சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?

மூலம்: ‘தோமா பிக்கெட்டியின் நூல்கள்சோசலிசம்’

பிகெட்டி பத்திகள் இப்போது நம் நிகழ்காலத்திற்கு எதிரிடையான வளைகோட்டு விரிவுரையை வரைகின்றன. பல தசாப்தங்களாக நிலவிவந்த பொருளாதாரம் மற்றும் மாநிலம்சார் (அதாவது பிராந்திய) ஏற்றத்தாழ்வுப் பிரச்னைகள் தீவிரமடைந்ததாலும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த முந்தைய அரசுகள் அவற்றைப் பேசித் தீர்வு காணும் திறமையற்று இருந்து விட்டதாலுமே டிரம்ப் வெற்றிபெற முடிந்தது என்று 2016 தேர்தல் முடிந்த உடனேயே பிகெட்டி தீர்மானமாக அறிவித்தார். உலகமயமாக்கம் மற்றும் உயரும் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும்போது முன்னேறிய நாடுகளின் உழைக்கும் வர்க்கம் உணரும் கையறுநிலையே பெருந்திரள் வாதம் (populism) என்னும் கொஞ்சம் குழப்பமான ஆனால் நியாயமான எதிர்வினை என்று 2017-ல் அவர் வாசகர்களுக்கு விளக்கினார். 2018-ல் மாக்ரோன்-ன் வரிவிதிப்புக் கொள்கைகளின் அநீதிகளை நுணுக்கமாக விரித்துரைத்து மஞ்சள் பனியன் (yellow vests) கண்டனங்களுக்கான காரணத்தை விளக்கினார். பிரெஞ்சு குடியரசின் கலங்கரை விளக்கங்களாக தங்களைக் கருதிக் கொள்ளாத அனைவரையும் உதறித் தள்ளி அவமானப்படுத்தியதற்காக அவர் பிரெஞ்சு அதிபரைக் கடிந்துரைத்தார். 2019-ல் அடையாள தேசியவாதம் (identitarian nationalism), மேல்தட்டு உலகமயமாக்கவாதம் (elitist globalism) ஆகிய இரு வாதங்களையும் நிராகரித்து பொருளாதார உருமாற்றத்தை (economic transformation) ஆதரிக்க வேண்டும் என முற்போக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவருடைய பத்திகள், வலதுசாரி வாக்குவாதம் (Demagoguery ) அல்லது எதேச்சாதிகாரத்தின் அபாயங்களில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் யூரோப் ஒன்றியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகள், உழைக்கும் வர்க்கத்தை மைய-இடது சாரி கட்சிகள் கைவிட்ட நிலை, மேற்படிப்பு நிதிநல்கையில் (funding ) உயரடுக்கு பல்கலைக்கழகங்களின் பாரபட்சமான பங்கீடு, பன்னாட்டு நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய மைய வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகள் வெளிப்படைத்தன்மை மற்றும் விளக்கமளிக்கும் பொறுப்பு இல்லாமல் பணிபுரிவது ஆகியவை அவரின் கவனக் குவியங்களாக இருந்தன.

