மாறாத பேரானந்தம்

தமிழாக்கம் : மீனாக்ஷி பாலகணேஷ்

இந்து இலக்கியங்களின்படி, புரூரவஸ் என்பவன் சந்திரவம்சத்து முதல் அரசன் என முன்பே கண்டோம். மகாபாரதத்தின்படி இளையே அவனுக்குத் தாயும் தந்தையுமாவாள். ரிக்வேதம் அவனை ஒரு பக்திமானான நேர்மை தவறாத அரசன் என்கிறது. விஷ்ணுபுராணமோ இவனது தந்தை புதன் என்றும் இவனிடமிருந்தே யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் முதலானோர் தோன்றினர் என்றும் கூறுகிறது.

பிரதிஷ்டானத்திலிருந்து அரசு செலுத்திய இவன், பிரம்மாவை வழிபட்டு பூமி அனைத்துக்கும் பேரரசனாகும் பரிசைப் பெற்றிருந்தான். தேவர்கள் இவனுடைய நண்பர்களாக இருந்தனர். 

மூன்றுவிதமான நெருப்புகளை பூமிக்குக் கொண்டுவந்த பெருமை புரூரவஸையே சாரும். அங்குதான் அந்த கந்தர்வ உலகில் ஊர்வசியைக்கண்டு இருவரும் ஒருவர் மீதொருவர் காதல் கொள்கின்றனர். இரண்டு மூன்று நிபந்தனைகளின் பின்பு ஊர்வசி அவனை மணக்க இசைகிறாள். இருவரும் இன்பமாக வாழ்கையில் சுவர்க்கத்தில் ஊர்வசியின் இழப்பினால் அனைவரும் வருந்துகின்றனர். நிபந்தனைகள் குலைக்கப்படும் நிகழ்ச்சிகளை உருவாக்கி, ஊர்வசியைத் திரும்ப அழைத்துக் கொள்கின்றனர். மனமுடைந்துபோன புரூரவஸ் அவளைக் கண்டு கெஞ்சி வேண்ட, ஆண்டுக்கொருமுறை அவனுடன் வந்திருக்க ஊர்வசி ஒப்புகிறாள். இருவருக்கும் பல குழந்தைகள் (6-8) பிறக்கின்றனர். 

இன்னும் பல புராணங்கள் – சதபாத ப்ரஹ்மண, ஹரிவம்ச, மத்ஸ்ய புராண, பாகவத புராணம் ஆகியவற்றில் ஊர்வசி- புரூரவஸின் கதை பற்பல மாற்றங்களுடன் கூறப்பட்டுள்ளது.

இந்த கதையானது பல பொருள்களைக் காட்டும் சமஸ்க்ருத சொற்களோடு உள்ளது அதனால் பல்வேறு பொருள்களை உள்ளடக்கி உள்ளது. இதனை ஒரு காதல் கதையாகக் கொள்ளலாம். சூரியனுக்கும் (புரூரவஸ்) உஷை எனப்படும் புலர்காலைப்பொழுதுக்கும் உண்டான அழிவற்ற தொடர்பை  விளக்குவதாகவும் கொள்ளப்படுகிறது. மனிதன் ஒருவன் கந்தர்வன் எனும் நிலைக்கு மாற விழையும்போது மேற்கொள்ள வேண்டிய சடங்கு முறைகளையும் அறிவிக்கிறது.

இக்கதையின் மறைபொருளாக இருக்கும் உள்ளர்த்தம்: புரூரவஸ் எனில் நீர் கொண்ட மேகம், அதிக முழக்கம் செய்வது. நீர் ஆவியாகி மேகங்களாகும்போது மழையின் அறிகுறியாக இடிமுழக்கம் எழும். ஊர்வசி எனும் பெயர்  மின்சாரம் பாய்வது போன்ற மின்னல் எனவும் பொருள்படும். ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள பாடலின்படி ஊர்வசி என்பது இடையிடையே தோன்றிமறையும் மின்னல் எனப் பொருள் கொள்ளப்படும். இயற்கையில் நிகழும் ஒரு நிகழ்வைக் கவிதையாக்கிக் கண்டால் நீர் நிறைந்த மேகங்கள் (புரூரவஸ்) மோதிக்கொள்ளும்போது இடையிடையே மின்னல் (ஊர்வசி) தோன்றி மறையும். இவை இரண்டும் இணையும்போது உண்டாகும் மழையில் தானியங்கள் விளைந்து உணவு உண்டாகும். புரூரவஸ்- ஊர்வசியின் முதல் மகனுக்கு ஆயு என்பது பெயர். இது அன்னம், உணவு எனவும் பொருள்படும். 

