A Special Issue by Solvanam on Roberto Bolano
225: ரொபெர்த்தோ பொலான்யோ சிறப்பிதழ் குறித்து
நம்பி கிருஷ்ணனையே இந்த இதழுக்குச் சிறப்புப் பதிப்பாசிரியராக இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தோம். இந்த இதழில் பிரசுரிக்கப்படும் 30+ கட்டுரை, கதைகள் அனைத்தையும் அவர் கவனித்திருக்கிறார். தவிர அவரே பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Especially on the Bolano Special…
The special or the idea to revive them was an outcome of one of my rants as to how Solvanam lacked the passion of the little magazines of yore. Who better to exemplify that passion than the man whose characters go through extraordinary lengths in search of things literary? I know that we were living…
நகரத்தில் இப்போதும் இரவு
பழைய தேவாலயக் கட்டடங்களின் சீரழிவுக்குப் புறாக்களின் கழிவுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்த ஊரில் இருக்கும் பாதிரிமார்கள், விலைமதிப்பில்லாத தேவலாயக் கட்டடங்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் புறாக்களை கூண்டோடு அழிப்பதற்கு ஒரு விசித்திரமான உபாயத்தைக் கைக்கொள்கிறார்கள். பாதிரியார்கள் பருந்துகளை வளர்த்து, அவற்றைப் புறாக்களுக்கு எதிராக ஏவிவிடுகிறார்கள். கொலைத் தொழில் ஒன்றையே குறியாகக் கொண்டு வளர்ந்த பருந்துகள், புறாக்களைக் கொன்றொழிப்பதைப் பொலான்யோ, கதையின் போக்கில் மிக நுணுக்கமான வகையில் விவரிக்கிறார்.
பொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்
“என் புத்தகங்களும் குழந்தைகளும் மட்டுமே என் தேசம்” – ரொபெர்த்தோ பொலான்யோ “கவிதைகள் படிப்பதற்கு ஒரு காலம், முஷ்டி மடக்குவதற்கு ஒரு காலம் உண்டு,” – சாவெஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில் ரொபெர்த்தோ பொலான்யோ “ஆக, அறிந்து கொள்ளும் ஆர்வமும் நேர்மையும் நாம் மிகவும் நேசிப்பவையும், எல்லாம் நம்மைக் கைவிடுகின்றன. ஆம், என்றது குரல், ஆனால் சந்தோஷப்படு, இறுதியில் வேடிக்கையாய் இருக்கும்” – 2666 நாவலில் ரொபெர்த்தோ பொலான்யோ பொலான்யோவின் படைப்புகளை ஒவ்வொன்றாகப் பேசுவதற்கு முன் அவரது வாழ்க்கை,…
என்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு
மீண்டும் லின்னைப் பார்த்தபோது அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தபடி ஓர் ஆர்வலர் மட்டும் இருந்தார். அதன்பின் அவரும் வெளியே கூடத்தில் இங்கும் அங்குமாய் நின்றுகொண்டிருந்த தன் தோழர்களைத் தேடிப் போனார். தான் உயிருடன் இல்லை என்பது லின்னுக்குத் தெரிந்திருந்தது என்பது அந்தக் கணத்தில் எனக்குத் தெரிந்துவிட்டது. என் இதயம் என்னைக் கைவிட்டுவிட்டது, என்றார். அது இப்போது இல்லாமல் போய்விட்டது. இங்கு ஏதோ சரியில்லை என்று எனக்குப் பட்டது. லின் புற்று நோயால் இறந்தார்; மாரடைப்பால் அல்ல. அதீத…
பொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே?
