அடிமைமுறை பற்றிய நீட்சாவின் கருத்துகள் கொடுமையானவை என்பது ஒரு புறம் இருக்கையில், இனத்தூய்மை வாதம் குறித்து அவர் கொண்டிருந்த கருத்துகளும், ஜனநாயகம் உருவாகக் காரணிகள் என உடற்கூறுகளின் அடிப்படையில் அவர் முன்வைக்கும் கருத்துகளும் (ஆள்வோராக இருக்கும் “வெற்றி பெற்ற ஆரிய இனத்தின்” விழுமியங்களை வென்ற அடிமைகளின் விழுமியங்களாக- கருநிறம் கொண்ட, அதிலும் குறிப்பாகக் கருநிற முடிகொண்ட மனிதர்களின் வெற்றியாக- ஜனநாயகத்தை அவர் பார்க்கிறார்) அருவருப்பான கருத்தாக்கங்கள்.