kamagra paypal

முகப்பு » தொகுப்பு

உரை, சமூக வரலாறு, வரலாற்றாய்வு »

வரலாறும் பொறுப்புணர்வும்

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஜெர்மனி இழைத்த கொடுமைகள், உக்ரெய்ன் எதிர்கொண்ட கொடூரங்கள், இவற்றின் பின்னணியில் உள்ள
யூரோப்பிய கொள்கைகள், கோட்பாடுகள்- இவை நமக்கு ஏன் முக்கியமாக இருக்க வேண்டும்? யூரோப்பிய மோதல்களின் வரலாற்றை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? ஜெர்மனியின் பாராளுமன்றத்தில் திமோதி ஸ்னைடர் 20.6.2017 அன்று ‘Germans must remember the truth about Ukraine – for their own sake‘ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் உக்ரெய்ன் விஷயத்தில் ஜெர்மனியின் வரலாற்றுப் பொறுப்பு பற்றி அவர் பேசுகிறார். வரலாற்றுப் பொறுப்பை ஏன் பேச வேண்டும், அதிலும் குறிப்பாக ஜெர்மனிய வரலாற்றுப் பொறுப்புணர்வை ஏன் பேச வேண்டும், என்ற கேள்வியை எதிர்கொள்ளும் ஸ்னைடர் முதலில் ஒரு பொதுப் பார்வையை முன்வைக்கிறார்.

இலக்கிய விமர்சனம் »

இன்று அவசியப்படும் இலக்கியச் சூழல்

இலக்கிய குடிமை என்பது மிக எளிய விஷயம். நீ இருக்கவும் செழிக்கவும் இடம் கொடுக்கும் சூழலில் மாசுபடுத்தாதே. நீ வாழும் இடத்தில் மலம் கழிக்காதே. உன் மக்களுக்கு சில நன்மைகள் செய். நீ இருக்கும் இடம் வரும்போது இருந்ததைவிட நல்ல இடமாக விட்டுப்போ. எதற்கு இல்லை என்றாலும் நீ இருக்கும் இடத்தை அழகான, சுவாரசியமான, ஆரோக்கியமான இடமாக வைத்திருப்பது உனக்கே நல்லது. இதில் ஒட்டுண்ணிகள் போலிருப்பவர்கள் பற்றி…

உலகச் சிறுகதை, சிறுகதை »

தேம்பும் சுனைக்குச் செல்லும் சாலை – லி யூவான்

மலைகளின் வழி தொடரும், கோபி பாலைவனத்தின் ஏறி இறங்கும் நிலப்பரப்பின் ஊடே செல்லும், குண்டும் குழியுமாய் வளைந்து நீளும் அந்தப் பாதை முழுதும்; காலங்கள்தோறும் விரியும் அந்தச் சாலை; பண்டை தாகங்களோடும் துயரங்களோடும் ஊடுருவிச் செல்லும் பாதை; காலத்தின் மந்தகதியோடும் அச்சத்தின் ஆழத்துடனும் சுயமரியாதையின் ஆழத்துடனும் செல்லும் அந்தப் பாதை, கைவிடப்பட்டது. பாலைவெளியில் அது யாருமற்று திறந்து கிடக்கிறது, முடிவற்ற பசியாலும் தாகத்தாலும் நிறைந்து கிடக்கிறது.

சமூகம் »

ரோமாக்கள் – இறுதிப் பகுதி : அந்நியர்களாய் அழிக்கப்பட்ட வரலாறு

ரோமாக்கள் எங்கிருந்து வந்தனர், அவர்களுடைய மொழியின் வேர்கள் எவை என்பன குறித்த ஐரோப்பாவின் முன்நவீன காலகட்ட ஊகங்களுக்கு பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளக்கம் கிடைத்தது. அறிவியல் அடிப்படையிலான மானுடவியல் ஆய்வுகளும் மொழித்துறையின் வரலாற்று ஆய்வுகளும் ரோமாக்களின் மொழி தனித்துவம் கொண்டதாக இருப்பதையும், அதன் வேர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதையும் தெளிவாக நிரூபித்தன. ரோமாக்களின் இந்திய வேர்கள் குறித்த கண்டுபிடிப்பு ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூகம் »

