சீனா… ஓ… சீனா!

இப்பொழுது சீனா என்றால் அண்டை நாட்டிலுள்ள இந்தியருக்கு நினைவுக்கு வருவது 1962 இந்திய-சீன எல்லைப் போரும், இடைவிடாது தரப்படும் பிரச்சினைகளும், தலைவலியும், தடுக்கவே இயலாத பிரம்மபுத்திராவையே தடுத்து நிறுத்தித் , தன்பக்கம் ஈர்க்கும் திட்டம்தீட்டிச் செயல்படுத்தும் வேகமும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளத்தை எதிராகத் தூண்டிவிட்டு மறைமுகமாகச் செயல்படும் குள்ளநரித்தனமும்தான்.