இதில் மனித செயலாண்மையின் (Human Agency) இடையீடு இல்லாமல் எல்லாவித மனிதத் தேவைகளும், அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ற மிகச்சரியானவற்றை, AI துணைக்கொண்டு மனிதர்கள் செய்யமுடியும் என்பதிலிருந்து, அதிகாரத்திற்காக சமூகத்தை மிக எளிதாக ‘ஹைஜாக்’ செய்யமுடியும் என்றும், எதிர்காலத்தில் தற்போதைய ராணுவங்கள் இருக்காது – எதிரி நாட்டை அடக்குவதை, அந்த நாட்டின் சமூகத்தை AI-ன் துணைக்கொண்டு மூளைச்சலவை செய்து அடையலாம் என்றும், மனித உடல்நலம் சார்ந்த அணுகுமுறையில் உருவாக்க சாத்தியமுள்ள நல்ல/தீய விளைவுகள் என்றும், இன்னும் இதைப்போன்றவையும் இந்த உரையாடலின் களமாக இருந்தது.
ஆசிரியர்: டி.கே. அகிலன்
தேசிய கல்விக் கொள்கை – 2016
சுதந்திர இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்கான மூன்றாவதாக அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை ஏப்ரல்-30, 2016 -ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் அளித்திருக்கிறது. இதன் அடிப்படையில் அமைச்சகம் அதன் கல்விக் கொள்கையை வெளியிட வேண்டும். அதன் முன்பாக, வரைவுக் கொள்கையை வெளியிட்டு பொதுமக்களிடமும் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறது. விருப்பமும், உபயோகமான பரிந்துரைகளும் இருந்தால் ஆகஸ்ட்-16 ம் தேதிக்கு முன் அளிக்கலாம்… இக்குழுவின் அறிக்கையின் இரண்டாவது அத்தியாத்தின்படி, குழு அமைப்பதற்கு முன்பாகவே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேலே கூறப்பட்ட பிரமிடின் முதல் ஆறு நிலைகளிலும் ஆலோசனைகளைப் பெற்று தொகுக்கும் பணியை முடித்திருக்கிறது. இந்தத் தொகுக்கப்பட்ட ஆவணங்களிலிருந்துப் பெறப்பட்டத் தகவல்களை…
உலகமயமாதல்
மனித வாழ்க்கைக்கு பொருளாதாரத்தின் தேவை ஒரு சிறு அலகு மட்டும்தான். பொருளாதாரம் கடந்து பண்பாடு, உறவு, கலை, சுவை, உணர்வு என பல அலகுகள் வாழ்க்கையில் தேவையாக உள்ளன. ஆனால் அந்த சிறு அலகை மட்டும் பிரதானப்படுத்தி உலகமயம் மற்றவற்றை புறந்தள்ளுவதால் இருக்கலாம். பொருளாதாரத்தின் அடிப்படையான நுகர்வை, பெரும் உற்பத்திகளின் சார்புடையவையாக மட்டும் வைத்திருந்து, அந்தத் திசையில் மட்டும் முன்னெடுப்பதன் மூலம் பண்பாட்டுடன் தொடர்புடைய, பண்பாடு சார்ந்த சமூகத்தின் உற்பத்திகளை, கலைகளை, உணர்வுகளை முக்கியத்துவம் இல்லாமல் செய்வதால் இருக்கலாம். பொருளாதாரத்திற்கான உற்பத்தி பெருமளவு இயந்திரமயமாகி விட்டது.
மாநில மின்வாரியங்களின் சுமை
2015-ம் வருடம் செப்டம்பர் மாத கணக்குப் படி 4.5 லட்சம் கோடிகள் கடன் சுமையை இந்த நிறுவனங்கள் மொத்தமாக வைத்துள்ளன. இதில் 70%, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் மின்வாரியங்களால் சுமக்கப்படுகின்றன. வாக்கு வங்கி மின்சார அரசியல், அரசியல் சார்புள்ள நிர்வாகங்கள், திறமையற்ற நிர்வாகிகள் போன்ற காரணிகளே இத்தகைய சுமைக்கு காரணிகளாக இருக்க முடியும்.
எண்ணங்கள் சிந்தனைகள் – எதிர்வினைக்கான பதில்கள்
மனம் ஒரு தனித்த இருப்பு அல்ல. அது மூளையின் இயக்கம். மூளை ‘செல்’களின் (நியூரான்களின்) தொகுப்பை மூளையின் இருப்பு எனலாம். அவை தொடரந்து வேதிவினை அல்லது வேதிவினையின் விளைவான மின்இயக்கத்தால் இயங்குகிறது. அந்த இயக்கம், அதாவது ஒரு நியூரானின் வேதி இயக்கம் அடுத்த நியூரான்களை தூண்டுவதால் அங்கும் நிகழும் வேதிஇயக்கம் இவற்றின் தொடர் சங்கிலியை மனம் என்று கூறலாம். கணினியின் ப்ராஸஸர் வேலை செய்வது மின் இயக்கத்தை அதிவேகத்தில் அடுத்தடுத்த bits எனப்படும் நினைவுக் கண்ணிகளுக்குச் செலுத்துவதுதானே. அங்கு செல்வது என்ன? மென்பொருளால் வழிப்படுத்தப்பட்ட மின் இயக்கம்தானே? மின்இயக்கமாக மாறிய மெனபொருள்தானே?