ரோமாக்கள் – அந்நியர்கள் ஆக்கப்பட்ட வரலாறு

சல்லடைக் கண்களாய் இருந்த வேலிகள் சிறைக்கம்பிகளாய் உருமாற்றம் பெற்ற வரலாறே ஐரோப்பிய தேசியவாதத்தின் வரலாறு என்றும் சொல்லலாம். வரலாற்றில் நவீனத்துவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியோடு தேசியவாதமும் பிணைந்திருப்பது தற்செயல் நிகழ்வல்ல – பெரும்பாலும் ஐரோப்பிய காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட தேசங்கள்தான் தமக்குள்ளும் வெளியும் தீவிரமான எல்லைப் போர்களைச் சந்திக்கின்றன. தேசியவாதத்தின் வேர்கள் நவீனத்துவத்தில் இருக்கின்றன. நாகரிகம் வளர்ச்சியுற்று தேசியமாக உருவாகி ஐரோப்பிய மண்ணில் எல்லைக் கம்பங்களை நட்டு அதன் வரைபடங்களில் எல்லைக் கோடுகளைக் கீறியது. தேசியம் நிலப்பரப்புக் கோட்பாட்டைத் தழுவி, ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே மக்கள் என்ற ஒருமைப்பட்ட பண்பாட்டைத் தோற்றுவித்தது.

பேட்டி, மொழிபெயர்ப்பு »

சீனாவின் நிஜமான மக்கள் புரட்சி

பத்திரிகை சுதந்திரம் இல்லாத சமூகத்தில், பாதிக்கப்பட்டவர்கள் கவனம் பெறுவது கடினம். நேற்று நடந்ததையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்களேன்: நான் CNN-க்குத் தொலைபேசியில் நேர்முகம் தந்திருந்தேன். அதன்பின் திடீரென்று, CNN ஒளிபரப்பு ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. என் தொலைகாட்சிப் பெட்டி முழுமையாக மௌனமானது. எனக்கு அது முதல் அனுபவம். கடவுளே, நான் பேட்டி கொடுத்ததால்தான் இப்படி நடக்கிறதா, என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்! என்று நான் நினைத்தேன். எந்த ஒரு நாட்டில் இப்படி நடக்கும்? ஒருவேளை க்யூபா, வட கொரியா, சீனா. ஆனால் அவர்களுக்கு என்ன வேண்டும், அவர்கள் எதைப் பார்த்து பயப்படுகிறார்கள்?

புத்தகவிமர்சனம் »

தஞ்சம் புகுதலின் சுமை

ரத்தம் தோய்ந்த பஞ்சாபி மற்றும் வங்காளப் பிரிவினை பற்றி ஏராளமான ஆய்வுகள் மற்றும் புதினங்கள் எழுதப்பட்டுவிட்ட நிலையில், அமைதியாக, எந்த வன்முறையும் இல்லாமல் நிகழ்ந்த சிந்திக்களின் குடிபெயர்வு குறித்து இந்திய வரலாற்றில் ஒரு வெற்றிடம் இருக்கிறது என்ற குறையைப் போக்கும் வகையில் தன் புத்தகத்தை முன்வைக்கிறார் ரிடா கோதாரி.

மொழிபெயர்ப்பு »

’ ஒரு எடிட்டராக நான் என்ன செய்கிறேன் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை’

“நீங்கள் ஒரு நல்ல எடிட்டரா மோசமான எடிட்டரா இல்லை எடிட்டரே இல்லையா என்பது முக்கியமில்லை: நீங்கள் ஒரு மிக முக்கியமான வாசிப்பின் பிரதிநிதி. ஆமாம் அவருடைய கணவர் அதைப் படித்திருக்கிறார். ஆமாம், அவருடைய ஏஜண்ட் அதைப் படித்திருக்கிறார். ஆனால் நீ அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறாய், அதற்கான தகுதி உனக்கு இல்லை என்றாலும். நீ பணத்தின் குறியீடாகவும் இருக்கிறாய்.”