பிறகு இங்கே மற்றொரு விலகல் (disjuncture) தெரிந்தது: ஒரு நற்சான்றிதழ் பெற்ற பொருளியலாளர், ரீம்கள் (reams) கணக்கில் செயலறிவு சார்ந்த தரவுகள் முழுமையான ஆதரவு அளிக்க, விவேகமுள்ள அரசியல் விரிவுரைகளைப் பதிப்பித்தார், ஆனால் சான்று மற்றும் நிபுணத்துவம் ஆகியவை குறைவாக மதிக்கிற தற்காலப் போக்கை எண்ணிப் புலம்பும் தாராளமயவாதியிடம் இருந்து தான் மேன்மேலும் விலகி இருக்க வேண்டி இருக்கிறது என்றார். Post-truth என்றழைக்கப் படும் கற்பனை செய்து கொண்ட உண்மை; மற்றும் Alternate facts என்றழைக்கப் படும் மாற்று மெய்ப்பாடுகள் ஆகிய சொல்லாடல்கள் புழக்கத்தில் வந்துவிட்ட இந்த யுகத்தில், பிகெட்டி அறிவியல் பூர்வமான மெய்ப்பாடுகளை மட்டுமே ஏராளமாகப் பெற்றிருந்தார்: 1980க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில், மக்கள் தொகையில் 0.1விழுக்காடு உள்ள பிரெஞ்சு பெருஞ்செல்வந்தர்களின் செல்வம் (wealth ), தலைக்கு 4 மில்லியன் யூரோக்களில் இருந்து 20 மில்லியன் யூரோக்களாக அதிகரித்தது. (அவர்கள் எல்லாம் செல்வ வரி (wealth tax ) படிப்படியாக நீக்கப்பட வேண்டும் என்கிறார்களா என்று பிகெட்டி வியந்தார்). இரண்டாம் உலகப் போர் தசாப்தங்களில், மிகக் குறைந்தநிலை வருவாய், சொத்து மற்றும் கல்வி பெற்றிருந்த வாக்காளர்களை ஜனநாயகக் கட்சி கவர்ந்திருக்கையில், 1980க்குப் பிறகு அது செல்வந்தர்களின், அதிகப் பொருளீட்டுவோர் மற்றும் மெத்தப் படித்தவர்களின் கட்சியாக மாறிவிட்டது. (அவர்கள் சமூக நீதிக்கும் மறுபகிர்வுக்கும் (redistribution) அதிகமாக எதையும் செய்யவில்லை என்றால் வியப்படைய ஏதுமுண்டா?) யூரோப் ஒன்றியத்தினுள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, படிப்படியாக அதிகரிப்பதற்கு நேர் மாறாக, உண்மையில் பாதியாகி விட்டது; அதாவது 2000 முதல் 2010 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு 1.4 மில்லியன் ஆக இருந்த புலம்பெயர்ந்தோர், 2011-2018 காலகட்டத்தில் ஆண்டுக்கு 0.7 மில்லியன் ஆகக் குறைந்தனர்; யூரோப் ஒன்றியத்தின் மக்கள் தொகையை ஒப்பிடுகையில் இது வெகு சொற்பம்; மற்றும் வரலாற்றுப் புலம்பெயர்வு அலைகளோடு ஒப்பிட்டால் வெகு அற்பமான எண்ணிக்கை. (நம் நிகழ்ச்சி நிரலில் இதை மிக அவசரமான அரசியல் பிரச்சினையாக ஏற்க வேண்டுமா?) 2008 முதல் 2018 வரை, பிரான்ஸ்-ல் மாணவர்கள் 20 விழுக்காடு உயர்ந்தது; எனினும் ஒட்டுமொத்த அரசு கல்வி செலவினங்கள் வெறும் 10 விழுக்காடு மட்டுமே உயர்ந்து ஒவ்வொரு மாணவருக்கான செலவினக் குறைப்புக்கு இட்டுச் சென்றது. ரீகன், புஷ், டிரம்ப் ஆகியோரின் வரி குறைப்புகள், மிகக் குறைவு வரிப் பாரம்பரியத்துக்கு அமெரிக்கா மீண்டும் திரும்பியதைக் குறிக்க வில்லை; அது நாட்டின் சமூக சமத்துவ தோற்றுவாய்க்கு (Egalitarian origins) செய்யும் நம்பிக்கை துரோகம் என்று பிகெட்டி குறிப்பிடுகிறார். 20-ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா பெரும்பாலும் பணக்காரர்களுக்கு மிகக் கடுமையாக வரி விதித்தது, உச்ச வருவாய் (81%) மற்றும் பரம்பரை சொத்து(74%) என்ற அளவில் உயர் வரி விகிதங்கள் இருந்தன. இந்த பட்டறிவு சார்ந்த நடவடிக்கைகள் இன்று நம் அரசியல் விவாதங்கள் எவ்வாறு திட்டமிடப் பட்டன என்பதைத் துளியும் பாதிக்கவில்லை பிகெட்டியின் ஆதரவு பெற்ற அரசியல்வாதிகள் -பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders), எலிசபத் வார்ரென் (Elizabeth Warren), ஜான் லுக் மேலாஞ்சன் (Jean-Luc Melenchon) ஆகியோர் வாக்குப் பெட்டியில் பலத்த அடி வாங்கினார்கள். பிகெட்டி இந்த ஆண்டுகளில், கருத்தியலின் வலிமை குறித்து மேன்மேலும் ஆர்வம் கொண்டவராகி இருந்தார் என்பதில் அதிசயம் ஏதுமில்லை.

Time for Socialism (சோசலிசத்திற்கான நேரம்)

(தலைப்பில் என்ன இருக்கிறது?)