ஊர்வசியின் பெயர் கி.மு. 1900-1200லேயே மிகப்பழமையான நமது ரிக்வேதத்தில் காணப்படுகிறது. பின்பு இக்கதை சிற்சில மாற்றங்களுடன் பல புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது. காளிதாசனின் ‘விக்ரமோர்வசீயம்’  நாடகத்திற்காக வேறு வடிவில் புனையப்பட்டது. அதன் நடையும் நயம்வாய்ந்த செய்யுட்களும் காளிதாசனின் சமஸ்க்ருதப் புலமையை உலகிற்கு விளக்கிக் காட்டுகின்றன. ஸ்ரீ அரவிந்தரின் நீண்ட கவிதையோ புரூரவஸின் விடாமுயற்சியையும் ஏகமனதாய் அவன் மேற்கொள்ளும் முயற்சிகளையும் கவிதைக்குரிய அமைப்புடன் வெகு அழகாகச் சித்தரிக்கின்றது.

இதனை அரவிந்தர் ஏன் எழுதினார் எனும் குறிப்பு எங்கும் கிடைக்கவில்லை. ஒருவேளை மானிடனானவன் தேவநிலைக்கு உயர வேண்டுமெனில், அவன் செய்ய வேண்டியவை என்ன- விடாமுயற்சி, ஏகமனதான குறிக்கோள், சில பல தியாகங்கள் என்று கூறுகிறார் என உய்த்துணரலாம்.

இனி கவிதையின் கடைசிப் பகுதியைக் காண்போமா?


காண்டம்- 4

ஆங்கில மூலம்: ஸ்ரீ அரவிந்தர். 

தமிழ் மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

…… ரகசியமும் பயங்கரமுமான குன்றுகள் மீதாக

பனியும் அமைதியான மூச்சு விடாத கரைகளும் உடைய

பாறைகளினிடையே வளைந்துசெல்லும் கானகத்தின் ஊடே

ஒரு அகன்ற ஏரியின் பக்கம் அவன் வந்தான்.

அமைதியான மலைகளை அதன் பக்கம் கண்டான்,

பிரமித்த உள்ளத்தில் அது கடவுளின் மலை என உணர்ந்தான்,

கைலாஸ், மைநாகம் அவற்றின் பொன்னிறச் சிகரங்களுடன்.

உள்ளத்தில் பிரமிப்புடனும், ஒரு வேகமான நடையுடனும்

அவன் விரைந்தான், கண்களில் அமைதியான மகிழ்வுடன், நீண்ட

பயணத்திலிருந்து திரும்புபவன், தன் பழைய கிராமத்தையும் 1310

வாசல்களில் குழந்தைகளின் முகங்களையும் காண்பதுபோல்.

ஒழுங்கற்ற நிலப்பரப்பான தேவதைத் தலத்தில், எங்கு மலையில் 

நீரோட்டம்

மங்கலான பாறைகளிலிருந்து பளபளத்தொழுகி ஏரியைச் 

சந்திக்கிறதோ அங்கு

பின்னிப்பிணைந்திருந்த மரங்களிடையே பாசி படிந்த

கற்கள் தாறுமாறாகக்கிடக்க, அத்தனை நீரும் அசைந்தாடும்

தாமரை மலர்களால் மறைக்கப்பட்டு இலைகளினூடே

பளபளக்கவோ அல்லது மலர்களின் விசையால் அழுத்தப்பட்டோ இருக்க,

அவள் அமர்ந்திருந்தாள், ஆரியர்களின் தாய், வெண்மையான 

ஒரு பெருமிதமான வெளிறிய நிறம் அவள் தலைமயிரிலிருக்குமாறு

சிந்தனையில் ஆழ்ந்தபடி, பரந்த படைக்கும் ஆற்றலுடைய புருவங்களுடன்,

அமர்ந்திருந்தாள் 1320

ஆரவாரமற்ற அழகான ஆடை மலர்களால் இணைக்கப்பட்டு,

அனைத்தும் அவளது பெரிய கூந்தலால் குவிக்கபட்டிருக்க. பொன்னிற 

அன்னங்கள்

இறகுகளைக் கோதிய வண்ணம் நீீரில் மூழ்கியிருந்த அவள் 

பாதங்களினடியில்.