வாசகர்கள் பொலான்யோ பற்றிய இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை மேம்போக்காகவாவது பார்த்துவிடுவது உத்தமம், அவரது வாழ்க்கை குறிப்புகளில் சிலவற்றைப் பற்றிய விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ளவும் பொலான்யோவின் புனைவில் உள்ள கிறுக்குத்தனத்தின் முறைமையைப் புரிந்து கொள்ளவும் அது உதவக்கூடும். மேலும், ‘சாவேஜ் டிடெக்டிவ்ஸ்‘ பற்றிய இந்தக் கட்டுரையை ‘துப்பறியும் கதை’ என்ற புனைவு வகைமையில் துவங்குவதும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன், அதிலும் குறிப்பாக, சிந்தனையைத் தூண்டும் இந்த வகைமை குறித்து போர்ஹெஸ் அளித்துள்ள சில தரிசனங்களைப் பேசுவது…
பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்
எடுத்ததும் இயக்குனர் பியர் பாவோலோ பஸோலீனிதான் (Pier Paolo Pasolini) நினைவுக்கு வருகிறார். குறிப்பாக, அவரது ‘சாலோ’. இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிகவும் குரூரமானதும் அருவெறுக்கச் செய்யுமளவு நேர்மையானதுமான திரைப்படம் அது, உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை. மார்கீடுசாதின் (Marquis de Sade) ‘120 டேஸ் ஆஃப் சாடம்’ என்ற நூலின் திரைவடிவம், இது துல்லியமான புவி மற்றும் வரலாற்றுப் பின்புலங்கள் சேர்த்து சாதின் அழகியலை சமகாலத்துக்குரியதாக்குகிறது. சீரணிக்க முடியாத மிகைநுகர்வுகளை விவரிக்கும் சாதின் நாவலில், சமூகத் தளைகளை …
தாவீதுகளின் சங்கீதம்: பொலான்யோவின் ‘டிஸ்டன்ட் ஸ்டார்’
அந்த கர்வச் செருக்கைப் புறமொதுக்கி விட்டு, வாழ்வை சூறையாடிச் செல்கிற மலினமான நாடகங்களில் இருந்து விலகி, தம்மை இழக்காமல் தத்தம் கண்ணியத்தை காத்துக்கொள்வதே கலைஞர்களின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். அத்தகைய இடர்ப்பாடுகளைப் புடம்போட்டு அணி செய்கையிலேயே கலையின் விஸ்தீரணம் புதிய பரிமாணங்களைப் பெறுகிறது. விடுதலையின் சிறகடிப்பில் மதர்க்கும் ஞானப் பொலிவானது அவர்களுடைய படைப்பில் பொசிகிறது.. எனவே, கலையும் அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
மானுடத்தைத் துப்பறிபவன்
ரொபெர்த்தோ பொலான்யோவின் 2666, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தது. பெரு நாவல்களை இடைநிறுத்தாது வாசிக்கும்போது சில மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனித்திருக்கிறேன். நம் அத்தனை அன்றாடச் செயல்களுக்கும் பின்னணி இசையாக, நாவல் அறுபடாமல் ஓடிக்கொண்டிருக்கும். புலன்கள் விழித்துக்கொண்டு துல்லியமாகும். நிகழ்வுகளை, அனுபவங்களை நாவலுடன் பொருத்திப் பார்க்க மனம் துடிக்கும். இப்போது நாவலைவிட, நாவல் வாசித்த காலகட்டம், அப்போது கண்ட சில காட்சிகள் துல்லியமாக நினைவில் இருக்கின்றன. அப்போது புதுகோட்டைக்குப் பேருந்தில் தினமும் சென்றுவரும் சூழல். போவதற்கும், வருவதற்குமான பயண…
2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்
இந்த நாவலின் ஐந்து பகுதிகளில் எந்தவொன்றும் ‘முடிவுற்ற’ உணர்வைத் தருவதில்லை. ஒவ்வொரு பகுதியின் முடிவும் பக்கங்களின் முடிவாகவே உள்ளது. இந்த அம்சம் நாவலின் ‘கதைத் தன்மையை’க் கேள்விக்கு உள்ளாக்குகிறது. பாத்திரங்களின் மனவார்ப்பில் தோன்றும் மாற்றங்கள் காடசிச் சித்திரிப்புகள் வழியாகத் துல்லியமாகச் சொல்லப்படுவதால் இந்தக் கதையின்மை ஒரு சிக்கலாகத் தோன்றுவதில்லை. உதாரணமாக, The part about criticsல் பென்னோ வான் ஆர்கிம்போல்டி என்ற தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத ஜெர்மன் எழுத்தாளரைத் தேடும், நான்கு விமர்சகர்களுக்கு இடையேயான உறவைச் சொல்லலாம்.