நேரம்

பிகெட்டி -யின் விரிவுரைக் கட்டுமானத்தின் வரலாறு, அவருடைய Capital in the Twenty-First Century என்ற முதல் நூலில் காணப்படும் U-வடிவ கருத்தாக்கமாக (ஏற்றத் தாழ்வு ~~~~> தற்காலிக ஒப்பிடத்தக்க சமத்துவ நிலைக்குத் தலைகீழ் மாற்றம் ~~~~> ஏற்றத்தாழ்வுக்குத் திரும்பி வருதல்) பரிணமித்துப் பின்னர் அதிக இடையீடுகளைக்கொண்ட குறைவாகவே ஊகிக்க முடிகிற வலைக்கோட்டு (Arc) விரிவுரை கொண்ட வரலாறாக Capital and Ideology-யை அடைந்துள்ளது. இந்த பிந்தைய வரலாற்று நோக்கில் அவர் மீட்டெடுக்கும் வரலாற்றுக்குரிய தொடர்ச்சியின்மையைத் தெரிவிக்கிறார். நம்முடையது அனைத்தையும் கடந்த ஒரு வரலாற்றுக்குரிய தாங்குமுனை அல்ல; மிகவும் சாதாரணமானது ஆயினும் புதிய ஆளுகைக்கான ஆழ்ந்த மாற்றம். அவர் கற்பனை செய்யும் பெயர்ச்சி (transition) உண்மையில் 1980களிலும் 1990களிலும் வெற்றிபெற்ற புதிய தாராளவாதம் போல் மென்மையாக ஓசை எழுப்பாமல் செல்வதாக இருக்குமேயன்றி மனித குல வரலாற்றின் வன்முறை இடைவேளையாகி விடாது.

சோசலிசம்

அவர் நாடும் சோசியலிசம் நிறுவனங்களை பலவீனப்படுத்துவது அல்லது அதற்கு மேலும் சென்று அவற்றை அழிப்பது ஆகிய வழிமுறைகளைக் கையாளுவதில்லை. அல்லது அதில் அடிப்படையாகவே புதிய ஆளுகைக் கருவிகள் கொண்டுவரப்படும் என்ற கற்பனைகளும் இல்லை. நடப்பில் உள்ள இயங்கமைவுகள் (mechanisms) மற்றும் குறியீடுகள் (indices) -வரிவிதிப்பு, மக்களுக்காக செலவிடுதல், பெருநிறுவனத்தின் நிர்வாகக் குழு, பொருளாதாரப் புள்ளி விவரங்கள், உயர் கல்வி, யூரோப் ஒன்றியம்,மத்திய ரிசர்வு அமைப்பு – ஆகியவற்றை மாற்றியமைத்து புதிய சமத்துவ நியாயத்தைப் (Egalitarian Logic ) பின்பற்றச் செய்வதே அவர் நோக்கம். ஒரு சிலர் செல்வத்தையும் அதிகாரத்தையும் குவித்து வைத்துக் கொள்ள அனுமதிப்பதற்கு பதிலாக, இதே ஒழுங்கமைவுகள் வருவாய்களை சமூகத்திற்குள்ளும் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் பங்கிட்டு விநியோகம் செய்யும்.பல தற்சார்பு இயக்கங்களின் உருத்திரள்கள் (accretion ) மூலம் முக்கிய வாழ்விடங்களில் ஒரு புது ஆளுகை வடிவெடுக்கும்.

யாருக்கு?

நடைமுறையில் உள்ள நிறுவனங்களின் தர்க்கத்தை புதிய செயல்பாட்டுக் குறிமுறைகளைப் பயன்படுத்தி (operating code) மறுநிரலாக்கம் (reprogramming) செய்யுமாறு அழுத்திச் சொல்வதுவே பிகெட்டியின் முன்மொழிவுகள். இவை உடனடியாக செய்து முடிக்கக் கூடியவை (ஒருவேளை மிகச் சாமானியமானதாகக் கூட இருக்கலாம்) என்று பிறரை உணர வைத்தன. இதற்காக ஒரு புது அமைப்புசார் இயல்திறம் (organisational capacity) உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை ; எளியமுறையில் சிறிது திசை மாற்றம் (orientation ) செய்ய வேண்டி இருக்கும். ஆனால் சரியாக இந்த பிரத்தியேகமான மைக்ரோ மாற்றங்களை அமுல்படுத்துவதுதான் மிகவும் சவாலானதாகவே இருக்கும், குறிப்பாக சமத்துவத்துக்கு எதிரான தர்க்கம் குறியீடுகளின் மீது தொடர்ந்தும் முழுமையாகவும் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கும் நிலையில் அதை எதிர்கொள்வதற்கு புது வகை சொல்லாடல் மற்றும் புதிய எண்ணங்கள் மட்டும் அவர்களுக்கு போதாது; அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்தல் சுற்றுகளில் வெற்றி பெறவேண்டும். பேரளவிலான தடைகளை எதிர்கொள்ள, பணியாத தலைமுறைக்கு நீளும் போராட்ட முயற்சி வேண்டும். எனவே தான் ஏமாற்ற உணர்வு, நம்பிக்கை என்னும் மேலுரையால் போர்த்தப்பட்டு நூலெங்கும் விரவிக் கிடக்கிறது..

Series Navigation<< சமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்?

One Reply to “சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.