சொல்வனம் வழங்கும் “எண்ணெய்யும் தண்ணீரும்” ஆங்கிலப் புத்தகம்
அந்தக் காலகட்டத்தில் பிளாட்பார்மில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் ஆண்கள்தான். நிறுவனத்தின் ஆன்ஷோர் (கரை) பிரிவுகளிலும், தலைமை அலுவலகத்தின் சப்போர்ட் ரோல்களிலும் பெண்கள் பணிபுரிந்த போதிலும், இந்த ஆஃப்ஷோர் வேலைகள் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நிறைந்ததாகவே இருந்தன. ஊழியர்களின் வயது இருபதுகளின் தொடக்கத்திலிருந்து ஐம்பதுகளின் இறுதிவரை விரிந்திருந்தது. மாதத்தில் பாதி நாட்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஊழியர்கள் படும் சிரமங்களை நிறுவனம் நன்கு உணர்ந்திருந்ததால், பிளாட்பார்மில் எங்கள் வாழ்க்கையை எவ்வளவு சொகுசாக்க முடியுமோ, அவ்வளவு சிறப்பாக வைத்து கவனித்துக் கொண்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைத்த வருவாய் அங்கே வழங்கப்பட்ட தாராளமான வசதிகளை எளிதாக நியாயப்படுத்தியது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed