என்னையே நான் நேசிக்கத் தொடங்கியபோது

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
துன்பமும் உணர்ச்சியின் வாட்டுதலும்
என் மெய்க்கெதிராய்
வாழ்வதன் அறிகுறிகளே
என்று கண்டேன்.
இன்று
‘இதுவே அசல்’ என்றறிந்தேன்

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
என் ஆசைகளை
இன்னொருத்தர் மீது
திணிக்கும்போது
அதற்கான நேரம் அதுவல்ல
அவரும் அதற்கு தயாரில்லை என்று
நான் அறிந்த பின்னும்
அந்த மனிதன்
நானேயானாலும்
அது எவ்வளவு புண்படுத்தும்
என்று புரிந்துகொண்டேன்.
இன்று
‘இதை மரியாதை என்றழைக்கிறேன்’

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
வேறுவித வாழ்க்கை வேண்டுமென்கிற
விழைவை நிறுத்திய போது
என்னை சுற்றி உள்ளதெல்லாம்
வளர்க என வரவேற்பதை
காண முடிந்தது.
இன்று
‘இதை முதிர்ச்சி என்றழைக்கிறேன்’

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
எந்த சூழலிலும்
நான்
சரியான இடத்தில்
சரியான நேரத்தில்
இருக்கிறேன் .
எல்லாமும் மிகச்சரியான
தருணங்களில் நடக்கின்றன
என்றறிந்தேன்.
ஆகவே
நான் நிதானமாயிருக்கிறேன்.
இன்று
‘இதை சுய நம்பிக்கை என்கிறேன்’.

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
சொந்த நேரத்தையே களவாடுவதை
புறம்தள்ளினேன்..
எதிர்காலத்திற்காய் பெரும் திட்டங்கள்
தீட்டுவதை நிறுத்தினேன்.
இன்று
களிப்பும் மகிழ்வும் தருவதை மட்டுமே
செய்கிறேன்.
நேசிக்கும் விஷயங்களை மட்டும்
நெஞ்சை புத்துணர்வாக்குவதை மட்டும்
செய்கிறேன்.
அவற்றையும்
எனக்கே உரித்தான வழியில்
எனக்கே உரித்தான தாள கதியில்
செய்கிறேன்.
இன்று’இதை எளிமை என்கிறேன்’.

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
உணவோ மனிதர்களோ
விஷயங்களோ சூழல்களோ
எதுவாயினும்
எனக்கு நலம் நல்காதவற்றிலிருந்து
என்னை விடுவித்துக் கொண்டேன்.
என்னைக் கீழ் இழுப்பவை
என்னிலிருந்து விலக்குபவை
அவற்றிலிருந்தும்
என்னை விடுவித்துக் கொண்டேன்.
தொடக்கத்தில்
இந்த மனப்பான்மையை
ஆரோக்கியமான அகம் என்றேன்.
இன்றோ
‘இது சுய நேசிப்பு என்றறிந்தேன்’.

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
எப்போதும் சரியாக இருப்பதிலிருந்து
வெளிவந்தேன்.
அப்போதிலிருந்து
குறைவான நேரங்களிலே
தவறாக இருந்தேன்.
இப்போது ‘அது தன்னடக்கம் என்று கண்டேன்’.

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
கடந்த காலத்திலேயே
வாழ்ந்திருக்கவும்
எதிர்கால கவலைகளிலும்
அமிழ்ந்திருக்கவும் மறுத்தேன்.
இப்போது
எல்லாமும் நடந்தேறும்
தருணங்களுக்காக மட்டுமே
வாழ்கிறேன்.
ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்.
‘அதை நான் நிறைவடைதல் என்கிறேன்’.

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
என் மனம்
என்னை தொந்தரவு செய்யலாம்
என்னை நோயாளியாக்கலாம்
என்று கண்டுகொண்டேன்.
ஆனால்
அதை என் இதயத்தோடு இணைத்தபோது
மனம் மதிப்பு மிக்க கூட்டாளியானது.
இப்போது”இந்த இணைப்பை
இதயத்தின் ஞானம் என்றழைக்கிறேன்.

இனிமேல்
நம்முடனோ மற்றவர்களுடனோ
வாதங்களுக்கும் மோதல்களுக்கும்
எந்தவித பிரச்சினைகளுக்கும்
நாம் அஞ்ச வேண்டாம்.

கோள்களும் மோதிக்கொள்கின்றன.
அந்த முறிவில்
புது உலகங்கள் பிறக்கின்றன.
இப் போது “இது வாழ்ககை என்று அறிவேன்”


சார்லி சாப்ளின் (16 ஏப்ரல் 1889- 25 டிசம்பர் 1977) இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். மவுனப் பட காலத்தில் அவர் புகழின் உச்சிக்கு சென்றார். டிராம்ப் எனும் திரை பாத்திரம் மூலம் உலகெங்கும் அறியப்பட்ட சின்னமானார். அவரது  சிறுபிள்ளை பருவமான  விக்டோரிய காலம் முதல் அவரது இறப்பிற்கு ஒரு வருடம் முன்பு வரை 75 வருடங்களுக்கு மேல் அவரது திரை வாழ்க்கை விரிந்திருந்தது. பாராட்டுதற்குரியவராகவும் விவாதத்திற்குரியவராகவும் விளங்கினார்.

“As I Began to Love Myself”: A Wonderful Poem by Charlie Chaplin

As I began to love myself
I found that anguish and
emotional suffering are only
warning signs that I was living
against my own truth.
Today, I know, this is Authenticity

As I began to love myself
I understood how much
it can offend somebody
if I try to force my desires on
this person, even though
I knew the time was not right
and the person was not ready
for it, and even though
this person was me.
Today I call this Respect

As I began to love myself
I stopped craving for a
different life, and I could see
that everything that surrounded
me was inviting me to grow.
Today I call this Maturity

As I began to love myself
I understood that at any
circumstance, I am in the
right place at the right time,
and everything happens at the
exactly right moment.
So I could be calm.
Today I call this Self-Confidence

As I began to love myself
I quit stealing my own time,
and I stopped designing huge
projects for the future.
Today, I only do what brings me
joy and happiness,
things I love to do and that
make my heart cheer,
and I do them in my own way
and in my own rhythm.
Today I call this Simplicity

As I began to love myself
I freed myself of anything
that is no good for my health;
food, people, things, situations,
and everything that drew me
down and away from myself.
At first I called this attitude
a healthy egoism.
Today I know it is Love of Oneself

As I began to love myself
I quit trying to always be right,
and ever since,
I was wrong less of the time.
Today I discovered that is Modesty

As I began to love myself
I refused to go on living in
the past and worrying about
the future.
Now, I only live for the moment,
where everything is happening.
Today I live each day,
day by day,
and I call it Fulfillment

As I began to love myself
I recognized that my mind
can disturb me and it can
make me sick.
But as I connected it to my heart,
my mind became a valuable ally.
Today I call this connection Wisdom of the Heart

We no longer need to fear
arguments, confrontations or
any kind of problems
with ourselves or others

Even stars collide,

and out of their crashing,
new worlds are born.
Today I know, this is Life”

One Reply to “என்னையே நான் நேசிக்கத் தொடங்கியபோது”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.