நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும் – ரிச்சர்ட் ஹாமிங்

“தயாரான மனதை அதிர்ஷ்டம் சாதகமாக்குகிறது” என்று கூறிய பாஸ்டரை (Pasteur) நான் மேற்கோள் காட்டுவேன். நான் நம்புவதையே அம்மேற்கோளும் மொழிகிறது என்று நனைக்கிறேன். ஆம், சிறிது அதிர்ஷ்டமும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நான் சொல்லவருவது இதுவல்ல. விரைவாகவோ தாமதமாகவோ தயார் நிலையில் இருக்கும் மனது முக்கியமானதைக் கண்டறிந்து அதைச் செய்து முடிக்கிறது. ஆக, ஆமாம் அதிர்ஷ்டம்தான்; குறிப்பிட்ட அந்த முக்கியமான விஷயத்தைக் கண்டறிவதில் அதிர்ஷ்டம் இருக்கிறது, ஆனால் முக்கியான ஏதோவொன்றை நீங்கள் செய்துமுடிப்பதில் அதிர்ஷ்டமேதுமில்லை.