ஒரு கரம் அவளுடைய பளிங்குக் கன்னத்தைத் தாங்க, மற்றொன்று

தெய்வீகமான தாமரைமலரை மெல்ல ஏந்தியபடி. அவளைக் கண்ட

புரூரவஸ் குனிந்து அவளை வணங்கினான்.

அவள் நிமிர்ந்து பார்த்து அவனை ஆழ்ந்து நோக்கி

மெல்லக் கூறினாள்: ” ஓ மகனே, உனது காலடிகளை தூரத்திலிருந்தே 

அறிவேன்.

நீ என்னிலிருந்து வந்தவன்; ஏனெனில் நான் ஆனந்தப் பரவசத்தை 

அனுபவித்தேன்,

எண்ணற்ற உருவங்கள் என்னைத் தாக்க 1330

பலவிதமான காற்றாக என்மீது மோதி உடைய, 

ஒரு தீர்க்கதரிசியின் சிந்தைபோல போல சிந்து, கங்கையைக் கண்டு

கன்னிமையின் ஒரு உத்வேகம் எனது மார்பினின்று ஒளிர்ந்தது

அது பூமியில் அழகும் உருவமும் கொண்டது. நீர் அந்தப்

பெருவெற்றியில் இருந்து உதித்ததைக் கண்டு நான் 

பெருமகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால் இப்போது நீர் கிரீடத்தை இழந்து வந்திருக்கின்றீர். 

என்னிடமிருந்து,

ஓ மகனே, உன்னிடமிருந்த அழகான உத்வேகம்

உனது ஆத்மாவிற்கு வண்ணங்களைக் கொடுத்தது. ஏனெனில் நான்

கடும் முயற்சி செய்து எட்டாத உயரங்களை அடையவும், 

ஒளிவட்டங்கள் சிதறும்படி புனித விளக்குகள் அதீதமாக ஒளிரவும். 1340

ஆனால் ஐயோ! வசந்தமும் அதன் மலர்களும், ஐயோ!

சோமபானம் எத்தனை பிரகாசம். என்ன பொன்மயமான சந்தோஷங்கள்

என்ன உயிர்வாழும் தீவிர ஆசைகள், என்ன அழிவற்ற கண்ணீர்கள்!

அழிவற்றதை ஒளிக்கும் திரையை நான் விலக்குகிறேன், ஆ!

என் இமைகள் மயங்குகின்றன. ஆ! அந்தத்திரை அழகாக இருந்தது.

எனது மலர்கள் அந்த உயரத்திலிருந்து வாடி உதிர்கின்றன. என் 

அன்னப்பறவை

தனது சிறகுகளை நன்றாக விரிக்க மாட்டேனெங்கின்றது.

ஓ ஒருநாள் நான் எனது பழகிய முறைகளினின்றும்  பளிங்குப்

பேரார்வத்தினின்றும் விலகி காதலர்களையும் செல்வத்தினுடையதும், 

மதுவினுடையதுமான பெருமையையும் உலகின் இதவெப்பமான 

விருப்புகளையும்  1350

சந்தோஷங்களையும் இனிமையான இசையாக இசைப்பேன்.

ஓ எனது சொந்த மகனே, புரூரவஸ், நான் வீழ்ச்சியுற்றேன்

உமது குறைபாடுகளால், எனது ஜொலிக்கும் ஆகாயத்திலிருந்து.”

இளையின் மகன் இதற்கு மறுமொழி தந்தான், “ஓ, வெண்மையான 

கரங்களையுடையவளே,

ஆரியர்களின் தாயே, எனது உயிரைப் படைத்தருளுபவளே!

விதிகளின் பிரம்மாண்டமான ஒதுக்கித் தள்ளல்.