இருளின் விசும்பல்கள் – By Night in Chile
ஏமாற்றும் கலையின் உச்சகட்டத்தை சீலே அடைந்துவிட்டது. நாடு எதிர்காலமற்ற பாதையில் செல்லும் பயணத்தில் உள்ளது. உச்சகட்ட பயம், அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் ஆட்சியாளர்கள் மக்களிடையே பரப்ப நினைத்த உச்சகட்ட பயம். ஒரு தீவிரமான விமர்சகரான உரோசியாவுக்கு இதுபோன்ற வகுப்புகள் எடுப்பது என்பது மரணத்துக்கு ஒப்பானது. இதை செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன என ஃபேர்வெல் கேட்டபோது அது மிக அவசியம் என ஆவேசத்துடன் சொல்ல முடிந்தது. யாருக்கும் கவலை இல்லை. எல்லாருக்கும் ஆட்சி அதிகாரத்தில் சிறு…
நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet
கதையைக் கூறத் தொடங்கும்போது மெக்ஸிகோ நாட்டுப் பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்கிவிட்டிருந்தது. அவள் இன்னமும் நான்காம் மாடி கழிப்பறையில் அடைபட்டுக்கிடக்கிறாள். அவளது உடல் அங்கு கிடந்தாலும், மனம் தொன்மங்களிலும் வரலாற்றின் இருண்ட சொதிகளிலும் விழுந்து கிடக்கிறது. வரலாற்றின் பக்கங்களிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டதாக அவளது கதைகூறல் இருந்தாலும், அரூபமான விவரங்கள் நிகழ்வுகளை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன.
தோல்வியுற்ற கவிஞர்களின் நாவல்
‘The Savage Detectives’ 54 கதைசொல்லிகளின் கதையாடல் “நான் ஒரு தோல்வியுற்ற கவிஞன். ஒரு வேளை ஒவ்வொரு நாவாலாசிரியனும் முதலில் கவிதையையே எழுத முயற்சிக்கிறான், அவனால் முடியவில்லை என்பதை உணர்ந்தபின் சிறுகதையை முயற்சிக்கிறான். அதுவே கவிதைக்குப் பிறகு சவாலான வடிவம். அதிலும் தோல்வியுற்ற பிறகு மட்டுமே அவன் நாவலை எழுதத் துவங்குகிறான்.” – வில்லியம் ஃபாக்னர் தன்னை மரணம் உன்மத்தம் பிடித்த ஓநாயாய் மீளவியலா இருட்குகைக்குள் துரத்திச்சென்ற வேளையில் ஸ்பானியக் கவிஞன் ரொபெர்த்தோ பொலான்யோ, ‘The Savage…
உண்மைக்கும் புனைவிற்கும் இடையே ஊடுருவிப்பாயும் கலை – ரொபெர்த்தோ பொலான்யோவின் கவிதைகள்
கவிஞனின் ஒரு சிறு எண்ணத்துளியை, அவன் வாழ்க்கையின் சிறு கணத்தையே ஒரு நவீனக்கவிதை காட்சிப்படுத்துகிறது என்பதால் எல்லா சமயங்களிலும் அது சமநிலை கூடிய சிந்தனையின் புள்ளியிலிருந்து உருவாகி வருவது சாத்தியமில்லை என்பதும், தத்தளிப்புகளும் அலைக்கழிப்புகளும் கொண்ட கவிஞனின் ஒட்டுமொத்த அகத்திற்கு அவனின் ஒரு சிறு எண்ணத்துளி மட்டுமே மாதிரியாக அமையாது என்பதும், எந்த வாசகனும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதே.
