நானே நானா, யாரோ தானா? – 1

நிலத்தடிக்கு நான் செல்ல மருத்துவர்கள் அனுமதித்தார்கள். நானும் தயார்தான். ஹூஸ்டனில் என் மூளையை விட்டுவிட்டு ஹெலிகாப்டரில் துல்சாவிற்குப் பயணித்தேன். அப்படித்தான் எனக்குத் தோன்றியது. என் தலையை விட்டு மூளை பிரிந்திருக்கிறது என்று தான் என்னால் சொல்ல முடியும். பயணத்தின் போது நான் முன்னர் கவலை கொண்டவை யாவும், அறுவை சிகிச்சைக்குப் பின்னான எனது பதட்டங்கள் நிறந்த ஊகங்கள் என்ற சிந்தனை எழுந்தது. நான் நினைத்தது போல இது ஒன்றும் மீமெய்யியலோ, விநோதமோ இல்லை. எங்கிருக்கிறேன் நான்? தெளிவாக இரண்டு இடத்தில்- தொட்டியின் உள்ளும், வெளியும்.