கேள்வி கேட்கும் பெண் குரல்கள்

(1) உரையாடல்

திருதராஷ்டிரா,
அந்த மங்கலான விழிகளில்
அவன் சாபத்தை நீ சுமக்கிறாய்.
உன் தாய்
அவனிடமிருந்து அந்த இரவில்
துணுக்குற்று விலகினாள்.
அவன் சுவாசம்
வேர்களின் வாசமாயிருந்தது.
அவன் மார்பு வெளிறியிருந்தது.
அவன் காதலன் என்பதைக் காட்டிலும்
அரக்கனென்று தோன்றியது.
ஆகவே, உன் தாய்
குருடாய் அதனை நிகழ்த்தி
உன் மீது இருண்மையினை மூடினாள்
ஒன்றினையும் காண முடியாது விழித்தெழுந்தாய் நீ.
உன் ஊளையில் என்றென்றும் வருந்தினாய்.

ஆனால் நீ?
உன் உரிமையாயிருந்த ஒளியை
அணைக்கச் செய்தது எது காந்தாரி?
உன் விழியூடே அவன் காண முடிந்திருக்கும்-
மென் நரம்பு இலையின் வெளிர் பச்சையை,
அரண்மனைச் சுவர் மீது நடுங்குகின்ற நிழலை.
உன் விழிகளைச் சுற்றிக் கட்டிய துணி போன்ற
கடுமையானதாயும்,
முத்தமிடப்படாத உன் உதடுகள் போன்று
இறுக்கமானதாயுள்ள தோழமையினை
வேண்டவில்லை அவன்.
இந்த நெகிழ்ச்சியற்ற காதலுக்கு பதிலாக
அவனுக்கு நீ பார்வையைக் கொடுத்திருக்க வேண்டும்.

அல்லது

அவன் உனக்கு காதலன் என்பதைக் காட்டிலும்
அரக்கனாய்த் தோன்றினானா?
தொய்ந்து, எச்சிலொழுகி அவன் வாய்,
செத்த பறவைகள் போல் அவன் கைகள்,
ஒரு மயானமாய் அவன் முகம்,
அவன் விழிகளிலிருந்து
ஊர்ந்து வரும் நிந்தனை?

இருண்மைக்கு இரட்டிப்பாய் விதிக்கப்பட்டு
இப்போது அவன் உன்னருகில் அமர்ந்துள்ளான் ,
கணவனாய், உன்
நூறு புத்திரர்களுக்கு தந்தையாய்.
இன்னும் நீ கல்லல்ல.
நீ பல வாழ்வுகளை வாழ்ந்திருக்கிறாய்
கேலிக்குரிய உன் முகத்திரைக்குப் பின்னால்.
கிழித்தெறி அதை.
ஒரு கடைசி முறையாய்
சூரியனிடமிருந்து துணுக்குற்று விலகு.

சம்பூர்ண சாட்டர்ஜி: (Sampurna Chattarji):  கவிதை, புதினம் போன்ற இலக்கியத் துறைகளில் இயங்குபவர். வங்க மொழியிலிருந்து மொழியாக்கங்கள் செய்துள்ளார். 

Conversation

You carry his curse
in those clouded eyes, Dhritarashtra
Your mother flinched
from him that night.
His breath smelt of roots
and his chest was white.
More demon than lover he seemed.
So your mother did it blind
and shut the darkness in on you.
You woke seeing nothing,
regret eternal in your howl.

But you?
What made you, Gandhari,
put out the light
that was your right.
He could have seen through you,
the pale green of the thin-veined leaf,
the shadow trembling on the palace wall.
He did not ask for this companionship,
harsh as the cloth around your eyes,
grim as your unkissed lips
Instead of this implacable love,
you should have given him sight.

Or

Did he seem more demon than lover to you,
his mouth slack and spittled,
his kinds like dead birds,
his face a graveyard,
reproach crawling
out of his eyes?

Twice doomed to darkness,
he sits beside you now,
husband and father
to your hundred sons.
You are not stone, yet.
You have lived many lives
behind that mocking veil.
Tear it off.
Flinch from the sun one last time.


(2) யசோதரா- I

முன்பொரு சமயம்
உதட்டளவு அவன் ஆதரித்த
ஏதோ ஒரு கருத்து போல,
முன்பொரு சமயம்
அவன் சென்று வந்து
நினைவுகூர முடியாத ஒரு
தொலைவான இடம் போல, அவள்
அவன் பிரக்ஞையிலிருந்து
பின்நழுவிக் கொண்டிருப்பதை
ஏற்கனவே அவள் உணர்ந்துள்ளாள்.

அவள் உளதாயிருப்பது முடிவுற்றது.

அவள் கனவில்,
அவன் தலை சுற்றி
ஒளி தீப் போல பொறிகிறது.
அவன் நெருங்கி வர மரங்கள் சோர்கின்றன.
கவனிக்கப்படாத காயங்களின் பொருக்குகளை
முட்கள் குத்திக் கிழிக்கின்றன.

அவள் தலை சிந்தப்படாத கண்ணீரால் வலிக்கிறது.

ஒரு பார்வை இல்லை,
ஒரு வார்த்தை இல்லை,
ஒரு பின்னோக்கிய கண்ணோட்டம் இல்லை,
இவையெல்லாம் அப்போது,
அழுகுவதற்குள்ள மங்கலான அறிகுறியுடன்
மிகவும் இனிப்பான பழம்
நிச்சயமாய் இருப்பது போல
திகட்டிக் குமட்டியவையா?

ஈசல்கள்
இரவுக்குள் புகுந்தும் வெளியேறியும்
அலைக்கழிகின்றன.
மினுக்கும் விளக்கொளி மீது
தம்மையே வீசி எறிகின்றன.