கவிதைக்களத்தில் விளையாட்டாக…
அவருடைய சிறந்த படைப்புகள், எழுத்து மற்றும் எழுதும் வாழ்க்கை பற்றியவை. “விதிகள் இல்லை” என்ற ஒரு கவிதையில் அவர் அறிவிக்கிறார்: “சொல்லுங்கள் அந்த மடையன் ஆர்னால்ட் பென்னட்டிடம், சதி குறித்த அவனது விதிகள் அனைத்தும் மற்ற நாவல்களின் நகல்களான நாவல்களுக்கு மட்டுமே பொருந்தும் என.” இந்தக் கவிதை நகைச்சுவையாக, அடைப்புக்குறிக்குள் பின்வரும் வார்த்தையுடன் முடிவடைகிறது: “கைதட்டல்.”
கவிஞர் ரொபெர்த்தோ பொலான்யோ
என்னிடமிருந்து ஒருபோதும் போய்விடாதே. எனது காலடிகளையும் எனது மகன் லாட்டரோவின் காலடிகளையும் நீ கவனித்துக் கொள் மீண்டும் ஒருமுறை எனது முதுகெலும்பின்மீது உனது விரல் நுனிகளை உணர்வதற்கு என்னை அனுமதி
ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்
1. அன்றாடப் பணி காரண காரியம் உருப்பெருவதன் வழி ஒரு சாய்சதுரம் அசைவது போல் நிகழ்கிறது, என் அன்றாடப் பணி அற்புதமான ஒரு சூரிய அஸ்மதனதிற்கு எதிரே துப்பறிவாளனைப் போன்ற துணிகரமான பார்வை. இனி நிகழப்போகும், என்னால் காணமுடியாத ஓர் இனிய நாளின்மீது உடனடியாக எழுதப்படும் வேகமாக வரிகள் கற்பனையின் சுழல்பாதையின் வழி வெளியேறிச் செல்ல பாலங்கள் இல்லை இணைப்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. உறங்கிக் கொண்டிருக்கும் சிறுமியின் கனவில் வரும்…
மர்மமான அந்தச் சிலெ நாட்டான்
அந்த இரு புத்தகங்களும் கருக்கு இழந்திருப்பதைப் பார்த்த பிறகு, “நீங்கள் இவற்றைப் படிக்கிறீர்களா,” என்று அதிர்ஷ்டமில்லாத செர்க்காஸ் வியப்புடன் கேட்கிறார்…. “பின்னெ, இல்லையா?” பொலான்யோ பதிலளிக்கிறார். “நான் எல்லாவற்றையும் படிக்கிறேன். தெருவில் காற்றில் அடித்துப் போகும் துண்டுக் காகிதங்களைக் கூட.” அவர் அந்த நாவல்களைப் பாராட்டுகிறார்,
ரொபெர்த்தோ பொலான்யோ : ஒரு படிப்புத் திட்டம்
வெட்டும் விளிம்பெனக் கருதப்பட வேண்டிய கொண்டாட்டமான இப்படைப்பு, மொழித் திண்மையுடன் பொலான்யோ எழுதிய அழகிய படைப்புகளில் இடம்பெறும் தகுதி வாய்ந்தது. முதல் பார்வையில் பகடை உருட்டலால் தொகுக்கப்பட்ட வசன கவிதைகளைத் தரும் இது, பாதி ‘நிகனோர் பார்ற’, பாதி ‘டேவிட் லிஞ்ச்’ எனத் தோன்றுகிறது; ஆனால் விரைவில், குவாண்டக் கொலை மர்மமென வடிவம் பெறவும், நாம் குற்றம் செய்பவர்களையும், குற்றத்தையும் அடையாளம் காண முயற்சிக்கிறோம். கவிதையையும், களேபரத்தையும் குமுக்கிப் பொருத்துவதில், இது ஒரு கச்சிதமான முன் தயாரிப்பாகத்…
சிறுகதை எழுதுவது எப்படி?