ஆனால் அந்தோ! நான் அலையைப்போல அலைகின்றேன்,எனது

ஆத்மாவை அலைக்கழிக்கும் விருப்புகளின் எல்லையை 

அறியவொண்ணாமல்.”

பின்பு ஒரு இனிய அழிவற்ற புன்னகையுடன் அந்தத் தாய்

தன் கையின் குழிவில் ஏந்திக் கொடுத்தாள்  அவனுக்கு 1360

அந்த ஏரியின் அற்புதமான நீரை. அவன் பருகினான்,

அறிந்துகொண்டான் முடிவற்றதனை. கண்டான் காலம் என்பது

ஒரு பாம்பைப்போல விண்மீன்களிடையே சுருண்டிருப்பதனை;

பூமியை அவன் கண்டான், அழிவற்ற இரவுகளும் பகல்களும்

அவன் பொழுதுகளை வளர்த்தன, அவனுடைய கைகால்கள்

இறப்பற்றும் அவன் எண்ணங்கள் பளிங்குபோன்றும் நிலைத்திருந்தன.

பின் அந்த மாவீரனைக் கடவுளாக்கிய பெண்தெய்வம்,

“ஓ பலவானான அழிவற்றவனே, இப்போது உன் மகிழ்ச்சியைப்

பின்தொடர்வாயாக:

இருப்பினும் முதலில் கைலாசத்தின் உச்சிக்கு எழுவாயாக; அங்கு

வல்லமைமிகுந்த தாய் இருக்கிறாள், அவளது வல்லமை 1370

சான்ற குரல் உனது எதிர்கால வாழ்வை உறுதிப்படுத்தும்,”

சொல்லியவாறு அவனுடைய புருவங்களைத் தனது தெய்வ இதழ்களால் 

வருடினாள்.

ஒளிமயமான புரூரவஸ் குன்றின் மீதேறி அதன் மூச்சடைக்கும் சிகரத்தை

நோக்கி நடந்தான். அப்போதிலிருந்து, புகழை நன்குமறைத்து வைத்துப் 

போற்றிப் பேணுமிடத்திலிருந்து, ஒரு குரல் கேட்டது,

தெளிவாக அவன் உய்த்துணர்ந்தபோது யாருடைய கண்கள்,

இருளைப் பற்றி காட்சியறிவுடையனவோ, அவை முன்வந்து,

படிப்படியாக ஒளிக்குப் பழக்கப்பட்டு வளர்கின்றனவோ,

அந்த அமைதியான கருணையுள்ள முகம், சுவர்க்கம்போன்ற 

அகலமான புருவம்

அந்த உறுதியான உலகைத் தாங்கும் பெரும் கைகால்கள். 1380

தீர்க்கதரிசனமாக கனமான அவளது குரல் கீழே கேட்டது:

“நீர் தோற்று விட்டீர், ஒளிமிகுந்த ஆத்மாவே! ஆனால் கடவுள் 

குறைகூறவோ

தண்டனை தரவோ செய்வதில்லை. நடுநிலை தவறாது அவர்

ஒவ்வொரு கஷ்டப்படும் உயிருக்கும் தேவையான பரிசை அளிக்கிறார்.

எவ்வாறு பாழ்படுத்தப்பட்ட வேலையும், எத்தனை சிறிதானதும்,

பெரிய அளவில் அதற்கு சக்தி கூட்டப்பட்டு 

அதன் சரியான விளைவாகச் செயலிழந்தால்,

பேரரசு அதன் வழியில், ஊக்கமிக்க சிந்தையுடன்

விடாப்பிடியாக, எல்லையற்றசெயலை அரசாளச்செய்து

அதன் பகட்டான ஆத்மாக்கள் எப்போதும் திரும்பச்செய்ய 1390

மிகப்பரந்த உள்ளங்களும் தனித்தன்மையும்கொண்டு

போர்களுடனும் பெருத்த ஆசையுடனும் பெரும் புயலுடனும்

ஆரிய சரித்திரத்தில் எரியும், காலகாலங்களுக்கும்

பேசப்படும். உனது வம்சவழியில் உயர்வான உயிரானது

ஒரு மானிட வடிவில் கட்டுப்பட்டு இருக்கும்;