அவர்கள் ஒன்றுகூடியிருந்த காலத்தை
இப்போது அவள் ஒதுக்கி வைத்து
அதை மென்பட்டில் போர்த்தி
இனிய மூலிகைகளோடும்,
கசப்பான வேம்பிலைகளோடும்
பாதுகாத்து வைக்க வேண்டும்.

Yashodhara-I

Already she feels herself
recede in his consciousness,
as if she were an idea
to which he had once
paid lip service,
or a distant place
he had once visited
and could
no longer recall.

She has ceased to exist.

In her dream
light crackles like fire
around his head,
Trees shrivel at his approach,
and thorn tear at the scabs
of unattended wounds.

Her head aches with unshed tears.

Not a look, not a word,
not a backward glance.
Did it all then cloy,
as too-sweet fruit must,
with just that faint
hint of corruption.

Moths blunder in
and out
of the night;
hurl themselves
at the flickering
lamplight.

She must now put away
their time together,
wrap it in fine silk,
preserve it with sweet herbs
and bitter neem.


(3) யசோதரா-II

அரண்மனையில் குசுகுசுப்புக்கு மேல் யாரும் குரலெடுப்பதில்லை. வரப் போகாத ஒரு ஆணையை எதிர்பார்த்து தம் இசைக்கருவிகளின் அருகில் அமர்ந்துள்ள இசைவாணர்களைக் கடந்து செல்கையில் பெண்கள் ஒருவருக்கொருவர் விழிகள் தவிர்க்கின்றனர். வெளியே கனிமரங்கள் சோர்ந்து, பூக்கள் பொலிவிழந்து, நீரூற்றுகள் உறைந்து; களியாட்டத் தோட்டங்களில் இளங்கன்னிகள் இப்போது துள்ளி விளையாடுவதில்லை. அவர்களின் அந்தப்புர அறைகளிலிருந்து, ஒரு குழந்தை வீறிடுகிறது விடாது……கவலையுற்ற தாதி பாலூட்டுஞ் செவிலியை அழைத்துக் கொண்டே வேகமாய் வெளிவருகிறாள்—-

அறிவதற்கு தேட வேண்டியில்லாமல்
பெரும்பாலான பெண்கள் அறியுமதை
நீ கேட்டிருந்தால்
( ஆனால் நீ கேட்கவில்லை)
அப்போது நான் கூறியிருக்க முடியும்.

நீ விட்டு ஓடிப் போன
பற்றின் தளைகளை விட
மனித இயல்போடுள்ளதின்
வலியைத் தேர்ந்தெடுத்தோம்.
உன் மனிதாபினமற்ற
வியர்த்தமான தேடலை விட
பிறப்பு இறப்புமாகிய
முடிவற்ற சுழற்சியைத் தேர்ந்தெடுத்தோம்.

ஒரு கண இன்பத்தின் மோசமான பின்விளைவென
நீ கட்டமைத்துக் கொண்டதின் மீது
வழக்கமான ஆணிய வெறுப்பு
அப்போது எதுவாய் இருந்தது?

அப்போது என்னை நீ காதலித்தாய்,
மெல்லியளாய் நான் இருந்த போது,
உன்னோடு சவாரிப்பதற்கு
உன்னோடு வேட்டையாடுவதற்கு
உன்னோடு சயனிப்பதற்கு
முடிந்த போது.

அப்போது என்ன அது?
உடற்தசையின் அதிவிரிவா
அல்லது
நரம்பு கூறுகூறாகும் என் அலறலா
அல்லது
சிசுவின் இரக்கத்திற்குரிய ஓலமா?
என் முலைகள் உலர்ந்துள்ளன
அதற்கு தீர்வேதுமில்லை.

அவர்கள் இதை பிரசவிப்பு* என்கின்றனர்,
விடுதலை** என்றல்ல?
எதனிடமிருந்து விடுதலை?
மனித இயல்போடு உள்ளதை விட
வேறென்ன விடுதலை?
*Delivery
**Deliverance

Yashodhara-II

In the palace , no one speaks above a whisper. The women avoid each other’s eye as they walk past the musicians who sit beside the instruments awaiting an order that will never come. Outside, the fruit trees droop, the flowers listless , the fountains still. Yong girls no longer frolic in the pleasure gardens. From the inner rooms, a child cries incessantly—– an agitated maid rushes out calling for a wet-nurse—

I could have told you then,
If you had asked,
(but you never did)
what most women know
without seeking to know.

We prefer the pain
of being human,
the bonds of attachment
that you flee.
We prefer the endless cycle
of birth and death
to your inhuman
and unavailing quest.

What was it then,
the usual male revulsion
at what you had wrought,
gross consequence
of a moment’s pleasure?

You loved me then,
when I was slim,
and could ride with you,
and shoot with you,
and lie with you.

What was it then,
amplitude of flesh,
or my nerve-shedding cry
or the child’s pitiful wail?
My breasts are dry,
there is no answer to that.

They call this delivery,
but not deliveranace.
Deliverance from what?
What else is there
but to be human?

ரேவதி கோபால் (Revathy Gopal): மும்பையில் 1947-ல் பிறந்தவர். கவிதை, கட்டுரை, கதை எனப் பன்முக இலக்கியத் தடங்களில் பயணிப்பவர். அவர் படைப்புகளும்(Free Fall and Other Follies), கவிதைகளும் ( Six) தொகுப்பாய் வெளிவந்துள்ளன.

Source: We speak in Changing Languages , Indian Women Poets 1990-2007, Edited by E.V. Ramakrishnan and Anju Makhija, Sahitya Akademi.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.