(1) ஒருக்காலும் ஒவ்வொன்றாகச் சிறுகதைகளை அணுகாதீர்கள். ஒருவர் சிறுகதையை ஒவ்வொன்றாக அணுகுவாரேயானால், உண்மையிலேயே இறக்கும் வரையிலும் அவர் ஒரு கதையையே எழுதிக் கொண்டிருக்கக் கூடும். (2) சமயத்தில் மூன்று அல்லது ஐந்து சிறுகதைகள் எழுதுவது சாலச் சிறந்தது. சக்தி உள்ளவர்கள் ஒன்பது அல்லது பதினைந்து கூட ஒரே நேரத்தில் எழுதலாம்.
குற்றச் சிந்தனைகளுக்கு ஓர் அகராதி
ஓர் இளைஞனாக சல்வாடிகோ இருக்கையில், பல விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார், அவற்றில் சில, வாயைக் கட்டி நடத்தும் அடக்கு முறை கிருஸ்தவ மதத்தின் விசாரணையை மறுபடி கொணர்தல், பொதுவில் சவுக்கு/ தடியடித் தண்டனை, …பலதார மணம், ஆர்ஜண்டீனிய இனம் இனிமேலும் மாசுபடாமல் இருக்க பழங்குடி அமெரிக்கர்களை கொன்றழிப்பது, யூத ரத்தம் உள்ள எந்தக் குடிமக்களுடைய உரிமைகளையும் கட்டுப்படுத்துவது, ஒழுக்கக் குலைவு காரணமாக நாட்டின் பழங்குடி மக்களோடு கலவி புரிந்து கருமை கூடிப்போன நாட்டு மக்களின் தோல் நிறத்தை…
யாருக்கு இந்த துணிச்சல் வரும்?
பதினாறிலிருந்து பத்தொன்பது வயதிற்குள் மெக்ஸிகோ நகரத்தில் திருடியவையும் எனக்கு இருபது வயது இருக்கும்போது ராணுவப் புரட்சி தொடங்கிய முதல் சில மாதங்களில் சீலேவில் வாங்கியவையுமே என் நினைவை நீங்காத புத்தகங்கள்,. மெக்ஸிகோவில் ஒரு அபாரமான புத்தகக்கடை உள்ளது. அதன் பெயர் “கண்ணாடி புத்தகக் கடை”. அது அலமேதாவில் இருந்தது. அதன் சுவர்களும் கூரையும் கண்ணாடியாலானது, கண்ணாடி மற்றும் இரும்பு உத்திரங்கள். அந்தக் கடையின் வெளியே இருந்து பார்த்தால் அங்கு திருட வாய்ப்பே இல்லையென்று தான் தோன்றும். இருப்பினும்…
சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்
1970 –க்கு முந்தைய காலத்தில், இந்தியாவில் அதிக கார்கள் கிடையாது. இன்றைய இரு சக்கர ஊர்திகளின் எண்ணிக்கை, அன்றைய மக்கள் தொகையைவிட அதிகம். இரு சக்கர வாகனம் என்றால் பஜாஜ் ஸ்கூட்டர்கள் மட்டுமே உண்டு. பஜாஜ் ஸ்கூட்டர்கள் பால்காரர்களால், காலைப் பொழுதில், தாங்கள் கறந்த பாலை நகருக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது. சாலையில் இந்தப் பால்காரர்கள் சென்று மறைந்தது எல்லோருக்கும் உடனே தெரியும். இதற்குக் காரணம், இந்த ஸ்கூட்டர்கள் விடும் புகை. அதில் ஒரு விநோத வாசம்…
‘கொஞ்சம் சிறுசா’
பழுவேட்டையருக்கு உள்ளம் பொங்கியது. அடுத்தடுத்து வெறிகொண்டவர் போல் Savage Detectives வாசித்து முடித்து, 2666-ம் வாசித்துக்கொண்டிருந்தார். “எம்புட்டு பெரிய வீரன்டா.. நீ எழுத்தாளன் டா..” என்று வாய்விட்டுக் கூறினார். நெஞ்சு விம்மி அடைத்தது. … நிஜத்தில், தாம் எவரையும் கொல்லவில்லை என்றால் தமது கதைகளில் இப்படி யாரை எல்லாம் அறச்சீற்றம் கொண்டு போட்டுத் தள்ளியிருக்கிறோம் என யோசிக்கத் தொடங்கினார். .