மதுராவிலும் கடல்பக்க துவாரகையிலும் மனிதன்

உலகியல் பற்றுடைய குற்றமேயற்ற ஆத்மா

எடுத்துக்காட்டு: உனது வம்சத்து மகனைப் புகழ்ந்து

பொன்னான பாடல்களியற்றும் பெருங்கவிஞன் ஒருவன்,

அவனுடைய பாடல்கள் இந்த உலகைப் போலப் பரந்திருக்கும். 1400

ஆனால் அனைத்தும் சுய விருப்பத்தாலோ அல்லது 

வன்முறைச்செயலாலோ பாழாக்கப்பட்டு

உணர்ச்சிக்கு ஆட்பட்ட கட்டுப்பாடற்ற நிலையில்; குற்றமற்றதாயின் 

அவர்களின் பணி

வடிவமற்ற குழப்பமான பிற்காலத்துக் கைகளின் தொடுதலுக்காளானதும்

அல்லது புகழ்வாய்ந்த கட்டுக்கதைகளின் கறைபடிந்ததும். எனது உச்சியில்

கடவுளின் காற்றை சுவாசித்தும், ஆகாயத்தைப்போன்று வலிமையானதும் 

தூய்மையானதும்,

இஷ்வாகுவின் குழந்தைகள்  மட்டுமே வாழ்வர்; அவர்களுடைய 

சுவர்க்கத்தின்

நிறைவான புகழானது முடிவுசெய்யப்பட்டது, பூமியின் முழுமையான 

ஈடிணையற்ற பாடல்.

ஆனால் நீவிர், ஓ இளையின் மகனே, உனது ஆனந்தத்தை 

எடுத்துக் கொண்டீர்.

உமக்கு இனிய காந்தர்வ உலகில் சாஸ்வதமான 

ஆனந்தப்பரவசம் கச்சவிழ்ந்த ஊர்வசி, 1410

நீண்ட இரவில் கடவுள் உறங்கி விழும்வரை.”

அந்தப் பெரிதான குரல்  மறைந்தது பலவானான புரூரவஸ்

தனது பெரும் பரிசை எண்ணி மகிழ்ந்தவண்ணம், என்ன விலைகொடுத்து

வாங்கியிருந்தாலும், எல்லையற்ற வீழ்ச்சியடைந்து வாங்கியிருந்தாலும்,

இப்போது தெய்வப்பாதையில் காலடி பதித்து உலகில் மேலே சென்றான்.

இனிய பிரதேசங்களிடையிலும் பால்வெண்மை பனிச்சிகரங்களிலும்

அழகிய மூலைகளிலும் சுவைமிக்க ஏரிகளிலும்

சூரியவெளிச்சம் மிகுந்த ஓரு சாலையைக் கண்டான்; கந்தர்வர்களின்

வீட்டின் கதவுகளையும் கூட. கடல் கடலாகக் கப்பல் செலுத்தாது 

தவறுதலாக இரவில் பொறுமையாக பாய்மரம் விரிப்பது கண்டு 1420

பெருமகிழ்ச்சியுற்று கடைசியான சுவர்க்கம் அருகே வர பூமியின்

வெற்றியுடைய மைந்தன் தனது நியாயமான குறிக்கோளில். 

கதவுகளை நோக்கி அவன் விரைந்தான், அங்கு நின்ற ஒளிரும்

முகத்தவளான ஒரு தேவதை கதவருகில் நின்று

கூவினாள், “நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம், புரூரவஸ்.”

பின், அவனுடைய செவிகளுக்கு சங்கீதமாக, கதவின் திரும்புதம்

கேட்டது; அவன் சூட்சுமமான முகங்கள் தன்னை நோக்குவதனைக் 

கண்டான், ஒளிமயமான வடிவங்களின் திரள்கள்,

யாழ்களின் அழிவற்ற நாதத்தினுள் அவன் நுழைந்தான். 1430

வீதிகளின் வழியே உயர்தொனொயிம் வாத்தியங்களின் ஒரு 

வெள்ளிமயமான குரல் அவன்முன்பு சென்றது. எல்லா காற்று 

வாத்தியங்களையும் அற்புதமான இசைஞர்கள் வாசித்து

அந்த அழிவற்ற காதலனை வரவேற்றனர். யாருடைய

காற்றுக்கான தீட்டப்பட்ட புருவங்கள் சரியான தேவதைநிலையால்

பெறப்பட்டனவோ, கூட்டத்தினுன்றும் தனித்து நின்றாள்.

