
நண்பர்களுக்கு வணக்கம்,
2009 ஆம் ஆண்டு முதல் மாதம் இரு முறை வெளிவரும் சொல்வனம் இணைய இதழ் வரும் ஜூலை மாதம் 300வது இதழை கொண்டுவரப் போகிறது.
அசோகமித்திரன், தி.ஜானகிராமன், கா.நா.சு, அம்பை, வெங்கட் சாமிநாதன், பொலான்யோ, ஸீபால்ட், தொழில்நுட்பம் அறிவியல், இசை , மொழிபெயர்ப்பு, சிறுகதை, பெண்கள் எனச் சொல்வனம் பல சிறப்பிதழ்களை முன்னர் வெளியிட்டுள்ளது.
இம்முறை இளம் எழுத்தாளர்கள், புது எழுத்து முறைகள், தமிழின் அடுத்த கட்டப் பாய்ச்சல்களை முன்வைக்கும் முகமாக 300வது இதழை இளம் படைப்பாளிகளை கவனப்படுத்தும் இதழாக வெளியிட ஆசைப்படுகிறோம்.
2000க்குப் பிறகு எழுத வந்த ஆசிரியர்களின் புனைவு நூல்கள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகியவற்றை வெளியிடப் போகிறோம்.
விமர்சகர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் தொடர்ந்து கவனித்து வரும் புது எழுத்தாளர்கள், எழுத்து முறைகளை கவனப்படுத்துவது இதன் முதன்மையான நோக்கம்.
படைப்புகளை ஜூன் 30க்குள் எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Solvanam.editor@gmail.com எனும் முகவரிக்கு தங்கள் படைப்புகளை அனுப்புங்கள்.
மிக்க நன்றி
சொல்வனம் ஆசிரியர் குழு
இச்செய்தியை பிற நண்பர்களுடன் பகிரவும். நன்றி.