சென்சினி
இச்சிறிய எழுத்துலகம் ஆபத்தானது, அதே நேரத்தில் அபத்தமானது என்று எழுதியிருந்தார். கூடுதலாக அவர் சொன்னார், ஒருவரின் கதை ஒரே நீதிபதி முன் இருமுறை வந்தாலும் அதில் ஆபத்து குறைவுதான். ஏனென்றால், அவர்கள் வரும் கதைகளைப் பொதுவாகப் படிப்பதில்லை அல்லது மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலும் “குதிரை வீரர்கள்” கதையும், “கவலைகள் இல்லை” கதையும் வெவ்வேறு அல்ல என்பதை யார்தான் சொல்லக்கூடும், தலைப்புகளிலேயே அதன் தனித்தன்மைகள் தெளிவாக உறைந்திருக்கும்போது? ஒற்றுமைகள் உண்டு, அதிக ஒற்றுமைகள் உண்டுதான், ஆனாலும் அவை வெவ்வேறு.
ஜெயில் பறவைகள்
தொடக்கத்தில் நான் அதிகாரத்தை எதிர்ப்பவர்களுடனும், தீவிர பெண்ணியவாதிகளுடனும் சுற்றிக் கொண்டிருந்தேன். அதனால் நான் படித்த புத்தகங்களும், அவர்களது சிபாரிசை ஒத்தே இருந்தன. ‘ஹெகலின் மீது துப்புவோம்’ என்பது அப்படிப்பட்ட ஒரு புத்தகம், அதை எழுதியது ஒரு இத்தாலிய பெண்ணியல்வாதி. ஒரு நாள் மதியம் அதை சோஃபியாவுக்கு இரவல் கொடுத்தேன். நன்றாக இருக்கும், படித்துப் பார் என்றேன். அடுத்த நாள் சோஃபியா நல்ல மனநிலையில் இருந்தாள்; அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த போது, ஒரு அறிவியல் புனைவாக அது…
கிளாரா
ரொபெர்த்தோ பொலானோ (Roberto Bolaño) தமிழில் : சிஜோ அட்லாண்டா அவள் பெரிய மார்பகங்களும், மெலிந்த கால்களும், நீலக் கண்களும் உடையவள். அவளை அப்படி நினைவுகூரத்தான் எனக்குப் பிடித்திருந்தது. ஏன் என்று தெரியாமல் அவள்மேல் பைத்தியக்காரத்தனமான காதலில் விழுந்தேன். துவக்கத்தில், அதாவது முதல் சில நாள்கள், முதல் சில மணிநேரங்கள் எல்லாம் சரியாகத்தான் போயிற்று. அதன்பின், கிளாரா ஸ்பெயினின் தெற்கே அவள் வாழ்ந்த நகரத்துக்குச் சென்று விட்டாள் (அவள் பார்சிலானாவுக்கு விடுமுறையில் வந்திருந்தாள்). அதன் பிறகு எல்லாம்…
வில்லியம் பர்ன்ஸ்
ரொபெர்த்தோ பொலான்யோ (தமிழாக்கம் : ஆகாசஜன்) கலிஃபோர்னியாவில் இருக்கிற வெண்டுராவைச் சேர்ந்த வில்லியம் பர்ன்ஸ், இந்தக் கதையை என் நண்பன் பாஞ்சொ மொங்கேவிடம் சொன்னான். சொனோராவில் சாண்டா தெரேசாவில் போலீஸ்காரனாய் இருக்கிற பாஞ்சொ மொங்கே, அதை என்னிடம் சொன்னான். அந்த வட அமெரிக்கன் எதற்கும் கோபப்படாதவன், எதற்கும் அலட்டிக் கொள்ளாதவன் என்று மொங்கே சொன்னது, நடந்த நிகழ்வு குறித்த பின்வரும் நினைவுகளுக்கு முரணாக இருக்கிறது. இப்போது பர்ன்ஸ் சொன்னது, அவனது சொற்களிலேயே: அது ஒரு கொடுமையான காலம்.…
