முதல் தனிமை

1
ஏதுமற்ற நாட்களில் வந்துவிடுகிறது
எல்லாமிருப்பதைப் போல்
ஒரு நாள்.

2
இறந்தகாலம் என்கிறார்கள்
வாழ்ந்த காலத்தை.
3
பூச்சரத்தின்
அடுத்தடுத்து முடிச்சுகளில்
பூக்களை
வரிசைப்படுத்தி
தூக்கிலிடுகிறேன்
அதன் செடிகளுக்கு
நீருற்றுகிறேன்
பூக்களுக்கு அது
இரக்கமற்ற கொலை
நான் செய்வதோ
கருணையற்ற அன்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.