“ஓ, இளையின் மகனே, நீடித்த புகழ்வாய்ந்த புரூரவஸ்,

மனிதர்கள் எதிர்பார்க்காத சந்தோஷங்களை அடைய விதிக்கப்பட்டவரே!

உமது புனிதமான புகழை அடைய நீர் ஒரு விண்மீனாக அதன்

விதிக்கப்பட்ட இடத்திற்குச் செல்வீராக, எங்கள்மீது ஒளிருங்கள் 1440

இங்கு பெரியதாக, தங்கள் பசுமையான பூமியைப்போல்.”

கிளர்ச்சியூட்டும் பிரதேசங்களினூடே இசையுடன் அவனை

அவர்கள் வழிநடத்திச் சென்றனர், அவனை வியந்தவண்ணம்,

பாடல்களால் புகழ்ந்தபடி

அவனது நியாயமான செம்மாந்த உருவத்தையும், புருவத்தையும்

போர்த் தினவெடுத்த தோள்களையும் வீரத்தன்மை வாய்ந்த 

செயற்பாங்கையும்.

அவன் பொருட்படுத்தவில்லை, ஏனெனில் அவன் ஆத்மா 

முழுதும் வலிந்து

சமீபிக்கும் ஒரு ஆனந்தத்தை எதிர்நோக்கியிருந்தது.

அவளை எப்போதும் நாடிய அவனது கண்கள், வலிமையான 

மரங்களாலான 

ஒரு சுவரை, எங்கு அவை சாய்ந்து ஒரு வளைவை 

உண்டுபண்ணினவோ

அங்கு சகோதரிகளுக்குள் ஒளிமிகுந்த அவர்கள் இருவர் இருந்தனர், 1450

ஒருத்தி  ஒரு ஆனந்தமான ஓடைபோல உவகைமிக்கவளாக, மற்றவள்

தனது செதுக்கிவைத்ததொரு புன்னகையுடன்; ஒவ்வொருத்தியும் ஒரு 

வலிய கரத்தை மென்மையாகப் பற்றிக்கொண்டு அவனை அழைத்துச் 

சென்றனர்

சுவர்க்கமயமான இலைகள்கொண்ட மரங்களால் ஆன தெளிவாகத் 

தெரியும் பிரதேசத்திற்கு

மாயமான கரைகளையும் இனிய தாழ்ந்த வளைவுகளையும் கொண்ட 

குன்றுகளையும்

எங்கும் ஒரு மயக்கும் திறனுள்ள சூரிய ஒளி சூழ.

அங்கு கீழ்நோக்கி ஓடுகின்ற ஒரு ஓசையிடும் நதிப்பக்கம்

தாழ்ந்துள்ள பசுமைநிறத் திரையமைக்கும் கிளைகளினடியே அவள் 

இருந்தாள்.

பேச்சின்றி அவள் எழுந்து, விரிந்த சலனமற்ற கண்களுடன்

அவனைநோக்கி வந்தாள்; அவர்களுடைய அழிவற்ற பார்வைகளில் 1460

ஆழ்ந்ததொரு மதிப்பு மிகுந்து மகிழ்ச்சியை மீறி நின்றது.

எல்லையற்ற பெருவாழ்வு இந்த அருமையான சந்த்ர்ப்பத்தைத் தொடர 

வேண்டுமெனும் உணர்வு எழுந்தது. பின் ஒளிரும் உற்ற நண்பனாக  

ஒரு மெல்லிய செதுக்கிய பௌன்னகையுடன், “ஓ நீண்டதொரு 

பிரிவின்பின்

சந்திப்பவர் எந்த நிலைமையிலும் இனிப் பிரிந்திடார், 

உயரிடத்திற்குரிய அயர்ந்த உறக்கம்வரை. உங்கள் ஆத்மாக்கள் 

பலம்வாய்ந்தவையாக இருக்கட்டும்

மாறாத பேரானந்தத்தை அனுபவிக்க; நீங்கள் பலமுள்ளோராக 

இருந்தீர்கள்

உங்கள் பொறுமையால் விருப்பமற்ற கடவுள்களையும் நன்கு 

வலியுறுத்த.”