துப்பறிவாளர்கள்
“எந்த மாதிரியான ஆயுதங்கள் உனக்குப் பிடிக்கும்?” “எதுவென்றாலும் பரவாயில்லை, பிளேடைத் தவிர.” “கத்திகள், ரேஸர்கள், டாகர்கள், கோர்வோஸ், சுவிட்ச் பிளேட்ஸ், இல்ல பேனாக்கத்திகள், இந்த மாதிரியான ஆயுதங்களா?” “ஏறக்குறைய, அந்த மாதிரிதான்” “என்ன சொல்கிறாய், அந்த மாதிரி இந்த மாதிரின்னு?” “கேனக்கூதி, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன், இது எதுவும் பிடிக்காது எனக்கு.” “உறுதியா?” “ஆமாம், உறுதியாகதான்.” “ஆனால், ‘கார்வோஸ்’ உனக்குப் பிடிக்கலைங்கிறது ஆச்சரியமாக இருக்கிறது.” “சும்மா, எனக்கு பிடிக்காது, அவ்வளவுதான் சொல்றதுக்கு.” “ஆனால், நீ நம்…
தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு
ஓசையற்ற வாக்கியங்களை நினைவுகள் சன்னமாக ஒலிக்கிறது-பொலான்யோ குத்தெதிர் கோணங்கள் இது புத்தகம் வெளியான போது வந்த அறிமுக விமர்சனம்: “பொலான்யோவின் எல்லாவிதமான கிறுக்கல்களும் அச்சாகிறது. எனவே, ஜிகினா தோரணம் போன்ற இந்த 56 ஒட்டுகளை, ஒன்றாகக் கோர்த்து “வெளிறிய நீலம்” என்னும் தலைப்பில் பிரதியாக்கி இருக்கிறார்கள். 1980களின் பார்சிலோனாவில் வசித்த பதற்றமான கதைசொல்லியான ரொபெர்த்தோ பொலான்யோ பகிர்வதாக இது அமைந்திருக்கிறது. கதைசொல்லி, மாயைக்கும் உண்மைக்கும் இடையே சிக்குண்டிருப்பதையும், வெளியாளாக அங்கொன்று இங்கொன்றாய் கண்டதையும் நோக்கின்றி பகிர்கிறார். தகரக்…
ரொபெர்த்தோ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள்
நான் நன்றாக, ஆழமாக தூங்கினேன்; கனவு கண்டிருந்தேன் என்றால், என் கனவுகளை மறந்து விடும் மனப் பக்குவமும் எனக்கிருந்தது. தாமதமாக எழுந்தேன்- இது ஒரு பழக்கமாக ஆரம்பித்திருக்கிறது-, குளித்து முடித்தபின் டிபன் சாப்பிட ராவூலின் கபேக்குப் போனேன். காத்திருக்கும் நேரத்தில், யாரோ டேபிளில் விட்டுப் போயிருந்த காலை தினசரியை எடுத்துப் பார்த்தேன்- இன்னதென்று தெரியாத ஒன்றை நிதானமாய்த் தேடி என் கண்கள் தலைப்புச் செய்தியில் ஆரம்பித்து பக்கம் நிரப்ப அச்சிடப்பட்ட செய்திகள், பின்னர் புகைப்படங்கள் என்று திரிந்தன.…
ரொபெர்த்தோ பொலான்யோ குறு மொழிகள்
ஒவ்வொரு நூறடிக்கும் உலகம் மாறுகிறது. நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என அறியாத போதிலும், எப்படித் தேட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். நிலா செழிப்பாக, இரவுக் காற்று அவ்வளவு தூய்மையாக, உண்டுவிடலாம் போல. கவிதை ஒன்றுதான் மாசுபடாது இருக்கிறது. அது விளையாட்டின் பகுதியன்று. உலகம் உயிர்ப்போடு இருக்கிறது; வாழ்பவைகளுக்குத் தீர்வு இல்லை. இதுதான் நம் அதிர்ஷ்டம். படிப்பது என்பது சிந்தித்தல்போல, பிரார்த்தனை செய்வதுபோல, ஒரு நண்பரிடம் பேசுவதுபோல, உங்கள் எண்ணங்களைப் பகிர்வதுபோல, மற்றவர்களின் கருத்துகளைக் கேட்பதுபோல, இசையைக்…