எண்ணங்கள், சிந்தனைகள்
மனித சமூகத்தின் மேல் ஆர்வம் உடையவர்களாக இருந்தால், இன்னொரு மனித சிந்தனையின் உச்சம் பலிகளையும் இரத்தத்தையும் அல்லாமல் உன்னதத்தை அடித்தளமாகக் கொண்டு எழும்ப வேண்டும் என விரும்பினால், நாம் அனைவரும் தனிமனிதச் சிந்தனைக்கான விழைவுகளை நம் மனதில் உருவாக்கியாக வேண்டும். சிந்தனைகள் என்று நம்மை வந்தடையும் வெற்று எண்ணங்களை, மேலும் எண்ணங்களாக நம் மனதினுள் பெருக்கிக் கொள்ளாமல் சுய சிந்தனையின் மூலம் விழிப்புணர்வின் மூலம் நம் கருத்துருவாக்கங்களை அடைய வேண்டும். இந்த இயக்கம் ஒன்றினால் மட்டும்தான், இப்போதைய சூழ்நிலையில் அழிவை உருவாக்கும், பொதுவெளியில் சிந்தனைகளாகப் புழங்கும் எண்ணங்களின் அழிவு சக்தியை எதிர்கொள்ள முடியும். தனிமனித சிந்தனை குறைந்தப்பட்ச அளவை எட்டும்போது, பொதுவெளியில் உண்மையான சிந்தனைகள் தளிர்க்கத் தொடங்கும். அதன்பின் மனித இனம் உன்னதத்தின் மேல் எழும்பி நின்று கொண்டாடலாம்.
விடுதலையுணர்வு
இத்தனை சுதந்திரமாக இருந்தாலும், என் முகத்தில் நோயிலிருந்து மீண்ட களைப்பு தெரிகிறதா? அகத்தின் துள்ளல் முகத்தில் தெரியவில்லையா? மனதுக்கும் உடலுக்கும் இடையில் உணரமுடியாத திரை உள்ளதா? அவ்வாறு இருக்கும் எனில், என் உணர்திறன் இன்னும் தேவையான குறைந்தபட்ச அளவைக்கூட எட்டவில்லையோ? நான் உழைத்தாக வேண்டும். உணர்திறனை கூர்மைப்படுத்த வேண்டும். அல்லது அந்தக் கேள்வியை கேட்பவர்களுக்கு, முகத்தில் தெரியும் அக அழகைக் காண முடியவில்லையா? அவர்களை குறைகூற எனக்குத் தகுதியில்லை. தேவையும் இல்லை.
நட்சத்திரங்கள்
கடைசியாகக் கண் குளிர நட்சத்திரங்களை நான் பார்த்தது, சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால். தொழில் நிமித்தமாகச் சவுதி அரேபியா கடற்பரப்பில், வேலை தளத்திலிருந்து கரையை நோக்கி இரவு தொடங்கும் நேரத்தில் கிளம்பி, ‘போட்’-ல் வந்த 3 மணி நேர பிரயாணத்தில்தான். சற்று குளிர் அதிகமான இரவு. எனவே என்னுடன் பிரயாணித்த அனைவரும் போட் கேபினுக்குள் ஏதோ சினிமாபார்த்துக்கொண்டிருக்க அடுத்தவர்களைப் பற்றிய அக்கப்போர் பேசிக்கொண்டிருக்க, நான் மட்டும் எப்போதும் போலத் தனியனாகப் போட் டெக்-ல் அமர்ந்து இருட்டை வெறித்துக்கொண்டிருந்தேன். பயணம் தொடங்கியதிலிருந்து, சுமார் ஒருமணிநேரம் வரையும் காணும் திசையெல்லாம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவுக்காக, பூமியை டிரில்லிங் இயந்திரங்களைக் கொண்டு வன்புணர்வின்மூலம் உருவாக்கிய துளைகள் புடைப்புகளாக எழுந்து நின்றிருந்தன. சுகப்பிரசவமாகவும் (Natural Flow) சிசேரியனாகவும் (Forced Flow – Gas Injection/Water Injection) …
மாயத்தோற்ற ஊக்கிகள்
சில வகையான வேதிப்பொருட்களை உட்கொள்ளும்போது, அவை மூளையை அடைந்து கிட்டத்தட்ட இதேவகையான மாயத்தோற்றங்களை உருவாக்கும் இயக்கங்களை மூளையினுள் தூண்டுகின்றன. இவ்வகை வேதிப்பொருட்கள் மாயத்தோற்ற ஊக்கிகள் (Hallucinogen\ psychedelic) எனப்படுவன. 1960-களின் தொடக்கத்தில் இந்த வேதிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில், இவை மருத்துவத்தில் வலி நிவாரணியாகவும், மனநோய் சிகிச்சைக்கு மருந்தாகவும் உபயோகப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
சுசீலா ராமன்
சுசீலா ராமனின் இசைத்தொகுப்புகள் நியூ எஜ் கர்நாட்டிக் பிரிவில் சேராதவை. ஆனால் அந்த இசையை சிடி ப்லேயரில் இயக்கவிட்டதும், நான் வியப்பில் ஆழ்ந்துபோனேன். கர்நாடக இசை, வ்யூசன்(fusion) இசை முயற்சிகள் தவிர்த்து வேறு இசைப்பிரிவில் முன்முயற்சிகள் செய்யும் சாத்தியங்கள் அற்றது அல்லது கர்நாடக இசைக்கலைஞர்கள் சிந்தனையிலும் கர்நாடகமாக இருந்து மரபுக்குள் சிக்கி புதிய தளங்கள் நோக்கிப் பயணிக்காதவர்கள் என்று எண்ணியிருந்த எனது கருத்தை உடைத்தது அவரது இசைத்தொகுப்பு.