அவர்கள் தெளிந்த உலகில் தனிமையில் விடப்பட்டனர்.

அவனுடைய ஆத்மா மீண்டும் அவளை நோக்கிச் சாய்ந்து 1470

புரூரவஸ் தன் அணைப்பில் அவளை எடுத்துக்கொண்டு உணர்ந்தான்,

மிகுந்த ஆனந்தத்தில், அவன் காதலான ஊர்வசியின் பொன்னிற மார்பு 

அவனுடைய மார்பில்; அவளை அழுத்தியவாறு

தான் காண ஏங்கியிருந்த முகத்தை, நீண்டபொழுது முத்தமிட்டான்

காதல் அவனுடைய இனிய சுவர்க்கத்தில் திருப்தி அடைந்தது.

ஆனால் வெகு தூரத்தில் நிசப்தமான வலிமையான விண்வெளியில்

பசுமையான தளர்வற்ற பூமி கைவிடப்பட்டு சுழன்றது.

~~~~~~~~~~~~~~~~~~~~

கவிதை நிறைவடையும்போது, ஒரு ஆனந்தப்பரவசம் என்னைத் தாக்கவில்லை. காதலர்கள் ஒன்று சேர்ந்ததில் பெரும் மகிழ்ச்சிதான். ஆனாலும் ஒரு வெறுமை, கடைசி வரியின் வெறுமை பெரிதாக என்னைத் தாக்கியது.

காதல் அவனுடைய இனிய சுவர்க்கத்தில் திருப்தி அடைந்தது.

ஆனால் வெகு தூரத்தில் நிசப்தமான வலிமையான விண்வெளியில்

பசுமையான தளர்வற்ற பூமி கைவிடப்பட்டு சுழன்றது.

தனது ஒருவனின் லட்சியமான காதலுக்காக அவன் தன்னை நம்பியிருக்கும் பரந்த பசுமையான பூமியைக் கைவிட்டான் என்கிறார் அரவிந்தர். 

ஒருவனின் லட்சியங்கள் பெரிதாக இருக்க வேண்டும். ஒரு நாட்டிற்காகவோ வேறு பெரிய குறிக்கோளை அடையவோ முயற்சித்திருந்தால் அது பெரிய சாதனை அல்லவா? தன் ஒருவனையே சார்ந்ததும் தனது மகிழ்ச்சிக்கானதாக மட்டுமே இருந்தால் அவை பெரிதல்ல என்றும் உணர்த்துகிறார் போலும்.

அவன் ஊர்வசியைத் தேடிச் செல்லும் வழியெங்கிலும் எதிர்கொள்ளும் பெண்தெய்வங்களும் இதனையே கூறுகின்றனர்.

தீர்க்கதரிசனமாக கனமான அவளது குரல் கீழே கேட்டது:

“நீர் தோற்று விட்டீர், ஒளிமிகுந்த ஆத்மாவே! ஆனால் கடவுள் 

குறைகூறவோ

தண்டனை தரவோ செய்வதில்லை. நடுநிலை தவறாது அவர்

ஒவ்வொரு கஷ்டப்படும் உயிருக்கும் தேவையான பரிசை அளிக்கிறார்.”

எத்தனை சூட்சுமம் நிறைந்த சொற்கள். மேலும் விளக்கம் தேவையில்லை.

மேலும் மேலும் வலிந்து பொருள் தேடாமல் இங்கு நிறுத்திக் கொள்கிறேன். 

இதனால் நான் பெற்ற பயனே பெரிது. அரவிந்தரது எழுத்துக்களின் வலிமையை, நயங்களை, இனிமையை, உணர்ந்து, ஆழ்ந்து சிந்திக்க இதுவுமொரு நல்வாய்ப்பு. 

சாவித்ரி பற்றி எழுத வேண்டும். சிறிது இடைவெளிக்குப் பின் திரும்பத் தொடர்வேன்.

கருத்துக்களைப் பகிருங்கள்.

~~~~~~நிறைந்தது~~~~~~ 

நன்றி: அரவிந்த ஆசிரமம் இணையதளம் – ஸ்ரீ அரவிந்தரின் 

மூலக்கவிதை ‘ஊர்வசி’

Series Navigation<< புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.