பார்செலோனாவில் பொலான்யோ
பார்செலோனாவில் உள்ள நவீன கலாசார அருங்காட்சியகத்தில் (CCCB in Barcelona), ரொபெர்த்தோ பொலான்யோ பயன்படுத்திய பொருட்கள், எழுதிய நோட்டுப் புத்தகங்கள், உபயோகித்த தட்டச்சுக் கருவி என சகல விஷயங்களையும் BOLAÑO ARCHIVE. 1977-2003 என்னும் தலைப்பிட்டுச் சிறப்பு ஆவணக்காட்சி நடத்தியிருக்கிறார்கள். 2013ஆம் ஆண்டின் மார்ச் ஐந்தாம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்குள்ளானது. அதிலிருந்து… 2005ஆம் ஆண்டு வரை பொலான்யோவின் தனிப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பெட்டிக்குள் பூட்டப்பட்டு இருந்தன. 2006ஆம் ஆண்டிற்குப்…
ரொபெர்த்தோ பொலான்யோ – 2666: மேடை நாடகம்
ரொபெர்த்தோ பொலான்யோவின் 2666 குறித்த அறிமுகங்களையும், விமர்சனங்களையும் வாசித்து இருப்பீர்கள். கீழே அதை மேடை நாடகமாகக் காணலாம். ஐரோப்பாவின் மேற்கல்வி, ஆய்வு முதலியவற்றில் ஈடுபடும் அறிவியல், பண்பாட்டு ஆராய்ச்சியாளர் சமூகம், ஓர் எழுத்தாளரைத் தேடியலைகிறார்கள். அந்தத் தேடல் மெக்ஸிகோ நாட்டின் எல்லையோர நகரத்திற்கு அவர்களைக் கொணர்கிறது. அங்கே நூற்றுக்கணக்கான பெண்களின் கொலைகள் விடுவிக்கப்படாமல் அந்தரத்தில் தொங்குகிறது. இருபதாம் நூற்றாண்டில் தொடங்கும் கதை, நூறாண்டு காலம் பயணிக்கிறது. ஸ்பெயின் நாட்டில் தொடங்கி, அங்கிருந்து மெக்ஸிகோவிற்குப் பயணப்பட்டு, அதன் பிறகு…

சொல்வனம்
கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!
மின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்
Get new content delivered directly to your inbox.
- நல்ல இசையின் அடையாளமான இரண்டு எழுத்துக்கள்
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- பூனை சொன்ன ரகசியங்கள்
- மொழியென்னும் ஆடி
- மாறாத பேரானந்தம்
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 4
- இறுதி சல்யூட்
- குறுங்கவிதைகள்- கு.அழகர்சாமி
- அதிரியன் நினைவுகள் -22
- இரண்டாம் இன்னிங்ஸ் சாத்தியமா?
- உபநதிகள் – 15
- ஏங்குதல்
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- ஸ்வர்ண சீதா என்ற நாவல்
- மரியா சிபில்லா!