


எமதருமை எருமையர் !
பாட்டாளி பாமரன் உழவன்
கூலி எடுபிடி உதிரி
தொகுப்பூதியத் தீப்பேறன்
அடிமட்டத் தொண்டன் ஊழியன்
தற்கொலைப்படை ஆபத்துதவி
ரசிகன் மற்றும் பலரில் ஒருவன்
Mass
Crowd
யாவருள் யாவன் நீ
எமதருமை மாட்சிமைக் குடிமகனே!
எமதருமை என்பது தான்
எருமை என மருவிற்றோ
வாக்காளப் பெருமகனே!
~o~
இரங்குக!
பெண் மக்கள் பேறற்ற
அமைச்சரை நாடாளுமன்ற
சட்டமன்ற உறுப்பினரை
எண்ணி இரங்குவீர் எம்மனாரே!
33% மகளிர் இட ஒதுக்கீட்டால்
அவர்களுக்கென்ன ஆதாயம் ?
அரசு முறை செய்க !
அறம் நனி சிறக்க !