம் சிறையில் அடைத்திருக்கிறது. இவருக்கு நோபல் பரிசு கொடுத்ததையும் கடுமையாக எதிர்க்கிறது. நோபல் பரிசு குறித்த அறிவிப்பு சீனாவில் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. பரிசு அறிவிப்பு செய்த BBC, CNN போன்றவை உடனடியாக முடக்கப்பட்டன. ஏன்? இதிலிருந்து நாம் சீன அரசைக் குறித்து என்ன தெரிந்து கொள்ள முடிகிறது? நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

புத்தக அறிமுகம் »

ஸ்டாலின் மகாத்மியங்களும், ராவண காவியங்களும்

நகரமே திடீர்ப் பணக்காரர்களால் சூழப்பட்டுள்ளது. இவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதே ஸ்டாலினின் வேலை. இதில் இவருக்கு உடந்தை பெரும் செல்வந்தரான ஒரு ஜெர்மானியரின் மனைவி. ஆம். ஸ்டாலின் அந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல. இரு மனைவிகள் உட்பட ஏறத்தாழ ஒரு டஜன் பெண்களை ஸ்டாலினோடு இணைத்துப் பட்டியல் போடுகிறார் மாண்டபியோரி. இதில் 14 வயது சிறுமி ஒருவரும் அடக்கம். பிற்காலத்தில் இந்தக் காதலிகள் எழுதிய ‘மலரும் நினைவுகள்’ பிரசுரத்திற்கு முன்பே தேடித்தேடிப் பறிமுதல் செய்யப்படுகிறது.