சுத்தமும் ஐரீனும்

கணவன் தன்னை விட்டு இன்னொருப் பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஓர் பேரிடி தன்னை வெகுண்டு தாக்கியது போல் தோன்றியது.தான் யாரை நம்பி வந்தேனோ அவரே தன்னை ஏமாற்றியதை நினைத்து ஒவ்வொரு நாளும் முள் பாதையில் வெறும் கால்களோடு நடப்பது போன்ற உணர்வை அடைந்தார்.எதை எதையோ தாங்கி கொண்ட இரும்பு நெஞ்சம் நம்பிக்கைத்  துரோகத்தை மட்டும் தாங்க இயலவில்லை.அவ்வபோது வந்து செல்லும் கணவனை கண்டிக்கவும் வழி இல்லை